திராவிட அரசியலும் அதன் தற்போதைய சவாலும் என்ன என்பதை பற்றி மிகவும் தெளிவாக கூறியுள்ளார், சகோதரி தீபா...கேளுங்கள். தமிழில் கீழே 👇
திமுக தன் வாக்குகளை இழக்கவில்லை, மாறாக அது தன் சொந்த வெற்றியின் காரணமாகவே ஒரு புதிய சவாலை எதிர்கொள்கிறது. திராவிட அரசியல் ஒரு முழு தலைமுறைக்கும் கல்வி, மருத்துவம் மற்றும் சம வாய்ப்புகளை தந்தது. அது மிகச் சிறப்பாக வேலை செய்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், அந்தப் பயன்களைப் பெற்ற இன்றைய தலைமுறை, அடுத்த தலைமுறை விளிம்புநிலை மக்களுக்கும் இன்னும் அதே போன்ற உதவிகளும் ஏணிகளும் தேவை என்பதை உணரத் தவறிவிட்டது .
இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் பெற்றோர்களை முன்னேற்றிய பழைய கொள்கைகள் தற்போதைய சூழலுக்குப் பொருந்தாதது போலவும், தேவையற்றது போலவும் நினைக்கிறார்கள்.
இளைஞர்கள் ஏதோ உரிமை கேட்டுப் பிடிவாதம் பிடிப்பது போலத் தோன்றலாம், அது உண்மையும் கூட. ஆனால், அதுதான் முன்னேற்றத்தின் இயல்பு. நாம் ஒரு தலைமுறைக்குச் சலுகைகளையும் உரிமைகளையும் கொடுக்கும்போது, அடுத்த தலைமுறை முற்றிலும் வேறுபட்ட புதிய பிரச்சனைகளோடுதான் வளரும்.
அவர்களுடைய அந்தப் புதிய பிரச்சனைகளுக்கு ஏற்ப நம்முடைய கொள்கை வடிவமைப்பு மாறவில்லை என்றால், அவர்கள் தங்களுக்கான வேறு வழிகளைத் தேடிச் சென்றுவிடுவார்கள்.
பெரிய நிறுவனங்களில் பல்வகைமை, சமத்துவம் மற்றும் உள்ளடக்குதல் கொள்கைகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறதோ, அதுதான் இங்கேயும் தேவை. அங்கு எந்தவொரு தலைமுறையின் தேவையோ அல்லது யதார்த்தமோ அவமதிக்கப்படுவதோ, புறக்கணிக்கப்படுவதோ இல்லை. மாறாக, அவர்களுக்கிடையேயான இடைவெளியைக் குறைக்கவே திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த முந்தைய தலைமுறையின் அறிவும், அதைத் தங்களுக்குப் பரிசாகப் பெற்ற அடுத்த தலைமுறையின் யதார்த்தமும் அங்கே ஒன்றாக இணைகின்றன.
திமுக-விற்கான அடுத்த கட்டப் போர் என்பது, வெறும் உரிமைகளையும் வாய்ப்புகளையும் பெற்றுத் தருவது மட்டுமல்ல. இந்தத் தலைமுறைக்குத் தாங்களும் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உரிமை உணர்வை ஏற்படுத்துவதுதான்.
திமுக-விடம் அதற்கான நீண்ட காலப் பாரம்பரியமும் வரலாறும் இருக்கிறது, அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இப்போது அதற்குத் தேவைப்படுவது வரலாற்றையும் இன்றைய யதார்த்தத்தையும் ஒன்றாக இணைக்கக்கூடிய ஒரு புதிய உள்ளடக்கிய கொள்கை வடிவம் மட்டுமே!
திருமா ஐயா ! தினமும் நீங்க கொடுக்குற வழ வழா கொழ கொழா விளக்கங்கள் சகிக்கல்ல . பாஜக , கவர்னர் ஆட்சி வந்துடும்ண்னு ஆதரிச்சோம் . அப்புறம் அமைச்சரவையில் பங்கு என்ற வரலாற்று வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதால் அமைச்சரவையில் பங்கு பெற்றோம் .. என்பதெல்லாம் புரிந்து கொண்டோம் . மத்தபடி தேர்தலுக்கு முன்பே நீங்கள் திமுகவுக்கு குழிபறிக்கவே இல்லை என்பதையும் நம்பிட்டோம் .
