#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.
#NewsUpdate | பள்ளி சீருடையில் தவெக கொடிகளை தேசிய நெடுஞ்சாலையில் கட்ட வைத்த அக்கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
#SunNews | #Ambur | #TVK
அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்டு 60 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு பதிலாக தொழிற்சாலைக்குள்ளையே தங்க வைத்தது அதிக பாதிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
18 வயதிற்கு குறைவான குழந்தை தொழிலாளர்கள் பெருமளவில் அந்த நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளனர்.
பாதிப்படைந்தவர்களில் பெரும்பாலும் பெண்கள் தான்.
பாதிப்படைந்தவர்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்படும் இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் போதாது. அந்த தொகை உயர்த்தி வழங்க வேண்டும்.
குறிப்பாக பாதிப்படைந்தவர்கள் புலம்பெயர்ந்து வந்து பணியாற்றிய தொழிலாளர்கள். இவர்கள் சட்டரீதியாக பதிவு செய்யப்படவில்லை. அவர்களை தமிழகத்தின் தொழிலாளர்களாகவே அரசாங்கம் நடத்த வேண்டும். அவர்களது பாதுகாப்பு உரிமைகள் என அனைத்தையும் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் தொழிலாளர்களுக்கு சாதி மத பேத எல்லையில் ஏதுமில்லை.
கடந்த டிசம்பர் மாதம் இந்த நிறுவனத்தை தமிழ்நாடு தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு எந்த ஒரு ஆய்வையும் செய்யாததே இந்த விபத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
அரசு அதிகாரிகளின் இந்த மெத்தனப்போக்கு கண்டிக்கத்தக்கது.
#thiruvallur #gasleak
உரிய விசாரணை நடத்தி, இளம் தம்பதியினருக்கு மிரட்டல் கொடுக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது கட்சி ரீதியாகவும், தவெக அரசு சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த தம்பதியினரின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள் உரிமையையும் உயிரையும் பொருட்படுத்தாத தவெக அரசுக்கு கண்டனங்கள்.
நேற்று அமோனியா கசிவு காரணமாக 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 8 பெண்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணி சூழல் இல்லாததால் ஏற்பட்டுள்ளது. இதுவும் கொலைக்கு சமமான குற்றமாக கருதப்பட வேண்டும்.
இந்த மோசமான சம்பவம் குறித்து இன்று சட்டமன்றத்தில் விவாதிக்க மறுத்துள்ளார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அறிக்கை படித்த பிறகு விவாதம் கிடையாது என கூறியுள்ளார்.
@CMOTamilnadu
#AmmoniaGasLeak | #Thiruvallur
ஹலோ மேடம் நாங்கள் என்ன குற்றவாளிகளா..? கல்லூரி மாணவர்கள்..! நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நடந்த ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் நீட் போராட்டகாரர்கள் போலீசார் இடையே மோதல்.. சாலையில் ஓடியவர்களை மடக்கிப் பிடித்தும், சட்டையை பிடித்து இழுத்தும் கைது செய்த காவல் துறையினர்..
#Chennai | #NEET | #Protest | #Students | #Governor | #PolimerNews
Breaking:
தமிழக வெற்றிக்கழகத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்: சிபிஐ விசாரணை மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரிய மனு உச்ச நீதிமன்றத்தால் அதிரடி தள்ளுபடி!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக அரசின் நம்பிக்கை தீர்மானத்தின் போது மாபெரும் குதிரை பேரம் நடத்தப்பட்டதாகக் கூறி, அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
1000 தனியார் பள்ளிகளுக்கு NOC - பின்னணி என்ன?
