பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அமெரிக்காவில் தெலுங்கர்களின் #தமிழர்_வெறுப்பு
கிறித்தவர்கள் வணங்குவதாலே #இயேசு கிறித்தவர் ஆகிட முடியாது.
அவர் யூதர்.
அதேபோல் இந்திய இந்துக்கள் வணங்குவதாலே,முருகன் ஆரிய இந்து அல்ல.அவர் பிறப்பால் ஒரு #தமிழர்
ஏத்துக்காதவனுங்கள செருப்பாலையே அடிப்போம்டா.
😂
#மன்னர்மன்னன் 🔥
இது செய்தியா! நான் கேட்கிறேன் செய்தி வெளியிடப்படுகின்றன கொஞ்சமாக சிந்திக்கும் திறன் இருக்கா ?
ஹெல்மெட் அவரை தவற யாரும் போடவில்லை.. வீடியோ எடுக்க நபர் உட்பட.. இதெல்லாம் செய்தி என போட உனக்கு தனி ஜால்ரா மனநிலை தேவை..
இந்த காணொளியை Report அடிச்சு தூக்கிருக்கானுங்க "ROUTE IT WING MAFIA" கும்பல்
இவங்கள வச்சு ஓட்டு கேட்கும் போது இனிச்சது இப்ப Expose பண்ணும் போது கசக்குதோ !
#TVK_Fails
முருகன் சிலை ஆப்கானிசுதானில் கிடைக்கும் போது பெருமைப்படும் ஒரு கூட்டம் ,தாய்லாந்தில் "தமிழி" எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மோதிரம் கிடைக்கும் போது "கப்சிப்" என ஆகிவிடுகிறது.
Thamizh is always unique✅
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரி படத்தை வீதியில் இறங்கி போராடி தமிழ்நாட்டில் ஒரு காட்சி கூட வெளியிட முடியாம தடுத்த சீமானால்,
முருகன் வடநாட்டில் பிறந்தார் என்ற கட்டுக்கதைகளை படமாக எடுத்தால் அப்படம் தமிழ்நாட்டில் வெளியிட முடியாம தடுக்க முடியும். #NTRxTrivikram
மக்களை சந்திக்காமல் ஓடிய #கோழை விஜய் தான் பின்பு #வன்னியரசு_மாமாவிற்கு தன்னுடைய அமைச்சரவையில் அமைச்சர் பதவி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
கோழைன்னு நாங்க சொல்லல #வன்னியரசு_மாமா தான் சொன்னார்..😂😂😂
நாம் தமிழர் கட்சிக்கும், அண்ணன் சீமானுக்கும்,பல கோடி தமிழ்தேசிய பிள்ளைகளுக்கும் தேர்தல் நேரத்தில் நீங்கள் இழைத்தது மிகப்பெரிய துரோகம்!
ஒருநாள் இந்த இயற்கை உங்களுக்கு மோசமான நிலையைத்தரும்!
அதன் முதல் படிதான் நீங்கள் ஆதரித்த ADMKன் நிலை!
@SaalanPaari@ProudTamizhan1@Jeba_here
I can see some of the Vijay fans are defending Murugan and bashing Toxic-Telugus. Good to see this...
But, your Clown-CM Vijay himself is "Goltified" 😭
A product groomed by all Goltis is ruling #TamilNadu now🤦
...மொதல்ல அத கேளுங்கடா 35% retards
விஜயை பார்க்க வந்து உயிரை விட்டவர்களுக்கு அரசு வேலை என்றால் வருடக்கணக்காக படித்துவிட்டு பலமுறை தேர்வு எழுதி கஷ்டப்பட்டு தேர்ச்சி அடைந்து காத்திருப்பவர்கள் வேலை கிடக்காம இருக்க வேண்டுமா !?
ஏன் ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்றீங்க !?