The entire foreign lobby is behind him. We indians must stand by him during these times.
If you support him, please tweet with the tagline. INDIA LOVES MODI ❤️
🚨 "நீ போய் தனியா ஈரானை அடி... எனக்கு எலக்ஷன் முடியட்டும்!" - அமெரிக்க இடைத்தேர்தலுக்காக இஸ்ரேலை பலிகடா ஆக்கப் பார்த்த வாஷிங்டன்! 'Maariv' பத்திரிகை வெளியிட்ட பகீர் குண்டு! 🇺🇸🇮🇱💥🇮🇷
"ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"னு நம்ம ஊர்ல சொல்வாங்க. ஆனா சர்வதேச அரசியலில் அமெரிக்காவைப் பொறுத்தவரை, "அடுத்தவன் போர்க்களத்துல செத்தாலும் பரவாயில்லை... எனக்கு எலக்ஷன்ல ஓட்டு விழுந்தா போதும்" என்பதுதான் எழுதப்படாத விதி!
இஸ்ரேலின் முன்னணி நாளிதழான 'மாரீவ்' (Maariv) இப்போது வெளியிட்டுள்ள ஒரு அதிர்ச்சித் தகவல், சர்வதேச புவிசார் அரசியலில் ஒரு மாபெரும் வெடிகுண்டாக வெடித்துள்ளது!
அமெரிக்காவில் விரைவில் நடைபெறவிருக்கும் நவம்பர் இடைத்தேர்தலில் (Midterm Elections) எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அமெரிக்கப் படைகள் நேரடியாகத் தலையிடாமல், இஸ்ரேல் மட்டும் தனியாகச் சென்று ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று வாஷிங்டன் தீவிரமாக நெருக்குதல் கொடுத்ததாக 'Maariv' அறிக்கை அக்குவேறு ஆணிவேறாகப் போட்டுடைத்துள்ளது!
வாஷிங்டன் போட்ட நரித்தந்திர கணக்கு என்ன? 📜👇
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியை அந்த அறிக்கை விவரிக்கிறது:
1. 🗳️ அரசியல் பழியை இஸ்ரேல் தலையில் கட்டு (Shifting Political Risks):
அமெரிக்கா நேரடியாக ஈரானைத் தாக்கினால், மத்திய கிழக்கில் போர் வெடித்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்காவில் பெட்ரோல்/டீசல் விலை விண்ணைத் தொடும். அதுமட்டுமின்றி, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவும். இது நவம்பர் தேர்தலில் ஆளும் அமெரிக்க நிர்வாகத்திற்கு மரண அடியாக மாறும்.
எனவே, "நீ தனியாகப் போய் ஈரானை அடி... போர் வெடித்தால் அதற்கான முழு அரசியல் மற்றும் ராணுவப் பின்விளைவுகளையும் (Political risks & fallout) நீயே சுமந்துகொள்; அமெரிக்கா இதில் தலையிடாது" என்று வாஷிங்டன் நிபந்தனை விதித்துள்ளது!
2. 🛑 இப்போதைக்கு பின்வாங்கிய அமெரிக்கா:
ஆனால், அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் மட்டும் தனியாக ஈரானைத் தாக்கினால், ஈரான் தனது ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது பொழிந்து தரைமட்டமாக்கிவிடும் என்றும், அது இஸ்ரேலில் நடக்கவிருக்கும் தேர்தலையே ஒத்திவைக்கும் அபாயத்தை உருவாக்கும் என்றும் எச்சரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, வாஷிங்டன் இந்த விபரீதக் கோரிக்கையிலிருந்து இப்போதைக்குத் தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளது!
3. 🤷♂️ நெதன்யாகுவின் மர்ம அமைதி:
அமெரிக்காவின் இந்த விபரீத பிளான் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நேரடி நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்னும் எந்த தெளிவான தகவலும் இல்லை; அவர் மர்ம அமைதி காத்து வருகிறார்.
புவிசார் அரசியல் மற்றும் ராணுவப் பார்வை - இதன் பின்னணி:
ஒரு சர்வதேச மற்றும் டிஃபென்ஸ் பார்வையாளராக இந்த உள்குத்தை நாம உற்றுநோக்கினால்:
1. கூட்டாளியைப் பலிகடா ஆக்கும் கிளாசிக் அமெரிக்க வியூகம் (Throwing Allies Under the Bus):
உக்ரைனை ரஷ்யாவுக்கு முன்னால் பலிகடாவாகத் தள்ளிவிட்டு, இப்போது பெட்ரோல் விலைக்காக உக்ரைனையே கழட்டிவிடப் பார்த்த அதே வாஷிங்டன், இப்போது தனது 'உயிர்த் தோழன்' இஸ்ரேலுக்கும் அதே வேலையைத்தான் பார்க்கிறது! தனது சொந்த நாட்டுத் தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால், உலகின் எந்த கூட்டாளி நாட்டை வேண்டுமானாலும் எரிகிற கொள்ளியில் தள்ளிவிட அமெரிக்கா தயங்காது என்பதற்கு இதுவே அக்மார்க் சான்று!
2. ஈரானின் அசுர தடுப்பு வலிமை (Iranian Deterrence):
"இஸ்ரேலைத் தனியாக அடிக்கச் சொல்லலாம்" என்று வாஷிங்டன் நினைத்தாலும், ஈரானின் நிலத்தடி ஏவுகணை நகரங்கள் (Missile Cities) மற்றும் ரஷ்யாவின் மறைமுகத் தொழில்நுட்ப ஆதரவு இஸ்ரேலுக்கு மிகப்பெரிய மரண பயத்தைக் காட்டுகிறது. அமெரிக்காவின் முழு ராணுவப் பாதுகாப்பும் இல்லாமல் ஈரானைத் தொட்டால், இஸ்ரேல் சந்திக்க வேண்டிய சேதாரம் கற்பனை செய்ய முடியாதது என்பதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளே உணர்ந்துள்ளன.
3. எண்ணெய் அரசியலும்... தேர்தல் பயமும்:
ஏற்கனவே ரஷ்யாவிடம் 3 லட்சம் டன் டீசல் கேட்டு கெஞ்சும் நிலைக்கு வாஷிங்டன் தள்ளப்பட்டுள்ள சூழலில், ஈரானுடன் ஒரு முழு வீச்சிலான போர் வெடித்தால் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடங்கி, அமெரிக்கப் பொருளாதாரம் ஒரே இரவில் அதலபாதாளத்திற்குப் போய்விடும் என்ற பயம்தான் அமெரிக்காவைத் தற்காலிகமாகப் பின்வாங்க வைத்துள்ளது!
