நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய். ஆனால் ஒவ்வொரு விதையும் மண்னோடு போராடியே மரமாகிறது
எதுவுமே எளிமை இல்லைதான். ஆனால் அனைத்துமே சாத்தியம்தான்.
எமக்காக மண்ணிற்குள் விதையானவர்களை நினைவு கூர்வோம்
மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று இவர் தனது 44வது பிறந்த தினத்தை கொண்டாடியிருப்பார்.
ஆனால் இவர் ஈழத் தமிழருக்காக தன் 27வது வயதில் உயிரை நீத்தார்.
வரலாற்றில் இவர் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் கலைஞர் துரோகமும் நினைவுக்கு வந்து செல்லும்.
ஈழக் கவிஞரும் கனடா பல்கலைப் பேராசிரியருமான கவிஞர் சேரன் காலமானார்.
🥹
நூறுநூறாயிரம்
தோள்களின் மீது ஏறி நின்று,
எனது நிலம் என
உரத்துச் சொல்கிறேன்.
ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி… அலைகளை மீறி…
எங்கும் ஒலிக்கிறது…
எனது நிலம்!
எனது நிலம்!
⚫️
கண்ணீர் வணக்கம் !
நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஓடும்.அதே கல்லை தேன்கூட்டிற்கு எறிந்தால் நாம் ஓட வேண்டி வரும்
தேனியை விட நாய் பலமானது. ஆனாலும் தேனி அனைத்தும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து விரட்டுவதால் நாம் ஓட வேண்டியிருக்கிறது
தமிழ்இனம் ஒற்றுமையாக ஒன்றுதிரண்டால் தமிழின எதிரிகள் அனைவரும் ஓட்டம் எடுப்பர்
கண்ணீர் அஞ்சலி 🙏
இறுதி வணக்கம்... இறுதி வணக்கம்...
வல்வெட்டித்துறை மண் இன்று கண்ணீரில் நனைந்து கிடக்கிறது.
ஈழத் தமிழ் மண் ஒரு துணிச்சலான மகனை இழந்து விட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஐயா அவர்கள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நவம்பர் 14 சனிக்கிழமை நள்ளிரவை அண்மித்த நேரத்தில் காலமானார் என்ற செய்தி, தமிழ் மக்கள் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.
இது வெறும் ஒரு மரணம் அல்ல...
அஞ்சாமல், யாருக்கும் அடிபணியாமல், தமிழன் என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசிய ஒரு குரல் ஓய்ந்து போன தருணம் இது.
அவர் யார்?
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஐயா, தனது வாழ்நாள் முழுவதும் தமிழர் அரசியல் உரிமைக்காக வாழ்ந்தவர்.
த*மிழீழ வி*டுதலை இயக்கமான டெ*லோவுடன் தொடர்புடையவராக அரசியலில் செயல்பட்டு, பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தல்களை எதிர்கொண்டவர்.
2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். 2004 ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றார். இலங்கை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வப் பதிவின்படி, அவரது மொத்த நாடாளுமன்றச் சேவைக்காலம் எட்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள், ஆறு நாட்கள்.
2010, 2019 ஆகிய ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, தமிழ் மக்களின் தனித்த குரலை தேசிய மேடையில் ஒலிக்கச் செய்தார். 2019 தேர்தலில் அவருக்கு 12,256 வாக்குகள் கிடைத்தன.
2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகி, அக்டோபர் 14 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் மாகாண சபை உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்தார்.
நாடாளுமன்றம், மாகாண சபை எனப் பெரிய பதவிகளில் இருந்தாலும், இறுதி வரை தனது சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக, தனது மக்களோடு மக்களாக வாழ்ந்தார்.
அவர் வாழ்ந்த வாழ்க்கை...
ஐயா அவர்கள் ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல.
வடக்கு கிழக்கிற்கான அரசியல் தீர்வு, போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கைகளை, பலர் பேச அஞ்சிய காலத்திலும், துணிச்சலாக முன்வைத்தவர்.
பலமுறை கொ*லை முயற்சிகளில் இருந்து தப்பியவர் என்று அவரே கூறியிருக்கிறார். உயிருக்கு அச்சுறுத்தல் வந்த போதும், கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை.
அதைவிடப் பெரிய மனிதநேயம் ஒன்று உண்டு...
