தருமபுரி - இலக்கியம்பட்டியில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் கோவிந்தன் அவர்களின் மகள் தனுஷ்யா கார்த்திக் அவர்கள் புதியதாக தொடங்கியுள்ள "KHADIM காலணியகம்" திறப்பு விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், வரும் ஜூன் 18-ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
#அன்புமணி
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தவும் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி நிறைவுறையாற்றிய போது.!
#CasteCensus #PMK
தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே
நடத்தக் கோரி பா.ம.க நடத்திய அனைத்துக் கட்சி மற்றும்
சமூகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு
நன்றி!
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக மாநில அரசே சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தக் கோரிக்கையை தமிழக அரசு அதன் இலக்குகள் பட்டியலிலும் சேர்த்திருக்கிறது. இது சமூகநீதி சர்வேயை சாத்தியமாக்குவதில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் என்ற முறையில் எனது அழைப்பை ஏற்று அனைத்துக் கட்சி மற்றும் சமூகத் தலலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட
ஆளும் த.வெ.க.வின் திரு. வீர. விக்னேஷ்வரன் அவர்கள்,
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திரு. அக்ரி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், திரு. இராமச்சந்திரன் அவர்கள்,
காங்கிரஸ் கட்சியின் திரு. எம்.ஏ.முத்தழகன் அவர்கள்,
பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், துணைத் தலைவர் திரு. கரு.நாகராஜன் அவர்கள்,
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இயக்குனர் திரு.சோழன் மு. களஞ்சியம் அவர்கள்,
அ.ம.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திரு.செந்தமிழன் அவர்கள், திருமிகு. சி.ஆர். சரஸ்வதி அவர்கள்,
தே.மு.தி.க.வின் திரு. வி.சி. ஆனந்தன் அவர்கள்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள்,
கொ.ம.தே.க பொதுச்செயலாளர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள்,
த.மா.கவின் திரு.விடியல் சேகர், திரு.முனவர் பாஷா அவர்கள்,
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் திரு.பூவை. ஜெகன் முர்த்தி அவர்கள்,
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திரு. என்.ஆர். தனபாலன் அவர்கள்,
மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் டாக்டர் இராஜா அவர்கள்,
தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திரு. கே.சி. திருமாறன்ஜி அவர்கள்,
தமிழர் தேசம் கட்சியின் நிறுவனர் திரு. கே.கே.செல்வக்குமார் அவர்கள்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் திரு. சண்முகம் அவர்கள்,
புதிய தமிழகம் கட்சியின் திரு. சங்கர் குரு அவர்கள்,
இந்திய தேசிய லீக் கட்சியின் திரு. தடா ரஹீம் அவர்கள்,
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு. உ.தனியரசு அவர்கள்,
வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.அண்ணா சரவணன் அவர்கள்,
பறையர் பேரவைத் தலைவர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள்,
தமிழ்நாடு யாதவ மகாசபை இணைப் பொதுச் செயலாளர் திரு. என்.எஸ்.சேதுமாதவன் அவர்கள்,
நாடார் மகாஜன சங்கத்தின் திரு. ஏ.வி.எஸ். மாரிமுத்து அவர்கள்,
விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டம்மைப்பின் திரு. சண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் அவர்கள்,
குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த திரு. கே.செல்வராசன் அவர்கள் ,
மிழலை நாடு மக்கள் கட்சியின் திரு. விவேகானந்தன் அவர்கள்,
கொங்கு மக்கள் முன்னணி கட்சியின் திரு. சி.ஆறுமுகம் அவர்கள்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திரு.சிரஞ்சீவி அவர்கள்,
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் திரு.முத்து கிருஷ்ணன் அவர்கள்,
ஆதித்தமிழர் பேரவையின் திரு.கோவை ரவிக்குமார் அவர்கள்,
வீரபத்திர ராஜகுல பேரவையின் திரு.தா. வசந்தன் அவர்கள்,
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் திரு. சௌந்திரகுமார் நாடார் அவர்கள்
ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைக்கும் முழு ஆதரவு தெரிவிப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கூட்டத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக இந்த அமைப்புகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பயணம் தொடரும் என்பதையும் இந்தத் தருணத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#SocialJustice
“மேகதாது இல்லை, பாசனத் திட்டம் இல்லை, கொள்முதல் விலை இல்லை: முதலமைச்சர் விஜயின் திருச்சி பேச்சு ஏமாற்றமளிக்கிறது!”
- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பங்கேற்ற முதலாம் அரசியல் நிகழ்ச்சியான திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக உணவு வழங்கும் உழவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. முதலமைச்சர் விஜய் அவர்களின் திருச்சி பொதுக்கூட்டம் தேர்தலுக்கு பிந்தைய பரப்புரைக் கூட்டமாகவே அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானது.
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அந்த விழா நடந்த மேடையிலேயே தமது அரசின் பயணம் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து உரையாற்றினார். அதன்பின் 3 வாரங்களாகிவிட்ட நிலையில், எந்த அரசு விழாவிலும் பங்கேற்று அவர் உரையாற்றவில்லை. அரசின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
இத்தகைய சூழலில் தான் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருச்சி புனித ஜோசப் கல்லூரித் திடலில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பங்கேற்றுப் பேசினார். அது அரசு விழா அல்ல... அரசியல் நிகழ்ச்சி தான் என்றாலும், முதலமைச்சராக விஜய் அவர்கள் பங்கேற்றும் முதல் பொது மேடை என்பதால், தமிழ்நாட்டுக்காக அவர் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து அறிவிப்பார், குறிப்பாக பெருமளவில் அவருக்கு வாக்களித்த விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிராகவே அவரது உரை அமைந்திருந்தது.
திருச்சி மாநகரை தமிழ்நாட்டின் இதயப் பகுதி என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கும் மேலாக காவிரி பாசன மாவட்டத்தின் இதயமும் திருச்சி தான். காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் இன்றைய பெரும் கவலை குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கம் போல ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது தான். ஜூன் 12-ஆம் நாளுக்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இது குறித்த நிலைப்பாட்டை அரசு அறிவித்திருக்க வேண்டும். ஒருவேளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்றால், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய வசதியாக தடையில்லா மும்முனை மின்சாரம், குறுவைத் தொகுப்புத் திட்டம் ஆகியவற்றை அரசு அறிவித்திருக்க வேண்டும். அதற்கான சிறந்த வாய்ப்பு திருச்சி மேடை ஆகும். ஆனால், மறந்தும் கூட மேட்டூர் அணை திறப்பு, குறுவை சாகுபடி குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை.
காவிரி பாசன மாவட்டங்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்வது மேகதாது அணைத் திட்டம் ஆகும். கர்நாடகத்தில் மேகதாது அணையை வைத்து அரசியல் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், அம்மாநில முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அணை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் அச்சமடைந்துள்ள நிலையில், அதைத் தணிக்கும் வகையிலான நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளை முதல்வர் விஜய் திருச்சியில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் விஜய் அவர்கள் அதை செய்யவில்லை.
காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும் என்பது தான். அதுகுறித்த அறிவிப்புகளும் கூட முதலமைச்சர் விஜய் அவர்களின் திருச்சி பொதுக்கூட்ட உரையில் ஒலிக்கவில்லை.
திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்ட பாசனத் திட்டங்களில் முதன்மையானது காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும். இத்திட்டப் பணிகள் 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வெறும் 3% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. இந்தப் பணிகளை விரைவுபடுத்தி காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதும் அந்தப் பகுதி உழவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். அந்த உழவர்களுக்கும் முதல்வர் ஏமாற்றத்தையே அளித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு தமிழக உழவர்களுக்கு அளித்த மிகப்பெரிய ஏமாற்றம் பயிர்க்கடன் தள்ளுபடி தான். சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.5000 முதல் ரூ.50000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.20,000 கோடிக்கும் கூடுதலான கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையில், வெறும் ரூ.2000 கோடிக்கும் குறைவான கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நடந்த குளறுபடிகளை முதலமைச்சர் திருச்சியில் சரி செய்வார் என்று பார்த்தால், அதையும் அவர் செய்யவில்லை.
