குழந்தைகளின் வலியை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் சாக்கடைத்தனம் முதலில் நிற்க வேண்டும்!
ஜெம் வீரமணி வழக்கில் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆனால் இது ஒரு கட்சியை தாக்குவதற்கான அரசியல் ஆயுதம் அல்ல. குழந்தைப் பருவத்தில் கொடுமையை அனுபவித்து, இன்று வரை அந்த வலியுடன் வாழும் survivors-க்கு நீதி பெற்றுத்தர வேண்டிய வழக்கு இது.
ஒரு சிறுமி தொடர்பான வீடியோ போலீசாரிடம் இருந்தும், ஆரம்பத்தில் closure report தாக்கல் செய்ய முயற்சி நடந்திருக்கிறது. நீதிமன்றம் அதை நிராகரித்த பிறகே மறுவிசாரணை தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதாகவும், மேலும் பல survivors கண்டறியப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
அப்படியானால் கேள்விகள் எழாமல் இருக்குமா?
ஆரம்ப விசாரணை ஏன் இவ்வளவு மோசமாக நடந்தது?
யாருடைய அலட்சியம்?
யாருடைய தவறு?
யாராவது திட்டமிட்டு விசாரணையை முடக்கினார்களா?
இதற்கெல்லாம் பதில் வேண்டும்!
வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை. ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு கொண்டவராக இருந்தாலும், சட்டத்தின் முன் தப்பிக்கக் கூடாது.
அதேபோல், அவருக்கு துணை நின்றதாக குற்றச்சாட்டு உள்ளவர்கள் யாராக இருந்தாலும், ஆதாரங்கள் நிரூபித்தால் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சாதி பார்க்காதீர்கள்.
மதம் பார்க்காதீர்கள்.
கட்சி பார்க்காதீர்கள்.
பணம் பார்க்காதீர்கள்.
அதிகாரம் பார்க்காதீர்கள்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் ஒரே அளவுகோல் — சட்டம்!
ஆனால் இதைவிட முக்கியமான கேள்வி ஒன்று:
இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் நடந்த கொடுமையை வைத்து அரசியல் லாபம் தேடப்போகிறோமா?
அது நடந்தால், பாதிக்கப்பட்டவர்களின் வலியையே மீண்டும் சுரண்டுகிறோம்.
இந்த வழக்கு முழுமையாகவும், வெளிப்படையாகவும், அரசியல் தலையீடு இல்லாமலும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஆரம்ப விசாரணையில் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீதும் தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால் மேல்மட்ட அல்லது சுயாதீன விசாரணை அமைப்பின் கண்காணிப்பில் விசாரணையை நடத்த வேண்டும்.
இந்த வழக்கு யாருடைய அரசியல் வெற்றிக்காகவும் அல்ல.
இந்தக் குழந்தைகளின் நீதிக்காக!
அவர்களின் கண்ணீருக்கு பதில் வேண்டும்.
அவர்களின் வலிக்கு நீதி வேண்டும்.
குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
அதுதான் உண்மையான நீதி.
அதுதான் இந்த சமூகத்தின் கடமை.
#POCSO #JusticeForSurvivors #VeeramaniCase #Veeramani
ரொம்ப அழகா Explain பண்ணிட்டாரு
ஆளும் கட்சியா இருந்தா தான் நல்லது செய்ய முடியும்னா
எதிர்கட்சி MLA கள் தொகுதிகளை CM வஞ்சிப்பார்னு சொல்ல வர்றீங்களா Expose பண்ணி விட்டுட்டாரு 👌👌👌
எல்லா பசங்களும் புரிதல் இல்லாதவங்க அல்ல ..!!
இந்த பசங்களோட பேச்சை கேளுங்க ..!!
புரிஞ்சிபாங்க பொறுமையா தான் வருவான்
ஆனா நிச்சயம் வருவான் 👌👌👌
ரொம்ப காலத்துக்கு பழி போடும் அரசியலை செய்ய முடியாது 👍
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே நேற்று ஊழல் ஊழல் என்று கத்தினீர்களே!
மோசடி ஆவணத்தை பதிந்து கொடுத்த அந்த நான்கு ஐயங்கார்களையும் உங்களது அரசுக்கு திராணி இருந்தால் கைது செய்ய முடியுமா?
மாநில அரசினுடைய அமைச்சர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதற்கு முன் அந்த செய்தி உண்மைதானா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின்பு ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த முறை நீங்கள் சொல்லுவது எல்லாம் பொய் என்ற முடிவுக்கு வந்து ஊடகங்களே உங்களை புறக்கணித்து விடுவார்கள்.
மக்களிடமும் உங்கள் அரசின் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிடும்.
@MurasuTalks@MyNa_Writes_@DMKNRIWing@antifasicm4ever@TVKExposed
Plenty of leaders without formal education have delivered good governance. But erasing others’ hard-earned academic qualifications because the CM has none? What an embarrassing display of insecurity🤦🏽♀️
வரலாற்றிலேயே தனது சொந்த கட்சிக்காரன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ மனையில் அதுவும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவரை கண்டுகொள்ளாத முதல் முதலமைச்சர் இவராகத்தான் இருப்பார்...
#BREAKING | பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் நேரடியாக ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்து விட்டீர்களே CM sir!
- த.வெ.க. அரசுக்கு முன்னாள் சபாநாயர் அப்பாவு கண்டனம்!
#appavu | #tvkfails | #vijayfails | #KalaignarSeithigal
அறிமுக இளம் சினிமா டைரக்டர் ஜேசன் சஞ்சய்க்கு கிடைக்கும் ரசிக பட்டாள ஆதரவுக்கும், ஊடக வெளிச்சத்துக்கும், சினிமா பிரபலங்களின் ஆசிகளுக்கும் ஒரே காரணம் அவர் விஜய்யின் மகன் என்பதுதான்.
அதிலும் விஜய் முதலமைச்சர் ஆன பிறகு இந்த சலுகைகள் பன்மடங்கு பெருகியிருக்கின்றன.
இதே போல ஒரு தளத்தைதான் திமுகவில் உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் அமைத்துக் கொடுத்தார்.
உதயநிதிக்கு கிடைத்த Nepotism சலுகைகளை கடுமையாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள், ஜேசன் சஞ்சய்க்கு கிடைக்கும் Nepotism சலுகைகளை சிலாகிப்பது பச்சையான இரட்டை வேடம்.
ஒவ்வொரு நாளும் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதன் சாதனையாக, 24 மணி நேரத்தில் 8 கொலைகள், ஒரே மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலைகள், ஒரே மாவட்டத்தில் 10 கொலைகள் எனப் பல கேடுகெட்ட சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இவளவு கொடுமைகள் தமிழ்நாட்டில் நடந்தும் தம்பி விஜய் எங்க ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை!
தினம் தினம் கொலைகளில் சாதனை படைக்கும் இந்த மானம்கெட்ட ஆட்சி எப்போது திருந்தி சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றப் போகிறது?
#எங்கே_அந்த_CMSir
எனக்கு ஒரு விஷயம் புரியல, உங்கள பத்தி பேசினாலே ஒப்பாரியா??? அப்போ எதிர் கட்சி என்ன தாண்டா பன்னும், நீ பன்ற தப்புக்கெல்லாம் இன்னும் திமுகவ குறை சொல்லிக்கிட்டு இருக்கியே அதுக்கு பேரு தான் ஒப்பாரி..