திருச்சி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள், பாலங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறோம்.
மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, மழை பாதிப்புகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேரிடர் காலங்களில் மக்களுடன் நிற்பதும், பாதிப்புகள் ஏற்படும் முன்பே செயல்படுவதும் நமது கடமை! நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
Minister immediately instructed our cadres to remove all banners. There will be no compromise on this subject. They removed the same👌🏻
@imrajmohan 👏🏻👏🏻👏🏻