தந்தால் ஆஸ்க்காருக்கு பெருமை.
இளையராஜா என்றும் எங்கள் பெருமை.
"கண்டவர் விணடிலர், விண்டவர் கண்டிலர்"
ராமனின் அழகை கம்பன் இப்படி சுருக்கமாக சொன்னான்.
இசைக்கடவுளுக்கும் அதுவே.
எங்கள் ரசனையின் அளவுக்கு க்யூ ஷீட் கேட்டால் தரமுடியாது.
50 ஆண்டுகளாக அவர் ஸ்டுடியோவில் க்யூவில் நின்ற திரையுலகமே சாட்சி.
ஆஸ்கார்..........அவரது கால் சுண்டு விரல் நகத்தின் நுனி.
@ilaiyaraaja
'கோந்தல்' (Gondhal) படைப்பை ஆஸ்கர் விருதுக்கான இசைப் பிரிவில் பரிசீலிப்பதற்கு, அதன் 'கியூ ஷீட்' (cue sheet - இசைக் குறிப்புத் தாள்) தேவை என்று ஆஸ்கர் குழுவினர் கேட்டதற்கு, இசைஞானி அது போல எதுவும் பயன்படுத்துவதில்லை என கூறியதாக “கோந்தல்” திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சந்தோஷ் தவக்கர் அளித்த பேட்டியை காண முடிந்தது. "ஆஸ்கர் குழுவினர் “கியூ ஷீட்” கேட்கிறார்கள். ஆனால் ராஜா சார், 'நான் எந்தக் கியூ ஷீட்டையும் வைத்துக் கொண்டு பாடலை உருவாக்கவில்லை. பிறகு எப்படி என்னால் கியூ ஷீட் கொடுக்க முடியும்?' என்று கேட்கிறார். இதற்காக ஆஸ்கர் குழுவினருடன் நாங்கள் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். அதற்கு அவர்கள், 'சரி, அந்தப் பாடலுக்கான இணைப்பை (link) மட்டும் அனுப்புங்கள். இளையராஜா சாருக்கு மிகப் பெரிய அனுபவம் இருக்கிறது, அவர் கியூ ஷீட் வைத்துக்கொண்டு வேலை செய்ய மாட்டார் என்பது எங்களுக்குப் புரிகிறது...' என்று கூறினார்கள்.
இளையராஜா சார், 'நான் எப்போதும் கியூ ஷீட் வைத்துக்கொண்டு பாடல் உருவாக்குவதில்லை. இசை தேவைப்படும் போது, எனது அனுபவத்தை கொண்டு, அந்தந்த தருணத்தில் எனக்கு தோன்றும் உணர்வின் அடிப்படையில் மெட்டை உருவாக்குகிறேன். உங்கள் முன்னால் தான் இந்த மெட்டை உருவாக்கினேன். இந்த இசையை எப்படி உருவாக்கினேன் என்பது உங்களுக்கு தெரியும். பிறகு எதற்கு நான் கியூ ஷீட் கொடுக்க வேண்டும்? இந்தப் படத்தை இசைப் பிரிவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதை ஆஸ்கர் குழுவினரே முடிவு செய்துகொள்ளட்டும்' என்று சொல்லிவிட்டார். நான் அவரிடம், 'சார், இந்த இசைப் பிரிவு முக்கியமானது, நாம் படிவத்தை நிரப்பியாக வேண்டும்' என்று கூறினேன். அதற்கு அவர், 'நீங்களே பார்த்துச் செய்துகொள்ளுங்கள். இது எப்படி உருவாக்கப்பட்டது என்று அவர்களிடம் சொல்லிவிடுங்கள். அவர்களுக்கு விருப்பம் இருந்தால் ஆஸ்கர் இசைப்பிரிவில் சேர்த்துக் கொள்ளட்டும்' என்று கூறிவிட்டார்.
