@thaniarasuTm திருவொற்றியூர் கிழக்குப் பகுதி செயலாளர் அண்ணன் தி. மு தனியரசு முதலமைச்சரிடம் இருந்து அண்ணா பதக்கம் பெற்றார் திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்பாக மக்களை காப்பாற்றுவதற்காக🌄🌄🌄🌄🌄🌄🌄
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
தற்குறி ஆட்சியில் தலைநகரில் கூட யாருக்கும் எங்கும் எங்கும் பாதுகாப்பில்லை! டம்மி முதலவருக்கோ, எது குறித்தும் அக்கறை இல்லை, அதனால் குற்றவாளிகளுக்கு பயமுமில்லை!
#TVKFailsTN
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், 27-10-2026 காலை , கொறடா ஆளுங்கட்சி கூட்டம் நடைப்பெற்றது, மையர் திருமதி பிரியா முன்னிலையில், ஆளுங்கட்சித் தலைவர் அண்ணன் ராமலிங்கம் மற்றும் கொறடா நாகராஜ் தலைமையில் நடைப்பெற்றது, இதில் திருவொற்றியூர் மண்டலம் சார்பில் நான் கலந்து கொண்டேன்
பெருநகர சென்னை மாநகராட்சியின் மரியாதைக்குரிய பெண் மேயர் திருமிகு. பிரியா அவர்கள் மீது, த.வெ.க மாஃபியாக்கள் தங்கள் Abusive Warriors-ஐ வைத்து சமூக வலைத்தளங்களில் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் தொடர் அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! ஆனால், டம்மி விஜய் குறித்து யாராவது பேசிவிட்டால் மட்டும் Victim Card எடுத்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் எடுக்க கிளம்பிவிடுவார்கள்.
மேயர் அவர்கள் ஆதாரங்களோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், அவர்கள் 'ஆளுங்கட்சி குண்டர்கள்' என்ற ஒரே காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கத் தயங்கி, கைகட்டிச் சேவகம் செய்கிறதா காவல்துறை? யார் கொடுத்த தைரியம் இது? யார் போட்ட உத்தரவு?
ஒருபுறம் 137 கிலோ 'மெத்' போதைப்பொருள் கடத்தும் தவெக மாவட்ட நிர்வாகிக்கு துணை போயிருக்கிறது காவல்துறை! மறுபுறம் ஒரு பெண்ணை, அதுவும் தலைநகரின் மேயரை ஆபாசமாகப் பேசும் கட்சிப் பொறுக்கிகள் மீது வழக்கு பதிய கூட தயங்குகிறது! காவல்துறை உண்மையில் யார் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? முதல்வரா அல்லது கடத்தல்காரர்கள் மற்றும் அவதூறு கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?
இதுதான் முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்படும் லட்சணமா? அல்லது "முதலமைச்சர் விஜய்யே உருப்படியாக எந்த நிர்வாகமும் செய்யாமல் 'ரீல்ஸ்' போட்டுக்கொண்டு சும்மாதான் இருக்கிறார், நாமும் ஏன் வேலை செய்ய வேண்டும்?" என்று காவல்துறையும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா?
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம்.
பேரறிஞர் அண்ணா வழியில் தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அயராது உழைப்போம்! #Anna #RememberingAnna
டளபடி விஜய் நேபாள மக்களுக்கு வீட்டிற்கு 10 லட்சம் அறிவித்தார்..
டளபடி விஜய் காணாமல் போனவர்களை நேரில் காப்பாற்ற தானே சென்றார்.
டளபடி விஜய் இனி வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்கு நேபாளத்திற்கு அணைகள் இமயமலையில் கட்ட தன் சொந்த பணத்தில் இருந்து 10,000 கோடி கொடுத்தார்
டளபடி விஜய் அமெரிக்காவுடன் கூறி மீட்க புறப்பட்டார்..
இப்படி பரப்ப ஆரம்பிச்சுடத்தீங்கடா.. இதையாது விட்டு வைங்கடா..
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் இருப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றத் துடிக்கும் தொகுதி மறுவரையறை எனும் அநீதியை மயிலாப்பூர் தொகுதி வாக்காளர்களிடம் எடுத்துச்சொல்லி வெற்றி வேட்பாளர் @mylaivelu71 அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டினோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், 'எல்லோருக்கும் எல்லாம்' என்கிற அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதன் மூலம் தமிழ்நாடு அடைந்துள்ள இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி குறித்து மக்களிடம் எடுத்துரைத்தோம்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்திட வாக்களிப்பீர் உதயசூரியன்!
#FairDelimitation
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்