காவிரி என்பது தமிழகத்தின் உயிர்நாடி, அதன் உரிமையை பாதுகாப்பது எங்கள் கடமை!
தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் ஒதுக்கீடு முழுமையாகவும், காலதாமதமின்றியும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாநிலங்களவையில் Unstarred Question No. 892 மூலம் மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பினேன்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கர்நாடகா வழங்க வேண்டிய மாதாந்திர காவிரி நீர் ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட்டதா?
குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கெதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
மேலும் தமிழகத்திற்கு உரிய நீரை உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர்த் தீர்ப்பாய உத்தரவுகளின்படி உரிய நேரத்தில் வழங்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கோரினேன்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம், டெல்டா மக்களின் நலன் மற்றும் தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்கும் குரலாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து செயல்படுவேன்.
தமிழகத்தின் உரிமை... எங்கள் உறுதி!
#LKSudhish #RajyaSabha #Cauvery #CauveryWater #TamilNadu #WaterRights #DeltaFarmers #JalShakti #CWMA #Parliament #DMDK
@RajyaSabha | @JalShaktiMin | @PIB_India
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழக அறிக்கை - விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
#dmdk#premamalathavijayakanth
தேசிய நெடுஞ்சாலைகளை தொழில்நுட்பத்தில் முன்னேற்ற என்ன நடவடிக்கைகள்?
மாநிலங்களவையில் நான் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு முக்கிய தகவல்களை வழங்கியுள்ளது.
✅ AI அடிப்படையிலான போக்குவரத்து கண்காணிப்பு
✅ Automatic Number Plate Recognition (ANPR) கேமராக்கள்
✅ Video Incident Detection & Enforcement Systems (VIDES)
✅ தேசிய நெடுஞ்சாலைகளில் Advanced Traffic Management Systems (ATMS) விரிவாக்கம்
✅ நாடு முழுவதும் Command & Control Centres அமைக்கும் திட்டம்
பாதுகாப்பான, புத்திசாலித்தனமான மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பை உருவாக்குவது குறித்து மக்களின் சார்பில் தொடர்ந்து கேள்வி எழுப்பி, பதில்களைப் பெற்று செயல்படுவேன்.
#LKSudhish #RajyaSabha #Parliament #DigitalHighways #IntelligentTransportSystems #AI #RoadSafety #NationalHighways #Infrastructure #NewIndia #TamilNadu
@nitin_gadkari | @MORTHIndia
#கேப்டன் - மனதை விட்டு மறையவில்லை...
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
விஜயகாந்த் #கருப்பு_எம்ஜிஆர் என்று அழைத்ததில் பொய்யில்லை.
இன்றைய @DinamaniDaily கதிர் இதழ்.
கேப்டன் அவர்களின் ஆசீர்வாதத்துடன்...
இன்று விருத்தாச்சலம் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டறிந்தேன்.
மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி, அவர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, தொடர்ந்து நடவடிக்கை எடுப்பேன்.
நம் கேப்டன் காட்டிய மக்கள் சேவைப் பாதையில், உங்களுக்காக என்றும் பயணிப்பேன்.
மக்களின் நம்பிக்கையே என் பலம்.
#CaptainVijayakanth #CaptainLegacy #CaptainPath #Virudhachalam #DMDK
Flood resilience is no longer a future concern—it is an urgent necessity.
In the Rajya Sabha, I raised important questions with the Union Government regarding urban flood management, drainage infrastructure, early warning systems, and Chennai's preparedness.
The Government informed the House that:
• The Urban Flood Risk Management Programme (UFRMP) is being implemented to strengthen flood resilience.
• Chennai has been allocated ₹500 crore under Phase I, with ₹331.5 crore already released.
• Modern technologies such as SCADA-based reservoir management, real-time monitoring, and automated early warning systems are being adopted to reduce flood risks and protect lives and property.
I will continue to raise issues that directly impact the safety, infrastructure, and quality of life of our people, ensuring that Tamil Nadu receives the attention and support it deserves.
