🌺 உறவுகள் மறைந்தாலும் நினைவுகள் என்றும் மறைவதில்லை…! 💔🌹
ஒரு தாயின் கண்களில் வழியும் ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்குப் பின்னாலும் சொல்ல முடியாத ஆயிரம் கதைகள் புதைந்திருக்கின்றன…
பிரிந்த உறவுகளின் நினைவுகள் நெஞ்சை விட்டு நீங்குவதில்லை. காலங்கள் கடந்தாலும், காயங்கள் ஆறினாலும், இழந்தவர்களின் நினைவுகள் மட்டும் இதயத்தில் என்றும் உயிரோடு இருக்கும்.
ஒரு தாயின் கண்ணீருக்கு வார்த்தைகள் இல்லை… அந்த வலியை உணர இதயம்தான் வேண்டும்! 🌹
#மாவீரர்நாள்2026
At exactly 6.05 PM local time today, lamps will be lit around the world.
This is the exact time that Shankar, the first LTTE cadre to be killed, drew his last breath.
This song plays, tears are shed and an oath is made.
Maaveerar Naal.
தமிழர்களுக்கு எதிராக போர் நடத்திய சிங்களவர்களுக்கு கூட கருணை காட்டியவர்கள் தலைவர்,
கோவில்,தேவாலயம்,மசூதி என்று எங்கு சென்றாலும் திராவிடம் செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கிடையாது.
#மாவீரர்நாள்2026
"அப்பா, என்ன பாட்டுக்கேட்குது?"
"அது அப்புச்சாமிகளுக்கு பாட்டுப் போட்டிருக்கினம் ராசா"
துயிலுமில்லத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த போது காதில் விழுந்த உரையாடல். என்றென்றைக்கும் அவர்கள் எங்கள் இறைகள் தான்❤️.
தமிழக மண்ணில்:
பட்டொளி வீசும் தமிழீழத் தேசியக் கொடி!
கடல்கடந்தும் உயர்ந்து பறக்கும் எம் தேசத்தின் ஆன்மா...
"ஏறுது பார் கொடி ஏறுது பார் – தமிழீழத்தின் வேதனை தீர்த்த கொடி!" என்ற எழுச்சிப் பாடல் விண்ணதிர, தமிழகத்தின் செம்மண் பரப்பில் எமது தாயகத்தின் தேசியக் கொடி உயர்ந்து பறக்கும் இந்தக் காட்சி, ஒவ்வொரு ஈழத்தமிழனின் நெஞ்சத்தையும் உணர்வின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கின்றது!
எமது தாயகப் பெருநிலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இரும்புப் பாதங்களால் சிதைக்கப்பட்டு, எமது தேசியக் கொடியை ஏற்றுவதற்கும், வித்துடல்களை நினைவுகூருவதற்கும் சிங்களப் பேரினவாதம் தடை விதித்திருக்கும் இக்காலகட்டத்தில்; தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தாய்த்தமிழ் உறவுகள், எமது தேசியக் கொடியை வானுயர ஏற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் இக்காட்சி எமது இனத்திற்குப் பெரும் ஆறுதலையும், புதிய நம்பிக்கையையும் அளிக்கின்றது.
வானத்தில் பட்டொளி வீசிப் பறக்கும் அந்தப் புலிக்கொடியில், வல்வெட்டித்துறை முதல் நந்திக்கடல் வரை தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய பல்லாயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்களின் மூச்சுக்காற்று கலந்திருக்கின்றது. எல்லைக் கோடுகளும், கடல்களும் எமது நிலப்பரப்பைப் பிரித்திருக்கலாம்; ஆனால், தமிழீழ விடுதலை என்ற ஒற்றை இலட்சியமும், மாவீரர்களின் ஈகமும் உலகத் தமிழினத்தை ஒரே ஆன்மாவாக இணைத்து வைத்திருக்கின்றது என்பதற்கு இக்காட்சியே உயிருள்ள சாட்சியம்!
காலங்கள் உருண்டோடினாலும், எமது தேசத்தின் கொடி ஒருபோதும் தாழாது; எமது மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது!
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய எமது மானமாவீரர்களுக்குச் சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள்!
@KalaranjanK@RatnaKing20@karikalaseelan