ராணிப்பேட்டை🔥😍❤️
ஆட்சியில் இல்லாமலேயே மதுக்கடைக்கு பூட்டு போட்ட பாமக🔥
வாழ்த்துக்கள் அண்ணா ப.சரவணன்-பாட்டாளி மக்கள் கட்சி இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்😍
#AnbumaniRamadoss#PattaliMakkalKachi
தமிழினப் படுகொலை: பன்னாட்டு குற்றவியல்நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்!!
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் இன்று கலந்து கொண்டு பேசினேன்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இன்று நான் ஆற்றிய உரை….
இந்த அவையில் உரையாற்றும் வாய்ப்பை வழங்கியதற்காக பேரவையின் துணைத் தலைவர் அவர்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கடந்த பல பத்தாண்டுகளாகவே இனவாதம், பாகுபாடு மற்றும் வேறு பல வடிவங்களிலான சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான 21-ஆம் நூற்றாண்டின் முதலாவது அட்டூழியம் மற்றும் குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அழைப்பை செயல்படுத்த அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புடைமைத் திட்டத்தின் (OHCHR’s Sri Lanka Accountability Project-SLAP) திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களைக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கை அரசின் மீது பல்வேறு வகையான தடைகளை விதித்தல், ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நீதிமன்றங்களில் சிவில், குற்றவியல் வழக்குகளை தொடருதல், உலகில் இப்போது செயல்பாட்டில் உள்ள பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றங்களுக்கு போர்க்குற்றம் குறித்த வழக்குகளை மாற்றுதல், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி விசாரிக்கும் வகையில் பன்னாட்டு குற்றவியல் நீதி வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இதை சாதிக்க வேண்டும் என்று ஐ,நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி, பரிந்துரை வழங்குவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் பொறிமுறைக்கு உறுப்பு நாடுகள் கீழ்க்கண்ட வகைகளில் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
*இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி, சாத்தியமாகக் கூடிய அனைத்து சட்டத் தளங்களிலும் வழக்குகளை வலிமையாக்குவதன் மூலம் பொறுப்புடைமைத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள வலிமையான குழுவை அதே நிலையில் பராமரித்தல் மற்றும் வலுப்படுத்துதல்.
* இதுவரை மூடி மறைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழினப்படுகொலை மற்றும் 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் திட்டமிட்ட, பரவலான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் பொறிமுறை மூலம் ஆதாரங்கள் திரட்டப்படுவதை உறுதி செய்தல்.
மூன்றாவதாக, இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவெறியை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உறுப்பு நாடுகளை கேட்டுக் கொள்கிறோம்.
* இலங்கையில் காலம் காலமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதன் மூலமாகவும், இலங்கை அரசின் உதவியுடன் இந்து கோயில்கள் சிதைக்கப்படுவதன் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை மாற்றத்தை தடுத்து நிறுத்துதல்.
* ஐக்கிய நாடுகள் அவையின் மூலமாக இலங்கை அரசி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (ICC), பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றம் (ICJ) மற்றும் பிற பன்னாட்டு பொறிமுறை அமைப்புகளில் கொண்டு சென்று நிறுத்தி தண்டனை பெற்றுத் தருதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மிக்க நன்றி.
இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
#HRC54 #SL #SriLanka #TamilGenocide #WarCrimes
@UNHumanRights@UN_HRC@UNGeneva@UNWebTV
வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களுக்கு வீரவணக்கம்: இடப்பங்கீட்டை வென்றெடுத்தே தீருவோம்!!
வன்னியர் இடப்பங்கீட்டுப் போரில் துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கும் அவர்களின் 36-ஆவது நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் ஒப்பீடற்றது. பின் தங்கி கிடந்த சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக இன்னுயிரையே ஈகம் செய்த அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஆனால், அவர்களின் ஈகத்துக்குரிய முழுமையான பயன்கள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. வன்னியர் சமுதாயத்திற்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீட்டை வென்றெடுப்பது தான் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும். நமக்கான இடப்பங்கீட்டை நான் வென்றெடுத்தே தீருவோம்; ஈகியர்களின் கனவை நனவாக்கியே தீருவோம்.