முடிவு: வாஷிங்டனை நம்பினால் நடுக்கடல்தான்!
சொந்த நாட்டு ஓட்டு அரசியலுக்காக மற்றொரு பிராந்தியத்தையே போரில் தள்ளிவிடத் துணியும் மேற்கத்திய வல்லரசுகளின் சுயநல அரசியலை, இந்த 'Maariv' அறிக்கை சர்வதேச அரங்கில் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது!
💬 உங்களுடைய கருத்து என்ன?
அமெரிக்க இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக, இஸ்ரேலைத் தனியாகப் போய் ஈரானை அடிக்கச் சொல்லி நெருக்குதல் கொடுத்த வாஷிங்டனின் இந்த நரித்தந்திர நகர்வை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அமெரிக்காவை நம்பி இஸ்ரேல் தனியாக ஈரானை அடித்தால் என்ன நடக்கும்? கமெண்ட்டில் தட்டி விடுங்க! 👇
🚀 மத்திய கிழக்கை உலுக்கும் இந்த பகீர் சர்வதேச அரசியல் அப்டேட்டை உடனே உங்க நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் குரூப்களுக்கும் SHARE பண்ணுங்க! தொடர்ந்து உலக நடப்புகளை எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் தெரிந்துகொள்ள பக்கத்தை FOLLOW பண்ணுங்க! ❤️
#Israel #Iran #USA #Maariv #DonaldTrump #BenjaminNetanyahu #MiddleEastCrisis #Midterms2026 #GeopoliticsTamil #TamilNews #CurrentAffairsTamil #WorldPoliticsTamil #TrendingTamil #TamilInstagram #ViralNewsTamil
When Modi ji allowed Abhijeet Dipke to come to India, you thought he was scared.
When Modi ji allowed protests at Jantar Mantar, you thought he was scared.
When Dharmendra Pradhan resigned, you thought Modi ji was scared.
When Modi ji withdrew the FIRs registered against the so-called protesters, you thought he was scared.
The truth is, Modi ji wasn’t afraid of you yesterday, isn’t afraid of you today, and will never be afraid of you in the future!
Modi ji allowed you to protest because he believed that you were citizens of this country, that you had the right to dissent, and that you would peacefully voice your concerns and then leave.
But instead of protesting peacefully, you chose the path of inciting riots and conspiring to break the country apart.
The result? Now Modi ji is answering you in your own language! 💀🔥
ஒரு பொருளாதாரப் பேராசிரியர் தனது நண்பர்களிடம் கூறிய கதை:
"நான் பணிபுரியும் கல்லூரியில் இதுவரை ஒரு மாணவர்கூட தோல்வியடைந்ததில்லை. ஆனால் சமீபத்தில், ஒரு வகுப்பு முழுவதையும் நான் தோல்வியடையச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது!"
இதைக் கேட்ட நண்பர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்து, "அது எப்படி நடந்தது?" என்று கேட்டனர்.
அதற்கு பேராசிரியர் விளக்கினார்:
"அந்த வகுப்பு மாணவர்கள் என்னிடம் வந்து, 'சார், சிலருக்கு அதிக மதிப்பெண்களும், சிலருக்கு குறைந்த மதிப்பெண்களும் வழங்குவதற்குப் பதிலாக, அனைவருக்கும் ஒரே மதிப்பெண் வழங்குங்கள்' என்று கேட்டார்கள். அதற்கு நான் சம்மதித்தேன்."
"வகுப்பில் உள்ள அனைவரின் மதிப்பெண்களையும் கூட்டி, அதன் சராசரியைக் கணக்கிட்டு, அதையே அனைவருக்கும் வழங்குவதாகச் சொன்னேன்."
முதல் பருவத் தேர்வில் அனைவருக்கும் சராசரியாக 'B' தரம் கிடைத்தது.
இரண்டாம் பருவத்தில் அனைவருக்கும் 'D' தரம் கிடைத்தது.
மூன்றாம் பருவத்தில் அனைவருக்கும் 'F' தரம் கிடைத்தது.
இறுதித் தேர்வில், வகுப்பு முழுவதும் தோல்வியடைந்தது!
மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நன்றாகப் படித்து வந்தவர்கள், "நாம் ஏன் மற்றவர்களுக்காகக் கடினமாகப் படிக்க வேண்டும்? சராசரியாக படித்தாலே போதுமே." என்று எண்ணி முயற்சியைக் குறைத்தனர்.
சராசரியாக படிப்பவர்கள், "எப்படியும் புத்திசாலிகள் படிப்பார்கள்; நமக்கும் அதே சராசரி மதிப்பெண் கிடைத்துவிடும். அப்படியிருக்க நாம் ஏன் படிக்க வேண்டும்?" என்று எண்ணி, அவர்களும் படிப்பதை நிறுத்திவிட்டனர்.
எப்போதும் படிக்காதவர்கள், சும்மா இருந்தாலே சராசரி மதிப்பெண் கிடைக்குமே என்று அப்படியே படிக்காமல் இருந்தார்கள்.
இந்தச் சிறிய சோதனையிலிருந்து நான்கு உண்மைகள் தெளிவாயின:
எந்தச் சட்டமும் ஏழையைப் பணக்காரனாக்க முடியாது. ஆனால் அதே சட்டம் பணக்காரனை ஏழையாக்க முடியும்.
யாராவது ஒருவர் இலவசமாக ஏதாவது பெறுகிறார் என்றால், அதற்காக வேறு யாரோ ஒருவர் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதே அதன் பொருள்.
அரசு எதையாவது இலவசமாக வழங்குகிறது என்றால், அதற்குத் தேவையான பணமோ வளமோ வேறு யாரிடமிருந்தோ வந்திருக்க வேண்டும்.
செல்வம் தொடர்ந்து உருவாக்கப்படாமல், உருவாக்கப்பட்ட செல்வம் மட்டும் பகிர்ந்தளிக்கப்பட்டுக் கொண்டே இருந்தால், வளமும் செழிப்பும் ஒருநாள் மறைந்துவிடும். உருவாக்காமல் வெறுமனே அனுபவித்துக் கொண்டே இருந்தால், மலை அளவு செல்வம்கூட கரைந்துவிடும்.
