அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி பெண் உயிரிழக்க காரணமாகியுள்ள அரசு மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
‘தூய அரசியலின் நேர் வடிவம்’ நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர்..!
காவல்துறை அமைச்சராக இருக்கிறபோதே அரசுப் பேருந்தில் பயணம் செய்த எளிமையானப் பெருமகன்..!
தன்னுடைய மகன், தன் சொந்த முயற்சியால் காவல்துறைக்குத் தேர்வாகி வரும்போது, நான் சொல்லித்தான் கிடைத்தது என்று யாராவது சொல்லக்கூடும், எனவே அது வேண்டாம் என்று விலகச் சொல்லி, ஊழல், இலஞ்சம் என எவ்வித முறைகேடுகளும் அண்ட முடியாத பெருநெருப்பாக வாழ்ந்த பெருந்தகை..!
பெருந்தலைவர் காமராசருக்கு இத்தனைப் பெருமைகள் இருக்கிறது என்றால், அதற்கு ஐயா கக்கனைப் போன்ற பெருந்தகைகளும் பெரும் காரணம். தன்னுடைய அமைச்சரவையில் இருந்த எல்லோரையும் நேர்மையாளர்களாக வைத்திருந்ததால்தான் பெருந்தலைவரின் நேர்மை போற்றப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. தாத்தா கக்கன் அவர்களுடைய வாழ்க்கை, வரலாறு, வழித்தடம் ஆகியவை நம்மைப் போன்ற பிள்ளைகளுக்கு ஆகப்பெரும் படிப்பினை.
அவரைப் போலவே உண்மையும், நேர்மையும், எளிமையுமாக அரசியல் பணியாற்றுவோம் என்கிற உறுதியை பேரப்பிள்ளைகளாகிய நாம் இன்றைய நாளில் ஏற்போம்.
பெருமைமிகு தமிழர் இன அடையாளமாக, மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற ‘தூய அரசியலின்’ நேர்வடிவம் நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
திரைக்கலைத்துறையில் தம்முடைய ஒப்படைப்பு மிகுந்த நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகராக மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கும், என் பேரன்பிற்குரிய அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும் உயரிய விருதான 'யுவ புரோஸ்கர்' விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.
கலைத்துறையில் அளப்பரிய சாதனைகள் புரிந்துள்ள அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
#CoimbatoreMurder | சாக்கு மூட்டையில் பெண் சடலம்
கோவை அன்னூரில் பாழடைந்த கிணற்றில் கிடந்த சாக்குமூட்டையில் கை கால் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு
தெரு தெருவா கத்தி கத்தி சொன்னாப்ல சீமான் அண்ண.. ஒருத்தனும் கேட்கல.. அது இப்போ அப்படியே நடக்குது😭😭😭😤😤
அரசியல் ஆசான் சீமான். 🙏
"10 லட்சம் கோடி ரூபாய் மொத்த நிலுவைக் கடன்" - வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர்.
தமிழ்நாட்டில் வடவரின் ஆதிக்கத்தை
உடனே ஒழிக்க வேண்டும்!
==============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்
தோழர் கதிர்நிலவன்!
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/P3zxVViacO
தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://t.co/cNmSap30iT
தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
(தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://t.co/GVu01jKxmP
=====================
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://t.co/NDG0xUhVcf
=====================
இணையத்தில்...
https://t.co/JXFUxmkbnp
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095
நல்லது சொன்னா எவன் கேக்குறான்🤷
தமிழர்கள் தங்களை, தங்கள் எதிர்காலப் பிள்ளைகளின் நலனை பாதுகாக்க, தன் தாய் நிலத்தை காப்பது மிகவும் அவசியம்…
அது இல்லையென்றால் நாம் அடிமைகளாகவும், அகதிகளாகவும் மாற நேரிடும்⚠️⚠️⚠️
நாம் தமிழர் கட்சி - தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி தம்பிதுரை அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி தம்பிதுரை அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி தம்பிதுரை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
போராடினாலும் சாவோம்,
போராடாவிட்டாலும் சாவோம்,
போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்புள்ளது
அதனால் போராடி சாவோம்...
- தமிழ் இனத்தலைவர் 💯💯❤️💛
தேனி மீனாட்சிசுந்தரம் இராணுவவீரர் 🙏🏻
தமிழ்தேசியம்னு சொல்லிட்டு தமிழ் உணர்வாளர்கள் வாராங்க.
பொது எதிரியான அவர்கள் காலூன்ற,
#திராவிட_தெலுங்கர்களான நாம விடக்கூடாது.
-வையாபுரி கோபால்சாமி நாயுடு(வைகோ)
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பூலாங்கிணர் ஊராட்சியில் ரயில்வே தண்டவாளத்துக்கு அருகில் புதிதாக திறக்கப்பட்ட FL-2 மதுபான கடை
50மீ இடைவெளி கூட இல்லாத தண்டவாளம் மற்றும் திருமண மண்டபம் என மிக அருகில் இருந்தும் மக்களின் பாதுகாப்பை கொஞ்சம் கூட சிந்திக்காமல் திறக்கப்பட்ட இந்த மதுபான கடை இன்று மிக ஆபத்தானதாக மாறி வருகிறது
20.03.2026 அன்று திமுக ஆட்சியின் போது நாம் தமிழர் கட்சி இந்த கடையை திறக்க கூடாது என்று மனு கொடுத்தும்,தேர்தலுக்குப் பிறகு திறக்க உள்ளார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் 02-05-2026 அன்று சட்டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் அதை பொருட்படுத்தாத தவெக ரீல்ஸ் அரசு இந்த கடையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஏற்கனவே இந்த மருத்துவமனையில் பல மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவையெல்லாம் வெளியே தெரியவில்லை என்றாலும் திருநெல்வேலி நாம் தமிழர் கட்சி உறவு பா #சத்யா அவர்கள் தலையிட்டால் பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது 🔥🔥🔥