மு.க. ஸ்டாலின் அண்ணாச்சி தேர்தல் வாக்குறுதி எண் 43 என்னாச்சி?
2021 திமுக வாக்குறுதி எண் 43: விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்
#விவசாயிகளின்விரோதிதிமுக#DMKAgainstFarmers
கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் போறாராம்!
சொந்த மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற முடியாத விவசாய அமைச்சர் – கனடா நாட்டின் விவசாயத்தை பார்வையிடுகிறாராம்!!
#விவசாயிகளின்விரோதிதிமுக#DMKAgainstFarmers
இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட
உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த
உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு, நன்றி!
என்.எல்.சி தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, நிலத்தை கைப்பற்றுவதற்காக வயலில் விளைந்து நின்ற பயிர்களை எந்திரங்களைக் கொண்டு அழித்த என்.எல்.சி நிறுவனத்திற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்.
‘’ நெல் பயிரிடப்பட்டிருந்த வயல்களில் எந்திரங்களை இறக்கி பயிர்களை அழித்ததை ஏற்க முடியாது. வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் வாழ்ந்த பூமியில் இப்படி நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பயிர்கள் அழிக்கப்படும் காட்சியைக் கண்ட போது எனக்கு அழுகை வந்தது. பயிர்கள் அறுவடை செய்யப்படும் வரை இரு மாதங்கள் என்.எல்.சியால் பொறுத்துக் கொள்ள முடியாதா?
வயல்களை எல்லாம் அழித்து மீத்தேன்,நிலக்கரி எடுத்தால் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பப் போகிறோம். நமது தலைமுறையிலேயே நாம் பஞ்சத்தை பார்க்கப் போகிறோம். அரிசிக்கும், காய்கறிகளுக்கும் மக்கள் அடித்துக் கொள்ளப் போவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். என்.எல்.சி நிறுவனம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. நிலக்கரி அவர்களுக்கு பயன்படாது. இது தான் எனது கருத்து” என்று கூறியுள்ளார்.
நீதியரசர் தண்டபாணியின் கருத்துகள் உண்மையானவை. என்.எல்.சியால் பயிர்கள் அழிக்கப்பட்ட சிக்கலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை நீதியரசர் அப்படியே வழிமொழிந்திருகிறார். பயிர்கள், சுற்றுச்சூழல், உணவுப் பாதுகாப்பு குறித்த அக்கறையுடன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்த நீதிபதி அவர்களுக்கு நான் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிபதியின் மனதை தைத்த நிகழ்வுகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் இதயங்களையும் தொட வேண்டும். பயிர்களை அழிப்பதும் நிலத்தை பறிப்பதும் பாவம் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கானத் திறனை பகுத்தறிவு வழங்க வேண்டும்!
@nlcindialimited
தமிழ்நாடு அரசு ஈராண்டு விளம்பரம் கொடுக்க (மே 7) ஸ்டாலின் செய்த செலவுத் தொகை விபரம்
தினத்தந்தி - 52,33,800
டெக்கான் கிரானிக்கல் - 28,78,366
தினகரன் 51,51,432
தினமணி - 25,74,000
தி இந்து (இங்கிலீஷ்) - 99,59,654
இந்து தமிழ் - 26,56,368
இந்துஸ்தான் டைம்ஸ் - 34,49,160
பாமகவ தவிர நெய்வேலி #NLC யால் பாதிக்கபட்ட மக்களுக்காக எவனும் வாய் திறக்கல எல்லாம் பெட்டி வாங்கிட்டானுங்க போல ஓட்டு கேட்டு வாங்கடா செருப்ப கழட்டி அடிக்கிறோம் 🙏
11 தேதி கடலூர்ல ஒரு துரும்பும் அசையாது 😎
நன்றி @draramadoss avl..
அழிவுக்கு வழிவகுக்கும் திமுக!
கடலூர் மாவட்டத்தை முழுவதுமாக சீரழிக்கும் மிக மோசமான திட்டங்களை மிக வேகமாக செயல்படுத்த முனைந்துள்ளது #NLC இந்தியா நிறுவனம்.
இதனால், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் வடபகுதி முற்றிலுமாக அழிந்துபோகும்.
#விவசாயிகளின்விரோதி_திமுகஅரசு#EndCoal