மே 18 இனப் படுகொலை நாள்!
மாபெரும் பொதுக்கூட்டம்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாள்: வைகாசி 04 திங்கட்கிழமை 18-05-2026 மாலை 4 மணிக்கு
இடம்: சென்னை (இடம் விரைவில் அறிவிக்கப்படும்)
என்ன அயோக்கியத்தனம் இது? @TVKVijayHQ
கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை அந்தச் சிறுமியின் தாயாருடைய ஒப்புதல் இல்லாமல் எரித்து முடித்திருக்கிறது காவல்துறை.
என்னையும், என் உறவினர்களையும் மருத்துவமனைக்கு உள்ளே விடவில்லை. எனக்கே தெரியாமல் குழந்தையின் உடலை எடுத்துச் சென்றுவிட்டார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார் சிறுமியின் தாயார்.
அமைச்சர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுப்போம் என சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் சொன்னது அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு பொருந்தாதா ?
கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஒரு பச்சிளம் பிள்ளை கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு. தொடரும் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்ட பேராபத்துக்கான அறிகுறியாகும். ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலம் இது. இதற்குக் குற்றங்கள் நடந்தேறிவிட்டப் பின்னர், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்வது மட்டும் போதாது; குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே, முன்னுணர்ந்து தடுக்கக் குற்றத்தடுப்புக் காவல்துறையும் அமைக்கப்பட வேண்டும். எவ்விதக் கொடூரக் குற்றத்தையும் செய்வதற்குரிய குரூரச்சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பரவலையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இனியொரு சிறுமியோ, பெண்ணோ ஒருபோதும் பலியாகக்கூடாது.
ஆகவே, சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் ஆளும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
https://t.co/6dFiRLHU6X இந்த இணைப்பில் உள்ளே சென்று அண்ணன் சீமான் பேசிய சொற்களை தட்டச்சு செய்து தேடினாலே முழுக்காணொளி கிடைக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது...
அண்ணன் சீமான் பேச்சுக்களை வெட்டி ஒட்டி பரப்பும்போது அதை பொய்யென்று நிரூபிக்க இந்த பக்கம் பெரும் உதவியாக இருக்கும்...
இந்த தளத்தை உருவாக்கிய சாலை நாயகன் அருண்மொழி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் 👏👏👏
தேவைப்படும் உறவுகள் இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளவும்...
இராமநாதன் அர்ச்சுனாவே மன்னிப்பு கேள்!
தமிழர் ஒற்றுமையைச் சிதைக்காதே!
நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் தங்களுக்கான விடுதலைக்காக, 75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.. பல தலைமுறைகள் தங்கள் குழந்தைப் பருவத்தையும், குடும்பங்களையும், கல்வியையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.
தமிழர்கள் மீது திட்டமிட்ட மொழி ஒடுக்குமுறை, கல்வி மறுப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு, நில அபகரிப்பு, இராணுவ அடக்குமுறை ஆகியவைத் தொடர்ந்து திணிக்கப்பட்டன. அமைதியாக உரிமை கேட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கிராமங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். குழந்தைகள் பெற்றோரின் கண்முன்னே கொல்லப்பட்டார்கள். முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். மருத்துவமனைகள், பள்ளிகள், பாதுகாப்பு வளையங்கள் கூட குண்டு மழையிலிருந்து தப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.
உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டிருந்த கொத்துக் குண்டுகள், ரசாயன குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் போன்ற மனிதாபிமானமற்ற ஆயுதங்கள் தமிழர்கள் மீது வீசப்பட்டன. நமது தொப்புள் கொடி உறவுகள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தின் பல்வேறு நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த இனப்படுகொலைக்கு துணை நின்றன.
இன்றளவும் உடலில் பாய்ந்த குண்டுகளை முழுமையாக அகற்ற முடியாமல், அந்தக் குண்டுகளோடும் வலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போராளிகளும் பொதுமக்களும் ஏராளம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் உயிர் வலியுடனும் மன உளைச்சலுடனும் அவர்கள் வாழ்க்கையைக் கடக்க முடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
போரின் காயங்கள் உடலில் மட்டுமல்ல. மனதிலும், தலைமுறைகளின் நினைவுகளிலும் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.
நிலங்களை இழந்தோம். தலைமுறைகள் சேர்த்து வைத்தச் சொத்துக்களை இழந்தோம். வீடுகளை இழந்தோம். நமது வாழ்வாதாரங்களையும் நிம்மதியையும் இழந்தோம். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றப் பட்டியலில் இன்று வரை நீதியின்றி காணாமல் போனவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. தாய்மார்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களைக் கையில் ஏந்தி நீதிக்காகக் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்.
உயிரோடு இருக்கும் போதே தமிழர்களின் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன. கைகள் வெட்டி எறியப்பட்டன. தமிழச்சிகளின் மார்புகள் அறுக்கப்பட்டன.தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டார்கள். பச்சிளம் குழந்தைகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கூட இரக்கமின்றி கத்திகளால் கிழித்துக் கொல்லப்பட்டார்கள். மனித இனமே தலைகுனிய வேண்டிய கொடுமைகள் ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட்டன.
குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16, 17, 18ஆகிய நாட்களில், முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வளையங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களுக்குள்ளே இலட்சக்கணக்கான மக்களை ஒன்றாகக் குவித்து செய்யப்பட்ட இனப்படுகொலை, தமிழின வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, மன்னிக்க முடியாத ஒன்றாகும்.ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான நமது தொப்புள் கொடி உறவுகள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். பதுங்கு குழிகளில் இருந்த குழந்தைகள் உடல்சிதறி உயிரிழந்தார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.பட்டினியாலும் குண்டுவீச்சாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளிலும் கடற்கரைகளிலும் சடலங்களாகக் கிடந்தார்கள்.உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு இனத்தின் உயிர் பறிக்கப்பட்டது.
தாய் நிலத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெளியேறிய உறவுகள் தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உலகின் பல்வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மண்ணை இழந்த வலியோடு, அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியப் பெருநிலத்தில்,குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் நமது தொப்புள் கொடி உறவுகள் இன்னமும் சிறை வாழ்க்கையைப் போன்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர்.பல தலைமுறைகள் கடந்தும் முழுமையான மனித உரிமைகளும் நிரந்தரமான வாழ்வாதாரமும் இல்லாமல் வாழ வேண்டிய துயர்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த அத்தனைக் கொடுமைகளும் சகோதர யுத்தங்களாலும், காட்டிக்கொடுப்புகளாலும், இன ஒற்றுமையைப் பிளவுபடுத்திய துரோகங்களாலும் நடந்தேறியவை என்பதை வரலாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
தி வேல்முருகன்.
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
மற்றும்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு.
மற்றும்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி.
#சீமான்
17 years ago, Sri Lanka carried out a genocidal campaign against the Tamil people. Tens of thousands killed. Hospitals destroyed. Families starved.
I will continue to stand with the Tamil community in the fight for justice. We need genocide recognition, universal jurisdiction, & international accountability.