மக்களில் ஒரு பகுதியினர், "எதுவும் உழைக்காமலே கிடைக்கிறது; அப்படியிருக்க நாம் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?" என்று நினைக்கத் தொடங்கும்போதும்,
மற்றொரு பகுதியினர், "நாம் ஏன் கடினமாக உழைத்து, உழைக்காதவர்களுக்காக தொடர்ந்து சுமை சுமக்க வேண்டும்?" என்று எண்ணத் தொடங்கும்போதும்,
அதுவே ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கான விதைகள் விதைக்கப்படும் தருணமாகும்.
அரசியல் கண்ணோட்டத்தைக் கடந்து, இந்தக் கருத்தை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
நம் வருங்காலத் தலைமுறைகளின் நலனுக்காக.
#மகாபெரியவா
ஒரு சிவ பத்தர். நாள் தவறாமல் சிவ பூஜை செய்பவர். வீட்டுக் கொல்லையிலேயே வில்வமரம்.
பூச்சி அரிக்காத தளமாக சேகரித்து வைத்துக் கொண்டு ஆனந்தமாக பூஜை செய்வார்.
அந்த வில்வ மரம் பட்டுப் போய்விட்டது.
லட்சம் ரூபாயை இழந்த சோகம் அந்த பக்தருக்கு.
வழக்கம் போல் பெரியவா தரிசனத்துக்கு வந்தபோது, துக்கம் தொண்டையை அடைக்க, வில்வமரம் பட்டுப் போய் விட்ட செய்தியை கூறினார்.
பெரியவா, அவர் சொன்னதைச் செவியில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. வேரு யார் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர், பக்தரை பார்த்து, “இப்போ Water Pollution, Air Pollution-னெல்லாம் சொல்றாளே, உனக்க்கு தெரியுமா? என்று கேட்டார்கள்.
“ஆமாம்... தெரியும்” என்றார் பக்தர்.
“ நம்ம சாஸ்திரங்களில் கூட Pollution பற்றி சொல்லியிருக்கு”
பக்தருக்குப் புரியவில்லை.
“Air Pollution-ங்கிறது, மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு, ஆசாரமில்லாமல், தீட்டுக் காலத்தில் மரங்களுக்குப் பக்கமா போனால், மரத்துக்குக் கெடுதல். வில்வமரம் அதனால்தான் பட்டுப் போயிருக்கு....”
“வில்வமரத்தின் வேர்ப்பகுதியிலே நிறையப் பசுஞ்சானம் போட்டு, தினமும் தீர்த்தம் விடு. அதுதான் பிராயசித்தம்...”
சிவபக்தர் அவ்வாறே செய்தார். பதினைந்து நாட்களில், துளிர்கள் தெரியத் தொடங்கின. இரண்டு மாதங்கள் கழித்து தரிசனத்துக்கு வந்த பக்தர், அதே வில்வமரத்திலிருந்து வில்வம் பறித்து, பெரியவாளுக்கு வில்வ மாலை சமர்ப்பித்தார்.
பசுஞ்சாணத்தில் உயிர்ச்சத்து - உயிர் தரும் சத்து - இருக்கிறது என்பது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா, பாஷ்யாலஜியா? உம்மாச்சி தாத்தா - பசுபதியே அறிவார் !
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
#மகாபெரியவா
கடமையைச் செய்… பலனை எதிர்பார்க்காதே.’ – இது பகவான் கிருஷ்ணன் சொன்னது.
அதுபோல் தெய்வங்களிடமும், மஹான்களிடமும் பிரார்த்தனைகளை வைப்பதோடு நம் வேலை முடிந்து விட்டது. ‘பிரார்த்தனை வைத்தோமே… நாம் வணங்குகிற கடவுள் இதை எப்போது நிவர்த்தி செய்வார்? நாம் கும்பிடுகிற மஹான் இதை எப்போது நிறைவேற்றி வைப்பார்?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆழமான இடத்தில்தான் நீர் அதிகம் தங்கும். ஆத்மார்த்தமான உள்ளத்தில்தான் பகவான் தங்குவார். நம் பிரார்த்தனை நியாயமாக இருந்தால், அவற்றை தெய்வங்களிடமோ மஹான்களிடமோ சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதை அவர்களாகவே தங்களது தீர்க்க தரிசனத்தின் மூலம் உணர்ந்து எப்போது நிறைவேற்ற வேண்டுமோ, அப்போது நிறைவேற்றி விடுவார்கள்.
காஞ்சி மஹா பெரியவாளின் அனுக்ரஹத்துக்கு உள்ளான பக்தர்களுக்கு இது நன்றாகவே தெரியும். அந்த மஹானின் அன்புக்கும், கருணைக்கும் கட்டுப்பட்ட பக்தகோடிகள் இவரது தரிசனத்தையே மாபெரும் வரப்ரசாதமாக எண்ணுவார்கள்.
அது 1991-ஆம் வருடம்… மஹா பெரியவா முதுமைக் காலத்தில் இருந்தார். பக்தர்களுக்கு அதிக தரிசனம் அப்போது இல்லை.
அன்றைய தினம் விசேஷமாக மஹா பெரியவா பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். ரொம்ப நாள் கழித்துப் பெரியவா தரிசனம் தரப் போகிறார் என்பதற்காக அன்றைய தினம் மஹா பெரியவாளைத் தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்தனர். குழந்தைகளில் இருந்து முதியோர் வரை எல்லா தரப்பினரும் ஸ்ரீமடத்தில் திரண்டிருந்தனர்
.
அன்றைய தினமும் அப்படித்தான். மஹா பெரியவாளைத் தரிசிக்கக் கூடி இருந்த பக்தர்களுள் பலரது முகத்தில் ஏதோ எதிர்பார்ப்புகள், வேண்டுதல்கள்.
அவரவர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளைக் குருவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றில் பழங்கள், உலர்வகை பழங்கள், முந்திரி, வில்வ மற்றும் துளசி மாலைகளும் அடங்கும்.
பக்தர்களோடு பக்தராக அங்கே கலந்து ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தனர், நாராயணன் – வைதேகி தம்பதியர். சென்னையில் வசிப்பவர்கள். நாராயணன் உத்தியோகஸ்தர்.
நாராயணனது இடுப்பில் அவர்களது ஒண்ணரை வயது பெண் குழந்தை நிதர்சனா அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தது. விழிகளை உருட்டி உருட்டி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். புதுப் புது மனிதர்களே எங்கும் தென்பட்டதால், குழந்தையின் முகத்தில் ஒரு மிரட்சி தெரிந்தது.
