இன்று பிறந்தநாள் காணும், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் - கழக கல்வியாளர் அணிச் செயலாளருமான முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் @ThamizhachiTh அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
Our Elephants are checking out the Mobile Wildlife Forensic cum Disease Diagnostic Laboratory at a Tamil Nadu Forest Department elephant camp. An initiative of the @Aiwcrteofficial in collaboration with @tnforestdept, this first-of-its-kind facility is providing advanced veterinary care directly into the field. Equipped with a haematology analyser, serum biochemistry analyser, microscope, centrifuge, refrigerators and a -20°C deep freezer, it enables rapid on-site diagnosis, disease surveillance, forensic investigations and instant diagnostic reports. By bringing sophisticated diagnostics to the doorstep of elephants and other wildlife, it enables faster treatment, reduces the stress of transportation and improves the chances of survival. Because our precious wildlife deserves the very best care
#WildlifeConservation #TNForest
The bonuses of my trip to Kathmandu☺️☺️
1) Catching up with 2 REC Trichy classmates after 39 years, and meeting one's son who is a highly qualified surgeon!
2) Visit to Lord Pashupatinath along with a research analyst who considerately acted as my guide
அன்பில் தாயாகவும், வழிகாட்டலில் தந்தையாகவும், நட்பில் தோழியாகவும், என்னுடன் எப்போதும் துணை நிற்கும் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகி, நீங்கள் தொடும் ஒவ்வொரு உயரமும் பலருக்கு வழிகாட்டும் ஒளியாக அமையட்டும். எப்போதும் மாறாத உடல் நலம், மனம் நிறைந்த மகிழ்ச்சி, மற்றும் விரும்பும் வெற்றிகள் உங்கள் வாழ்வில் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.❤️
@ThamizhachiTh
இன்று (02.07.2026), எனது பிறந்தநாளை முன்னிட்டு, மரியாதைக்குரிய கழகத் தலைவர் - அண்ணன் திரு. @mkstalin அவர்களை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.
@arivalayam
On the birth anniversary of former Tamil Nadu CM and his father, late M Karunanidhi, DMK President MK Stalin visits DMK Youth Wing’s office, in Chennai
@mkstalin@udhay_stalin#kalaignar103#கலைஞர்103
தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தம் பொதுவாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி - தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மகத்தான ஆளுமை!
அரசியல் ரீதியாக ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் -நெருக்கடிகளையும் முறியடித்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நமது திராவிட முன்னேற்றக் கழகம், உயிரோட்டமுள்ள, வலிமையான மக்கள் இயக்கமாக என்றும் நிலைத்திருக்கும் வகையில் வழிநடத்திய தன்னிகரற்றத் தலைவர்!
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில், இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்திட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர்!
இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை எனப் படைப்புலகின் அனைத்துத் துறைகளிலும் தன் எழுத்துக்களால் அழியாத முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பங்களிப்புகளை வழங்கிய மாபெரும் கலைஞர்!
நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் வகுத்தளித்த சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை இறுதிவரை உறுதியாக ஏந்தி நின்ற கொள்கை வீரர்!
தமிழினக் காவலர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரதம் மகத்தான பொதுவாழ்வையும், பெரும்புகழையும் போற்றுவோம்.
வாழ்க கலைஞரின் புகழ்!
முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட நாயகர் மாண்புமிகு தளபதி அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#KalaignarForever#Kalaignar103
தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, சி.ஐ.டி காலனி இல்லத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களுடன் மரியாதை செலுத்தினோம்.
#KalaignarForever
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வண்டியூர் ரிங் ரோட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.(1/2)
🏡குடிசைப் பகுதி மாற்று வாரியம்
🔸 பேருந்துகள் நாட்டுடைமை
🔸 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
🔸 பெண்களுக்கு சொத்துரிமை
🔸 உழவர் சந்தை
🔸 வருமுன் காப்போம் திட்டம்
🔸 நமக்கு நாமே திட்டம்
🔸 மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம்
🔸 அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
🔸 பெரியார் நினைவு சமத்துவபுரம்
🔸 அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
என சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார் முத்தமிழறிஞர் கலைஞர்!
"சொன்னதைச் செய்தவர்... செய்ததைச் சொன்னவர்... மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை வடிவமைத்தவர் கலைஞர்!"
அவருடைய 103 வது பிறந்த நாளில் அவர் நினைவை போற்றுவோம்!