உரம் விலை உயர்வு, கொள்முதல் நிலையக் குளறுபடிகள், மணல் கொள்ளையை தடுப்பது, ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டுவது என ஏராளமான விஷயங்களில் முதலமைச்சரின் முத்தான அறிவிப்புகளை உழவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், முதலமைச்சரோ அது குறித்தெல்லாம் எதையும் பேசாமல் எதிர்க் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் தேர்தல் பரப்புரையைத் தான் நிகழ்த்தினார். தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆகி விட்ட பிறகும் கூட, அறிவிப்புகளை வெளியிடாமல் பரப்புரையை மட்டுமே செய்வதை ஏற்க முடியாது.
விஜய் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் அவரிடம் ஆட்சிப் பொறுப்பை தமிழக மக்கள் வழங்கி உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இனியாவது உழவர்கள் மற்றும் தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் அவர்கள் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#PMK #AnbumaniRamadoss #cmvijay
பென்னாகரம் தொகுதியில் மனமகிழ் மன்றம் திறப்பு: மக்களின் எதிர்ப்பையும் மீறி மது வணிகம் செய்ய ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினரே துணை போவதா?
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி நல்லாம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி மது வணிகம் செய்வதற்கான மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மதுக்கடை திறக்கும் முயற்சிகளை பாமக முறியடித்து வந்த நிலையில் அங்கு மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டிருப்பதும், அதற்கு ஆளும்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் துணை போயிருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
நல்லாம்பட்டி கிராமத்தில் நீண்ட காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகள் இல்லாத நிலையில், அங்கு புதிய மதுக்கடையை திறக்க கடந்த ஐந்தாண்டுகளாக பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர எதிர்ப்புகளாலும், போராட்டங்களாலும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இத்தகைய சூழலில் தான் நரியை பரியாக்குவதைப் போல நேரடியாக மதுக்கடையை திறப்பதற்கு பதிலாக மனமகிழ் மன்றம் அமைத்து அதன் மூலம் மது வணிகம் செய்யலாம் என்று திட்டமிட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், முந்தைய ஆட்சியாளர்களின் உதவியுடன் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி உரிமம் பெற்றார். ஆனாலும் பாமக மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் மனமகிழ் மன்றத்தையும் திறக்க முடியவில்லை.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த மே 28-ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் யூனியன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அங்கு மதுக்கடை திறக்கப்பட்டு மதுவணிகம் செய்யப்பட்டு வருகிறது. மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 30-ஆம் தேதி ஊர்மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்து மனமகிழ்மன்றத்தை மூட வேண்டிய அதிகாரிகள், மனமகிழ் மன்றத்தை நடத்துவோருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி, விவேகானந்தர் இளைஞர் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் 6 பேர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
நல்லாம்பட்டி கிராமத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படாத நிலையில், யூனியன் மனமகிழ் மன்றத்திற்கு உரிமம் வாங்கியும் கடந்த 3 மாதங்களாக திறக்கப்படாத நிலையில், இப்போது அது திறக்கப்பட்டதன் பின்னணியில் பென்னாகரம் தொகுதி ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரின் மறைமுக ஆதரவு இருப்பதாகவும், அவர் தான் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து மனமகிழ் மன்றத்தைத் திறக்கச் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மனமகிழ் மன்றத்திற்கான உரிமத்தைப் பெற்றுள்ள பிரகாஷ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் சந்துக்கடைகள் மூலமாக சட்டவிரோதமாக மதுவணிகம் செய்து வந்தவர் என்றும், நல்லாம்பட்டி பகுதியில் மதுக்கடைத் திறக்க பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான உரிமத்தை வாங்கினால், அதைக் கொண்டு நேரடியாக மது வணிகம் செய்யலாம் என்று டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் யோசனைத் தெரிவித்த நிலையில், அவர்களையும், தமது சகோதரர் முருகவேலையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டு இந்த மனமகிழ் மன்றத்தை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சட்டத்தை மீற டாஸ்மாக் ஊழியர்களே துணை போயிருப்பதை அனுமதிக்க முடியாது.
