ராமரின் காதல்
================
.
நம்ம ஊரில் 'சிங்கம்' பெயரில் படங்கள் எடுத்து வந்தது போல பாலிவுட்டின் ஹரி எனப்படும் ரோகித் ஷெட்டி இந்தியில் 'சிங்கம்' என்ற தொடர்ப் படங்கள் எடுத்து வருகிறார். சூரியாவுக்கு பதி��் அஜய் தேவ்கன்.
இதன் அடுத்த பாகம் 'சிங்கம் அகைன்' (Singham Again) படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்தவரை ராமாயணப் பாத்திரங்களை ஒட்டி அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நிஜப் பாத்திர அறிமுகத்துக்கும் ஒரு ராமாயணப் பாத்திரத்தைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார்கள். அஜய் தேவ்கன்தான் ராமர். அவர் மனைவி கரீனா கபூர்கானை வில்லன் பிடித்துப் போய் விடுகிறான். அவரை���் காப்பாற்ற சிங்கம் போகிறார்.
அந்த டிரெய்லரில் வரும் ஒரு வசனம் என் கவனத்தை ஈர்த்தது. 'ராமர் ராவணனிடம் இருந்து சீதையை மீட்க பல்லாயிரம் மைல்கள் பயணித்துப் போய் போர் புரிந்து மீட்டார்,' என்று கரீனா சொல்ல, அவர் மகன் 'அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு அதையெல்லாம் செய்வாங்களா?' என்கிறான். 'காதலுக்காக எந்த தூரத்துக்கும் செல்வார்கள்!' என்று கரீனா பதில் சொல்கிறார்.
அ��ைக் கேட்டதும் ஆச்சரியம் மேலிட்டது. சிங்கம் படத்தில் எப்படியோ, தெரியாது. ஆனால் ஒரிஜினல் ராமாயணத்தில் ராமர் காதலுக்காக சீதையை மீட்கப் போகவில்லை. தன் பெண்டாட்டியை வேறு ஒருத்தன் தூக்கிக் கொண்டு போய் விட்டானே என்று தன் மேல் விழுந்த களங்கத்தைப் போக்குவதற்கும், தன்னைப் பலரும் பல விதமாகப் பேசுவார்களே அதை நிறுத்துவதற்கும், தனது புகழ் பெற்ற ரகுவம்சத்தின் மாண்பைக் காப்பதற்குமே செய்��ிறார்.
இதை நான் சொல்லவில்லை. வால்மிகி ராமாயணத்தில் ராமரே கூறுகிறார்:
यत्कर्तव्यं मनुष्येण धर्षणां प्रतिमार्जता |
तत्कृतं रावणं हत्वा मयेदं मानकाङ्क्क्षिणा || 6-115-13
'நான் என் கௌரவத்தை மீட்டெடுக்கவே ராவணனைக் கொன்று என் மீது படிந்திருந்த களங்கத்தைத் துடைத்தேன். (என் இடத்தில் வேறு) எந்த ஆணும் இதைத்தான் செய்திருப்பான்.'
निर्ज��ता जीवलोकस्य तपसा भावितात्मना |
अगस्त्येन दुराधर्षा मुनिना दक्षिणेव दिक् || 6-115-14
'அகத்தியர் போன்ற ரிஷிகள் மட்டுமே போக முடிந்த கடினமான தெற்குப் பகுதியை நான் வெற்றி கொண்டது என் மனதை தூய்மையாக்கியது.'
विदितश्चास्तु भद्रं ते योऽयं रणपरिश्रमः |
सुतीर्णः सुहृदां वीर्यान्न त्वदर्थं मया कृतः || 6-115-15
रक्षता तु मया वृत्तमपवादम् च सर्वतः |
प्रख्यातस्यात्मवंशस्य न्यङ्गं च परिमार्जता || 6-115-16
'உன���்கு நலமுண்டாகட்டும் சீதா. ஆனால் உன்னிடம் இதைச் சொல்லியே ஆக வேண்டும். என் நண்பர்களின் உதவியுடன் நான் வெற்றிகரமாக நடத்திய இந்தப் போர் உனக்காக நடக்கவில்லை. என்னுடைய குண சீலத்தை தக்க வைக்கவும், என் மீது விழும் பலரின் அவலப் பேச்சுகளை நிறுத்தவும், என் வம்சத்தின் மீது படிந்திருந்த களங்கத்தைத் துடை��்கவுமே நடத்தினேன்.'
