நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சா��்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறு������களை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகள��யும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்த��் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
Guidance Tamil Nadu, in collaboration with Electronic Industries Association of India (@ELCINA_INDIA) and India Cellular & Electronics Association (@ICEA_India), conducted the Tamil Nadu Industrial Policy Stakeholders Connect at its office on Tuesday as part of the consultation process for the upcoming Tamil Nadu Industrial Policy.
The session, chaired by Dr. S. Vijayakumar, IAS, Additional Chief Secretary, Industries Department, brought together key stakeholders from the electronics and semiconductor ecosystem to gather industry perspectives on the opportunities, challenges, and policy support required to strengthen the sector.
Participants also shared candid feedback through a structured survey, highlighting priority areas for policy intervention, measures to support emerging and future-ready sectors, and recommendations to boost local demand and build a stronger industrial ecosystem.
#InvestInTN #MakeInTN #ThriveInTN
@CMOTamilnadu@Keerthana4VNR@deepakj2012@Alarmelmangai@TNDIPRNEWS
ஒரு சில விநாடிகள் கொண்ட வெட்டப்பட்ட காணொளியை வைத்து ஒருவரை குற்றவாளியாக சித்தரிப்பது பொறுப்பான அரசியல் அல்ல; அது திட்டமிட்ட அவதூறு.
அமைச்சர் திரு. டி. சரத்குமார் அவர்கள், குழந்தைக்கான மருந்தை பொடியாக்கிக் கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார். அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் இதை உறுதிப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். மேலும், குழந்தையின் உறவினர்களும் இதே விளக்கத்தையே பகிர்ந்துள்ளனர்.
இத்தனை விளக்கங்கள் வெளிவந்த பிறகும், வெட்டப்பட்ட காணொளியை மட்டும் தொடர்ந்து பரப்புவது பல கேள்விகளை எழுப்புகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலும், மற்றும் முன்னாள் அமைச்சரின் இல்லங்களில் அமலாக���கத்துறை (ED) சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலிலும் இந்தக் காணொளி வைரலாக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நேரத் தேர்வு வெறும் தற்செயலா, அல்லது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியா என்பது பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய கேள்வி.
இறுதியில் உண்மையே வெல்லும்.
@TVKVijayHQ @CMOTamilnadu @TVKPartyHQ @ThanthiTV @PttvNewsX @News18TamilNadu @PTI_News #TVK #TVKVijay @sarath0828