@CMOTamilNadu ஏம்பல் வட்டாரம் மாதிரி நகர்புறமாக ( Model Village Town) ஆக மாறி வருகிறது. சுமார்
ரூபாய் 8- 10 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் அடுத்த மாத இறுதியில் நிறைவடையவுள்ளது. (கல்வி, சுகாதாரம், நூலகம், நீர்நிலை மேம்பாடு, சாலை வசதிகள், பொது மக்களுக்கான நடைபாதை பூங்கா).
@TANGEDCO_Offcl
புதுக்கோட்டை DT ஆவுடையார்கோவில் TK மதகம் பஞ்சாயத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 33/11 KVA துணை மின் நிலைய கட்டுமான பணிகள் இன்றுவரை தொடங்கப்படவில்லை.
Civil work பணிகளை உடன் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
@TANGEDCO_CE_TRY@CTR_Nirmalkumar@TVKVijayHQ
A TVK union secretary and his brother were reportedly arrested by Srivaikuntam police in Thoothukudi district for allegedly damaging a TV, a computor and a two wheeler at a stone quarry after the quarry manager refused to give them bribe @TVKVijayHQ@CMOTamilnadu
@TANGEDCO_Offcl
புதுக்கோட்டை DT ஆவுடையார்கோவில் TK மதகம் பஞ்சாயத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 33/11 KVA துணை மின் நிலைய கட்டுமான பணிகள் இன்றுவரை தொடங்கப்படவில்லை.
Civil work பணிகளை உடன் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
@TANGEDCO_CE_TRY@CTR_Nirmalkumar@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கு,
பொருள்: புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை (APHC) மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக (UPHC) தரம் உயர்த்தி அறிவிக்கக் கோருதல்.
மாண்புமிகு ஐயா,
பணிவான வணக்கம். 🙏
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஏம்பல் வட்டாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைக்கோடி கிராம மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நலன் மேம்பட, கீழ்க்கண்ட கோரிக்கையை மனிதநேய அடிப்படையிலும், பொதுநலன் கருதியும் பரிசீலித்து நிறைவேற்றி தருமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கோரிக்கை:
ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை (APHC), மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக (UPHC) தரம் உயர்த்தி, இவ்வாண்டு பட்ஜெட் மானியக் கோரிக்கையில் அறிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இக்கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து, ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழு அளித்த மனுவின் அடிப்படையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்கள், தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, ஏம்பல் APHC-ஐ UPHC-ஆக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50,000 பொதுமக்களின் ஒரே முக்கிய அரசு மருத்துவ சேவை மையமாக செயல்பட்டு வருகிறது.
தற்போதைய கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள், இப்பெரும் மக்கள் தொகையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளன. இதனால் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உள்ளிட்டோர் நீண்ட தூரம் பயணித்து மருத்துவ சேவைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எனவே, சமத்துவமான மருத்துவ சேவையை கிராமப்புற மக்களுக்கு உறுதி செய்யும் தங்களின் அரசின் உயரிய நோக்கத்தை கருத்தில் கொண்டு, மூன்று மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் வசிக்கும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை (APHC), மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக (UPHC) தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை, தற்போதைய பட்ஜெட் மானியக் கோரிக்கையில் வெளியிட்டு, அதற்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்புதலை விரைவாக வழங்கிடுமாறு தங்களை மிகுந்த அன்புடனும், நம்பிக்கையுடனும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஏம்பல் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டநாள் கனவை நனவாக்கி, தரமான மருத்துவ சேவையை கிராம மக்களின் வாசலுக்கு கொண்டு சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை தாங்கள் எடுப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
நன்றி.
இப்படிக்கு,
P. பேரின்பநாதன், PMP, MBA
தலைமை ஒருங்கிணைப்பாளர்
ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழு (Embal Development Group)
புதுக்கோட்டை மாவட்டம் – 622204.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை (APHC) மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக ( UPHC) மேம்படுத்த அனுப்பிய கோரிக்கை அடிப்படையில் @MoHFW_INDIA தங்களுக்கு @NHM_TN@TNDPHPM@arunraajkg உரிய நேர்மறை நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதியுள்ளா்ர்கள்.
புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் எல்லைபுற 300 கிராமங்களின் 50,000 பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏம்பல் UPHC மேம்பாட்டை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பீர்கள் என நம்புகிறோம்.
@TVKVijayHQ@actorvijay@kolappan@karthickselvaa@GunasekaranMu@the_hindu@vikatan