2011 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் நடைபெற்ற பார்வதி அம்மையாரின் இறுதிச் சடங்குகளை, குடும்பத்தின் சார்பில் ஏற்பாடு செய்தவர் இவர்தான். பதவிகளுக்கு அப்பால், ஒரு குடும்பத்தின் துயரத்தில் தோள் கொடுத்து நின்ற மனிதர் இவர்.
ஐயா...
நீங்கள் பேசும் போது பலருக்கு அது கோபமாகத் தெரிந்திருக்கலாம்.
ஆனால் அது கோபம் அல்ல...
அது தமிழ் மக்கள் மீது நீங்கள் கொண்ட பாசம்.
அது மண்ணின் மீது நீங்கள் கொண்ட காதல்.
அது தமிழர்களின் உரிமைக்காக நீங்கள் கொண்ட தாகம்.
இன்று அந்தக் குரல் இல்லை.
வல்வெட்டித்துறை வீதிகள் உங்களைத் தேடும்.
நகரசபை நாற்காலி (கதிரை) உங்களைத் தேடும்.
தமிழ் மக்கள் உங்களைத் தேடுவார்கள்.
ஆனால் ஐயா, நீங்கள் மறையவில்லை.
நீங்கள் வல்வெட்டித்துறை மண்ணில் வாழ்கிறீர்கள்.
நீங்கள் எங்கள் போராட்ட வரலாற்றில் வாழ்கிறீர்கள்.
நீங்கள் எங்கள் நெஞ்சங்களில் வாழ்கிறீர்கள்.
உங்கள் ஆத்மா அமைதியுற எல்லோருக்கும் பொதுவான இயற்கையின் பேராற்றலை இறைஞ்சி வணங்குகிறோம்.
உங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், வல்வெட்டித்துறை மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐயா... நீங்கள் விதைத்த துணிச்சல் ஒருநாள் மரமாகும்.
நீங்கள் கண்ட கனவு ஒருநாள் நனவாகும்.
அதுவரை உங்கள் நினைவுகளோடு நாங்கள் பயணிப்போம்.
கண்ணீருடன்...
இறுதி வணக்கம் ஐயா 🙏💐
@ImShritharan@krishnaambalav1@itskeeran@sabas_kris0712@anpaa23@RiseOfLtte@TamilGuardian@Union_W_Tamils@VelmuruganTVK@velmahiban@Viyanarasu@Seeman4TN@ampanai@nanthan_ananth@Tamil_Dhesiyam@MusiparE@rajzclef@priyan23222@RavananAdvocate@Tamizhdesiyam
வீட்டில் கரப்பான் பூச்சியை அடிப்பதற்கு அண்ணாவைக் கூப்பிட்டவர்கள் ,
களத்தில் சக தோழியை காப்பாற்ற சுமந்து செல்லும் வலிமை மிக்கவர்களாக அவர்களை மாற்றியது போராட்டம்.
ஆம். போராட்டம் மகத்தானது
ஜேவிபி ஒரு அரைப்பாசிச, இனவாத அமைப்பு - தோழர் சண் (ஆதாரம் - சண் எழுதிய “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” பக்-332 )
வகுப்புவாத அரை பாசிச ஜேவிபி சிங்கள இனத்தின் இரட்சகராகத் தோன்றி அரசாங்க எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு உணர்வுகளை பயன்படுத்திக் கொண்டது
நாடக உலகின் தந்தை, தமிழ்த்திரு சங்கரதாசு சுவாமிகளின் 104-ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று.
முத்தமிழில் ஒன்றான நாடகம் எனும் பெருங்கலை, இன்றளவும் உயிர்ப்புடன் திகழ்வதற்கு மூலகாரணமாக விளங்கிய அப்பெருந்தகையின் திருநினைவைப் போற்றுவோம்.
எளிமையும் இனிமையும் குழைந்த பாடல்களாலும், தேன் சொட்டும் தீந்தமிழ் உரைநடையாலும் அவர் இயற்றிய நாடகங்களே, தமிழ் நாடகக் கலைக்கு ஆணிவேராகவும், அசைக்க முடியாத அடித்தளமாகவும் இன்றும் திகழ்கின்றன என்றால் அது மிகையாகாது.
ஆங்கில மோகம் தாய்மொழியைச் சுருக்கிக் கொண்டிருந்த காலம், இசை அரங்குகளில் அயல்மொழி ஆதிக்கம் ஊடுருவியிருந்த காலம் — இவ்விரண்டும் ஒன்றாகச் சூழ்ந்திருந்த வேளையிலும், தன் தீந்தமிழ்ப் பாடல்களைப் பொழிந்து, தமிழுலகிற்குத் தனிப்பெருமை தேடித் தந்தவர் ஐயா சங்கரதாசு சுவாமிகள் என்பது வரலாறு போற்றும் உண்மை.
