உதயநிதி ஒரு நடிகையைப் பற்றி ரெட்டை அர்த்தத்தில் பேசியதாக ஒரு பொய் பரவியதற்கே ரட்சகன் நாகார்ஜுனா போல நம் முதல்வருக்கு நரம்புகள் எல்லாம் புடைத்தன. அடுத்த நாளே போலீஸ் அனுப்பினார். தன் பாடிகார்டு சின்னப் பகவதியை விட்டு 'மாஸ் ஆக' லைவ் வீடியோ எல்லாம் எடு���்க விட்டார்.
ஆனால் நயினார் நாகேந்திரன் முதல்வர் அப்பா மட்டுமல்லாமல் அம்மாவைப் பற்றி ரெட்டை அர்த்தமாக அல்ல, ஒரே அர்த்தத்தில் பச்சையாக கொச்சையாகப் பேசியிருக்கிறார். ஆனால் முதல்வரோ மெளன ராகம் கார்த்திக் போல "ஹேய் சந்திரமெளலி... ஹேய் சந்திரமெளலி" ரேஞ்சில் கூலாக இருக்கிறார். இது என்ன மாதிரியான ஒரு டிசைன்? ர��மானிய புராணங்களில் கூட நான் இப்படி ஒரு கேரக்டரைப் படித்ததில்லை. தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தாய் உள்ளம், தாயின் மணிக்கொடி, தாய்வீட்டு சீதனம், தாய் வீடு, தாய் கிழவி இப்படி எல்லாம்தான் நாம் தமிழர் பாரம்பரியத்தில் கேள்விப்பட்டுருக்கிறோம். ஆனால் முதல்வரின் இந்த அமைதி புதுசா இருக்கு சார், புதுசா இருக்கு.
"மோடி எங்கள் டாடி" என்று அமைச்சர் ராஜேந��திர பாலாஜி ஒருமுறை சொன்னார். அவர் அப்பாவி. வெளிப்படையாக சொல்லிவிட்டார். இவர்கள் விஷமக்காரர்கள் என்பதால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அதுதான் நாம் அடைந்திருக்கும் ஒரே மாற்றம். இந்த லட்சணத்தில் திமுக அவன் கூட கூட்டு, திமுக இவன் கூட கூட்டு, டெல்லில இருந்து தகவல் வருது, மும்பைல இருந்து தந்தி வருது என சட்டசபையில் பேசுவதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஒன்னே ஒன்னுதான் சார். தமிழ்நாடு வெறும் மாநில அரசு. பாஜக ஆள்வதோ மிகப்பெரிய ஒன்றிய அரசு. இங்க இருந்து அதை எதிர்க்க அதிகாரம் இருந்தா மட்டும் பத்தாது. முதுகெலும்பு வேணும் முதுகெலும்பு!
முதல்வர் சேர்ல உக்காந்தா எவன் வேணாலும் முதல்வர் ஆயிரலாம். ஆனா ஸ்டாலின் ஆகிர முடியுமா?
-டான் அசோக்
ஆகஸ்ட் 16, 2026
திராவிட முன்னேற்றக் கழக அரசு அனைவரும் படிக்க வைப்பதற்காக "நான் முதல்வன்", "புதுமைப்பெண் திட்டம்" போன்ற எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்து அனைவரையும் படிக்க வைத்தது, ஆனால் தற்போது இருக்கும் கவர்ச்சி நடிகர் அரசு படித்து என்ன செய்யப் போகிறீர்கள் என்ற அளவில் வந்து நிற்கிறது.
தவெகவால் அனுப்பிவைக்கப்பட்ட சனம் ஷெட்டி: சென்னையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் போராட்டக்குழுவினர் பேச்சு
#Chennai#NEET#DinakaranNews
https://t.co/dgEDppG0yi
திமுக வழக்கறிஞர் சையத் அலி புகாரி இன்று சென்னை நடைபெற்ற CJP மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார்.
‘மாணவர்களின் ஜனநாயக குரலை யாராலும் அடக்க முடியாது. கருத்து தெரிவிப்பதும், அமைதியான முறையில் போராடுவதும் அரசியலமைப்பு வழங்கிய உரிமை. மாணவர்கள் மீது வன்முறையோ, அச்சுறுத்தலோ ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி, நீதி, ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்று அவர் வலியுறுத்��ினார்.
*நீங்கள் பேசிய அதே மொழியில் பதில் தந்துள்ளார் மார்க்கண்டேயன்*
*-முன்னாள் சபாநாயகர் அப்பாவு*
*CM SIR நீங்களோ மாண்பு நிறைந்த சட்டப்பேரவையில் உங்கள் அப்பாவை எங்கே காணோம்? என்று நையாண்டி செய்கிறீர்கள்*
*கரூர் பொதுக் கூட்டத்திலே ஓடு ஓடு என்று அங்க அசைவுடன் பாட்டு பாடி இனி சட்டமன்ற கதவை பூட்டுவேன் என்று ஆணவமாய் பேசுகிறீர்க���்..*
*நீங்கள் என்ன மொழியில் பேசினீர்களோ அதே மொழியில் பதில் தந்துள்ளார் மார்க்கண்டேயன்*
*- முன்னாள் சபாநாயகர் அப்பாவு*