'மஹா பெரியவா அருகே செல்ல வேண்டும்… அந்த மஹானிடம் தங்களது பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும்’ என்பது இந்த தம்பதியர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், அன்றைக்குக் கூடி இருந்த பக்தர்கள் கூட்டத்தில் இவர்களால் ஒரு இஞ்ச் கூட முன்னேறிச் செல்ல முடியாத சூழ்நிலை.
எனவே, தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே மஹா பெரியவாளின் திருமுக தரிசனத்தை எம்பி எம்பிப் பார்த்து கன்னத்தில் போட்டபடி இருந்தனர்.
‘‘ஏங்க, கூட்டம் இவ்ளோ இருக்கே… நிதர்சனாவைப் பெரியவாகிட்ட கூட்டிண்டு போய் காட்ட முடியுமாங்க? அந்த தெய்வத்தின் அனுக்ரஹப் பார்வை இவ மேல் திரும்புமாங்க?’’ என்று வைதேகி, நாராயணனைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டாள்.
‘‘இன்னிக்கு அந்த மஹானோட அனுக்ரஹம் கிடைக்கணும்னு நமக்கு விதி இருந்தா கிடைக்கும். பார்ப்போம், குருவோட பார்வை நம்ம மேல திரும்பறதானு…’’ என்று மஹா பெரியவாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி உருக்கத்துடன் சொன்னார் நாராயணன்.
வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களது பிரார்த்தனையை மஹானிடம் சென்று சொல்ல வேண்டும்… இதற்கு சாதகமாக ஒரு அருளாசி அவரிடம் இருந்து பெற வேண்டும் என்று இருந்ததே தவிர தரிசனத்துக்காகக் காத்திருக்கும் குழந்தைகளுக்கோ, பெரியோர்களுக்கோ ஒரு முன்னுரிமை கொடுத்து அவர்களை முதலில் அனுப்ப வேண்டும் என்று யாருக்கும் கவலை இல்லை. அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை.
மஹானின் சந்நிதி முன்னாலும், எல்லோரும் சுய நலத்துடன் காணப்பட்டார்கள்.
மஹா பெரியவா அருகே வரும் பக்தகோடிகளை அவரது சிஷ்யர்கள் கட்டுப்படுத்தி, அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல் மஹாபெரியவா அங்கே திரண்டிருந்த பக்தகோடிகளைத் தன் அனுக்ரஹப் பார்வையால் ஒரு முறை அலசினார்.
தன்னைத் தரிசிக்க ஆத்மார்த்தமாக வந்திருக்கும் நாராயணன் – வைதேகி தம்பதியருக்கு அன்றைய தினம் யோகம் அடித்தது.
அடுத்த விநாடி ஒரு சிப்பந்தியை ஜாடை காட்டித் தன் அருகே அழைத்தார் மஹா பெரியவா. குழந்தை நிதர்சனாவை இடுப்பில் சுமந்து கொண்டிருக்கும் நாராயணனை அடையாளம் காண்பித்து, ‘அவாளைக் கொஞ்சம் கிட்டக்கக் கூட்டிண்டு வா’ என்று சைகை செய்தார் மஹான்.
அந்த சிப்பந்தி கூட்டத்தை விலக்கிக் கொண்டு நாலடி பாய்ச்சலில் ஓடிப் போய் நாராயணன் – வைதேகி தம்பதியரிடம் விஷயத்தைச் சொல்ல… அவர்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்தார்கள் . ‘‘என்னது… மஹா பெரியவா எங்களைக் கூப்பிடறாரா?’’
‘‘ஆமா… வாங்கோ, சீக்கிரம். உங்களுக்குத்தான் உத்தரவு ஆகி இருக்கு.’’
கணவன், மனைவி இருவரின் விழியோரங்களும் நெகிழ்வின் காரணமாக கண்ணீர் சொரிந்தன.
குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் மஹா பெரியவாளை வணங்கியபடியே நடந்தார் நாராயணன்.
‘‘வழி விடுங்கோ… வழி விடுங்கோ…’’ என்று உரக்கக் கூவிக் கொண்டே சிப்பந்தி முன்னால் செல்ல… பின்னால் நாராயணனும் வைதேகியும் நடந்தனர்.
மஹா பெரியவா அருகே இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்திய சிப்பந்தி, பெரியவாளுக்குத் தகவல் தெரிவித்தார்.
கலியுக தெய்வத்தின் பார்வை தம்பதியின் மேல் விழுந்தது. ‘‘இடுப்புல வெச்சிண்டு இருக்காளே… அது அவாளோட குழந்தையானு கேளு…’’ – தன் பக்கத்தில் இருந்த சிப்பந்திக்கு பெரியவா உத்தரவு!
இந்தக் கேள்வி அப்படியே ஓவர் டூ தம்பதியர்.
வந்த பிரார்த்தனையே அதுதானே!
குழந்தையை முன்னிறுத்தித்தானே இன்றைக்கு மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கிறார்கள் இவர்கள்!
‘‘இவ எங்க கொழந்தைதான் பெரியவா…’’ – நாராயணன் நெக்குருகச் சொன்னார். அதை ஆமோதிப்பது போல் வைதேகியும் கண்கள் கலங்க… பெரியவாளையும் நிதர்சனாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
குழந்தையைப் பார்த்துப் பெரியவா புன்னகைத்தார்.
குழந்தையும் பதிலுக்குப் புன்னகைத்தது.
அதன்பின் மஹா பெரியவா தனக்கு அருகில் இருந்த ஒரு மூங்கில் தட்டில் இருந்து சிறிது உலர் திராட்சைகளை அள்ளி, சிப்பந்தியிடம் கொடுத்தார். ‘‘அந்தக் கொழந்தை கிட்ட கொடு.’’
திராட்சை இடம் மாறியது.
தன் பிஞ்சுக் கைகளை நீட்டியபடி அத்தனை திராட்சைகளையும் இரண்டு உள்ளங்கைகளுக்குள் அடக்க முற்பட்டது குழந்தை. அம்மாவும் இதற்கு உதவினார். மஹா பெரியவா திருச்சந்நிதியிலேயே அந்த திராட்சைகளில் இருந்து இரண்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக்கொண்டது குழந்தை.
நாராயணனுக்கும் வைதேகிக்கும் கண்கள் குளமாயின என்று சொன்னால், அது சாதாரணம்.
