தவெக அரசை விமர்சிக்கும் அவசரத்தில்…
நவம்பர் 24 ஆம் ��ேதி கார்த்திகை தீபத்தன்றும்.., நேற்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமும்..
திமுக@arivalayam வின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு பெரிய சாவு மணி🔔 அடிக்கப்பட்டிருப்பதை பலரும் கவனிக்க மறந்து விட்டிருக்கின்றனர்..
கார்த்திகை தீபத்தன்று வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றியதன் மூலம், மரபையும் மற்றும் மத நல்லிணக்கத்தைக் காக்கும் அரசாக தவெக தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறது….
இதனால்..
"தவெக சிறுபான்மையினருக்கு எதிரானது" என திமுக முன்வைக்க நினைத்த விமர்சனத்திற்கு முடிவுரை எழுதப்பட்டிருக்கிறது….
எப்படியாவது தவெக அரசை எதிர்த்து அரசியல் செய்ய.., தவெகவுக்கு முற்றிலுமாக போய்விட்ட தமது பி��தான வாக்கு வங்கியான சிறுபான்மையினர் வாக்குகளை…,
தீபத்தூண் பிரச்சினை மூலம்..,
தவெக சிறுபான்மையினர்க்கு எதிரானது என காட்டி தம்பக்கம் திருப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அணில் ஏறவிட்ட நாய் போல் நாக்கை தொங்கவிட்டு காத்துக்கொண்டிருந்த திமுகவுக்கு பெருத்த இடியை இறக்கி விட்டிருக்கிறது தவெக…
நவம்பர் 24 ம் திகதியுடன்..,
"தவெக சிறுபான்மையினருக்கு எதிரானது" என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதற்கான வாய்ப்பே முற்றாக அடிபட்டுப் போய்விட்டது…
மிச்சம் சொச்சம் இருந்த திமுகவின் சிறுபான்மை வாக்குகளையும் தவெக அள்ளிக்கொண்டு போய்விட்டது..
மறுபுறம்…,
உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகு இன்று CRPF பாதுகாப்புடன் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவுள்ளது…
இதைத் தங்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகவும், மாநில அரசின் தோல்வியாகவும் பாஜக@BJP4TamilNadu முன்னிறுத்துகிறது...
ஆனால்…
அரசியல் சதுரங்கத்தில், தீபம் ஏற்றாமல் தடுத்ததன் மூலம் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்றதும், நீதிமன்ற உத்தரவு மூலம் தீபம் ஏற்றப்படும்போது அதிலிருந்து விலகி நிற்பதும் தவெகவுக்கு ஒரு 'Win-Win' சூழல்….
இது ஒரு இரட்டை அரசியல் கணக்கு…
நேரடியாகத் தீபம் ஏற்றாமல் தவிர்த்ததன் மூலம் சிறுபான்மை வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதே சமயம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி CRPF பாதுகாப்பில் தீபம் ஏற்றப்படும்போது "நீதிமன்றத் தீர்ப்பா��் நடக்கிறது, எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை" என ஒதுங்கிக்கொள்ளவும் தவெகவுக்கு ஒரு அரசியல் வழி கிடைத்துள்ளது…
நிர்வாக ரீதியாக உச்ச நீதிமன்றத்தின் குட்டு விழுந்திருந்தாலும், வாக்கு வங்கி அரசியலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றி��ுக்கிறது..
நீதிமன்ற தீர்ப்போ அல்லது நீதிமன்றம் சொல்வதோ தேர்தலில் வாக்கு வாங்க ஒரு மண்ணுக்கும் உதவாது..
வேணுமானால் சவுக்கு@SavukkuOfficial போல நாலு யூடியூப் அரசியல் விமர்சகள் நாலுமணி நேரம் முன்னுக்கும் பின்னுக்கும் பொரட்டி பொரட்டி ஊறவைத்து ஊறவைத்து எதையாவது உருட்ட உதவலாம்..
வாக்கரசியல் வேறு..
அந்த பந்தயத்திடலில் இன்று தவெக play பணனும் அரசியல் சதுரங்கம் இன்னும் 20 வருடத்துக்கு முதல்வர்@CMOTamilnadu விஜையை@TVKVijayHQ ஆட்சியில் வைக்கப்போகிறது…
புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்
செஞ்சி ல மயமான குழந்தை வீட்டுக்கு ஆறுதல் சொல்ல போய்ட்டு முதல்வர் வந்தாரா னு கேட்குறாங்க கனிமொழி அக்கா
ஜெம் கிரானைட் வீரமணி இந்த மாதிரி எத்தன குழந்தைங்கள பாலியல் வன் கொடுமை செஞ்சிருக்கான் அதுல ஒருத்தர் வீட்டுக்காவது போயி அப்போது முதல்வரா இருந்த ஸ்டாலின�� ஐயா ஆறுதல் சொன்னாரா
அழுகிப்போன வெங்காயத்தை அவதூறாக உரித்த தி.மு.க.வின் முகமூடியை தீயசக்தி தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவரே தாறுமாற���க உரித்து உப்புக்கண்டம் போட்டு உள்ளார்.
வெற்று விளம்பர ஊழல் மாடல் அரசாங்கம் நடத்திய கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய நூலகங்களுக்கான நூல் மற்றும் மின்நூல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. நூல்களைப் பரிந்துரை செய்யவும் குழு அமைத்து அதற்கான அரசாணையும் அதே 5.11.2025 அன்றே வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியம் மற்றும் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவிற்காக இடம்பெற்றவர்தான் பேராசியரும் எழுத்தாளருமான திரு.பெருமாள் முருகன் அவர்கள்.
இவர்தான் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் தரமற்ற நூல்களாகக் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளதாக உலகிற்கு அறிவித்துள்ளார்.
ஊர் உலகமே அறிந்திராத பதிப்பகம், இதுவரை உலகம் அறிந்திராத இலக்கியச் செய்திகள் ��ன அத்தனையும் பொ��்யும் புரட்டுமானதாக உள்ளதாகப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள்.
பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கி இருக்கும் தி.மு.க. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?. பெரியார் சொன்ன வெங்காயம் இந்த ஊழல் தி.மு.க.தான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா இல்லையா?.