கல்வித் துறையில் எனது 26 வருட அனுபவத்திலும், என் கணவரின் 40 வருட கல்விப் பணியிலும், ஒரு பள்ளியின் Recognition Renewal-க்காக ₹3,00,000 வழங்கிய அனுபவம் எங்களுக்கு இல்லை.
விதிமுறைகளின்படி தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், ஆய்வுகள் ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டதே தவிர, இதுபோன்ற தொகை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதில்லை.
தனிப்பட்ட உண்மையான அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்; இத்தகைய குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு உண்மை வெளிவர வேண்டும். - Nithya Eraiyanbu Facebook post.
#educationminister #renewalofrecognition
Yes, Nithya Eraiyambu’s views are based on many years of experience in education and deserve respect. Speaking from personal experience, she has simply asked for a fair and proper investigation. Such issues should be examined carefully, and the truth should come out in the interest of transparency and accountability.
#Education #TamilNadu #PrivateSchools #Transparency #Accountability
பத்து கை கொண்டு பற்றினாலும் அணைக்கவியலா மரமொன்று..
பசுமரமாய் இருந்த போதே பரணியாண்ட புகழென்று பாட்டன்மார் கூறியதுண்டு..
வேரசைத்த பெரும்புயல் பல கடந்த வரலாறுண்டு..
பட்டை உரிந்து பழஞ்சிலையாய் சிதைந்திருந்தது சிலகாலம்..
பகைக்கண் பதற பெருங்கிளையசைத்து
பூரித்தது நெடுங்காலம்..
கொம்பொடித்து கோடாரி செய்தவர் கூர் பார்த்த
கதையுமுண்டு.
உதிர்த்த இலை உரமெனவே
உயிர் பிடித்த தழையுமுண்டு..
வெற்று விறகல்ல வெந்து போக..
வாராது வந்த வைரம்..
ஆழ வேரோடி அழுந்தத் தடம் பதித்து ஆயிரம் வருடங்கள்
மண்ணாளும் விண்ணாளும்
மா நிலத்தின் நிறையாகும்..
#RememberingKalaignar
#கலைஞர்103
#KalaingarTheOG
#kalaignar103
பெரியாரின் பிள்ளை; அண்ணாவின் அருமைத் தம்பி; எளிய மனிதருக்கு எப்போதைக்குமான காவலன் எங்கள் உயிரினும் மேலான கலைஞருக்கு தமிழ் திகழ் பிறந்த நாள்! #HBDKalaignar103