தனது பதினாறாம் அகவையிலேயே வெண்பாவும், இசைப்பாடல்களும் இயற்றும் பேராற்றல் பெற்றுத் திகழ்ந்த அப்பெருமகனாரின் வழியில் வளர்ந்து செழித்த நாடகக்கலை, இன்று நாகரிகம், கவர்ச்சி என்ற பெயரில் மெல்ல மெல்லப் புறந்தள்ளப்பட்டு, அழிவின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது பெரும் வேதனை. அதனினும் கொடிது, அக்கலையைக் காத்து நிற்கும் மேடை நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருவதுதான்.
ஆதலால், இக்கலை மீண்டும் உயிர்த்தெழ வேண்டுமெனில், ஐயா சங்கரதாசு சுவாமிகளின் நினைவேந்தலில் நாம் உறுதி ஏற்போம்.
தமிழ்நாடு முழுவதும், அவரவர் கிராமங்களில் நடைபெறும் தேர்த் திருவிழாக்கள், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஏனைய மங்கல வைபவங்களில், ஏதேனும் ஒரு மேடை நாடகத்தை ஏற்பாடு செய்து, அக்கலைஞர்களை அங்கீகரித்து, ஆதரிப்போம்.
நமது பாரம்பரியக் கலை அழிந்துவிடாமல் காக்கவும், அதனை வாழவைக்கும் கலைஞர்கள் வாழ வழிவகை செய்யவும், இது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும் என்பதை இந்நாளில் உணர்ந்து செயல்படுவோம்.
ஐயா சங்கரதாசு சுவாமிகளின் புகழ் ஓங்குக!
தமிழ் நாடகக் கலை வாழ்க!
நன்றி.!
#கூத்து
#நாடகக்கலை
#சங்கரதாசுசுவாமிகள்
#இயல்இசைநாடகம்
கள்ளக்குறாச்சி #தவெகா MLA அப்பாவி என்பதால் அந்த கலெக்டர் இடத்தில் மாணிக்கம் தாகூர் மனைவி இருந்திருந்தால் அவரே தனது மனைவியின் தொலைபேசி எண்ணை MLA வுக்கு வழங்கியிருப்பார் போல! இதில் தொடர்பே இல்லாம @manickamtagore சாதியை இழுப்பது ஏன்? இவரை மாநில தலைவராய் போட்டவர் நிஜமாலே பப்புதான்.
தஞ்சாவூரில் ஒரு ஹோட்டலில் நண்பர்களோடு சாப்பிட்டு முடித்த பிறகு க்யூ ஆர் கோடு ஸ்கேனர் எடுத்து வந்தார் உணவு பரிமாறிய வடநாட்டு தம்பி. பில் 809 ரூபாய் , டிப்சையும் இத்துடன் சேர்த்து தந்து விடலாமா என்று கேட்டேன். தரலாம் என்றார், அப்படி என்றால் 30 ரூபாய் சேர்த்து போடுங்கள் என்றேன் அவர் 8039 ரூபாய் போட்டு ஸ்கேனரை என்னிடம் காண்பித்தார். நானும் கொஞ்சம் அசால்டாக ஸ்கேன் செய்து பாஸ்வேர்டை இரண்டு எண் போட்ட பிறகு கவனித்தேன்.தம்பி என்னப்பா இப்படி போட்டு வச்சிருக்க என்றேன்.. நான் கூறியது அவருக்கு புரியவே இல்லை நீண்ட நேரத்துக்கு பிறகு தவறுதலாக பணத்தை போட்டு விட்டோம் என்பதை அறிந்தவர் நீங்களே போடுங்க அண்ணா என்றார் பிறகு 839 ரூபாய் போட்டு திரும்பினேன். என்னுடன் வந்த நண்பர் பார்த்தியா ஹிந்தி நமக்கு தெரியாததனால எவ்வளவு கஷ்டமா இருக்கு,ஆனா தமிழ்நாட்டுல ஹிந்தி படிக்கக் கூடாது படிக்க கூடாதுன்னு சொல்லிச் சொல்லி இப்போ எவ்வளவு கஷ்டம் பாரு என்றார்.இவரு ஹிந்திகாரர் அப்போ மராத்தி மொழி பேசுற ஆள் இங்க இருந்தா நம்ம மராத்தி மொழி கற்றுக்கொண்டு சாப்பிட வரணுமா?,போஜ்புரி பேசுற ஆள் இருந்தால் போஜ்புரி கத்துக்கிட்டு வரணுமா?
