கல்லூரி சேர்க்கை முறையை சீரமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிக்கின்றன. ஒரே மாநிலத்தில் தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை விரைவாக நிறைவு செய்து கொள்ளும் நிலையில், அரசு கல்லூரிகளில் மட்டும் பெருமளவில் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, தற்போதைய சேர்க்கை முறையில் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தில் 1,044 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசு கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் 43 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. இது மாணவர்களின் ஆர்வக் குறைவு அல்ல; மாறாக, சேர்க்கை நடைமுறைகளில் உள்ள திட்டமிடல் குறைபாட்டின் வெளிப்பாடாகும்.
அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்படாமல் இருப்பதால், மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் இந்த நிலைமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசு கல்லூரிகளில் தரமான கல்வி குறைந்த கட்டணத்தில் கிடைக்கக்கூடிய சூழல் இருந்தும், நிர்வாக தாமதங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை காரணமாக மாணவர்கள் தனியார் கல்லூரிகளுக்கு தள்ளப்படுகின்றனர்.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு நடைபெற்று முடிந்த பிறகே நடைபெறுகின்றது. இதே நடைமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கையிலும் பின்பற்றப்பட வேண்டும்.
எனவே, அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்க்கை செயல்முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் கலந்தாய்வு முறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். மேலும், அரசு கல்லூரிகளின் சேர்க்கை அட்டவணை, காலியிட விவரங்கள் மற்றும் கலந்தாய்வு தகவல்கள் முழுமையாக வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.
உயர்கல்வி என்பது சமூக நீதியின் அடித்தளம். அந்த வாய்ப்பை ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்கள் இழக்காதவாறு, அரசு உடனடியாக செயல்திறன் மிக்க சேர்க்கை சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி,
சென்னை
30/06/2026
#தமிழக_அரசு_கல்லூரிகள்
#கல்லூரி_சேர்க்கை
#உயர்கல்வி
#சமூகநீதி
#மாணவர்_உரிமை
#தமிழக_மாணவர்கள்
#கல்வி_சீர்திருத்தம்
#அரசு_கல்லூரிகள்
#OnlineCounselling
#CollegeAdmissions
#HigherEducation
#EducationalReform
#StudentsFirst
#EqualEducation
#MMK
#Jawahirullah
#மனிதநேய_மக்கள்_கட்சி
#எம்எச்ஜவாஹிருல்லா
@sunnewstamil@pttv_tweets@puthiyathalaimu@polimernews@sathiyamnews@News18TamilNadu@NewsTamilTV24x7@ZeeTamilNews@bbctamil@rajnewstamil@PTI_News@TamilTheHindu@DH_Tamil@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@DeccanHerald@NewIndianXpress@the_hindu@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@SamayamTamil@ani_digital@ITamilTVNews@thatsTamil
பத்திரிகை அறிக்கை
நாடு முழுவதும் முஸ்லிம்களைக் குறிவைத்து நடைபெறும் வெறுப்பு குற்றங்களைத் தடுக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு ஹி ஜவாஹிருல்லா சமஉ வெளியிடும் அறிக்கை
இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரு வாரத்திற்குள் நான்கு முஸ்லிம்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி மற்றும் கவலை அளிக்கின்றன.
-லக்னோவில் நண்பர் ஒருவரால் அழைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பதின்மூன்று வயது உனைஸ் கான் சுட்டுக் கொல்லப்பட்டார். உனைஸ் நோன்பிருந்த நிலையில் அவரது நெற்றியின் நடுவில் சுடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றம் சாட்டப்பட்டவர் உத்தரப்பிரதேசத் துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கின் மருமகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுவனின் கொலை உள்ளூர் மக்களிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது,
-பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டியான ரோஷன் காதுன், உள்ளூர் தகராறு ஒன்றைச் சமரசம் செய்யுமாறு கோரி கிராமத் தலைவரை அணுகிய நிலையில், அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் ஒரு கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டதாகவும், .நோன்பு கடைப்பிடித்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவருக்கு மது மற்றும் பசுவின் சிறுநீர் ஆகியவை கட்டாயப்படுத்திப் புகட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தின் கொடூரமான தன்மை, மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்களிடமிருந்து கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
-பீகாரில் நடந்த மற்றொரு சம்பவத்தில், தர்பங்கா மாவட்டத்தில் ஓர் இளைஞர் குழு வகுப்புவாத அவதூறுகள் செய்வதைத் தடுக்க முயன்றதால், 65 வயதான அப்துஸ் சலாம், இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் அதிகரித்து வரும் கும்பல் வன்முறை மற்றும் சகிப்புத்தன்மையின்மை குறித்த கவலைகளை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
-ஹரியானாவின் பல்லாவைச் சேர்ந்த 28 வயது சுமையுந்து ஓட்டுநர் ஆமிர், ராஜஸ்தான் நோக்கிச் சென்ற போது பசு பாதுகாவலர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பஜ்ரங் தளத்துடன் தொடர்புடைய உறுப்பினர்கள் அவரது வாகனத்தை வழிமறித்து, பசு கடத்தல்காரர் என்று குற்றம் சாட்டி, சுமையுந்தை நிறுத்திய பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
நான்கு வெவ்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதித்த இந்தக் கொலைகள் பரவலான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரபட்சமற்ற வெளிப்படையான
விசாரணைகளை நடத்தி
குற்றவாளிகள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறேன்.
