தாராபுரத்தில் தவெக வேட்பாளர் ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என கேள்வி எழுப்பினால் அடியாட்களை வைத்து அடிக்க முயல்வது தான் தூய சக்தியா?
வாக்கு கேட்க அடியாட்களுடன் வர வேண்டிய அவசியம் என்ன தவெக அமைச்சருக்கு?
மக்கள் தங்கள் குறைகளை சொன்னால் அதற்கு பதில் சொல்லாமல் ரவுடிசம் செய்வது தான் தவெக கட்சியின் கொள்கையா?
தாராபுரத்தில் நீங்கள் வாக்கு கேக்க வந்தீர்களா?
இல்லை மக்களை அடிக்க வந்தீர்களா?
இந்த கேள்விக்கெல்லாம் ரீல் முதல்வர் @actorvijay அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மக்களும் கண்டிப்பாக பதில் சொல்வார்கள்..
#பொய்க்கால்_குதிரை_அரசு
காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தனியாரிடம் மின் கணக்கீட்டுப் பணியை ஒப்படைப்பதா?
தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!
தகுதிவாய்ந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகத் தேடி அலைவது தமிழ்நாடு அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா?
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) மின் கணக்கீட்டாளர் பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 7,565 பணியிடங்களில் வெறும் 3,063 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; மீதமுள்ள 4,502 பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பணியாளர் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, வரும் அக்டோபர் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் மின் மீட்டர் கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள TNPDCL நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மின் கணக்கீட்டுப் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்றால், காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை முறைப்படி ஏன் நிரப்பக் கூடாது?
பணி இருக்கிறது,
காலிப் பணியிடங்கள் இருக்கின்றன,
அப்பணிக்கான தகுதியுடைய லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவ்வாறிருக்க, படித்த இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பை வழங்காமல், அப்பணியைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன?
தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட உள்ள மின் கணக்கீட்டாளர்களுக்குப் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு (Degree / Diploma) தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே தகுதியுடைய தமிழ்நாட்டு இளைஞர்களைத் தேர்வு செய்து, அரசுப் பணியிடங்களில் நிரந்தரமாக நியமிப்பதற்கு என்ன தடை உள்ளது?
குறிப்பாக, தமிழக அரசின் மின்துறை வெள்ளை அறிக்கையிலேயே TNPDCL நிறுவனத்தில் 53,575 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், களப் பணியாளர் (Multi Purpose Field Assistant - Assessor உட்பட) பணிகளுக்கு 12,500 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மறுபுறம் பணியாளர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடம் பணியை ஒப்படைப்பது எவ்வகையில் நியாயம்?
இது வெறும் மின் மீட்டர் கணக்கீடு தொடர்பான நிர்வாக முடிவு மட்டுமல்ல. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உரிய அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்வதா? அல்லது அரசு செய்ய வேண்டிய பணிகளைத் தொடர்ந்து தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பதா? என்ற அடிப்படைக் கொள்கை சார்ந்த கேள்வி.
மேலும், தவறான மீட்டர் வாசிப்பு மற்றும் கூடுதல் மின்கட்டணம் போன்ற புகார்கள் தொடர்ச்சியாக எழும் சூழலில், ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டு துல்லியமான கணக்கீட்டையும் நம்பகமான சேவையையும் எவ்வாறு உறுதி செய்ய முடியும்?
எனவே,
காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தனியார் ஒப்பந்த முறையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை தமிழக அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.
தனியார்மயமாக்கும் முடிவைக் கைவிட்டு, மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட அனைத்துக் காலிப் பணியிடங்களுக்கும் முறையான நிரந்தர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வாதாரத்தை ஒப்பந்த நிறுவனங்களின் கைகளில் அடகு வைக்காமல், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பி, தகுதியுடைய இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#TNEBRecruitment
#YouthEmploymentTN
#tamil
#மின்வாரிய_காலிப்பணியிடங்களை_நிரப்பு
#தமிழ்நாடு_இளைஞர்களுக்கு_வேலைவாய்ப்பு
மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்களுக்குப் பணம் கொடுத்து, மதரீதியான பிரசாரத்தை பா.ஜ.க உருவாக்கியதாகத் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க சமர்ப்பித்த தேர்தல் செலவின விவரங்கள் பொதுவெளியில் வெளியானதை அடுத்து, பணம் பெற்ற பல பிரபல யூடியூபர்களின் பெயர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகத் திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.