அந்த தம்பி மட்டும் இல்ல நாமா இருந்தாலும் பொழைக்க போற இடத்துல அந்த மொழியை
நாமதான் கஷ்டப்பட்டு கத்துக்கணும் என்றேன் சரியா? தவறா?
கண்ணியம் காப்போம்! பெண்ணியம் போற்றுவோம்!
மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஓர் உன்னத அமைப்பு.
அதில் பதவி ஏற்கும் ஒவ்வொருவரும் எடுக்கும் பதவிப் பிரமாணமும், தேர்தலுக்கு முன் அளிக்கும் உறுதிமொழியும் ஒன்றையே சொல்கிறது - தன்னலம் இல்லை, ஒழுக்கமின்மை இல்லை, ஊழல் இல்லை, அதிகார துஷ்பிரயோகம் இல்லை.
ஆனால் இன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு செய்தி, நம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவரிடம் தகாத வகையில் பேசியதாகக் கூறப்படும் செய்தி உண்மையா, இல்லையா என்பதை விசாரணைதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அந்தச் செய்தி எழுப்பும் கேள்வி மிக முக்கியமானது.
அரசியல் என்பது திரைக்கதை அல்ல. அது மக்களின் வாழ்வு.
திரையில் கண்ட கதாபாத்திரங்களின் நேர்மையால் ஈர்க்கப்பட்டு, நிஜத்திலும் நேர்மையான மாற்றம் வேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொள்வது ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியின் தலையாய கடமை.
ஒரு தலைவரின் பிம்பத்தால் கிடைத்த வெற்றியை, தனது தனிப்பட்ட தகுதியாகக் கருதி விடக்கூடாது. பதவி என்பது அதிகாரத்தைக் காட்டுவதற்கு அல்ல; பணிவோடு சேவை செய்வதற்கு.
குறிப்பாக, உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியைப் பற்றி, உறுதி செய்யப்படாத புகைப்படங்களுடனும், அரைகுறை விமர்சனங்களுடனும் பொது வெளியில் பேசுவது தமிழர் மரபும் அல்ல; நாகரிகமும் அல்ல.
மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தனிப்பட்ட நெறிமுறைகளும், கண்ணியமும், கட்டுப்பாடும் உண்டு. அவர்கள் உணர்ச்சிப் பெருக்கில் பொது வெளியில் வந்து பேச மாட்டார்கள். முறையான விசாரணை மூலமே உண்மை வெளிவரும். குற்றம் உறுதியானால், அது சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமல்ல, இனி வரும் அனைவருக்கும் ஒரு வரலாற்றுப் பாடமாக அமைய வேண்டும்.
இன்று தமிழ்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் சாதாரணமானவை அல்ல - சட்டம் ஒழுங்கு, லஞ்சம், ஊழல், வறுமை, வேலையில்லாத பட்டதாரிகளின் எதிர்காலம், விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் கடன் சுமை.
இவற்றைத் தீர்க்க வேண்டிய இடத்தில், பொறுப்பற்ற பேச்சுகளும், ஒழுக்கமற்ற செயல்களும் தடையாக மாறிவிடக் கூடாது.
எனவே, த.வெ.க. தலைமைக்கு ஒரு அன்பான வேண்டுகோள் -
தகுதியும், தரமும், பக்குவமும், அரசியல் முதிர்ச்சியும் உள்ளவர்களையே மக்கள் பணிக்கு பரிந்துரை செய்யுங்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த தவறுகளுக்கும், இன்றைய செயல்களுக்கும் வேறுபாடு இல்லை என்ற நிலை வந்துவிடக் கூடாது. மக்கள் வாக்களித்தது மாற்றத்திற்காகவே தவிர, மீண்டும் ஒரு ஏமாற்றத்திற்காக அல்ல.
பெண்ணியம் போற்றுவோம்!
கண்ணியம் காப்போம்!
நன்றி!