நீங்கள் திமுக கூட்டணியில் நேர்மையாக இருந்தீர்கள் , நீங்கள் அமைச்சரவையில் பங்கு பெற வழி வகுத்த இரண்டு எம் எல் ஏ க்களும் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் அளித்த வாக்குகளால் வந்தது என்ற அடிப்படையை நீங்கள் உணர்ந்திருந்தால் , கொஞ்சமாவது அற உணர்ச்சி இருந்தால் ஆட்சிக்கு வந்த பின்னரும் ஸ்டாலினை குறைசொல்லியே காலத்தை ஓட்டும் முதல்வரை கண்டிக்க அல்லது குறைந்தபட்சம் நான் ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்லுங்கள் பார்ப்போம் . இல்லையேல் திமுக குறித்து பேச உங்களுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது . நீங்கள் பங்கு பெற்றிருக்கும் அரசாங்கத்துக்கு ஜால்ரா மட்டும் போடுங்கள் . போதும் ஐயா உங்கள் சப்பைக்கட்டுகள் !
@thirumaofficial
Vijay And Trisha Attend Ajith's Mother's Funeral ⚡
Only Few Visited When Ajith's Father Expired 3 Years Back⚡
Why All Of A Sudden Everyone (Especially #Politicians) Visiting His Mother's Funeral ⁉️
Is It Because He's Now A Padma Bhushan ⁉️
கட்சியை புஸ்ஸி ஆனந்து நடத்துகிறார்.
ஆட்சியை முதலமைச்சர் துறை தவிர மற்ற துறைகளை @AadhavArjuna நடத்துகிறார்!!
முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள்..
கட்சி நிகழ்வுகளில் பங்கு கொள்வது இல்லை.
தன் கட்சிகாரர்களை கூட சந்திப்பது இல்லை.
பொது மக்களை சந்திப்பது இல்லை.
அரசு நிகழ்ச்சிகள் இல்லை.
பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வது இல்லை.
பத்தரிக்கையாளர்களை சந்திப்பது இல்லை.
தனக்கு விருப்பமானவர்கள் மற்றும்
நெருக்கமானவர்களை மட்டும் சந்திப்பது என இருக்கிறார்.
நாட்டு மக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் இருக்கிறார் முதல்வர்.
முதல்வரின் இந்த மனநிலை தமிழ்நாட்டுக்கும் ,தமிழ்நாட்டின் மக்களுக்கும் மிகவும் ஆபத்தானது.
எவ்வளவு கோடி சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வந்து எத்தனை தொகுதி வென்று இருந்தாலும் மக்களோடு இருப்பது தான் உண்மையான மக்களாட்சி மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களே!!!
மு.க.ஸ்டாலின் சொன்னது ஒன்னு செய்வது ஒன்னு என கொந்தளிக்கிறார் கம்யூனிஸ்ட் தோழர் சண்முகம். என்ன சொன்னார்? 6 மாசம் இந்த ஆட்சியை தொந்தரவு செய்ய மாட்டோம் என்றார். இப்போது என்ன நடக்கிறது? ஆட்சியா நடக்கிறது? வடநாட்டைப் போல குதிரைப்பேரம் நடக்கிறது. முழுநேரமாக இந்த ஆட்சி அந்த வேலையில்தான் ஈடுபட்டிருக்கிறது. நியாயமாக, "ஏம்பா நாங்கள்தான் ஓடி வந்தோமே... எதற்காகப்பா MLA MLAவாக விலைக்கு வாங்கிக்/கொண்டிருக்கிறாய்? பல காரணங்களுக்காக மக்கள் போராடுகிறார்கள். அதை கொஞ்சம் பாருப்பா," என அறிவுரை சொல்ல வேண்ட கம்யூனிஸ்டுகள், நியாயமான எதிர்கட்சியாக செயல்படும் திமுகவைக் கேள்வி கேட்கிறார்கள். கம்பனிகளில் நிரந்தர ஊழியர்களைவிட ஒப்பந்த ஊழியர்கள் விஸ்வாசமாக இருப்பார்கள். அப்படிதான் இருக்கிறது கம்யூனிஸ்டுகளின் விசில் விஸ்வாசம்.
துரோகத்தின் விளிம்பில் விசிக உண்மையான கொள்கைக்காக இருந்த நல்ல தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த திருமாவளவன், @thirumaofficial
இனி கட்சியை காப்பது சிரமமாகும் குதிரை கொம்பாகும்,
அம்பேத்கரின் கொள்கை காற்றோடு காத்தாக போச்சு
வரக்கூடிய காலங்கள்ல திமுக செய்ய வேண்டியது என்ன?!
~ மாநில சுயாட்சி, சமூகநீதி, மொழியுரிமை அரசியலை கொஞ்சநாள் ஒதுக்கி வைக்கணும். அதற்கான புரிதலும், தேவையும் மக்கள்கிட்ட வர்ற வரை.