இருவரும் குழந்தையை வைத்துக் கொண்டு தேம்புகிறார்கள்.
வந்த கார்யம் முடிந்து விட்டது. அந்தப் பரப்பிரம்மம் தன் வலக் கையை உயர்த்தி, இவர்களுக்கு விடை கொடுத்தது.
இத்தனை பக்தகோடிகள் கூடி இருக்கிற இடத்தில், மிகவும் ஆத்மார்த்தமாக வந்திருக்கிற ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுத்துத் தன் அருகே வரவழைத்து அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து விட்டார் மஹா பெரியவா.
காஞ்சி ஸ்ரீமடத்தை விட்டு வெளியே வந்தார்கள் நாராயணனும் வைதேகியும்! இன்னமும் இடுப்பிலேயே இருந்தாள் நிதர்சனா! இதுவரை அநேகமாக ஏழெட்டு திராட்சையை சாப்பிட்டிருப்பாள். மஹா பெரியவா பிரசாதம் இன்னமும் அவள் கையில் இருந்தது.
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சென்னைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள் மூவரும்.
மிதமான கூட்டத்தோடு பஸ் புறப்பட்டது. மூவர் அமரக் கூடிய ஒரு இருக்கையில் ஜன்னல் ஓரமாக நிதர்சனாவும், அவளுக்கு அருகில் நாராயணனும் வைதேகியும் அமர்ந்தார்கள்.
பஸ் புறப்பட்டு ஐந்து நிமிடம் ஆகி இருக்கும்.
திடீரென நாராயணனின் கன்னத்தையும், சற்று எம்பி வைதேகியின் கன்னத்தையும் தடவி, ‘‘அம்மாமா… அப்பாபா…’’ என்று குரல் உயர்த்திக் குழந்தை பேச ஆரம்பித்த போது, தாயும் தகப்பனும் போட்ட விநோதக் கூச்சலில் ஒரு விநாடி அதிர்ந்து சடன் பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார் டிரைவர்.
‘என்ன பிரச்னையோ?’ என்று டிரைவர், தன் இருக்கையில் இருந்தே திரும்பிப் பார்க்க… கண்டக்டர் ஓடி வந்து, ‘‘என்னம்மா…’’ என்று கரிசனத்துடன் விசாரிக்க…
கண்களில் உடைப்பெடுத்துப் பெருகும் நீருடன் எல்லோரையும் பார்த்து வைதேகி சொன்னாள்: ‘‘எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க எங்குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க… ஒண்ணரை வருஷமா பேசாம இருந்த கொழந்தை இப்ப பேசுது. இவளோட மழலை மொழியை இப்பதான் கேக்கறேன்.’’
பஸ்ஸில் இருந்த அத்தனை பேரும் எழுந்து வந்து குழந்தையின் கன்னம் தொட்டுக் குதூகலித்தனர்.
ஆம்! நிதர்சனா பிறந்தது முதல் தற்போது வரை (ஒண்ணரை வயது) எந்த ஒரு வார்த்தையும் பேசியதில்லை.
வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோயில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. ஆனால், அத்தனையும் தாண்டி, ஒரு கலியுகதெய்வம் தனக்கு பிக்ஷையாக வந்த திராட்சையைக் கொண்டே இவர்களின் பிரச்னையைத் தீர்த்து விட்டது.
குடும்பத்துக்கே பிரசாதமாக வந்த திராட்சை குழந்தை நிதர்சனாவுக்கு மட்டுமில்லை. நாராயணன் அவர் புரிந்து வரும் உத்தியோகத்தில் அடுத்தடுத்து நல்ல மாற்றங்கள். பிரமோஷன், சம்பள உயர்வு என்று எல்லாம் கிடைத்தன.
மஹா பெரியவாளுக்கு சுமார் 97 வயது இருக்கும் போது நடந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
#மகாபெரியவா
ஒரு சமயம் பக்தர் ஒருவர், திருப்பதிக்கு என்று வேண்டிக் கொண்டார். தினமும் உண்டியலில் பணம் சேர்த்தார். ஓரளவு தொகை சேர்ந்தது. அந்த சமயத்தில் திருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் கட்டிக் கொண்டிருந்ததால், தான் சேர்த்த பணத்தை எடுத்துக் கொண்டு திருப்பதிக்குச் சென்றார், பக்தர். ஓர் அறை கட்டுவதற்கு உரிய செலவாக அவர்கள் சொன்னதைக் கொடுத்தார். அதன் பிறகும் ஆறாயிரமோ ஏழாயிரமோ மீதி இருந்தது. அதை என்ன செய்வது? என்று யோசித்த பக்தருக்கு, மனதிற்குள் ஓர் எண்ணம் தோன்றியது.
தான் எப்போதும் மனதார ஆராதிக்கும் காஞ்சி மஹானை தரிசித்து, அவரது ஆணைப்படி இந்தத் தொகையை செலவிடலாம் என்ற யோசனை தோன்றியதும், அங்கேயிருந்து காஞ்சி மடத்துக்குப் புறப்பட்டார்.
அதே சமயம் அங்கே காஞ்சிபுரத்தில் ஒரு சம்பவம் நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய மகளின் கல்யாணத்துக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று மஹா பெரியவாளைக் கேட்பதற்காக ஏழைப் பெண்மணி ஒருவர், தன் மகளோடு மடத்துக்கு வந்திருந்தார்.
நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த அவர்கள், மெதுவாக நகர்ந்து மஹான் முன் வந்து நமஸ்கரித்து தங்களின் குறையைச் சொன்னார்கள்.
ஆதூரத்தோடு அந்தப் பெண்மணியின் மகளுடைய முகத்தைப் பார்த்தார், மஹான்.
"இப்போ மடம் இருக்கிற நிலைமைல பெருசா ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா, தாலி வேணும்னா தரமுடியும். அதுலயும் ஒரு பிரச்னை இருக்கு. நீங்க வைஷ்ணவான்னு நினைக்கிறேன். இங்கே இருக்கிறதெல்லாம் சைவர்கள் திருமாங்கல்யம்! அதை எப்படி உங்களுக்குத் தரமுடியும்னுதான் யோசிக்க வேண்டியிருக்கு!" மென்மையாகச் சொன்னார், மஹான்.