இங்க எப்படி இன்ஸ்டாவோ அதுமாதிரி அங்க யூடியூப்... பட் பேர்ட்டன் ஒன்னு தான்
யாருக்காவது ஒரு உதவி ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் என்று ஒருவர் இருந்தார் என்று இப்போது நினைவில் இருக்கிறதா? மேற்கு வங்க கவர்னர், மோடியின் செல்லப் பிள்ளை, உதவி ஜனாதிபதி, ஒரே இரவில் ஓட, ஓட விரட்டப்பட்டார்! காரணம் மோடிக்கு புடிக்காத ஒரு செயலை செய்து விட்டார்!
அதே போல் இந்த CEC ஞானேஸ்வர் குமார், பலிகடா ஆக்கப்பட்டு, விரைவில் விரட்டி அடிக்கப்படுவார்! அதன் பின் அவருக்கு ஜஸ்டிஸ் லோயா நிலை ஏற்பட வாய்ப்புள்ளது! தன்னைக் காத்துக் கொள்ள மோடியும், அமீத் ஷாவும் எந்த பழி பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்! ஹரேன் பாண்டியா! குஜராத் உள்துறை அமைச்சர்! எப்படி செத்தார் யாருக்காவது தெரியுமா?
தேர்தல் ஆணையம் SIR நடத்துவதற்கான முடிவை எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு தகவல் அறியும் உரிமைப் பதிலை அஞ்சலி பரத்வாஜ் பொதுவெளியில் வெளியிட்டார். கணிசமான வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கு இந்த SIR யார் முன்னெடுத்தார்கள் என்பதை மோடியும், அமித் ஷாவும் தெளிவுபடுத்த வேண்டும்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ( Squash ) விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் ( Squash ) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழக இளம் விளையாட்டு உந்து சக்தியாகத் திகழ்ந்திருக்கும் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோரின் வெற்றிப் பயணம் விளையாட்டு உலகின் உச்சத்தை தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கம்பு ஊன்றி தாண்டுதல் (Pole Vault) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும்
தமிழகத்தைச் சார்ந்த வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் ஒவ்வொரு தடையையும் தாண்டி முன்னேறி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் பரணிகா இளங்கோவன் அவர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடும் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதா? - தூய்மைப் பணிகள் தொடங்கி விமான நிலையம் வரை தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் ?
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட போதே, மின்வாரியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்க முயன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மின்சார பற்றாக்குறை, அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் கணக்கெடுப்பதிலும் வசூலிப்பதிலும் குளறுபடி என அடுத்தடுத்து எழும் புகார்களை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மின்சார வாரியம், பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி மின் கணக்கீட்டாளர் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் தன் கையாலாகத் தனத்தை தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டிருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்த தவெக, தூய்மைப் பணிகள் தொடங்கி போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள் மற்றும், நடத்துனர்கள் நியமனம், செவிலியர்கள் நியமனம், சென்னை விமான நிலையம் வரை தனியாரையே நாடிக் கொண்டிருப்பது மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனியாருக்கு தாரைவார்க்க தவெக இலக்கு நிர்ணயித்திருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, மின் கணக்கீட்டு பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKVijayHQ@TANGEDCO_Offcl
#WATCH | முதலமைச்சர் விஜய் மதுரை வருவதை முன்னிட்டு கோரிப்பாளையம் சாலையில் உள்ள சாக்கடையை தூய்மை பணியாளர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி சுத்தம் செய்ய வைக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக வருகின்ற 28 ஆம் தேதி முதலமைச்சர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரவுள்ளார்.