முதலமைச்சராக இருக்கும் விஜய் அவர்கள் தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக ஆட்சிக்கு வந்த இரு நாள்களில் 717 மதுக்கடைகளை மூட ஆணையிட்டார். ஆனால், அவரது கொள்கையை பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஆளும்கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மது வணிகத்திற்கு துணை போயிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மனமகிழ்மன்றங்கள் என்ற பெயரில் மது வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது தான் தமிழத்தில் இன்று நிலவும் குழப்பங்களுக்கு காரணமாகும். ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிக் கொண்டு இன்னொருபுறம் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் புதிய மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளிப்பதை ஏற்க முடியாது. இது அரசின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.
மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒரே ஒரு மதுக்கடை கூட திறக்கப்படக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதற்கு எதிரான வகையில் நல்லாம்பட்டியில் திறக்கப்பட்டுள்ள மனமகிழ்மன்றத்தை உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும்; மனமகிழ் மன்றத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.! @CMOTamilnadu
பாமக தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆலோசனைப்படி புதுச்சேரி முதல்வர் என் ஆர் ரங்கசாமி அவர்களை நமது பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது....
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: சமூகப் பதட்டம் ஏற்பட எந்த வகையிலும் அரசு இடம் கொடுக்கக் கூடாது!
தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்திலும், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவில் கிராமத்திலும் பட்டியலின மக்கள் மீது ஆயுதங்களுடன் வந்த கும்பல்கள் தனித்தனியாக நடத்திய தாக்குதல்களில் 7 பேர் படுகாயம் அடைந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. சமூகப் பதற்றம் நிறைந்த தென் மாவட்டங்களில் இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்த அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் மாதாகோவில் தெருவில் நேற்று மாலை முகமூடி அணிந்தவாறு இரு சக்கர ஊர்திகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்கு நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் நெட்டூரைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவில் கிராமத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் மணிகண்டன் என்ற பட்டியலின இளைஞரை அரிவாள்களால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கஞ்சா போதையில் 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் இரு அப்பாவிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பதட்டம் அடங்குவதற்கு வெகுகாலம் ஆனது. அதேபோன்ற நிலை இப்போது ஏற்பட அரசு அனுமதிக்கக்கூடாது. தாக்குதல் நடந்த கிராமங்களில் இயல்பு நிலையை விரைவாகக் கொண்டு வர அரசும், மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாகவே நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் சமூகப் பதட்டம் நிறைந்தவை. அங்கு ஏற்படும் சிறு மோதல் கூட பெரும் வன்முறையாக மாறிவிடக் கூடும். இதைக் கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களில் சமூக மோதல்களோ, பதட்டமோ ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
இன்று, தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாட்டுக்காரனூர், ஆட்டுக்காரன்பட்டி, கடகத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நன்றி தெரிவித்த போது.!
#PMK | #DHARMAPURI
மரக்காணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பெண்கள் மற்றும் குழந்தைகள்
பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தை என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் மனித மிருகங்கள் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது.
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும், அக்கறையும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
பாமகவின் கொள்கைகளை செயல்படத்த வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த
பாமக சட்டமன்ற தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி M.L.A அவர்கள்
** சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
** விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்
** மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்
** விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து
** நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
** இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
** தரமான இலவச கல்வி வழங்க வேண்டும்
** மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும்
** கனிமவளங்கள் கொள்ளைகளை தடுக்க வேண்டும்
** அனைத்து வேலை வாய்ப்புகளிலும் தமிழர்களுக்கு 80% முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
#PMK
#sowmiyaanbumani
#AnbumaniRamadoss
தருமபுரி சட்டமன்ற உறுப்பினராக
இன்று பதவி ஏற்க செல்லும் வழியில்,
முனைவர் சௌமியா அன்புமணி @Sowmiyanbumani அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பசுமைத்தாயகம் மாநில செயலாளர் அண்ணன் @arulgreen அவர்கள்.!
இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ள நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.!
#PMK#AnbumaniRamadoss#sowmiyaanbumani