ஒரு விநாடி திகைத்து நின்ற அவர்கள், "சுவாமி, நீங்க தர்றேன்னு சொல்ற மாங்கல்யமே எங்களுக்குப் பரவாயில்லை. நாங்க வைணவர்களா இருந்தாலும், இவளுக்குப் பார்த்திருக்கிற வரன், சைவர்தான். அதனால, அந்த மாங்கல்யத்தையே குடுங்க!" தழுதழுப்பாகச் சொன்னார்கள்.
பக்கத்தில் நின்ற அணுக்கத் தொண்டரை அழைத்து, ஸ்ரீகார்யத்திடம் சொல்லி திருமாங்கல்யம் வாங்கிவரச் சொன்னார், பெரியவா. அவர் சென்று வாங்கி வந்த தாலியை அந்தப் பெண்மணியிடம் தந்து ஆசிர்வதித்தார், மஹான். அதை வாங்கிக் கொண்டு அவர்கள் மெதுவாக நகர, அதேசமயம் இன்னொரு அற்புதம் நிகழ்ந்தது அங்கே.
திருப்பதியில் இருந்து மஹா பெரியவாளை தரிசிக்க வந்த பக்தர், அப்போதுதான் மடத்துக்குள் நுழைந்தார். அவர் அடிக்கடி வரக்கூடியவர் என்பதால், கொஞ்சம் தொலைவில் வரும்போதே அவரைப் பார்த்துவிட்ட மஹான், இங்கே வா! என்பதுபோல் சைகை காட்டி அவரை அழைத்தார்.
வேகமாக வந்து மஹாபெரியவா முன் அவர் பவ்யமாக நிற்க, "அதோ திருமாங்கல்யம் வாங்கிண்டு போறாளே... அந்தப் பெண்ணோட கல்யாணத்துக்கு உன் கிட்டே இருக்கிற தொகை எதையாவது குடுத்து உதவி பண்ணு!" சொன்னார் மஹான்.
வாடிய முகத்தோடு நடந்து கொண்டிருந்த அந்தப் பெண்மணியையும் அவரது மகளையும் அவசர அவசரமாக அழைத்தார்கள், அணுக்கத் தொண்டர்கள். திருப்பதிக்குச் செலுத்தியதுபோக மீதமிருந்த பணத்தை அவர்களிடம் கொடுத்தார், பக்தர். வாங்கிக் கொண்டவர்கள் தழுதழுப்பாக, "பாலாஜி எங்களைக் கைவிடலை" என்றபடியே பெரியவாளின் திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.
"அது என்ன? மஹானை பாலாஜின்னு சொல்றீங்க?" கேட்டார் பக்தர்.
"எங்களுக்கு திருப்பதி பாலாஜிதான் குலதெய்வம். அவரைத் தவிர வேற சுவாமியையே தெரியாது. மஹா பெரியவரைப்பத்தி கூட எங்களுக்கு நிறையத் தெரியாது. கல்யாணச் செலவுக்கு கஷ்டப்படறதைச் சொன்னா , உதவி செய்வார்ன்னு ஒருத்தர் சொன்னதாலதான் இங்கே வந்தோம். ஆனா, இங்கே வந்து மஹான் முன்னால நின்னப்போ எங்களுக்கு இவர் அந்தத் திருப்பதி பாலாஜியாகத்தான் தெரிஞ்சார்.
தாலியை வாங்கிக்கிட்டு நகர்ந்த சமயத்துல, "பகவானே உன்னைத்தானே நம்பி வந்தேன்... இப்போ இதை மட்டும் தந்து அனுப்பறியே... செலவுக்கு என்ன செய்வேன்!" னு அந்த பாலாஜியைத்தான் மனசுல நினைச்சேன். இதோ இப்போ கூப்பிட்டுப் பணம் தந்து அனுப்புறார்.
"அந்த பாலாஜிக்கிட்டே வேண்டினதை இவர் நிறைவேத்தி வைக்கிறார்னா, அவரும் இவரும் ஒன்று என்றுதானே அர்த்தம்!" அந்தப் பெண்மணி சொல்லச் சொல்ல, சிலிர்த்துப் போனார்கள் அங்கே இருந்தவர்கள்.
"ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!"
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
🚨 இந்தியாவை முடித்து விடலாம்.. முடிந்து விடும் என்று நினைத்தார்கள்...
ஹார்டு டார்க்கெட் ரஷ்யா, சைனா...
ஸாப்ட் டார்கட் இந்தியா..
ஆனால் என்ன நடந்தது எனப் பார்ப்போமா!! 🚨
👉 1. கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவை முடக்கிவிடும் என்று கருதப்பட்டது.
1/
#மகாபெரியவா
பிராம்மணன் கடல் கடந்து போகக்கூடாது என்பது சாஸ்த்ரம். ஆனால், தற்போதைய
சூழ்நிலை தாய்நாட்டில் சொந்த மண்ணில் அவனை ஸ்வதர்மத்தில் பிழைக்க விடாமல்
பண்ணியதோடு பிறரோடும் அவன் சேர்ந்து முன்னேறி வரக்கூடாது என்ற
"நல்லெண்ணவாதிகளின்" சட்டத்தால் இன்று பல பிராம்மணர்கள் தூரதேசங்களில்
நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களால் அந்த தேசங்கள் மிகுந்த
பயனை அடைகின்றன.
இப்படித்தான் ஒரு பிராம்மணர் குடும்ப சூழ்நிலையால் வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டி இருந்தது. பெரியவாளுடைய அத்யந்த பக்தராகையால், சாஸ்த்ரத்தை மீறுகிறோமே, பெரியவாளுக்கு ஒப்பாததை
செய்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டி எடுத்தது.
ஒருமுறை இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது. இந்தியாவுக்கு வருகிறோம் என்பதை விட, தன்னுடைய அன்பான பெரியவாளை தர்சனம் பண்ணப்போகிறோம் என்ற எண்ணமே அவருக்கு அம்ருதமாக இருந்தது. சென்னை வந்து இறங்கியதும் நேராக காஞ்சிபுரத்துக்கு விரைந்தார்.
அதேநாள் காலை பெரியவா சமையல் பண்ணும் பாரிஷதர்களை கூப்பிட்டார்....
"இன்னிக்கி சமையல் என்னென்ன பண்ணப் போறேள்?..."
அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! பெரியவா இதுவரைக்கும் பொது சமையல்
என்று அத்தனை விஜாரித்ததில்லை. மெனுவை சொன்னார்கள்.