प्राप्तचारित्रसंदेह मम प्रतिमुखे स्थिता |
दीपो नेत्रातुरस्येव प्रतिकूलासि मे दृढम् || 6-115-17
'ஆனால் உன் நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. கண்பார்வை மங்கியவனுக்கு வெளிச்சத்தைக் கண்டால் கூசுவது போல என் முன் நிற்கும் உன்னைக் காணவே எனக்குக் கண்கள் கூசுகின்றன.'
அதாவது, ராமர் சீதைக்கிடையே வந்ததாக சொல்லப்படும் காதல் மேட்டர் எல்லாம் பிற்செருகல்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி அந்தக் கதையை வர்ணிக்க செய்த முயற்சி மட்டுமே. ஆனால், ஒரிஜினல் ராமாயணம் இந்த விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறது.
எனவே, அஜய் தேவ்கன் அவர் மனைவி கரீனாவின் மீதான காதலினால் அவரை வில்லனிடம் இருந்து காப்பாற்றட்டும். நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அதற்கு ராமரை உதாரணத்துக்குக் கொண்டு வந்து வால்மிகியை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
மாண்புமிகு.ரயில்வே இணை அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில்தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது. தற்போது அவருக்கு “புரியும்படி” பதில் அனுப்பி உள்ளேன். இனி புரிந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்
தலைநகர் டெல்லியில் செல்வாக்கு உள்ள ஜக்கி வாசுதேவின்
போலி பிம்பத்தை
துளியும் அச்சம் இன்றி மிகவும் துணிச்சலுடன��
திமுகவில் பேசிய இரு பெரும் முக்கிய திமுக ஆளுமைகள் இவர்கள்
இனியாவது திமுக அரசு கடுமை காட்டுமா ஜக்கி மீது
251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் என Freedom 251 என மோடி படத்துடன் விளம்பரம் செய்து முன்புபணம் கட்ட வைத்து சுமார் 1700 கோடி ரூபாய் ஆட்டைய போட்டார்கள்...
2016 ல் நடந்த இந்த ஊழல் மீது
இன்றுவரை நடவடிக்கை இல்லை.
உலகிலேயே யாரும் செய்யாத ஊழல் இது....
😃😃😃ஏன் நடவடிக்கை எடுக்கல...❓
உடனே பிரதமர் படத்தை பயன்படுத்தியதுக்காக ரிலயன்ஸ் நிறுவனத்துக்கு ரூ-500 அபராதம் போட்டாங்க. அதை கட்ட முடியாமல்
ஏழை அம்பானி திணறிப்போயிட்டாரு பாவம்....
தயவு செய்து அனைவரும் பொறுமையாக முழுமையாக கட்டாயம் படிக்கவும் ...🙏
திராவிடம்` என்றால் என்ன? :வி.இ.குகநாதன்
Indian News | SriLankan Tamil News | Articles |
திராவிடம்` என்றால் என்ன? :வி.இ.குகநாதன்
‘திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது, `திராவிடம்` என்பது தென்னிந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைக் குறிப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இச் சூழ்நிலையில் உண்மையில் `திராவிடம்` என்பது என்ன? அச்சொல் ��ரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
`திராவிடம்` என்பது உண்மையில் தமிழினைக் குறிக்கும் ஒரு திசைச் சொல்லாகும். எளிமையாகச் சொன்னால் தமிழினை ஆங்கிலத்தில் `தமிழ்` என ஒலிக்க முடியாமல் `Tamil ` என்கின்றோம் அல்லவா, அது போன்று தமிழ் குறித்த ஒரு திசைச் சொல்லே திராவிடமுமாகும். `தமிழ்`என்பது ஒரு இயல்புச் சொல் (Endonym ) , அது குற���த்த ஒரு திசைச் சொல்லே (Exonym ) `திராவிடம்` என்பதுமாகும். இதோ பாவாணர் குறிப்பிடுகிறார்: “இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்�� என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” [சான்று: ஒப்பியன் மொழி நூல், பக்கம் 15].
