@narsimp கதையோட்டத்தோடே பஃறுளி வாசிச்சு, அதைப் பற்றி @sethubala16 கிட்ட சொல்லி பாராட்டிக் கொண்டு இருந்தேன். எல்லாம் கேட்டு கடைசியில “சிலப்பதிகார கதை ஞாபகம் இருக்கா சந்திரா”னு கேட்டார்… அப்போதான் ஒரு கோர்வையா ‘மாதவன்’ பெயர் வரை யோசித்து ‘அட ஆமா’னு இருந்துச்சு.
ஏகத்துக்கும் பள்ளி நினைவுகளை கதை முழுவதும்.கோமதி டீச்சர், எம்.கே.சார் கதையாக இருந்தாலும் சமூகம் சார்ந்த பல விசயங்களும் லீலாவதி மக்கள் போராட்டம், சல்லிக்கட்டு பிரச்சின, தேவாவுக்குப் புரிகிற மாதிரியான சித்த���த்தங்கள் கதையோடு நம்மை இணைத்து பயணிக்கிறது. அருமை @narsimp அண்ணா. 2/2
எம்.கே.சார் புல்லட் பள்ளியில் நுழையும் போது மாணவரகளுக்கான வரும் பயம் இயல்பானது போல. நாங்க படிக்கும் போது எச்.எம்.சார் (அவரே கணக்கு, ஆங்கிலம்) ��ைக்ல வரும்போது இதே மாதிரி இருக்கும். பள்ளியில் இரண்டு பெல், டீச்சர்ஸ் ரூம், டிபன் பாக்ஸ் சண்டை, பி.டி.சார் பிரம்பு, ஒருநாள் ��ுற்றுலா 1/2
இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கு. நான் மொதல்ல மறக்���ாம போய்ரணும்ன்ற அளவுக்கு எனக்கென்னனு இருக்கேன் 😁
நாடக ஒத்திகைத் துணுக்குகளைப் பார்த்தபொழுதில் மிகுந்த ஆவல் எழுந்தது. 😍
சந்திப்போம், 20 ம் தேதி, சனிக்கிழமை மாலை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்.
❤️
வந்திருங்க மக்களே 🙏
"Maximum of my films i have done with Debut/1 Film directors, I want to deliver experimental films👏. Yes, I am bad at Marketing🙁. But as an actor I can name 10 good films like Ram, KattradhuThamizh, Ee, SMS, KO, Dishyum, KV, Gypsy, EP etc♥️🔥"
- #Jiiva
https://t.co/2NlY4sBFDz
@RagavanG@Oho_Production பாட்டுலாம் நல்லாருக்குமே. “விஸ்வநாதன் வேலை வேண்டும்”. எங்கள ஸ்கூல் ட்ரிப் ஆழியார் கூட்டிப்போன போது, அங்க டேம்ல இருந்த பங்களா வீடு பால்கனில இருந்து தண்ணி ஊத்துற மாதிரி கணபதி சார் செஞ்சு காட்டுனது இன்னமும் ஞாபகம் இருக்கு.
@rparthiepan இதே மாதிரி திருநெல்வேலி, மாறாந்தைல இருக்கும் சடையன் தாத்தா அவர் மனைவி இறந்ததும் கல்லறை கட்டி, அதற்கு பக்கத்திலேயே இவருக்கும் கட்டி வச்சிருக்கார��. 19 வருசத்துக்கு மேலாக பராமரிப்பும் பாத்துகிட்டு வருகிறார்… கல்லறை மேல உட்கார்ந்து கொண்டு சிரிச்சுகிட்டே என் கல்லறைனு சொல்லுறார்…
@rparthiepan இதே மாதிரி திருநெல்வேலி, மாறாந்தைல இருக்கும் சடையன் தாத்தா அவர் மனைவி இறந்ததும் கல்லறை கட்டி, அதற்கு பக்கத்திலேயே இவருக்கும் கட்டி வச்சிருக்கார். 19 வருசத்துக்கு மேலாக பராமரிப்பும் பாத்துகிட்டு வருகிறார்… கல்லறை மேல உட்கார்ந்து கொண்டு சிரிச்சுகிட்டே என் கல்லறைனு சொல்லுறார்…
அந்த பயத்துல இருந்து மீள முடியல. அதற்குப் பிறகு கிடச்ச சில நண்பர்களும், சீனியர்ஸ், ப்ரொபஸர்ஸ்னால அதுல இருந்து மீண்டு நல்ல மார்க், நல்ல வேலைனு கிடச்சது. முதல் தலைமுறை பட்டதாரியான எனக்கு சவாலான ஒரு கால கட்டம் அது…
இது உண்மை சிறு நகரங்கள்ல கஷ்டப்��ட்டு படிச்சு வந்த எனக்கு, முதல் முறையா மேலப் படிக்க கோவையில் இருக்கும் ஒரு பெரிய கல்லூரிக்கு கவுன்ஸ்லிங்க் மூலாமா தேர்வாகிப் போனேன். கல்லூரியின் நுழைவு வாயில் பிரம்மாண்டமே ஒரு பயத்தக் குடுத்துருச்சு. இது போக லோன் அது இதுனு ஒரு வருசத்துக்கு
ஜெயமோகன் அவர்கள் எழ��திய வணங்கான் சிறுகதை முக்கியமான ஒன்று.