@CMOTamilnadu@tnpoliceoffl@TVKVijayHQ
தலைவரை நாம் ஏன் ஒரு தீர்க்கதரிசி என்றும் , தன்னலமில்லா பேராண்மை எனவும் போற்றி தொடர்கிறோம் என அறியாத, அறிய விரும்புகிற எம் உறவுகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
+ இறுதி நொடி வரை கணவனோடு போரிட்டு மடிந்த ஒரு பெண்ணின் காதல்...
+ அயர்லாந்தில் மருத்துவப்படிப்பை முடித்து தாய்நாடு திரும்பி போர்க்களம் நுழைந்து மடிந்த ஒரு மகளின் அன்பு...
+ தாய்நாட்டு விமானப்படையில் பணியாற்றி தந்தை முன்னே போர்க்களத்தில் மடிந்த மகனின் நேசம்...
+ தம்மை துரோகிகளின் துணையோடு எதிரி சன்னங்களால் துளைத்து உயிரை பறிக்கப்போகிறான் என அறியாத அந்த பச்சிளம் பாலகனின் மரணம்...
+ இனவிடியலுக்காய் தங்களது உயிரையே ஆயுதமாக ஏந்தி நெருப்பில் நனைந்த மாவீரர்கள்....
+ அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் சகிக்க முடியாமல், போராடி, தத்தமது பிள்ளைகளை, உடன் பிறந்தார்களை களப்பலி தந்தும், சமரில் வேண்டுமென்றே கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி மக்களின் இன உணர்வும், தலைவனின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும்...
இப்படி ஒரு தேசத்தின் மக்களின் மீது, அதே மண்ணில் வாழும் இன்னொரு இனக்கூட்டத்தை நிர்வகிக்க தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆட்சியாளர்களால், தொடர்ச்சியாக வஞ்சனைகளாலும் துரோகங்களாலும் கீழறுப்பு செய்யப்பட்டுக் கொண்டே இருந்தமையால், இவற்றிற்கு தீர்வு போராட்டம் எனும் ஆயுத வழி மட்டுமே என கிளர்ந்த தலைவனின், ஆழ் மனதில் தேங்கி கிடந்த ஆறாத வலிகளை உணர்ந்த இத்தனை ஆயிரம் மக்களுக்கு, எப்படியாவது போராடி , அந்த அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என, அப்பழுக்கற்று இறுதி வரை உறுதியாக களத்தில் நின்ற மாவீரம் அது என்பதால் தான், அவரை போற்றி பின் தொடர்ந்தோம், தொடர்ந்து கொண்டும் இருக்கிறோம்.
நிலங்களால் இரு வேறு இடங்களில் நாம் வாழ்ந்தாலும், இனத்தின் விடுதலை எனும் தனியாத தாகம் என்பது ஒன்று தான், அங்கு மக்கள் அடிமைகளாக ஒரு போதும் வாழ விரும்பவில்லை, ஆயினும் துரோகமும், இனவாதமும் கைகோர்த்து நின்றது, இங்கு பரந்த நிலப்பரப்பில் பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் வாழ்வது இயல்பு என்றாலும், இந்த நிலத்தின் ஆதிகளாகவும், அடித்தளமாகவும் இருந்தது நாம் தான் எனும் வரலாற்றை மறந்து, அடிமை எனும் மடமையால் வீழ்ந்து கிடக்கும் நாமும் ஓர் நாள் உறுதியாக அடித்து விரட்டப்படும் நாள் மிக விரைவில் என்பதை உணர்ந்து, அதனை எதிர்த்து போராடுவது என்பது வேறு, அவற்றை வைத்து அற்ப அரசியல் செய்வது என்பது வேறு என்பதை மேற்சொன்ன ஒரு ஒப்பற்ற தலைவனின் கடந்த காலமே எமக்கு வழி காட்டி ஒப்பிட வைத்தது என்பது தான் நிதர்சனம்.
ஆம், இவ்வுலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும் ஒரு அதிசய தத்துவமே பிரபாகரம்.♥️
#அறிவோம்ஈழம்
#தமிழீழதேசியமாவீரர்நாள்நவம்பர்27
#தலைவர்72
#பிரபாகரம்
அனைத்து வழக்குகளில் இருந்தும் அனோஜன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
அவர் ஓரிரு வாரத்தில் நாடு திரும்புவார் என இலங்கை அரசு அறிவித்துள்ளது
இலங்கை அரசு உட்பட பலர் அனோஜனின் விடுதலைக்கு முயற்சி செய்தமைக்கு முக்கிய காரணம் மக்கள் அனைவரும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பியதே.