#SunNews | #TVKVijay | #Madurai
வீரமணி விவகாரம்.. ஏன் இந்த தாமதம்.. Nakkheeran Gopal Exclusive | SEM Veeramani
#NakkheeranTV#nakkheerangopal#veeramani
Full Video Link: https://t.co/MqjxjBSeIS
தவெக நடத்தும் இரட்டை வேட நாடகத்தை அடித்து நொறுக்குகிறார் தோழர் கனகராஜ் 🔥
தலைமைச் செயலகம் தொடங்கி தூத்துக்குடி அனல் மின் நிலையம் வரை,
கார்ப்பரேட்டுகளின் எடுபிடியாக நடைபெறும் தவெக அரசின் மோசடிகளை அம்பலப்படுத்துகிறார்
கொடூரமான மனநிலை படைத்தவர்களிடம் நாடு சிக்கியிருக்கிறது
பிள்"கறி தின்ன அயோக்கியனை ஒரு POCSO கேஸை இடைத்தேர்தலுக்கு toolkit ah பயன்படுத்தியதை நீதிமன்றம் இன்று செருப்பால் அடித்திருக்கிறது
என்ன டீலிங்.?
திமுக ஆட்சியில் கூடுதல் ஆதாரத்துடன் விசாரணை என உறுதியளித்த நிலையில், தவெக ஆட்சியில் 19.6.2026 அன்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, 15 நாட்கள் கழித்து 5.7.2026 அன்று ஜெம் வீரமணியை தவெக பொருளாளரும் அமைச்சருமான வெங்கட்ராமன் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? ஓப்பனாக பேசுவாரா விஜய்?
#TVKExposed #TVKFails
" மதுராந்தகத்தில் மீண்டும் அதே பழைய பல்லவி!
“திமுக தீய சக்தி!”
“திமுகவை இன்னும் நூறு ஆண்டுகள் திட்டுவோம்!”
சரி... திட்டுங்கள்!
நூறு ஆண்டுகள் வேண்டுமானாலும் திட்டுங்கள்!
ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்...
இப்போது நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்!
அப்படியிருக்க,
இன்னும் ஏன் திமுகவையே காரணம் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
கோட்டைச்சாமி...
கண்களைத் திறந்து பாருங்கள்!
எதிர்க்கட்சியை குறை சொல்வது அரசியல்...
ஆனால் ஆட்சியில் அமர்ந்த பிறகு
மக்களுக்கு பதில் சொல்வதுதான் நிர்வாகம்!
மக்களுக்கு வசனம் வேண்டாம்...
விளக்கம் வேண்டும்!
குற்றச்சாட்டு வேண்டாம்...
செயல்பாடு வேண்டும்!
பழைய கதைகள் வேண்டாம்...
இன்றைய ஆட்சியின் கணக்கு வேண்டும்!
மதுராந்தகம் மக்கள் கேட்கிறார்கள்:
“திமுகவை எத்தனை ஆண்டுகள் திட்டப் போகிறீர்கள்?”
அதற்கு முன் இன்னொரு கேள்வி...
“உங்கள் ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?”
" இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல்,
திமுகவை மட்டும் திட்டிக்கொண்டே இருப்பது
மக்களின் கேள்வியை தவிர்ப்பதாகத்தான் இருக்கும்!
மதுராந்தகம் தீர்மானிக்கும்...
வசனமா?
செயல்பாடா?
மக்களின் குரலா?
அரசியல் குற்றச்சாட்டுகளா?
" மீண்டும் எழும் கேள்வி ஒன்றுதான்:
“ஆட்சியில் இருப்பவர்கள்...
ஆட்சிக்கான பதிலை சொல்லுங்கள்!”
"இப்போது இருக்கக்கூடிய அரசாங்கம் ஜெம் வீரமணி வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. த.வெ.கவைச் சேர்ந்தவர்கள் ஏதோ தாமாக முன்வந்து இந்த வழக்கை நேர்மையான முறையில் நடத்துவது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கை, இந்த வழக்கை முடித்துக்கொள்வது என்ற தொனியில்தான் காவல்துறையினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தீவிரப்படுத்தப்பட்டதற்குக் குறிப்பிட்ட அந்த நீதிபதிதான் காரணம்." - பெ.சண்முகம்
#PShanmugam | #CPIM | #TVK | #Veeramani