கூட்டணிங்கிற கான்செப்ட்டை தூக்கிப்போட்டு எல்லாருக்குமான அரசியல் பண்ணக்கூடிய கட்சின்னு மக்கள்ட்ட பதிய வைக்கணும்.
அடுத்த 5 வருஷம் மக்களுக்கான அடிப்படை தேவைகளுக்கான அரசியலை அதிகமா பேசணும். அதுதான் முக்கியம்.
தவெக 15-20 % ஓட்டு வாங்கியிருந்தா திமுக ஆளுங்கட்சி அதிமுக எதிர்கட்சி… கட்சிகள் தங்களுடைய பலத்த காப்பாத்தியிருக்கும்…அடுத்த தேர்தல்ல கூட்டணி கணக்குகள் வேணும்னா மாறியிருக்கலாம்…
இல்ல தனி மெஜாரிட்டி வாங்கியிருந்தா தவெக ஆளுங்கட்சியா திமுக அதிமுக கூட்டணிகள் இன்னும் வலிமை அடைஞ்சிருக்கும்.. அப்படி ரெண்டுமே இல்லாம…
மெஜாரிட்டி இல்லாத ஆளுங்கட்சி..
பிரிந்த திமுக கூட்டணி..
உடைந்த அதிமுக.. ன்னு
தமிழ்நாட்டுக்கு ன்னு பல வருஷம் பாத்து பாத்து ஸ்கெட்ச் போட்டாலும் இவ்வளவு குறுகிய காலத்துல இப்படி ஒரு அரசியல் சூழல உருவாக்கியிருக்க முடியாது…
உண்மையிலயே இந்த முடிவுகள் அரசியல் நகர்வுகள் எல்லாத்தையும் உச்ச பட்ச குதூகலத்துல அமைதியா அனுபவிச்சிட்டிருக்கும் பாஜக..
திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.
கண்டிப்பாக இது தவெகவின் வேலை மட்டுமல்ல.
சட்டமன்றத்தில் உதயநிதி பேசியதைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும் தோல்விக்குப் பிறகான அரசியலுக்கு திமுக தயாராகி விட்டதென்று.
இதற்கான எதிர்வினை தான் தோழமைக்கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதென்பது. திமுக மீண்டுவரக்கூடாது. மக்கள் மத்தியில் விஜய் தடுமாறுவது போன்ற செய்தி போகக்கூடாது என்பது தான் திட்டம். இது ஒரு பெர்ஷப்சன் வார் (perception war).நிஜத்தை விட தோற்றங்கள் தான் சக்தி மிக்கவை. பங்கு சந்தை போல, யார் மேலே, யார் கீழே என்கிற விளையாட்டு காட்சிப்பொருளாக நடக்கிறது.
இப்போதாவது தமிழக மக்கள் புரிந்துகொள்ளவேண்டியது, இங்கு நடப்பது நீங்கள் வாக்களித்தது போல, பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சட்ட ஒழுங்குப் பிரச்சனை அல்ல. அது வெறும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கற்கள்.
இங்கு நடப்பது திராவிட மாடல் போன்ற ஆட்சியை திமுகவை அகற்றிவிட்டு, தவெக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தொடர்வது என்பதே. அதனால் தான் விஜய், எடப்பாடியைச் சந்திக்கவில்லை. ஆனால் அதிமுக பிரிவினரைச் சந்தித்தது, திமுகவின் தோழமைக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கவே.
இதை யார் செய்கிறார்கள்?
கண்டிப்பாகத் திமுக எனும் கட்சியை எதற்கோத் தடையாகப் பார்க்கிற சக்திகள் தான் இந்த கண்ணுக்குத் தெரியாத காய் நகர்த்தலைச் செய்கின்றனர்.
திமுக எதையோ ஒன்றை அல்லது ஒரு தொகுப்பை உறுதியாகக் கடந்த ஐந்தாண்டுகளில் செய்திருக்கிறது. அது இந்த ஆளும் வர்க்கத்திற்கும், இந்தி, இந்து, இந்தியாவிற்கும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.
இந்தச் சதியில் காங்கிரசும் உடந்தை என்பது, கேரளாவில் அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றி நிரூபித்திருக்கிறது. ஏனெனில் திமுக அணியின் தோல்வியை சீட்டுப் பேரச் சிக்கல் மூலம் தொடங்கி வைத்தது காங்கிரஸ் தான். அவர்கள் தவெகவுடன் போகாமல் திமுக அணியை மூழ்கடித்தது வெளிப்படை.
