மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பஞ்சு குமார் அவர்கள் விபத்தில் காயமடைந்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விரைவில் குணமடைந்து கழகப் பணிகளுக்குத் திரும்பிட வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@Nivedhamurugan_@durai944@sunramanathan_@Anbil_Mahesh@murasolimp@ilaiyadmk@anjugam_dr
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று!
ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
‘சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை’ என்று வீரமுழக்கமிட்ட தீரன் சின்னமலையின் தியாகத்தையும் – வீரத்தையும் போற்றுவோம்!
#தீரன்_சின்னமலை
போகும் வழியில் மயக்க மருந்து கொடுத்து ரேப் பண்ணும் கொடுமைக்காரர்
களாக அவர்கள் மாறிவிடுவார்கள். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசாகவே இந்த அரசு இருக்கிறது.
#வாயத்_திறங்க_CM#TNAssembly
விஜய் ரசிகைக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்காதவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய். இவர்தானா பெண்களின் பாதுகாவலர்? #வாயத்_திறங்க_CM#TNAssembly
'பாம்பு' தினேஷ் (சென்னை): ஆர்.கே. நகரைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகியான இவர், காசிமேடு பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் 2026 மே 5, ஆம் தேதி கைது செய்யப்பட்டார். #வாயத்_திறங்க_CM#TNAssembly
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (08.06.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ஐ.யூ.எம்.எல். – அதிமுக – காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த வாலாஜா ஒருங்கிணைப்பாளர்கள் ரிபாய், ஏ.எஸ்.இல்யாஸ், முகமது முபாரக், அக்பர் பர்ஷா, ஏ.பாஷா, இம்ரான் ஜலீல், அக்பர், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் ஜகபர்சாதிக், வணிகர் அணி அமீர்பாபுகாஜா- குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நிஜாம், அல்அமீன், முகமது சபீர், குளைச்சல் பகர்தீன், தொண்டர் அணி நசீர்ஷா, மாணவர் அணி மா.முகமது அஸ்கர், குளைச்சல் அப்துல்கரீம், அஜமல்கான், ஜகபர்சாதிக், முகமது சபீர், புதுமடம் ஹலீம், ரஷித்அலி, நிசார்அலி, ஹாரிஷ்அல்யாசின், முகமது அசாருதீன், முகமது பைசல், முகமது இம்தியாஸ், இஃபான்கான், ஹாபில்அல்யாசின், ஆசிக் அலி நஜிமுதீன், அகமது, அலாஹ்வாத்அமீர்பாஷா, சபீர்அகமது, இன்பராஜ், சபீர்அகமது, இன்பராஜ், சீர்காழி வெங்கடேஷ், முகமது பைசல், மருத்துவ மணி அஃபான் அகமது, ஷாகுல்இம்தியாஸ், முகமது நவீத், முகமது சலீம், அஜ்மல்அஹமது, முகமது ரியாஸ் - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புகாரிகாஜா, அமீர்பாபுகாஜா, சீர்காழி வெங்கடேஷ், இராஜசேகர் - அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் சாகுல்அமீத், சாகுல் அமீது - விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குளைச்சல் அ.சித்திக், சந்தோஷ்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் சுபேர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.
#DMK
“இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டின் எந்தப் பக்கம் புரட்டினாலும்
காணப்படும் பாடம், பகுத்திறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்!”
என பராசக்தியில் குணசேகரன் கர்ஜித்த வசனங்களைக் கொண்டே அதை எழுதிய முத்தமிழறிஞர் கலைஞரின் மன உறுதியை யூகிக்கலாம். அவர் நினைத்திருந்தால் வெறுமனே அரசியல் தத்துவம் என்று எழுதியிருக்க முடியும். ஆனால் ‘பயனுள்ள’ என்ற முன்னொட்டின் மூலமே இந்த மண்ணுக்கான அரசியலே தனக்கானதும் என்று மன உறுதியோடு தனது கருத்தை வெளியிடும் ஆற்றல் அவரிடமிருந்தது.
தேர்தலில் எத்தனையோ பெரும் வெற்றிகளைப் பார்த்தபோதும் படுதோல்விகளைச் சந்தித்தபோதும் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டதில்லை அவர். ஆட்சி என்பது தோளில் போடும் துண்டு, கட்சி என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கில் தான் மன உறுதியோடு இருந்ததோடு கழகக் கண்மணிகளாம் தனது உடன்பிறப்புகளுக்கும் அதைக் கடத்தி அவர்களையெல்லாம் கொள்கைக் குன்றுகளாய் வடித்தெடுத்தவர்.
நெருக்கடி நிலையின்போது பத்திரிகை தணிக்கையைக் கண்டித்து அண்ணா சிலை அருகில் எந்த அறிவிப்பும் இல்லாமல் தனியாளாக வந்து போராடியதும், நள்ளிரவு கைதின் போது சிறைவாசலிலேயே போராடியதுமென அவரின் மன உறுதியில் எதிரிகளின் ஆற்றல் அனைத்தும் விறலுக்கு இறைத்த நீர் என்பது வரலாறு!
தி.மு.கழகம் எனும் தனிப்பெரும் இயக்கம், அன்றும் - இன்றும் எதிரிகளை நடுங்க வைத்துக் கொண்டிருப்பதற்பகான அச்சாணி அந்த மன உறுதியே என நினைவுட்டியவாறு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் தமிழினத்தின் தனிப்பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை நெஞ்சில் வைப்போம்; கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞரின் பணி முடிக்க சூளுரைப்போம்; சுடர்முகம் தூக்குவோம்; இடர் பல வரினும் எதிர்த்து நிற்போம்; களம் காண்போம்; வெற்றிக் குவிப்போம்!
#kalaignarForever #Kalaignar103
திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று முற்பகலில் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து எடுத்துரைத்து, செயற்குழு உறுப்பினர்களோடு கலந்துரையாடினோம்.
இந்தக் கூட்டத்தில்
🙏🏽 கழக இளைஞரணிச் செயலாளர் திரு. @Udhaystalin அவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக நியமித்த கழகத்தலைவர் அவர்களுக்கு நன்றி,
✊ கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தியுள்ளபடி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை இம்மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு விடுவித்திட வேண்டும்,
🤝 திருச்சி(தெ) மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பறை சட்டமன்ற தொகுதிகளில் கழக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி,
🙌 மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செயல்படுவதை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தன்னுடைய முதல் உரையிலேயே பல்வேறு கேள்விகளை எழுப்பி நிரூபித்திருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்... ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினோம்.
மேலும், சிறப்புத் தீர்மானமாக "கழகத் தலைவர் அவர்கள், #திருச்சி_கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்" என்றும் நிறைவேற்றி உள்ளோம்.
#Trichy_South_DMK
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நின்று வென்ற புகழுக்குரிய தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் இன்றைய தினம் வெற்றி வேட்பாளர் சகோதரர் @sunramanathan_ அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கும் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசு தொடர மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம்!
கலைஞர் வென்ற தஞ்சை தொகுதியில் இருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்