திராவிடம் என்பதனை முழுமையாக அறிந்துகொள்ள நாம் அதற்கு எதிரான `ஆரியம்` என்ற சொல்லினையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சிந்து வெளி நாகரிக வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னரான காலப் பகுதியில் கைபர் கணவாயினூடாக கால்நடை மேய்ப்போராக நாவலந்தேயத்தினுள் (இன்றைய இந்தியப் பெ��ு நிலப் பரப்பு /துணைக் கண்டம்) வந்து சேர்ந்தவர்களே ஆரியர்கள் ஆவார்கள். ஆரியர் என்ற சொல் சமற்கிரத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய ( arya ) எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாகக் கருதப்படுகிறது { ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும்}. ஆரியர் ( Arya ) என்ற சொல் ரிக் வேதத்தில் 36 தடவைகள் இடம்பெற்றுள்ளது. ரிக் வேதத்தில் `மதக் கருத்துகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்போர்/ உயர்ந்தோர்` என்ற பொருளில் `ஆரியர் ` என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ரிக் வேத காலத்தில் சைவ-வைணவ மதங்களோ/ இந்து என்ற சொல்லோ இல்லை. அப்போதிருந்தது எல்லாம் `பிராமணியம்` என்ற மதமே { இதனைச் சங்கரச்சாரியான சரசுவதி சுவாமிகள் முதல் சோ வரைக் கூறியுள்ளார்கள்}. எனவே பிராமணியத்தினை உயர்வாகக் கடைப்பிடிப்பவர்களையே `ஆரியர்கள்` என ரிக் வேதம் கூறுகின்றது. நமது பழந் தமிழ் நூல்கள் `ஆரியர்` யார் என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றன.
“ஆரியர் அலற தாக்கி பேர் இசை
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து
வெம் சின வேந்தரை பிணித்தோன்
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே”
மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (396:16–19 ) ஆரியர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கி, இமயமலையின் மீது வளைவான வில்லினைப் பொறித்த செய்தி கூறப்படுகின்றது. இப் பாடலின் படி இமய மலைச் சாரலில் அப்போது ஆண்டவர்கள் ஆரியர் எனக் குறிப்பிடப்படுகின்றார்கள்.
“மாரி ��ம்பின் மழை தோல் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்ல��்து புற மிளை
ஆரியர் படையின் உடைக என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே”
மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (336: 20–23) சோழரது விற்படை செறிந்துகிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல்காட்டில் வந்தடைந்த ஆரியரின் படையைத் தோற்கடித்த செய்தி சொல்லப்படுகின்றது. இன்னமும் பல சங்க காலப் பாடல்களில் வடக்கேயிருந்தவர்களை ஆரியர் எனக் குறிப்பிடப்படுவதுடன், தமிழருக்கும் ஆரியர்களுக்குமிடையே தீராத பகை காணப்பட்ட செய்திகளும் கூறப்படுகின்றன { நற்றிணை170, குறுந்தொகை 7, பதிற்றுப்பத்து 11, அகநானூறு 276, , அகநானூறு 398, ..}. ஆரியர் மரபணுக்களினடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவதனைப் பல்வேறு ஆய்வுகள் வேறு உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய `ஆரியர்` அல்லாதோரைக் குறிக்கவும் `திராவிடர்` என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அண்மைக் காலத்தில் `திராவிடம்` என்ற சொல்லினை ஒப்பியல் ���ோக்கில் முதன் முதலில் குறிப்பிட்டவர் கார்ல்டுவெல் (Robert Caldwell ) அடிகள் ஆவார். அவரது காலத்தில் சங்க இலக்கியங்களோ/ தொல்காப்பியமோ கண்டுபிடிக்கப்பட்டிருக்காமையால், அவர் ��வறாகத் `திராவிடம் என்ற சொல்லே தமிழாகத் திரிந்தது` எனக் கூறியிருந்தார். அதனைக் கார்ல்டுவெல் அடிகளுக்குரிய மரியாதையுடன் மறுத்துத் தமிழிலிருந்தே `திராவிடம்` என்ற சொல்➖ 1/3
'சில நே���ங்களில் தீர்வே கண்ணுக்குத் தெரியாத வழக்குகள் எங்களிடம் வரும். அயோத்தி வழக்கும் அது போன்ற ஒன்றுதான். சுமார் மூன்று மாதங்களாக அது என் முன்னால் பிரச்சினையாக இருந்து வந்தது.