மத அடையாளத்தின் பெயரில் மனிதர்களைக் குறிவைத்து நடைபெறும் இந்தக் கொடூரமான தாக்குதல்கள் நாட்டின் ஜனநாயகப் பண்புகளுக்கும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதச்சார்பின்மை கொள்கைக்கும் நேரடி சவாலாகும்.
ஒரு நாகரிகமான சமூகத்தில் மதம், மொழி, இன அடையாளங்களின் அடிப்படையில் மனிதர்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் மீது வெறுப்பு தூண்டப்படும் சூழல் உருவாக்கப்பட்டு, அதன் விளைவாக இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்கிடமானதாகும்.
மத அடிப்படையிலான வெறுப்பு பரப்புரைகளையும், வெறுப்பு பேச்சுகளையும் தூண்டிவரும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் காக்கும் நோக்கில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது இன்றியமையாததாகும். வெறுப்பு மற்றும் வன்முறைக்கு இந்த நாட்டில் இடமில்லை என்பதைக் கடுமையாக மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.
இப்படிக்கு
மு ஹி ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
10/03/2026
#Hatecrimes
@sathiyamnews@Kalaignarnews@ThanthiTV@PttvNewsX@polimernews@News18TamilNadu@news7tamil@sunnewstamil@AsianetNewsTM@SamayamTamil@IeTamil@TamilTheHindu@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@TheFederal_News@THChennai@Theekkathir@NewIndianXpress@DeccanChronicle@ITamilTVNews
சமையல் எரிவாயு விலை உயர்வு – மக்களின் வாழ்வை மேலும் சுமையாக்கும் ஒன்றிய அரசின் முடிவு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை
நாடு முழுவதும் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளையின் விலையை உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது கடுமையான பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் ஒன்றாகும்.
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பு குறைவு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பொதுமக்கள் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சமையல் எரிவாயு விலை உயர்வு அவர்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும் நடவடிக்கையாகும்.
மார்ச் 7 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை உயர்வின் மூலம் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல் 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையும் ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், சிறிய உணவுக் கடைகள், தேநீர் கடைகள் போன்ற சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன. அதன் தொடர்ச்சியாக உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், தேவையான அளவு கையிருப்பு இருப்பதாகவும் ஒன்றிய அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை காரணம் காட்டி சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகும்.
இது பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிய உணர்வு இல்லாத ஒரு முடிவாகவே அமைந்துள்ளது.
ஏற்கனவே பணவீக்கம் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு குடும்பங்களின் மாதாந்திர செலவுகளை மேலும் அதிகரித்து, அவர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சமையல் எரிவாயு உருளையின் விலையை உயர்த்தியுள்ள இந்த முடிவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
07/02/2026
#IranWar #IranIsraelWar #gasprices #gascylinder
@Kalaignarnews@sunnewstamil@ThanthiTV@sathiyamnews@News18TamilNadu@ZeeTamilNews@polimernews@niranjan2428@TheFederal_News@PTI_News@PttvNewsX@ITamilTVNews@velichamtvtamil@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@AsianetNewsTM@TamilTheHindu@TheFederal_News@THChennai@NewIndianXpress@IeTamil@DeccanChronicle
அலி காமேனி வீரமரணம்: அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை பயங்கரவாதத்திற்கு வன்மையான கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை
ஈரான் இஸ்லாமிய குடியரசின் உயரிய தலைவர் அலி காமேனி அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் பயங்கரவாத
தாக்குதல், ஒரு சுயாட்சி நாட்டின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, சர்வதேச சட்டங்களையும் ஐ.நா. சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளையும் மீறும் ஆபத்தான முன்மாதிரியாகும்.
ஒரு நாட்டின் அரசியல் மற்றும் மதத் தலைமை அமைப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல், பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் செயல் மட்டுமல்ல; அது உலக அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.
இத்தகைய ஒருதலைப்பட்சமான பயங்கரவாத நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் தீவிர மோதல்களுக்குள் தள்ளக்கூடியவை.
பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முயற்சிக்கப்பட்ட விவகாரங்கள், இராணுவ தாக்குதலால் ஒருபோதும் தீர்க்கப்படமாட்டாது. போர் என்பது தீர்வாகாது; அது மனித உயிரிழப்புகளையும் அழிவையும் மட்டுமே அதிகரிக்கும்.
எனவே,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட்டு, மோதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரச்சினைகள் அனைத்தும் தூதரக வழி மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசரக் கூட்டம் கூட்டி, பிராந்திய அமைதியை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு சுயாட்சி நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, போர் அல்ல, அமைதியே மனிதகுலத்தின் பாதை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டுகிறோம்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
01/03/2026
English version
Ali Khamenei’s Martyrdom: Strong Condemnation of the U.S.–Israel Terror Attack
Press Statement issued by Professor M. H. Jawahirullah, MLA
President, Manithaneya Makkal Katchi
The news of the demise of Ali Khamenei, the Supreme Leader of the Islamic Republic of Iran, has caused profound shock and deep concern. The reported aerial terrorist attack carried out jointly by the United States and Israel constitutes a blatant violation of the sovereignty of an independent nation.