அதில் சிலவற்றை மாற்றி வேறு ஏதோ பண்ணும்படி கூறினார். கொஞ்ச நேரத்தில் இந்த வெளிநாட்டு இந்திய பக்தர் வந்து [ஓடிவந்து] பெரியவா திருவடியில் நமஸ்கரித்தார்.
"க்ஷேமமா இரு! மொதல்ல போயி சாப்டு...அப்றம் வா......" எல்லாருக்கும்
ஆச்சர்யம்! வந்த பக்தரை ஏன் முதலில் சாப்பிடச் சொல்கிறார்? அவர்
சாப்பிடப் போனதும் அருகிலிருந்த பாரிஷதர்களிடம் "ஏண்டா.....அவன் எனக்கு
எதாவுது குடுக்கனும்ன்னா....எதை குடுக்கச் சொல்லி கேக்கறது?" என்று
சந்தேஹம் வேறு கேட்டார்.
அசந்து போனார்கள்! "அதைக் குடு, இதைக் குடு" என்று கேட்டறியாத பரப்ரம்மம் "எதைக் கேக்கலாம்?" என்று கேட்டால், என்ன
பதில் சொல்வது? அதற்குள் அவர் சாப்பிட்டு விட்டு வந்ததும், சிரித்துக்கொண்டே "என்ன? ஒன்னோட வ்ரதம் பூர்த்தியாச்சா?" என்றார்.
பக்தரின் கண்களோ கரகரவென்று
கண்ணீரை பொழிந்தன. புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தை பார்த்து
பெரியவா சொன்னார்....
"இவன், சீமைலேர்ந்து பொறப்பட்டதுலேர்ந்து பச்சை தண்ணி கூட
குடிக்கலை....என்னைப் பாக்காம எதுவும் சாப்டக் கூடாது..ங்கற ஸங்கல்பத்தோட
கெளம்பி வந்திருக்கான்.....என்ன நான் சொல்றது செரியா?.." அவருடைய
புன்னகையில் எல்லாரும் மெய்மறந்தனர்.
இதோ! அடுத்த ப்ரேமாஸ்த்ரம். “இந்தா.....இவனை அழைச்சிண்டு போயி,
எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் எனக்காக வாங்கித் தரச்சொல்லி,
வாங்கி வெச்சுக்கோங்கோ!"......பக்தரின் கண்ணீர் நிற்கவேயில்லை. "அல்பமான
எங்கிட்டேர்ந்தா பெரியவா தனக்குன்னு கேட்டு வாங்கிக்கறார்!"
அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், சுற்றி இருந்தவர்களிடம் தன் அருள்
லீலையில் காரணத்தை சொன்னார்.....
"இவனுக்கு எம்மேல ரொம்...ப ப்ரியம். எனக்கு எதாவுது பண்ணனும்ன்னு ரொம்ப
ஆசையா இருக்கான்....ஆனா, சீமைக்குப் போனவாட்டேர்ந்து நான் எதுவும்
வாங்கிக்க சாஸ்த்ரம் எடம் குடுக்கலை.....அதுக்காக எம்மேல பக்தியா
இருக்கறவாளை விட்டுட முடியுமா? அதான் எள்ளுப் புண்ணாக்கும், தையல்
இலையும் வாங்கித் தரச்சொன்னேன்.
எள்ளுப் புண்ணாக்கை நம்ம மடத்துப்
பசுமாட்டுக்கு போடுங்கோ! அது குடுக்கற பாலை நேக்குக் குடுங்கோ!
ஏன்னா...பசுமாட்டுக்கு எதைக் குடுத்தாலும், அதுல இருக்கற தோஷம் நிவர்த்தி
ஆய்டும்...பசுமாடு மூலம் எது வந்தாலும் அதுக்கு தோஷமே கெடையாதோன்னோ?
அதான். என்னோட பக்தாளோட மனஸை நோக அடிக்கப்டாது."
தர்மமும், காருண்யமும், பக்த வாத்ஸல்யமும் சேர்ந்த "கலவை"யில் உதித்த ஞானியை சரணடைவோம் !!
ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
இன்றிலிருந்து 100 நாட்களுக்கு இதைத் தொடர்ந்து செய்தால், நிச்சயம் மாற்றம் ஏற்படும்:
1. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருங்கள் - உங்கள் மனம் தெளிவடையும்.
2. தினமும் 100 ரூபாய் சேமியுங்கள் - உங்களிடம் தன்னம்பிக்கை வளரும்.
3. ஒவ்வொரு முறையும் 50 முறை 'ஸ்க்வாட்' (squats) உடற்பயிற்சி செய்யுங்கள் - உங்கள் உடலின் கீழ்ப்பகுதி வலுப்பெறும்
4. ஒவ்வொரு முறையும் 3 ஆங்கில வாக்கியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள் - சரளமாகப் பேசும் திறன் வளரும்
5. ஒரு லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் குடியுங்கள் - உங்கள் சருமம் பொலிவு பெறும்
6. தினமும் 5000 அடிகள் நடங்கள் - உங்கள் உடல் அமைப்பு மாறும்
7. தினமும் 5 வரிகள் நாட்குறிப்பு எழுதுங்கள் - உங்கள் எழுத்துத் திறன் மேம்படும்
8. ஒவ்வொரு முறையும் நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்கும் 3 விஷயங்களை எழுதுங்கள் - உங்கள் மனம் நிறைவாக உணரும்
9. ஒவ்வொரு முறையும் ஒரு புத்தகத்தின் 10 பக்கங்களைப் படியுங்கள் - அறிவு வளரும்
10. தினமும் 3 மணி நேரம் முழு கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபடுங்கள் - உங்கள் வாழ்க்கையே மாறும்.
முயற்சி செய்யுங்கள் நண்பர்களே....
ரஷ்யாவின் ஒட்டு மொத்த உயர்மட்ட கேபினெட்டும் நடந்து முடிந்த டில்லி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டது உலக அரங்கில் பல நாடுகளை அதிர வைத்துள்ளது.
பாரதபிரதமர் மோடியின் தாக்கம் உலக அரங்கில் உச்சத்தை அடைந்துள்ளது.
ஆனா தமிழ்நாட்டில் என்ன செய்தி...
கார் ரேஸை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்.
பால்கனியில் தொங்கி பார்த்த திரிஷா.