ஆஸ்கர் குழுவுடன் நடைபெற்ற தொடர் உரையாடல்கள் குறித்து விளக்கிய சந்தோஷ், “ஆஸ்கர் குழுவிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அதில், திரைப்படத்தை சமர்ப்பிக்குமாறும், அதைத் தங்கள் குழுவிடம் காட்டி, ‘க்யூ ஷீட்’ (cue sheet) இல்லாமலேயே எப்படி மாற்றங்களைச் செய்யலாம் என்று ஆலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது இளையராஜா சாரின் அனுபவத்திலிருந்து வருகிறது; அனுபவம் ஒருவருக்குத் தன்னம்பிக்கையைத் தருகிறது. அவரது அறிவுத்திறன் (IQ) மிகவும் அபாரமானது. ஒருமுறை அவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டால் போதும், அடுத்த 7,8 நாட்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ‘இதைத் தான் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? மீண்டும் சொல்லாதீர்கள், அது உங்கள் நேரத்தை வீணடிக்கும்’ என்று இளையராஜா சார் கூறுவார்; அதாவது, ‘என் நேரத்தை வீணடிக்காதீர்கள்’ என்று அவர் அர்த்தப்படுத்துகிறார். அவர் நேரத்தை கடைப்பிடிப்பதில் மிகவும் கண்டிப்பானவர். குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையை முடித்து கொடுத்து விடுவார். பாரம்பரிய இசைக்கருவிகளை கையாள்வதில் அவருக்கு மிகுந்த அனுபவம் உண்டு. அவரது இசையமைக்கும் விதம் என்பது மிகவும் எளிமையானது” இவ்வாறு அந்த பேட்டியில் காண முடிந்தது.
அம்மா தான் சமைத்தை உணவை தன் மகனுக்கு ஊட்டி விடும் பொழுது ஒரு உணர்வு வெளிப்படுகிறது.. அந்த உணர்வின் அனுபவத்தை வார்த்தைகளால் படிப்படியாக விவரித்து ஒரு விளக்கமான அட்டவணையை கொடுன்னு கேட்பது போல தான் இருக்கிறது ஆஸ்கர் போன்ற விருதுகளின் நெறிமுறைகள். இசை என்பது ஒரு உணர்வு. அது ஊற்றாக வெளிப்படும் தருணம் அதற்கான சாஸ்திர சம்பிரதாய பழக்க வழக்க நடைமுறையை அட்டவணைப் படுத்துவது என்பது இசையை தொழில் ரீதியில் பயன்படுத்துபவர்களுக்கு வேண்டுமென்றால் சாத்தியப்படலாம். ஆனால் இசையே வாழ்வாக கொண்டவருக்கு இந்த நெறிமுறைகள் எல்லாம் சரிப்படாதது. மேலும் அவரை பொறுத்த மட்டில் அவரது இசை என்பது எந்த ஒரு விருதுக்காகவும் அடையாளப்படுத்தப்படுவது அல்ல என்பதே எண்ணம்.
5 மணி நேரம் தன் ரசிகர்களுக்காக நின்று கொண்டே கச்சேரி நடத்துபவருக்கு ஒரு அரை நாள் செலவிட்டு ஆஸ்கார் குழுவினர் கேட்ட படி கியூ ஷீட் தயாரித்து கொடுப்பது எல்லாம் பெரிய வேலையே இல்லை... ஆனால் அவருக்கு அது அவசியமில்லை என்பதாக தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் ஆஸ்காருக்காக பட தயாரிப்பாளர் மெனெக்கடுவது என்பது அவரின் தனிப்பட்ட விருப்பமாகவும் அதற்காக இசைஞானி தன்னுடைய ஆதரவை அளிப்பதாகவும் தான் பார்க்க வேண்டும்...
என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆஸ்கர் எல்லாம் வேணாம் தலைவா... மக்கள் அனைவரும் ஆஸ்கரை விட ஆயிரமாயிரம் மடங்கு விலை மதிப்பில்லாத அன்பை உங்கள் மேல் வெச்சிருக்கோம்....
வந்தா இஷ்டம். வரலீன்னா நஷ்டம்... ஆஸ்கருக்கு தான்....
#இசைஞானி ❤❤❤