இன்று சட்டமன்றத்தில், மாநிலத்தின் நிதிநிலை குறித்து சில முக்கிய கேள்விகளை முன்வைத்தேன். செலவிடப்படாத நிதியைக் காரணம் காட்டி எதிர்கால பட்ஜெட் மதிப்பீட்டை குறைப்பது சரியான திட்டமிடல் அல்ல என்று சுட்டிக்காட்டியதோடு. கஜானாவிற்கு வந்ததாகக் கூறப்படும் ரூ.15,000 கோடி மாநிலத்தின் சொந்த வருவாயா அல்லது ஒன்றிய அரசின் நிதியா? சொந்த வருவாய் எனில் எந்தெந்த இனங்களின் மூலம் இவ்வளவு பெரிய தொகை கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாக அரசின் கருவூலத்திற்கு வந்துள்ளது? அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான TAPS ஓய்வூதிய திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.11,000 கோடியை தவெக அரசின் பட்ஜெட்டில் நீக்கிய பிறகும், வருவாய் பற்றாக்குறை ஏறத்தாழ ரூ.7000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது ஏன் என்பதைக் குறித்தும் கேள்விகளை எழுப்பினேன்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Manchester School of Architecture கல்வி நிறுவனத்தில் M.Arch படிக்க தேர்வான சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு தமிழ்நாடு அரசின் “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின்” கீழ் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை நேரடியாக ஏற்க மறுத்துள்ள அந்த கல்வி நிறுவனம், இந்திய ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடங்கி ஒரு மாதகாலம் ஆகும் நிலையிலும் உரிய தீர்வு எட்டப்படாமல் இருப்பதாக கிடைக்கும் தகவல்கள் கவலையைத் தருகின்றன.
அதேபோல University of Leeds உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி சேரவிருந்த சில மாணவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை சென்று சேர்வதில் ஏற்பட்ட தாமதத்தினால் காலக்கெடு முடிந்து, சேர்க்கை தடைபட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இந்த பிரச்சனைகளை விரைவாக களைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என @CMOTamilnadu அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
அதிகாரப்பூர்வமாக மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை.
அதிகாரப்பூர்வமாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
அதிகாரப்பூர்வமாக பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
அதிகாரப்பூர்வமாக பால் விலை உயர்த்தப்படவில்லை.
ஆனால் இவை அனைத்திற்கும் நாம் அதிகக் கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
இது தான் ஊழல் அதிகாரம்.
சட்டசபை நேரலையால் கிடைத்த இன்னொரு பலன் இது 💥💥
விஷயம் தெரியாத #தவெக அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இதை பார்க்கும் பொதுமக்களுக்கும்
#திமுக கிளாஸ் எடுத்து புரிய வைப்பதை முழுசா பார்த்து பயனடையலாம்
#NEET#DMK4TN
Video from: @DMK662000
திரு எ.வ. வேலு அவர்களுக்கு யாராவது ஞாபகப்படுத்துங்கள், மொழிக்காகவே இயங்கிய ஒரு இயக்கத்தின் எம்எல்ஏ என, DMK எம்எல்ஏவாக பேசியிருந்தால் நிதியமைச்சரின் ஆணவத்தை சபையில் கண்டித்திருப்பார்! அண்ணன் மவன், மச்சான் என்ற உறவையெல்லாம் சபையில் வைத்துக்கொள்ள வேண்டாமென தலைமை அறிவுறுத்த வேண்டும்!
தலைவர் கலைஞர் அவர்கள், எப்படித் தன்னுடைய முடிவுகளால், கருத்துகளால் எதிரிகளை - இனப்பகைவர்களைத் திணறடித்தாரோ, அந்த வழிகாட்டுதல் இருக்கும்வரை திமுகவும், திராவிட இயக்கமும் ஒரு நாளும் பின்னடைவைச் சந்திக்காது! ✊🔥
#KalaignarForever#DMK4TN
#WATCH | "இப்போது ஆட்சி மாற்றம் அணி மாற்றம் நடைபெற்று விட்டது.அதற்காக எம்மை போன்றவர்கள் கொள்கையை மாற்ற முடியுமா?"
-ஆலூர் ஷா நவாஸ், விசிக
#SunNews | #VCK | #DMK
விசிக திருமா ஏன் #No_delimitation வேண்டும் என்று சொல்கிறார் அதற்கு காரணம் இதுதான்.
(கலைஞர் கொடுத்த அருந்ததியர் உள் ஒதுக்கீடு மற்றும் அதில் திருமாவின் நிலைப்பாடு என்ன என்று தெரியும்)
/// திமுக முன்வைக்கும் fair delimitation என்பதுதான் சரியானது.
இப்போதிருக்கும் பாராளுமன்றத் தொகுதி வரையறை என்பது நீடித்தால்,
#பறையருக்கு 6,
#பள்ளருக்கு-1,
#அருந்ததியருக்கு 0
என்ற நிலைதான் தொடரும்.
அருந்ததியருக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டுமானால் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டின் பிரதிநித்துவ விகிதாச்சாரம் இப்போதிருக்கும் அளவிலேயே நீட்டிக்கப் படவேண்டும்.
அதை விட்டுத்தர முடியாது.
திருமாவளவன் கோருவது போல் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அப்படியே நிலைநிறுத்தப் பட்டால், அந்நடவடிக்கை அவர் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமே நன்மை பயக்கும்!///
பதிவு: மணி மதிவாணன் 🙏
@ImPrinze
அமிழ்தம் கடைந்து தந்துவிட்டு அதற்கு விலையாக காலமெல்லாம் நஞ்சையே பெற்றுக்கொண்ட பேரரக்கர் அவர்.
இந்திய வரலாற்றில் பேரரக்கரகராகவும்,
பேரருளாளனாகவும் வாழ்கிறார் கலைஞர் .
வாழ்வபனுக்கு அஞ்சலி எதற்கு?
கலைஞர் வாழ்கிறார். வயது எட்டு.
மான்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே..
~ அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது.
அய்யா நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கல.
~ எப்படியும் சம்பந்தமே இல்லாம தான் பேச போற..