நன்றாக யோசித்துப் பார்த்தால் அங்கிருப்பது விஜய் அல்ல ஜீ என்பது புரியவரும்
1. விஜய் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார் , ஜீ சந்திக்க மாட்டார்
2. ஒரே ஒரு நிர்பயா என்ற பெயரை வைத்து ஜீயால் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு இல்லை என்று பேசவைக்க முடியும், இங்கும் அண்ணா பல்கலைக்கழக "யார் அந்த சார் ? " போன்ற சம்பவங்கள் வைத்தே ஆட்டையைக் கலைக்க முடியும்
3. நான் ஏழை உதவி இயக்குநர் மகனென்பார் , நான் ஏழைத்தாயின் மகனென்பார்
4. குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் என்று வாரிசு நடிகராக இருந்தாலும் கூச்சமில்லாமல் அந்த narrative ஐ விஜயால் செட் செய்ய முடியும் , அதே குடும்ப ஆட்சி என்று ராகுல் காந்தியை ஜியால் ஓரம் கட்ட முடியும்.
5. தளபதி உள்ளூரில் தனி விமானத்தில் சுற்றுவார் ஜீ வெளிநாடுகளுக்கு அடிக்கடி விமானத்தில் பயணிப்பார்.
6. விஜய் சினிமாவில் பெரிய நடிகர் என்று சொல்வதை விட எதிர் முகாமில் அஜித் ரசிகர்களிடம் அஜித் குடும்பம் என்று வெறுப்பரசியலை முதலில் அவர் தந்தையை வைத்து செய்தார் பின் ரூட் நிறுவனம் வைத்து மற்ற நடிகர்களின் பிம்பத்தை உடைத்து வேலை செய்தார்கள் , பின்பு அதையே அரசியலில் பயன்படுத்தினார். விஜய் தான் எப்படி என்பதை விட விஜய் பிம்பத்தை கட்டமைக்க ஒரு எதிர் பிம்பம் அவருக்குத் தேவைப்படும்
விஜய் vs அஜித்
விஜய் VS ரஜினி
விஜய் VS ஸ்டாலின்
தூயசக்தி VS தீயசக்தி
விஜய் vs உதய்
விஜயின் மூலதனம் வெறுப்பு அரசியல் , " ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி " என்று சொல்வதை
மதுரையில் கேட்டேன் , தேனியில் கேட்டேன் , ஆலந்தூரில் கேட்டேன்.
பாஜகவின் மூலதனம் வெறுப்பு அரசியல் தான்
மோடி vs இசுலாமியர்கள்
மோடி vs கிருத்துவர்கள்
மோடி vs பட்டியலின மக்கள்
இந்த வெறுப்பு அரசியல் மக்களிடம் வேலை செய்கிறது , பிளவுவாத அரசியலுக்கும் உபயோகப்படும். நாம் என்ன சொல்கிறோம் என்று சொல்வதைவிட எதிராளியை கட்டமைத்து அவர்களைத் திட்டிக்கொண்டே இருப்பதையே அரசியலாகச் செய்கிறார்கள் இது ஆபத்து . இது முதன்முதலில் விஜய் அஜித்துக்கு எதிராக பயன்படுத்துகிறார் , அது சினிமாவில் வேலை செய்தது. இருவருமே தன்னை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தி மார்க்கெட்டில் வேறு யாருமே இல்லை என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள்.
நன்றாக யோசித்துப்பாருங்கள் விஜய் , அஜித்தை விட திறமையாக இருக்கும் சூர்யா , விக்ரம் மார்க்கெட்டில் எப்போதுமே டல் தான் . இவர்கள் கட்டமைத்தது போல பிம்பத்தை அவர்களால் கடைசி வரை கட்டமைக்கவே முடியவில்லை. விஜய்க்கு நல்வாய்ப்பாக விஜய் அரசியலில் நுழையும் போது வரலாறு தெரியாத இரண்டு தலைமுறைகள் உருவாகி இருக்கிறது.
நம்மெல்லாம் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை 40 வயதுக்கு மேல் இருக்கும் நமக்குமே வரலாறு பற்றிய தெளிவில்லை. வெறும் genz மட்டுமே வாக்கு அளித்திருந்தால் விஜய் ஜெயிக்க வாய்ப்பில்லை அதைத்தாண்டி அரசியல் புரிதல் இல்லாமல் ரீல்ஸ் மட்டுமே பார்க்கும் 40 பிளஸ் ஆட்களை கணிசமாக பார்க்க முடிகிறது.
அவர்கள் அப்பாவாகவோ அம்மாவாகவோ இருக்கிறார்கள் அவர்களே 18 வயது மகனுக்கோ மகளுக்கோ தந்தையாக தாயாக இருக்கிறார்கள்.
அந்த வெறுப்பு அரசியல் ஒண்ணுமே இல்லாத அரசியலற்ற மூளைக்குள் சென்று தங்கி விடுகிறது. அதை வைத்து சோசியல் இன்ஜினியரிங் செய்ய முடிகிறது
7. விஜய் ஜெயித்தது சோசியல் இன்ஜினியரிங் முறை அதாவது வாட்ஸாப்ப் குழுமங்களை உருவாக்குவது நிறைய வதந்திகளை உண்மை போலவே பரப்புவது , ஜீ 2014 க்கு முன்பே ஒரு பெரிய டீம் வைத்துள்ளார் , ட்விட்டரில் ஒரு ட்வீட்க்கு காசு கொடுக்கப்படும் , அதில் வெறுப்பரசியல் எல்லாவற்றையும் செய்ய முடியும் பாஜக பல வதந்திகளை கிளப்பி பல கலவரங்களை செய்ததற்கு காரணமே வாட்ஸாப்ப் குழுக்கள் தான்
ஒரு வதந்தியை பரப்பிவிட்டால் அதற்கு எதிராக உண்மையை வைத்தால் கூட வதந்தி 1 கோடி பேருக்கு மேலே பரவினால் , பதில் 10 லட்சம் பேர் அளவிலேயே இருக்கும் . இந்த சோசியல் மீடியா டிஜிட்டல் சர்க்காரை விஜய் செய்கிறார் அது அப்படியே மோடி மாடல் . -தோழர் கார்த்திக்
வரி செலுத்துபவர்களின் பணத்தை தொழிலதிபர்களுக்கு அள்ளிக் கொடுத்து அவர்கள் கடனை கட்டாமல் ஓடிச் செல்வதை விட..
உழைக்கும் மக்களுக்கு கொடுப்பது வரி கட்டுபவர்களுக்கும் மகிழ்ச்சி அதைப் பெற்றுக் கொள்பவர்களுக்கும் மகிழ்ச்சி
அடுத்து இதுபோல கொடுக்கத் தேவையில்லாத வளர்ச்சியை நோக்கித்தான் இந்த செயல்கள் எல்லாமே செய்யப்படுகின்றன.
@Saradhvaan@thiruja2009 பல கந்து வட்டி கடைகளில் அத்தனை சாமி படங்களும் நெற்றியில் விபூதி குங்குமம் சந்தனம் அப்பி இருப்பார்கள் ஆனா வாயில் இருந்து வார்த்தைகள் மட்டும் ஓத்தா ஒம்மா என்கிற தேசிய கீதங்கள்தான் ஒலிக்கும்