மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்றும், 'வெற்றிப் பயணம்' திட்டம் செயலாக்கம் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
#CMJosephVijay
இன்று (24.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பழம்பெரும் திரைப்பட நடிகை திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெற்றித் தமிழகம்தொலைநோக்குத் திட்டத்தின் ஓர் அங்கமாக, வெற்றிப் பயணம் திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு.
#CMJosephVijay
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு
#CMJosephVijay
வெற்றித் தமிழக தொலைநோக்குத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசின் “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் பண்டிகை முதல் செயல்படுத்தப்படும் என்ற மகத்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 1.30 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில், இத்திட்டத்திற்கான மானியத் தொகை நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவைக் குறைத்து, ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார நலனையும் உறுதி செய்யும் இந்த சிறப்பான திட்டத்தை அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலனே நம் அரசின் முதன்மை இலக்கு - நலத்திட்டங்களே நம் அரசின் அடையாளம்!
#CMJosephVijay
வெற்றிப் பயணம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
CM @TVKVijayHQ announces the Annapoorani Six scheme, under which women heads of households will receive three free LPG cylinders every year in the first phase.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
ஆபாச திமுக!
“பெண்ணியம்… பெண் விடுதலை…” என்று மேடையில் வசனம் பேசுவார்கள்.
“பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்” என்று மார்தட்டுவார்கள்.ஆனால், ஒரு பெண் “அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரை ஆபாச வார்த்தைகளால் கூட்டமாகத் தாக்குகிறார்கள்.
இதுதான் திமுகவின் பெண் விடுதலைக் கோட்பாடா?
தங்களது அரசியலைப் புகழ்ந்தால், ஆட்சியைப் பாராட்டினால் அவர்களைப் பாராட்டுவது. எதிர்க்கருத்து கூறினால், அவர் பெண் என்றும் பாராமல், ஆபாச வார்த்தைகளால் வசைபாடி, தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது.
வாதத்திற்கு பதிலாக வசைபாடும் அரசியல் ஜனநாயகம் அல்ல, அது அரசியல் வக்கிரம். பெரியார் பெயரை உச்சரிப்பதால் மட்டும் கொள்கை வந்துவிடாது. பெண்ணை மதிக்கும் பண்பும் வேண்டும்.
பேரறிஞர் அண்ணா காலத்திற்குப் பிறகான திமுகவில் உட்புகுத்தப்பட்ட ஆபாசமும் அவதூறும் திமுகவினரின் DNA -வில் ஊறிப்போய் தற்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
“அறிவார்ந்த IT Wing” என்று எவ்வளவு சொன்னாலும், மக்களுக்குத் தெரியும்,
அது அறிவார்ந்தது அல்ல… ஆபாச IT Wing என்று!
ஆனால் காலம் மாறிவிட்டது.
மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில், பெண்களை இழிவுபடுத்தி அரசியல் செய்ய யாருக்கும் இடமில்லை.
பெண்களை இழிவுபடுத்தினால் பதவி, கட்சி, ஆள் என்ற பாகுபாடின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஆபாச அரசியலுக்கு இனி சட்டத்தின் மொழியில்தான் பதில்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!
வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.
சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம். அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம்.
வளரட்டும் சென்னைப் பெருநகரம்!
உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!
#CMJosephVijay
#MadrasDay
#MadrasDay2026