@PMOIndia | @MoHUA_India |
@RajyaSabha | @PIB_India@ndmaindia | @PremallathaDmdk
#LKSudhish #RajyaSabha #FloodManagement #UrbanFlooding #Chennai #TamilNadu #UrbanDevelopment #DisasterManagement #AMRUT #UFRMP #PublicService #Parliament #Dmdk
நாட்டின் பசுமை வளத்தை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு!
சீரழிந்த வனப்பகுதிகளை மீட்டெடுத்து, உயிரினப் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினேன்.
அதற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. புபேந்தர் யாதவ் அவர்கள் விரிவான பதில் அளித்தார்.
இந்த பதிலில்,
- Green India Mission மூலம் சுற்றுச்சூழல் மீட்பு பணிகள்,
- கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில வாரியான நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு,
- சமூக பங்கேற்புடன் வனப் பாதுகாப்பு நடவடிக்கைகள்,
- உயிரினப் பன்முகத்தன்மையை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்காக தொடர்ந்து மக்களின் குரலாக செயல்படுவேன்.
#LKSudhish #RajyaSabha #GreenIndiaMission #ForestRestoration #Environment #ClimateAction #Biodiversity #TamilNadu #Parliament #SustainableDevelopment
விருத்தாச்சலம் விருதை வித்தியாலயா பள்ளியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி.
விளையாட்டு மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும். இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் திறமையால் புதிய சாதனைகளை படைத்து, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேருங்கள்.
#premalathavijayakanth #viruthachalam
சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெள்ள மேலாண்மை, நகர்ப்புற நீர் நிலைத்தன்மை மற்றும் முன்எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினேன்.
இந்த கேள்வியின் மூலம்:
✅ நகர்ப்புற வெள்ள மேலாண்மை குறித்த தேசிய அளவிலான திட்டங்கள்...
✅ மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி விவரங்கள்..
✅ நவீன தொழில்நுட்பம் சார்ந்த முன்எச்சரிக்கை அமைப்புகள்...
✅ மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டது.
மக்களின் பாதுகாப்பு, நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாடு மற்றும் எதிர்கால வெள்ள பாதிப்புகளை குறைக்கும் முயற்சிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
– எல். கே. சுதீஷ், மாநிலங்களவை உறுப்பினர்
#LKSudhish #RajyaSabha #Parliament #FloodManagement #UrbanFlooding #Chennai #UrbanDevelopment #DisasterManagement #TamilNadu #PublicService
@RajyaSabha@MoHUA_India@ndmaindia
இந்தியாவின் விமான நிலையங்கள் பசுமை ஆற்றலுக்கு முன்னேறுகிறதா?
மாநிலங்களவையில் நான் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
✅ நாடு முழுவதும் 106 விமான நிலையங்கள் தற்போது 100% புதுப்பிக்கத்தக்க (Renewable) ஆற்றலை பயன்படுத்துகின்றன.
✅ அனைத்து செயல்பாட்டிலுள்ள மற்றும் புதிய Greenfield விமான நிலையங்களும் கட்டப்படியான முறையில் Carbon Neutral & Net Zero இலக்கை நோக்கி செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
✅ சூரிய ஆற்றல் உள்கட்டமைப்புக்காக மத்திய அரசின் தொழில்நுட்ப ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வளர்ச்சியும், நிலையான உள்கட்டமைப்பும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு அவசியம். மக்களின் சார்பாக இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளை தொடர்ந்து மாநிலங்களவையில் முன்வைப்பேன்.
#LKSudhish #RajyaSabha #GreenEnergy #RenewableEnergy #NetZero #CarbonNeutral #SustainableDevelopment #CivilAviation #Airports #India #PMSuryaGhar #Environment #TamilNadu #dmdk
@MoCA_GoI@AAI_Official | @MNREIndia | @mohol_murlidhar
மதுரை – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் சேவை குறித்து மாநிலங்களவையில் குரல் எழுப்பினேன்!