சோஷியல் எஞ்சினியரிங் அரசியலை பாஜக பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் - பட்டியலின மக்கள் வெளியேற்றம், கவுண்டர்கள் - வன்னியர்கள் ஒருங்கிணைப்பு, சசிகலாவை சிறையிலடைத்தது, பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, அதிமுக அழிப்பு - என பல கட்டங்களில் செய்தது.
அதன் ஒரு அங்கமாக, தோழர் திருமா அவர்களை திமுக அணியிலிருந்து பிரித்தெடுக்க பல முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருந்தன. அந்த முயற்சியை எதிர்கொள்வதில் தோழர் கடும் நெருக்கடிக்கு உள்ளானார் என்பதை நாம் பார்த்தபடி தான் இருக்கிறோம்.
திமுகவுடன் உறவைத் தொடர்வதற்காக திருமா கடும் எதிர்ப்பை அவரது ஆகரவாளர்களிடம் இருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்ததையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம். எட்டு சீட்டுகளைப் பெற்றதற்கே அவர் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார் (ஆறிலிருந்து எட்டு என்பது வளர்ச்சி தான்; ஆனால் அது பெரும் குற்றமாகச் சித்தரிக்கப்பட்டது; அதற்கு முன்பு தான் நான்கு உறுப்பினர்களை முதன்முறையாகப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விசிக தம்மை நிறுவியிருந்தது; அதற்கு திமுக கூட்டணி மிக முக்கியமான பங்கு வகித்திருந்தது). ஆளூர் ஷாநவாஸ் ஓரங்கட்டப்பட்டது இந்த அரசியலின் ஒரு பகுதி தான். திமுகவை நட்போடு விசிகவில் யாரும் பார்க்கக்கூடாது என்கிற வாதம் பரவத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து ஊடகங்கள் தோழர் திருமா அவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டபடியே இருந்தனர். ஆட்சியில் பங்கு தருகிறாரே அவர், நீங்கள் ஏன் போகக்கூடாது? என்று அவர் தொடர்ந்து அழுத்தப்பட்டார். திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டதற்காக அவர் பூடகமாக மன்னிப்புக் கோரியபடியும் விளக்கம் கொடுத்துக்கொண்டும் இருந்தார்.
இப்போது, "தீயசக்தி" என்று நடிகர் விஜய்யால் அழைக்கப்பட்ட திமுகவின் ஆதரவால் வெற்றி பெற்ற கூட்டணிக்கட்சிகள் ஏறக்குறைய அனைவரும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததும், இப்போது விசிக மந்திரிசபையில் பங்கேற்பதும், இந்த "தொலைநோக்குப் பார்வையின்" ஒரு அங்கம் தான்.
திமுக இதனால் உற்சாகம் தான் அடையவேண்டும். அது தமது அரசியலை இன்னும் சுதந்தரமாக, துணிச்சலாக வெளிப்படுத்தலாம். திமுகவின் முக்கியத்துவத்தை, இந்த grand spectacle நமக்குக் கூடுதலாக வெளிப்படுத்தியிருக்கிறது.
திமுக மீண்டும் வெற்றி பெற்றிருந்தால், இந்தியா கூட்டணிக்கே மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். அதை "அன்பர்கள்" உணர்ந்திருக்ககூடும்.
அது மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிரமாண்ட பொருளாதார வளர்ச்சி, கூடவே கடைபிடிக்கப்படும் சமூகநீதி, மதச்சார்பற்ற அரசியல் ஆகியவை இந்திய மத்தியத்தர வகுப்பினரின் நன்மதிப்பைப் பெறத் தொடங்கியது பாஜக கட்டமைத்த 'வளர்ச்சி வேண்டுமெனில் சங்கியாக இருப்பதே சரி' என்ற வாதத்தை முறியடிப்பது தானே. (1/2)
அருமை தோழரே சனாதனம் என்னவென்று சங்கிகளுக்கு அருமையாக புரிய வைத்தீர்கள்
60-70 ஆண்டுகளுக்கு முன் தமிழன் வாழ்ந்த வாழ்க்கை இதுதான். புரிந்து கொண்டு வாக்களியுங்கள்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
பொதுவா எதுனா தவறு நடந்தா பரவாயில்லை -இப்ப மொத்தமும் தவறா தான் இருக்கு!
சில உதாரணம்
1. கோமாளி போல் watermelon திவாகர் போல்
V.S.பாபு கைய ஆட்டிகிட்டு /ஆடிக்கிட்டு நிக்கிறார்!