அப்போது கடவுள் முன் உட்கார்ந்து அவரிடம் இதற்கு தீர்வு கேட்டேன். (தீர்வு வந்தது.)
நம்புங்கள். நம்பிக்கை இருந்தால் கடவுள் ஒரு வழி காட்டுவார்.'
என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசி இருக்கிறார். புனேவில் ஒரு நிகழ்வில் பேசும் போது இதனை குறிப்பிட்டு இருக்கிறார்.
எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. திருப்பதி லட்டு விவகாரத்தில் 'அரசியலுக்குள்ள எதுக்கு பாஸ் கடவுளைக் கூட்டிக்கிட்டு வர்றீங்க?' என்று அங்கலாய்த்தவர் இவர். அதற்கு நான் கூட ஃபயர் விட்டு பதிவெழுதி இருந்தேன். இப்போது இவரே நீதின்றத்துக்குள் கடவுளைக் கூட்டி வந்ததைப் பெருமையாகப் பேசுகிறார்.
அயோத்தி தீர்ப்பு வந்த போது எனக்கு அது அதிர்ச்சியாகவே இருந்தது. எப்படி இப்படி ஒரு அநீதியான தீர்ப்பை வழங்க முடியும் என்ற கேள்வி என்னிடமிருந்து விலகவே இல்லை. இப்போதுதான் அதன் பின்னணி புரிகிறது. தீர்ப்பு நீதிமன்றத்தில் ���ுடிவாகவில்லை. பூஜை அறையில்தான் முடிவாகி இருந்திருக்கிறது என்பது.
நீதிகள் அவற்றுக்கான மன்றங்களில்தான் வழங்கப்பட வேண்டும். அரசியலுக்குள் கடவுளர்களைக் கூட்டி வருவது எத்தனை பிரச்சினையான ஒன்றோ, அதை விட மோசமான ஒன்று, நீதிமன்றங்களுக்குள் கடவுளர்களை கூட்டி வருவது. அயோத்தி தீர்ப்பின் விளைவை இன்னும் பல காலங்களுக்கு இந்தியா அனுபவிக்கப் போகிறது.
மன்னிக்கவும் ஜட்ஜ் சார். உங்களின�� மீதும் உங்கள் மன்றத்தின் மீதும் இருந்த மாண்பினை நீங்களே குறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். வருத்தங்களும் கண்டனங்களும்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
Since being elected by the people of Madurai Central in 2016, I’ve kept my promise of transparency with a performance report every six months. Today, I’m proud to have distributed the 16th edition, detailing our progress. The trust vested by my constituents motivates this accountability, and I remain grateful for their continued support in our shared journey. Sharing the digital version here.
https://t.co/RH54vwOK8J
சீமான் ,நாய் டம்ளர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியவாதிகளுக்கு பகிரங்க சவால்.
வேலுப்பிள்ளை பிரபாகரனை தற்குறி முட்டாப்பயல் என அறிவிக்க சீமான் தயாரா ?
வி.புலிகளின் பல்வேறு இதழ்கள், அந்த இய��்கம் சார்பில் வெளியிடப்பட்ட நூல்களில் எல்லாம் தங்களை திராவிட இனத்தவர் என்றே அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர்.
Dear Gov. RN Ravi,
Which are the three languages taught in North Indian states? Do they teach any of Malayalam, Tamil, Kannada, Telugu, Odiya, Bengali in schools in Bihar, Rajasthan, Uttar Pradesh and Madhya Pradesh?
People of Tamil Nadu face no difficulty in coming to Kerala and communicating. So are we. We don't face any issues in going to Tamil Nadu and communicating.
What isolation are you talking about? Do you have any idea how successful people of Tamil Nadu are in the rest of the states and also abroad?
How many South Indian languages did you learn to read, write and speak despite working in South India for so long?
நாட்டில் ஒரு நாடா.. இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி.
த��ிழ்நாட்டில் மட்டுமே மும்மொழியை அனுமதிப்பதில்லை - ஆளுநர் ரவி
* அந்த மூன்றெழுத்து அன்று செய்த சம்பவம், இங்கு பலரை இன்னும் கதற வைத்துக் கொண்டிருக்கிறது🔥🔥
#StopHindilmposition #PerarignarForever
இரண்டு நாடுகளுக்கு தேசிய கீதம் எழுதியவர் தாகூர்.
பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா, திராவிடம், ஒரிஸ்ஸா, வங்கம் என்று மட்டும் எழுதினார்.
ஆரியம் என்று எழுதவில்லை.
ஏனெனில் ஆரியம் என்பது இந்த நிலப்பரப்பு சார்ந்ததல்ல.
கங்கா,யமுனா என்று மட்டுமே எழுதினார். சரஸ்வதி என்று எழுதவில்லை. சரஸ்வதி நதி என்ற ஒன்று இங்கு இல்லை. எனவே எழுதவில்லை.
ரிக் வேதத்தில் இடம் பெறும் சரஸ்வதி என்ற சொல்லுக்கு நதி என்று தான் பொருள். சரஸ்வதி என்பது நதியின் பெயரல்ல. சரஸ்வதி என்றாலே நதி என்று தான் பொருள்.
கங்கை புனிதநதி என்பார்கள்.
கங்கை என்ற சொல் ஆரம்ப வேதங்கள் எதிலும் இல்லை.
தாங்கள் போற்றும் ஆரியம்,
தாங்கள் சொல்லும் சரஸ்வதி நதி இல்லாத தேசிய கீதத்தை ஆர்.எஸ்.எஸ் பாடுவதில்லை.
தாகூரை விட சிறந்த அறிவாளி
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களில் எவரும் இல்லை.
பாரத் என்பது ரிக் வேதத்தில் உள்ள சொல்.
இந்தியா என்பது சிந்து நதி சார்ந்த சொல்.
பாரத் என்பது புராணம் சார்ந்தது.
இந்தியா என்பது இயற்கை சார்ந்தது.
அவர்களது பிரச்சனை திராவிடம் இல்லை.
ஆரியம் இல்லையே என்பதே.
தேசிய கீதம் பாடுங்கள்.
சுதந்திரத்தை பாதுகாத்திடுங்கள்.
இந்தியர்கள் யாருக்கும் ஹிந்தி தாய் மொழியே அல்ல.
தமிழ்நாடு- தமிழ்
கேரளா- மலையாளம்
ஆந்திரா-தெலுங்கானா- தெலுங்கு
கர்நாடகா- கன்னடம்
மகாராஷ்டிரா- மராத்தி
குஜராத்- குஜராத்தி
பஞ்சாப்- பஞ்சாபி
ராஜஸ்தான்- ராஜஸ்��ானி, மார்வாரி, மேவாரி
ஹரியானா-ஹரியானி
இமாசலப்பிரதேசம்-
மஹாசு பஹாரி, மண்டேலி,
காங்கிரி-பிலாஸ்புரி,சாம்பேலி
ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி,பாடி,லடாக்கி.
உத்தர்காண்ட்-கடுவாலி, குமோனி
உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி,அவதி,கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி,பகேலி.
பீஹார்- போஜ்புரி, மைதிலி
ஜார்கண்ட்- சந்தாலி
சத்தீஸ்கர்-கோர்பா
மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி
மேற்கு வங்கம்- வங்காளி
ஒடிசா- ஒரியா
வட கிழ��்கு மாநிலங்கள்-அப்பகுதி மூத்த குடிகளின் தாய்மொழிகள்.
இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களில் ஒருவருக்கு கூட ஹிந்தி தாய்மொழி அல்ல.
ஹிந்தியும் அந்நிய மொழி தான்.
தாய்மொழிகளை அழித்து ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டதே ஹிந்தி என்பது வரலாறு.
இந்துஸ்தானி என்ற மொழியை உடைத்து,
ஹிந்தி இந்துக்களுக்காகவும்,
உருது இஸ்லாமியர்களுக்கென்று 180 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதே ஹிந்தி வரலாறு.
இந்துஸ்தானியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே காந்தியின் நிலைபாடாக இருந்தது.
ஹிந்தியை கல்கத்தா வில்லியம் கோட்டையில் ஆய்வகம் வைத்து உருவாக்கியவன் ஜான் கில் ஹிரிஸ்ட் என்பவன் தான்.
அவனே ஹிந்தியின் தந்தை என்பது வரலாறு.