நேர்மையாக செயல்படும் அரசு அலுவலர் வணங்கான் அவர்களை, ஜாதியின் அடிப்படையில் தென்காசி இலஞ்சி பகுதியில் பணிபுரியவிடாமல் செய்வார்கள். ஏராளமான தொல்லைகள் தருவார்கள். தினமும் அவர் உயிருக்கு பயப்படும் படி சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும்.
ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே வெளியே வர முடியாது. அந்த சூழ்நிலையில் அவர், கேரளாவில் இருந்து கன்னியாகுமரியை தமிழகத்துடன் சேர்க்க பெரும் போராட்டம் நடத்தி வென்ற ம��ர்சல் நேசமணி அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புவார்.
மூன்று நாட்களுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் வணங்கான் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு அமர்ந்திருப்பார். கதவு தட்டும் சத்தம் கேட்கும். பயந்து கொண்டே திறப்பார். அங்கே மார்ஷல் நேசமணி இருப்பார். அவர் ஒரு யானையுடன் வந்திருப்பார். அந்த யானையின் மீது வணங்கானை அமர வைத்து, தன்னுடைய ஆட்களுடன் சேர்த்து அந்த ஊரில் ஒரு ��ிரம்மாண்ட ஊர்வலத்தை நடத்துவார்.
யானையின் மீது உட்கார்ந்திருப்பவர் என் ஆள். ��ுடிந்தால் தொட்டுப் பார் என்பது அர்த்தம்.
அதன் பின்னர் முத்தாய்ப்பாக ஒரு வரி எழுதி இருப்பார்கள் ஜெயமோகன் அவர்கள். அந்த சம்பவத்திற்குப் பிறகு, யானை மீது வணங்கான் அவர்கள் வந்த போது எப்படி இடைவெளி விட்டு ஒருவர் கடப்பாரோ, காலத்திற்கும் ஒரு மரியாதையுடன் அந்த இடைவெளி கொடுத்து அவரை கடப்பார்கள் என்று.
நாமும் செய்ய வேண்டியது அது தான். இதுவரை இரும்புக்கோட்டையாக தமிழ்நாட்டின் சமூக, ��ொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு இருந்த ஐஐடி என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்களின் @naan_mudhalvan திட்டம் மூலம் மாணவர்கள் நுழைய துவங்கி இருக்கிறார்கள்.
அவர்களும் வணங்கான் போல மிகவும் கஷ்டப்பட்டு படித்து வந்தவர்கள். சுற்றி இருக்கும் சனாதன மூளை கொண்டவர்களால் அச்சுறுத்தப்படுவார்கள்.
எப்படி மார்சல் நேசமணி யானையின் மீது வணங்கானை உட்கார வைத்து, ஊர்வலம் வந்தாரோ, அதுபோல நாமும் அவர்களுக்கு அங்கே ஒரு மனரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
படிக்கிற காலங்கள்ல மதுரைலருந்து சென்னை போக அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல போக போலீஸ் ஒழுங்கு பண்ணும் க்யூல நின்னு ஏறிப் போவேன். இப்பவும் க்யூ இருக்கு, ஒழுங்கு பண்ண போலீஸ் இருக்காங்க. நானும் அங்க தான் நிக்கிறேன், ஆனா 2nd Class ACக்காக 😁
கல்வி மட்டுமே உங்களை கரையேற்றும். ❤️
சவுதியில் நான் தங்கியிருந்த அறையில் என்னுடன் ஜோசப் என்று ஒரு நண்பர் தங்கியிருந்தார்.
மும்பையைச் சேர்ந்தவர். 32 வயது. திருமணமான கொஞ்ச காலதிற்குள் சவுதி வந்தவர்.
அது கோடைகாலமானதால் அறை குளிரூட்டப்பட்டிருந்தது. வெளியே அதிக வெப்பம், உள்ளே அதிக குளிர்.