மதுரை மற்றும் கோயம்புத்தூர் இடையே இருவழி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவது குறித்து, பயணிகளின் அதிகரித்து வரும் தேவை, தொழில் வளர்ச்சி, சுற்றுலா மற்றும் கல்வி இணைப்பை கருத்தில் கொண்டு, மாநிலங்களவையில் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினேன்.
மத்திய அரசு பதிலில், இந்த வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்ந்து பரிசீலனையில் உள்ளதாகவும், அது பாதை திறன், ரோலிங் ஸ்டாக், உள்கட்டமைப்பு, போக்குவரத்து தேவை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மக்களின் தேவையை தொடர்ந்து வலியுறுத்தி, மதுரை – கோயம்புத்தூர் நேரடி வந்தே பாரத் சேவையை பெற்றுத்தர முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வேன்.
#LKSudhish #RajyaSabha #VandeBharat #Madurai #Coimbatore #IndianRailways #TamilNadu #RailConnectivity #PublicService #DMDK
@AshwiniVaishnaw | @RailMinIndia@RailwaySeva | @PIB_India | @PremallathaDmdk
மக்களின் ஆரோக்கிய சேவைகள் மேலும் எளிதாகவும், பாதுகாப்பாகவும், அனைவரையும் சென்றடையவும் வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
அந்த நோக்கத்துடனே மாநிலங்களவையில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ABDM) திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினேன்.
நான் எழுப்பிய முக்கிய அம்சங்கள்:
✅ ABHA டிஜிட்டல் ஹெல்த் ஐடி உருவாக்கத்தின் முன்னேற்றம்..
✅ மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பதிவு நிலை..
✅ நோயாளிகளின் மருத்துவத் தரவுகளுக்கான தனியுரிமை மற்றும் இணையப் பாதுகாப்பு..
✅ கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் டெலிமெடிசின் சேவைகள் விரிவாக்கம் மற்றும் மாநில வாரியான விவரங்கள்....
மத்திய அரசு அளித்த பதிலில், நாடு முழுவதும் கோடிக்கணக்கான ABHA கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் மருத்துவ சேவைகள் மற்றும் eSanjeevani மூலம் தொலைமருத்துவ சேவைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
மக்களின் நலனுக்காக, தரமான மற்றும் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சுகாதார சேவைகள் அனைவரையும் சென்றடைய தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
#LKSudhish #RajyaSabha #AyushmanBharat #ABDM #DigitalHealth #ABHA #eSanjeevani #Healthcare #TamilNadu #Parliament #HealthForAll #DigitalIndia #dmdk
#Captain
@PremallathaDmdk |
@MoHFW_INDIA |
@JPNadda |
@RajyaSabha
பசுமை ஆற்றலே இந்தியாவின் எதிர்காலம்!
நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் சூரிய மற்றும் காற்றாலை போன்ற பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசின் திட்டங்கள், 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் விமான நிலையங்களின் எண்ணிக்கை, AAI மற்றும் தனியார் விமான நிலையங்களுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவு, மேலும் கார்பன் நியூட்ரல் (Carbon Neutral) விமான நிலையங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் குறித்து நான் கேள்வி எழுப்பினேன்.
மத்திய அரசு அளித்த பதிலில், இந்தியாவில் தற்போது 106 விமான நிலையங்கள் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துகின்றன என்றும், தமிழ்நாட்டில் 5 விமான நிலையங்கள் இந்த சாதனையை எட்டியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூரிய ஆற்றல் திட்டங்கள் மற்றும் கார்பன் நியூட்ரல் இலக்குகளை நோக்கி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான ஆற்றல் பயன்பாடு மற்றும் நிலையான வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
#LKSudhish #RajyaSabha #GreenEnergy #RenewableEnergy #CivilAviation #CarbonNeutral #SustainableDevelopment #TamilNadu #Parliament #India
@MoCA_India@AAI_Official@mohol_murlidhar@mnreindia