2. லட்சக்கணக்கான பணம் இருக்கறதா தேர்தல் பத்திரத்தில் காட்டிவிட்டு பஸ்ல வந்து செருப்பில்லாமல் இருக்கும் MLA ன்னு kv குப்பம் தென்றல் குமார் ஆளவச்சி வீடியோ போடுறார்!
3. தன்னோட ட்ரைவர் மகனுக்கு சீட்டுன்னு பரப்பினாங்க ,விருகம்பாக்கம் சபரிநாதன் அவர் அப்பா ராஜேந்திரன் (விஜய் க்கு டிரைவர்)-இவர் விஜயின் அபிடேவிட் இல் ஜெயா நகர் property லிமிடெட் நிறுவனத்தில் பங்குதாரர் என்று குறிப்பிட பட்டு இருக்கிறது -(ஆதாரம் விஜயின் அபிடேவிட்) ஏறத்தாழ பினாமி மகன்!
4. அவினாசியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் கோகிலாமணி அவர்களை தோற்கடித்தது யார்? நாமக்கல்ல ஒரு வீட்ல "திருமணத்தை கடந்த" உறவில் ஈடுபட்டு ,அவங்க புருஷன்கிட்ட சிக்குன மாவட்ட செயலாளரோட பொண்ணு. அவனை இப்ப வரைக்கும் கட்சியை விட்டு தூக்கவே இல்ல, அவன் பொண்ணுக்கு MLA சீட்!
5. குடும்ப ஆட்சி -வாரிசு அரசியல் ன்னு பேசுன ஆதவின் மாமியார் அதிமுக MLA ஒரே அவையில் ரெண்டு பெரும் உக்காந்துகிட்டு ,ராகுல் காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைச்சுக்கிட்டு மன்னர்ப்பரம்பரை வாரிசு அரசியல்ன்னு எப்படி பேசுவானுங்க ? ஆதவும் ஒரு MLA
6. துணை சபாநாயகர் ன்னு ஒரு பொறுப்பு : கிடைச்சு இருக்க ரவிசங்கர் என்பவர் -பாரில் ஒக்காந்து இருக்கும் புகைப்படம் தான் இப்ப ட்ரெண்ட் -MLA
7. அதிமுக வில் இருந்து செங்கோட்டையன் ,RSS இருந்து வந்த நிர்மல் குமார் , NR காங்கிரஸ் இல் இருந்து வந்த புஸ்ஸி ஆனந்த் இவுங்க எல்லாம் மாற்றத்திற்கான MLA க்கள்!
8. திமுக தவிர்த்து -திமுக கூட்டணியில் இருந்து 8 MLA உதவியுடன் பெரும்பான்மை காட்டிய மாஸ்!
9. திமுக கூட்டணி MLA க்கள் வெளியில் இருந்து ஆதரவு என்றதால் -அதிருப்தி அதிமுக MLA க்கள் சீவி சண்முகம் தலைமையிலான அணியின் ஆதரவு கேட்டு நடந்த நேற்றைய சந்திப்பு (இன்று வாக்கெடுப்பில் என்னவாக போகிறது) என்று தெரியாதது -இந்த சீவி சண்முகம் ஆதரவு MLA க்கள் பாஜக பாமக கூட்டணியில் வென்ற உறுப்பினர்கள்!
10. ஜோசியருக்கு அரசின் ஆலோசகர் பதவி ,தினகரன் கட்சி 1 MLA வை தூக்கியது !
இவை அனைத்தும் தான் மக்களின் தீர்ப்பா என்பது மக்களின் பார்வைக்கு!?
மொத்தத்தில் சொல்வதென்றால் இது மாற்றம் எல்லாம் இல்லை : அரசியல் புரட்சின்னு பேசிட்டு திமுக மட்டும் இல்லாமல் (தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் ஆதரவில் சேர்ந்து நடத்தும் சொப்பு சாமான் விளையாட்டு போல நடந்து முடிந்திருக்கிறது)
இன்று வாக்கெடுப்பு வேறு சட்டமன்றத்தில்!
குறிப்பு: அனைத்திற்கும் ஆதாரம் இணையத்திலேயே காணொளியாகவும் -செய்தியாகவும் இருக்கிறது!
#Democratic_Disaster
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி. @thirumaofficial@VCKofficial_
#Vetrimaaran indirectly attacks #Dhurandhar2:
"Today everything becomes propoganda. Propoganda has power to influence memory. We all know who has impacted with demonetization & how many Lost lives in standing the queue. It's hate propoganda"