😴
இஸ்ரேலைத் தூண்டிவிட்டதால் இங்கிலாந்து (UK) சிதைந்து கொண்டிருக்கிறது; "இங்கிலாந்தின் இஸ்லாமியக் குடியரசு" (Islamic Republic of England) என்ற நிலை உருவாகிவிட்டது. 250 ஆண்டுகளாக இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன், இப்போது உள்ளிருந்தே சரிந்து கொண்டிருக்கிறது—இது வரலாற்றின் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.😎✌🏻
ஒரு காலத்தில் "தங்கள் பேரரசில் சூரியன் ஒருபோதும் மறைவதில்லை" என்று ஆணவத்துடன் பெருமை பேசிய பிரிட்டிஷ் பேரரசு, இப்போது தனது சொந்த நாட்டின் எல்லைகளையே பாதுகாக்க முடியாமல் சிதைந்து கொண்டிருக்கிறது. இது வெறும் செய்தி மட்டுமல்ல; வரலாறு தன் பழிதீர்க்கும் நிகழ்வாகும்.😎✌🏻
லண்டனிலிருந்து வரும் தகவல்களின்படி, இந்த திங்கட்கிழமை கார்டிஃப் (Cardiff) நகரில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வின்னி (John Swinney), வேல்ஸின் முதல் அமைச்சர் ருன் அப் இயோர்வெர்த் (Rhun ap Iorwerth) மற்றும் வட அயர்லாந்தின் முதல் அமைச்சர் மிஷெல் ஓ'நீல் (Michelle O'Neill) ஆகியோர் வேல்ஸின் கார்டிஃப் நகரில் நேரில் சந்திக்க உள்ளனர்.
அவர்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட உள்ளனர்; இது சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்புகளை நடத்துவதற்கான உரிமையை வலியுறுத்தும் ஒரு கூட்டுப் பிரகடனமாகும்.
ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சுதந்திர ஆதரவுக் கட்சிகள் ஆட்சியில் இருப்பது இதுவே முதல் முறை என்று ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வின்னி குறிப்பிட்டார்; தற்போதைய நிலை இனி நீடிக்காது என்றும், 'யுகே' (UK) இல்லாத எதிர்காலத்திற்கு வெஸ்ட்மின்ஸ்டர் (லண்டன் அரசு) தயாராக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) எதிர்கொள்ளும் இந்த நடவடிக்கை, அவரது மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாக அமைந்துள்ளது. லண்டன் இனி தங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்று மூன்று நாடுகள் கூட்டாக அறிவிக்கின்றன.
அனைவருக்கும் தெரிந்தபடி, ஐக்கிய ராஜ்யம் (UK) என்பது நான்கு நாடுகளின் கட்டாயக் கூட்டணியாகும்; அவற்றில் மூன்று நாடுகள் இப்போது பிரிந்து செல்லத் தயாராகி வருகின்றன.
1. ஸ்காட்லாந்து (எடின்பர்க்): SNP கட்சியின் தலைமையில் உள்ளது. "எங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏன் லண்டனுக்குக் கொடுக்க வேண்டும்?" என்பதே அவர்களின் நிலைப்பாடு. 2014 பொது வாக்கெடுப்புக்குப் பிறகு 'பிரெக்சிட்' (Brexit) எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
2. வேல்ஸ் (கார்டிஃப்): 'பிளைட் சிம்ரு' (Plaid Cymru) கட்சியால் முன்னெடுக்கப்படுகிறது. வேல்ஸின் எரிசக்தி மற்றும் நீர் வளங்களை லண்டன் சுரண்டுகிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு.
3. வட அயர்லாந்து (பெல்ஃபாஸ்ட்): இங்கே 'ஐக்கிய அயர்லாந்து' (United Ireland) கோரிக்கை எழுந்துள்ளது. 'சின் ஃபைன்' (Sinn Féin) கட்சியின் தலைமையில் இது முன்னெடுக்கப்படுகிறது; டிரம்ப் கூட இந்தக் கோரிக்கையை ஆதரித்துள்ளார்.
இங்கிலாந்து சிதைவதற்குக் காரணம் என்ன? முஸ்லிம்களை அளவுக்கு அதிகமாகச் சமாதானப்படுத்தும் கொள்கை—இந்த நடவடிக்கையே பல தசாப்தங்களாகத் துணையாக இருந்த இஸ்ரேலை அந்நியப்படுத்தியது.
1. காலனித்துவ ஆணவத்தின் விளைவு. 250 ஆண்டுகள் உலகை ஆண்டதற்கான ஆணவத்தை பிரிட்டன் இன்னும் கைவிடவில்லை. ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றை அது இன்றும் தனது காலனிகளாகவே கருதுகிறது. மற்ற நாடுகளைக் காலனியாதிக்கத்திற்கு உட்படுத்திய பிரிட்டன், இன்று அதே காலனியாதிக்க மனப்பான்மையால் தனது சொந்த ஒன்றியத்தையே சிதைத்துக்கொண்டிருக்கிறது.
2. பொருளாதாரச் சரிவு. பிரெக்சிட் (Brexit) நடவடிக்கைக்குப் பிறகு பிரிட்டனின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இந்தியாவிலிருந்து சுரண்டப்பட்ட 45 டிரில்லியன் டாலர் நிதியைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட லண்டன் நகரம், இன்று கடன் சுமையில் மூழ்கியுள்ளது. ஸ்காட்லாந்துக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் உள்ளன; வேல்ஸ் பகுதியிலும் எரிசக்தி வளங்கள் உள்ளன. லண்டனுக்காக அவர்கள் ஏன் வறுமையில் வாட வேண்டும்?
3. வெளியுறவுக் கொள்கையில் இரட்டை நிலைப்பாடு. தனது சொந்த எல்லைகளுக்குள் ஒற்றுமையைப் பேண முடியாத பிரிட்டன், மற்ற நாடுகளுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருக்கிறது. வாக்கு வங்கிகளைத் திருப்திப்படுத்துவதற்காக இஸ்ரேலை அந்நியப்படுத்தும் கொள்கைகளைத் தற்போது அந்நாட்டு மக்களே நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
4. அமெரிக்கா கூட இப்போது அதிலிருந்து விலகி நிற்கிறது. "ஒன்றிணைந்த அயர்லாந்து விரைவில் உருவாகும்" என்று டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகவே கூறியுள்ளார். பிரிட்டனின் காலம் முடிந்துவிட்டது என்பதை உலகம் முழுவதுமே உணர்ந்துள்ளது.
மேலும் சில குறிப்புகள்
தொடர்ச்சி