அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
புதிய அரசு அமையப் போகிறது. வென்றது எதிரிகள் ஆனாலும் நேரில் சென்று வாழ்த்துவதில் தவறில்லைதான்! ஆனால், துரோகிகளை உடன் நிறுத்திக் கொண்டு கொக்கரிக்கும்போது நாம் அங்கே செல்ல வேண்டிய அவசியமில்லை.
புதிய அரசுக்கு கழகத்தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டார். இது போதும்.
@mkstalin 🙏
தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!
திராவிட மாடல் தனித்துவமான மாடல்!
சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!
முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!
இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!
நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!
#DravidianModel is distinct. Proven in numbers.
We built the foundation in three years. Delivered two consecutive years of double-digit growth.
This progress is powered by the people of Tamil Nadu. Our thanks for your work and trust.
This is only the beginning. With your support, the climb will accelerate.
We are not competing within India. Tamil Nadu will lead South Asia.
இது வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் டெல்லியில்!
தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்! தொகுதி மறுவரையறைக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓயாது.
#TNvsNDA
எனக்கு செங்கம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக மூன்றாவது முறையாக அறிவித்த
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் @mkstalin அவர்களுக்கும்
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் @Udhaystalin., அவர்களுக்கும்,
மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அய்யா @evvelu ., அவர்களுக்கும்
என் சார்பிலும் செங்கம் தொகுதி மக்களின் சார்பிலும், செங்கம் தொகுதி திமுக சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#Tiruvannamalai #chengam #thandrampet #MLA #dmk #YOUTHWING #youth #association #election2026 #DMK4TN
பாஜக - தவெக இணைந்து நடத்தும் நாடகம்
ஜனநாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக விட்டது.. பகவந்த் கேசரிக்கு சென்சார் கொடுக்க முடியும் என்றால் ஜனநாயகனுக்கும் கொடுக்க முடியும்.. அப்படி இருந்தும் இழுத்தடிப்பது இரண்டு காரணங்களுக்காக
1. படம் பகவந்த் கேசரியின் ரீமேக் என்று தெரிந்ததும் பலரும் OTT ல் பகவந்த் கேசரி பார்க்கத் தொடங்கி விட்டனர். இதனால் ஜனநாயகனுக்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இல்லாமல் போனது.. மேலும் அதே சமயத்தில் வெளியாக இருக்கும் பராசக்தி திரைப்படத்தின் டிரைலர்
ஜனநாயகனை விட அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ளது… படமாகவும் ஜனநாயகனை விட பராசக்தி அதிக வரவேற்பை பெற்றால் அது முதல்வர் கனவில் வலம் வரும் விஜய்க்கு பெரும் பின்னடைவு..
ஏதாவது செய்து பரபரப்பை அதிகப்படுத்தி விஜய் படத்திற்கு வரவேற்பு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் படத்திற்கு சென்சார் பிரச்னை, படம் வெளியாகும் போது விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவது என எல்லா நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன..
2. இந்த பிரச்னைகளை எல்லாம் திமுகதான் செய்கிறது என்று தற்குறிகளை நம்ப வைத்து திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்துவது.. அதற்கேற்றவாறு சமூக வலைதளங்களிலும் , விவாதங்களிலும் இதற்கு காரணம் திமுக தான் என போலியான கருத்துருவாக்கம் செய்வது.. அதையும் தாண்டி தெளிவாக சிந்தித்து இது பாஜக வின் வேலை என்போரிடம் , பார்த்தீர்களா பாஜக விஜய்க்கு எப்படி எல்லாம் தொல்லை கொடுக்கிறது என அழுது அவர்களின் ஆதரவையும் பெற முயற்சிப்பது….
ஆனால் பாஜக வும் விஜயும் நடத்தும் இந்த நாடகத்தை எல்லாம் நம்ப இது வட நாடல்ல…தமிழ் நாடு…
தமிழ் கேள்வி தி. செந்தில் வேல்