பரந்தூர் விமான நிலையம் ஆந்திரா சென்றாலும் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் லாபம் தெலுங்கருக்கே அழிவு தமிழ்நாட்டிற்கு
பெயர் தமிழ்நாடு ஆனால் அதிகார மையமாக செயல்படுவது தெலுங்கர்கள் தான்
சாதியாய் மதமாய் பிரிந்து கிடக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி.
தமிழ்நாட்டிலேயே,
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை இல்லையா?
ஒன்றிய அரசின் புறக்கணிப்பிற்கு,
தமிழ்நாடு அரசும் துணைபோகிறதா?
தெற்கு ரயில்வேயில் தமிழ்நாட்டுப் பகுதிகளில் உள்ள 6,171 தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில், இதுவரை பின்பற்றப்பட்டு வந்த விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரேஜ் மற்றும் வேகன் பணிமனை, பெரம்பூர் லோகோ பணிமனை, கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை, போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு ரயில்வே பிரிவுகளில் இந்த அப்ரண்டிஸ் வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ரயில்வே பணிமனைகளில் உள்ள வாய்ப்புகளைப் பெறுவதற்கு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்காமல், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் போட்டியிடும் வகையில் விதிமுறைகளை மாற்றுவது கடும் கண்டனத்திற்குரியது.
குறிப்பாக, கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு தொடர்பான நிபந்தனை தற்போதைய அறிவிப்பில் இடம்பெறவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.
தமிழ்நாட்டின் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயின்று, பல்வேறு தொழில்நுட்பத் தகுதிகளைப் பெற்று, வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்குவதுதானே நியாயம்? தமிழ்நாட்டில் அமைந்துள்ள ரயில்வே பணிமனைகளில் உருவாகும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குக் கூட தமிழக இளைஞர்கள் பிற மாநில இளைஞர்களுடன் போட்டியிட வேண்டிய நிலையை உருவாக்குவது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாட்டின் நிலத்தையும், கட்டமைப்பையும், மக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்திச் செயல்படும் ஒன்றிய அரசின் நிறுவனங்களில் உருவாகும் வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் செயல்படும் ஒன்றிய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 90 விழுக்காடு பணியிடங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.
அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே கோட்டங்கள் மற்றும் பணிமனைகளில் உருவாகும் வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
தற்போதைய அப்ரண்டிஸ் நியமன அறிவிப்பில் விதிமீறல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரித்து, அறிவிப்பில் செய்யப்பட்டுள்ள விதிமாற்றங்களுக்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டிருந்தால், அந்த மாற்றங்களை உடனடியாகத் திரும்பப் பெற்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் திருத்தப்பட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும் மௌனம் காக்காமல், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#TamilNaduJobsForTamilYouth #RailwayApprentice
#tamil
#தமிழ்நாட்டில்_தமிழருக்கே_வேலை #தமிழ்நாட்டு_இளைஞர்களுக்கு_90சதவீதம்
சைனா காரன் யாரை கொண்டாடனும், அடுத்த தலைமைறைக்கு யாரை கொண்டு போய் சேக்கனும்னு தெளிவா இருக்கான்
ஆனா இங்க 50 வருச திராவிட ஆட்சில நடிகர்களை கடவுளாக்கி வச்சிருக்கானுங்க
அதன் விளைவு தான் இந்த தற்குறி ஆட்சி 🤡
யாரும் செய்யத் தயங்கும் தூய்மைப்பணியை செய்பவர்கள் தங்களுக்கு நாள்தோறும் குறைந்தது ரூ.850 சம்பளம் வேண்டும் எனப்போராடுகிறார்கள்.
இங்க ஒரு கூட்டம் கோயிலுக்கும் வரும் பக்தர்களின் கைப்பேசியை செத்த நேரம் வைத்திருந்த பணிக்கு நோகாமல்
ரூ.5000/நாள் வாங்க அரசே திட்டம் போட்டு கொடுக்குது.
காவிரி நீரை திறந்து விட இன்று ஐந்து கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி இருக்கிறார் விஜய்!
தமிழக முதல்வரின் ஆடம்பரச் செலவு!
கொந்தளிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள்!
போர்த்தொழில் வழங்கும் காணொளி.
https://t.co/brGwnGqr7v
ஒரு நொடியில் சரிந்த மலை... கண் முன்னே அழிந்த வாழ்வாதாரம்! 🌊
நேபாளத்தில் நிகழ்ந்த கோரப் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு மனித குலத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
🔗 பார்க்க - https://t.co/vkFtEZbKlo
#NepalFlood#ClimateEmergency#SaveHimalayas#GlobalWarming #EngalDesamOfficial
மாவீரன் பூலித்தேவனை
மண்ணகம் மறக்கக் கூடாது;
குறிப்பாகத்
தென்னகம் மறக்கக் கூடாது
இந்திய
விடுதலைப் போராட்டத்தின்
முதல் குரல்
பூலித்தேவனின் சிம்மக் குரல்
வீரபாண்டிய கட்டபொம்மன்
பிறப்பதற்கு (1760)
45 ஆண்டுகளுக்கு முன்பே (1715)
பிறந்த பெருவீரன் பூலித்தேவன்
முதல் விடுதலைப் போர்
என்று கருதப்படும்
சிப்பாய்க் கலகத்திற்கு (1857)
90 ஆண்டுகளுக்கு முன்பே (1767)
வெள்ளையரை எதிர்த்து
வீரச் சரித்திரத்திற்கு
வித்திட்ட வீரன் பூலித்தேவன்
இந்திய விடுதலைப்
போராட்ட வரலாறு
தெற்கிலிருந்துதான்
எழுதப்பட வேண்டும்
அந்த மாவீரனுக்கு
வாழும் தலைமுறையும்
வரும் தலைமுறையும்
வணக்கம் சொல்ல வேண்டும்
நெற்கட்டுஞ் செவ்வல்
மண்ணை எடுத்து
என் நெற்றியில் இட்டுக்கொள்கிறேன்
உன் வாளுக்கு வணக்கமடா
பூலித்தேவா!