இயக்குநர் இமயம் பாரதிராஜா - திரைக்கதை மன்னன் பாக்யராஜ் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் திரையுலகம் சார்பில் இன்று நடத்தப்பட்ட ‘ராஜகோபுரங்கள் - நினைவு உற்சவம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
தமிழ்த்திரையுலகிற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திய பாரதிராஜா சார் - பாக்யராஜ் சாரின் பெருமைகளையும் - சாதனைகளையும் நினைவுகூர்ந்து உரையாற்றினேன்.
அவர்கள் இருவரின் கலைப்பணி என்றென்றும் மக்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும்!
#Bharathiraja #KBhagyaraj
தி.மு.கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும் - கேடயமுமாக திகழும், கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம்.
கழகத்தினர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் கைது செய்வது; அதுவே, டெல்லி ஓனர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் இருப்பது என பம்மி நிற்கும் டம்மி அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் கழக வழக்கறிஞர் அணி அம்பலப்படுத்த வேண்டும் என்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டு நலனுக்காகவும் - கழகத்திற்காகவும் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ள கழக வழக்கறிஞர் அணியின் பணிகள் மென்மேலும் வேகமெடுக்கும் வகையில் உற்சாகமூட்டினோம்.
வழக்கறிஞர் அணியின் பணிகள் சிறக்க வாழ்த்தினோம்!
@DMKLegalWing@RSBharathiDMK@nrelango_dmk@PWilsonDMK
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.
போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.
நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.
குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.
மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
#சட்டம்_ஒழுங்கு
இந்தியத் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் இன்று!
விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம்.
பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட மக்களின் ஒற்றுமையே நமது இந்தியாவின் பெருமை. இந்த பன்மைத்துவத்தை என்றும் பாதுகாப்போம்.
இந்திய ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தி, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த தேசத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்.
#IndependenceDay
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?
ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.
இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்.
#TNFishermen
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்தப்பிள்ளை முரசொலிக்கு பிறந்த நாள் இன்று.
கூர்மையான தலையங்கங்கள், ஆழமான அரசியல் கட்டுரைகள் என திராவிடத்தின் திசைகாட்டும் போர் முரசாக வெளிவந்து கொண்டிருக்கும் முரசொலியில், கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, @dmk_youthwing சார்பாக @MPaasarai பக்கம் நடத்தி வருகிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் சிறு துண்டறிக்கையாக தொடங்கிய முரசொலியின் பயணம் இன்றைய நவீன உலகில் பல்வேறு பரிணாம வளர்ச்சியைப் பெற்று, நாள்தோறும் லட்சக்கணக்கானோரை சென்றடைந்து கொண்டிருக்கிறது.
கழகத்தின் மீதான அவதூறுகள், வசவுகள், விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கும் முதல் கருத்தாயுதமாக இன்றும் முரசொலி திகழ்கிறது.
தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு நலனுக்கான முரசொலியின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!
#Murasoli85
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மரியாதை செலுத்தினோம். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினோம்.
என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்!
#Kalaignar
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ் மொழி, சமூகநீதி மற்றும் மனிதநேயத்தின் ஒளிவிளக்காக வாழ்ந்த மாமனிதர்.
அவரது சிந்தனைகளும் சாதனைகளும் தலைமுறைகள் தாண்டி தமிழர் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
எழுத்தாலும், பேச்சாலும், ஆட்சியாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கிய தலைவர் அவர்.
சமத்துவம், கல்வி, கலை மற்றும் மக்கள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து உழைத்தார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து, அவரது இலட்சியப் பாதை என்றும் நம்மை வழிநடத்தட்டும்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ் மொழி, சமூகநீதி மற்றும் மனிதநேயத்தின் ஒளிவிளக்காக வாழ்ந்த மாமனிதர்.
அவரது சிந்தனைகளும் சாதனைகளும் தலைமுறைகள் தாண்டி தமிழர் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
எழுத்தாலும், பேச்சாலும், ஆட்சியாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கிய தலைவர் அவர்.
சமத்துவம், கல்வி, கலை மற்றும் மக்கள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து உழைத்தார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து, அவரது இலட்சியப் பாதை என்றும் நம்மை வழிநடத்தட்டும்.
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்பப் போராடுவோம்!
காவிரி, கர்நாடகத்தின் அணையைக் காக்க வழிந்தோடும் `உபரி நீர்’ அல்ல... தமிழரின் உயிரைக் காக்கும் `உரிமை நீர்’!
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பஞ்சு குமார் அவர்கள் விபத்தில் காயமடைந்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விரைவில் குணமடைந்து கழகப் பணிகளுக்குத் திரும்பிட வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@Nivedhamurugan_@durai944@sunramanathan_@Anbil_Mahesh@murasolimp@ilaiyadmk@anjugam_dr
மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.
ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.
டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.
#TNFarmers
மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு.
மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி.
100 நாள் ஆட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளது.
#Budget
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது - கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக Unofficial தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது,,,
இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் #ShootingModel த.வெ.க. அரசைக் கண்டித்து,
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்பேரில், கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட்-3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.
தஞ்சையில் கூடுவோம் - விவசாய விரோத #CallSheet Government-க்கு தக்க பாடம் புகட்டுவோம்!
‘உதவும் கைகள் அறக்கட்டளை’ மற்றும் திணை நிலவாசிகள் நாடகக் குழு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு அய்யாவின் சிலையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அண்ணன் மு.வீரபாண்டியன் அவர்களுடன் இணைந்து திறந்துவைத்தோம்.
அத்துடன், திணை நிலவாசிகள் நாடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பகு எழுதிய “அம்மாச்சி - கற்பனையின் முதல் ஆசிரியர்” நூலையும் வெளியிட்டோம்.
போராட்டக் குணம் நிறைந்த அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள முதல் சிலையை திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
கொள்கையற்ற கவர்ச்சி அரசியல் கூட்டம் உருவாகியுள்ள இந்த காலச்சூழலில், கொள்கையும், லட்சியமும்தான் நம் முதன்மை அடையாளம் என்று வழிகாட்டியவர் அய்யா நல்லகண்ணு அவர்கள்.
அவருடைய வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை இவ்விழாவில் குறிப்பிட்டு பேசினோம்.
நல்லக்கண்ணு அய்யாவின் புகழ் ஓங்கட்டும்.