If this military action was undertaken without the authorization of the United Nations, it sets a dangerous precedent by violating international law and the fundamental principles enshrined in the UN Charter.
An attack targeting the political and religious leadership of a nation is not merely an act that destabilizes regional peace; it is a grave threat to global peace and security. Such unilateral acts of aggression risk pushing the Middle East region into further and more intense conflicts.
Issues that have been addressed for decades through diplomatic engagement and negotiations can never be resolved through military strikes. War is not a solution; it only multiplies human suffering, loss of life, and destruction.
Therefore, the United States and Israel must immediately cease all military operations. The international community must urgently intervene to de-escalate the situation and restore stability. All disputes must be resolved through diplomatic channels and peaceful negotiations. The United Nations Security Council should convene an emergency meeting to take necessary measures to ensure regional peace.
We strongly condemn any attack carried out against a sovereign nation. We urge all countries of the world to act with responsibility and reaffirm that peace—not war—is the enduring path for humanity.
M. H. Jawahirullah
President
Manithaneya Makkal Katchi
Chennai
01/03/2026
#Khamenei #خامنئي #Iran
Chennai, Tamil Nadu: Manithaneya Makkal Katchi (MMK) State President and MLA M.H. Jawahirullah says, "Manithaneya Makkal Katchi's special general council meeting was convened today, in which more than 3,500 members as well as special invitees participated in the deliberations. Nineteen resolutions were passed in this general council meeting..."
@jawahirullah_MH அறிவிக்கப்படாத பிரதமராக அமித்ஷா செயல்படுவதாகவும், மோடி கொஞ்சம் உஷாரா இருந்துக்கங்க அப்படின்னு மேற்குவங்க முதல்வர் மம்தா கூறி இருக்காங்க..
முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்பது ஊடுருவலின் விளைவு என்ற அமித் ஷா குற்றச்சாட்டு பொய்யானது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
“முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்பது பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து ஊடுருவலின் விளைவு”என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும், அரசியல் உள்நோக்கத்துடன் கூறப்பட்டதுமாகும்.
இத்தகைய பொறுப்பில்லாத கருத்து, நாட்டின் சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய உயரிய பதவியில் இருப்பவரிடமிருந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. இத்தகைய கருத்து சமூக ஒற்றுமையைப் பாதிக்கிறது. அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு முரணானதாகும்.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள், பிவ் (Pew) ஆய்வு நிறுவனம் மற்றும் தேசிய குடும்ப நல ஆராய்ச்சி (NFHS-5) தரவுகள் முதலியவை கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய முஸ்லிம்களின் பிறப்பியல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், தற்போது மற்ற சமூகங்களுடன் சமநிலையில் இருப்பதாகவும் தெளிவாகக் காட்டுகின்றன.
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தருணத்தில் சமூக பிளவை தூண்டும் நோக்கத்துடன் இக்கருத்து கூறப்பட்டதெனத் தெளிவாகிறது.
“ஊடுருவிகள்” போன்ற சொற்களை இந்திய குடிமக்கள் மீதான சந்தேகத்தை உண்டாக்கும் விதமாகப் பயன்படுத்துவது, பாஜக கட்சியின் வழக்கமான வெறுப்பு அரசியல் மனப்பான்மையையின் வெளிப்பாடாகும்.
உள்துறை அமைச்சராக அமித் ஷா அவர்களின் கடமை — அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் உறுதி செய்வது தான்.
ஆனால் அவர் கூறிய கருத்து மக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி, அரசியலமைப்பின் அடிப்படைகளை மீறுகிறது. அவர் பதவி பிரமாணம் எடுத்து கொண்ட வேளையில் எடுத்து கொண்ட உறுதிமொழியை மீறுகின்றது. அவரது கருத்து குடிமக்களிடையே பாகுபாடு மற்றும் அவநம்பிக்கையை விதைக்கும் செயல் ஆகும்.
இந்தியாவின் வலிமை அதன் பன்மைத்தன்மையிலும் ஒற்றுமையிலும் உள்ளதே தவர் பயத்திலும் பிரிவினையிலும் அல்ல.
நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு பெற்ற தலைவர்கள், மக்களைப் பிரிப்பதற்காக அல்ல, ஒன்றிணைக்கும் வகையிலேயே கருத்துகளை வெளியிட வேண்டும்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
11/10/2025
#AmitShah #MuslimPopulation #PEW #NFHS
@ThanthiTV@News18TamilNadu@news7tamil@PttvNewsX@sunnewstamil@polimernews@sathiyamnews@PTI_News@DinakaranNews@dinathanthi@the_hindu@timesofindia@Kalaignarnews@TamilTheHindu@thatsTamil@SamayamTamil@IndianExpress