தன் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு 3 மாத வாடகை 4.20 லட்சம் ரூபாய் வேண்டாம் என்றுள்ளார் பட்டுக்கோட்டை டாக்டர் கனகரத்தினம்.
ஊரடங்கால் வியாபாரிகள் படும் சிரமம் உணர்ந்து இந்த உதவி செய்ததாக சொல்லும் இவர் பல வருடமாக 10ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார்
இப்படியும் மனிதர்கள் ❤️
பேரிடர் காலம் வந்தால் எந்த நடிகர் எவ்வளவு தந்தார் என்பது விவாதப்பொருளாகிவிடுகிறது.ஆனால் சில ஆயிரம் கையில் வைத்திருந்தாலும் அதில் சில நூறு இல்லாதோருக்கு தருகிறோமா என்பதிலேயே இருக்கிறது உண்மையான அறம்.நடிகர் விஜயை வம்பிழுத்து பதிவிட்டவர்கள். தான் என்ன செய்தோம் என பதிவிடலாம்🙏🙏
அரசு மட்டும்தான்
அருள் செய்ய வேண்டுமென்றால்
அறமென்பதெதற்காக?
ஆணிவேர் மட்டும்தான்
நீர் வழங்க வேண்டுமென்றால்
பக்க வேர்கள் எதற்காக?
#TNGovt#coronavirusinindia#Corona
தனது மனைவிக்கு புற்றுநோய் வலி அதிகமானதால் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வரை..
"#140கிலோமீட்டர் சைக்கிளிலயே வைத்து அழைத்து வந்துள்ளார் 58 வயது முதியவர் அறிவழகன்."
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது ❤️❤️❤️