(Time இருந்தா படிங்க)
2006-11 திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள் பாடத்திட்டம் ஒன்றாகவும், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பாடத்திட்டம் சிபிஎஸ்இ சார்ந்தும் இருந்தது
மெட்ரிக்குலேசன் உட்பட அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்த பின், தனித்து அடையாளம் வேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகள் சிபிஎஸ்இ நோக்கி சென்றது
2011-16 அதிமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை முடக்க பார்த்து அந்த முயற்சி தோல்வியில் முடியவும், அரசின் உதவியுடன் பல பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாறியது. எந்த அளவு என்றால் அந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் எண்ணிக்கை இருமடங்காக மாறியது.
2021 திமுக ஆட்சிக்கு வரும் போது ஏறக்குறைய 1800+ சிபிஎஸ்இ பள்ளிகளும், 13000+ தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் இருந்தது. இந்த காலத்தில் தான் 2006-11 ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றவும் அதை பள்ளிகளில் வெளிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியது.
மேலும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற NOC கொடுட்பதை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை நடத்தியதை குறைத்ததுடன், சிபிஎஸ்இ பள்ளியாக மாறி இதை தொடர நினைத்தது நடக்காமல் போனது
உடனே தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஒன்றிய அரசை அணுகி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தேவையான NOC கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியது
கடந்த ஆண்டு 2025 Feb 20 ஆம் தேதி ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ இனி பள்ளிகள் தொடங்க NOC இல்லாமலும் Apply செய்யலாம். அவர்கள் நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி 30 நாளில் அனுமதி வழங்க வேண்டும். தவறினால் மேலும் 15 நாள் அவகாசம் வழங்கப்படும். அதிலும் மாநில அரசு பதில் அளிக்கவில்லை எனில் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் என்று விதிகளை மாற்றியது
இருப்பினும் தனியார் பள்ளிகள் ஆளுமை மிக்க அரசை பகைத்துக் கொண்டு சிபிஎஸ்இ பள்ளியாக மாற முயற்சி செய்யவில்லை.
திமுக அரசு NOC வழங்காமல் இருந்த காரணம், சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் National Education Policy படி செயல்படும். தாய்மொழி தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு இருப்பதால் இதுவரை அதை நிறுத்தி வைத்தது
ஆனால் இப்போதுள்ள தவெக அரசு மறைமுக கூட்டணியாக பாஜக மனம் நோகாமல் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற NOC கொடுத்துள்ளது
இதன் மூலம் இனி அவர்களுக்கு என்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து ஒன்றிய அரசு வசம் சென்று விடும்.
இதை மறைக்க தான் லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற அன்னா ஹசாரே வழி ஊழல் ஒழிப்பு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
இந்த ஆட்சி முழுமையான 5 ஆண்டுகளை முடிக்கும் போது 13000 தனியார் பள்ளிகளில் 50% பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காத்திருப்போம்.!
மாற்றம் 👌🤦
அனைத்து தனியார் பள்ளிகளும் கட்டண விவரங்களை வெளிப்படையாக இணையதளத்திலும் அறிவிப்பு பலகைகளிலும் கட்டாயம் வெளியிட வேண்டும் என்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை 💛♥️
@itjpsl has released the names of individuals who were killed or disappeared during the period of the Indian Peace Keeping Force (IPKF) deployment (October 1987 to March 1990) in the Northern and Eastern provinces: https://t.co/HUyzuhAa3Q
Thus, Indo-Lanka accord was nothing but an agreement ignoring Tamil rights and upholding both govts hegemonic interests. Thus it was failed to attract Tamil people, till date.
During this IPKF operation former Prime Minister of India RajivGandhi and his Congress cabinet faced international, national condemnation for their gross violation of human rights against Eelam Tamil people. Present day congress members should look into the data of disappeared (abducted/arrested/detained and murdered). The pain of the every mother, father or family members of the disappeared, can be felt if you happen to meet some of their families. This burden is on your party. In 2009 Ms.Sonia Gandhi &Manmohan Singh govt added more crimes to the files.
ITJPSL is an organisation coordinated by well-reputed international human rights defenders. It has extensively worked in the areas of disappearance, torture, rape and other violations by Srilankan govt and other associates during the srilanka ln military operations .