கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக மக்களை சுரண்டும் மோடி அரசு:
*பெட்ரோல், டீசல் விலை ஏற்ற கொள்ளையை நிறுத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
பெட்ரோல், டீசல் விலை தற்போது குறைப்பது சாத்தியமில்லை என ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹர்தீப் சிங் பூரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது மோடி அரசின் பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்) ஆதரவு அரசியலின் வெளிப்படையான சாட்சியாக மாறியுள்ளது.
நாட்டின் சாதாரண மக்களின் பணத்தை சுரண்டி, சில பெருநிறுவனங்களையும் முதலீட்டு கார்ப்பரேட் சக்திகளையும் செழிக்கச் செய்வதே தற்போதைய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் உண்மையான பொருளாதார கொள்கை என்பதை பெட்ரோலிய நிறுவனங்களின் லாப கணக்குகள் தெளிவாக நிரூபிக்கின்றன.
இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. குறிப்பாக IOCL நிறுவனம் மட்டும் 2025-26 ஆம் ஆண்டில் ₹ 36,802 கோடி லாபம் ஈட்டியுள்ளது. BPCL மற்றும் HPCL நிறுவனங்களும் வரலாறு காணாத அளவில் லாபம் குவித்துள்ளன.
ஒருபுறம் மக்கள் அத்தியாவசிய செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்; மறுபுறம், பெட்ரோலிய நிறுவனங்களும் மோடி அரசும் மக்களின் துயரத்தை பணமாக மாற்றி பணப்பெருங்கடலில் மிதக்கின்றன.
இன்னும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், பிளாக் ராக் (BlackRock), வேன்கார்டு (Vanguard) போன்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பெட்ரோலிய நிறுவனங்களில் பெரும் பங்குகளை வைத்துள்ளன. அதாவது இந்திய ஏழை, நடுத்தர மக்களிடமிருந்து எரிபொருள் விலை மூலமாக சுரண்டப்படும் பணத்தின் ஒரு பகுதி நேரடியாக சர்வதேச கார்ப்பரேட் முதலீட்டாளர்களின் லாபமாக செல்கிறது.
கலால் வரி, செஸ், கார்ப்பரேட் வரி, லாப ஈட்டு தொகை ஆகியவற்றின் மூலம் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் சுமார் ₹2.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது. இவ்வளவு வருவாய் கிடைத்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க சாத்தியமில்லை என்று கூறுவது மக்கள் மீது நடைபெறும் வெளிப்படையான பொருளாதார அநீதி ஆகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் அதன் பலன் மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் உலக சந்தையில் விலை உயர்ந்தவுடன் உடனடியாக அதன் சுமை மக்களின் தோள்களில் ஏற்றப்படுகிறது. லாபம் மட்டும் கார்ப்பரேட்களுக்கு; சுமை மட்டும் மக்களுக்கா?
இந்தியாவில் இன்று எரிபொருள் விலை என்பது அரசின் வரிவசூல் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை, சிறு தொழில்கள், விவசாயம், போக்குவரத்து, உணவுப் பொருட்களின் விலை உள்ளிட்ட அனைத்தும் இந்த கொள்ளை விலையால் பாதிக்கப்படுகின்றன.
ஆனால் மோடி அரசுக்கு மக்களின் வேதனையை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே முக்கியமாகியுள்ளது. தேர்தல் காலங்களில் “சாதாரண மக்களின் அரசு” என்று பேசும் பிரதமர் மோடி, நடைமுறையில் பெருநிறுவனங்களின் நலன்களை காக்கும் முகவராகவே செயல்படுகின்றனர்.
எனவே, ஒன்றிய அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் செஸ் வரிகளை குறைத்து, எரிபொருள் விலையை கணிசமாக குறைக்க வேண்டும். இல்லையெனில், மக்களை சுரண்டும் இந்த கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்ளைக்கு எதிராக மக்கள் ஜனநாயக ரீதியில் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
04/07/2026
#PetrolDieselPriceHike
#FuelPriceLoot
#ModiGovernment
#CorporatePolitics
#StopFuelLoot
#ReduceFuelPrice
#TaxTerrorism
#AntiPeopleModiGovt
#MMK
#Jawahirullah
#பெட்ரோல்விலை
#டீசல்விலை
#மோடிஅரசு
#கார்ப்பரேட்அரசியல்
#எரிபொருள்விலைகுறை
#மக்கள்விரோதஅரசு
#பெட்ரோல்டீசல்கொள்ளை
@sunnewstamil@pttv_tweets@puthiyathalaimu@polimernews@sathiyamnews@News18TamilNadu@NewsTamilTV24x7@ZeeTamilNews@bbctamil@rajnewstamil@PTI_News@TamilTheHindu@DH_Tamil@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@DeccanHerald@NewIndianXpress@the_hindu@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@SamayamTamil@ani_digital@ITamilTVNews@thatsTamil
"லண்டன் சென்ற எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினை வழியனுப்ப செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளது"
தி.மு.க.வை மிரட்டி அழித்து விடலாம் என த.வெ.க. கனவு காண்கிறது, அது நடக்காது - அனிதா ராதாகிருஷ்ணன்
#AnithaRadhakrishnan | #DMK | #MKStalin | #Politics | #PolimerNews
#WATCH | “நீதிமன்றத்திடம் மூக்கறுபட்டுள்ளது இந்த குதிரை பேர அரசு.. பாஜக பாணியில் செயல்பட்டு வருகிறது தவெக”
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி
#SunNews | #Paranthaman | #DMK
நேற்றைய dvac ரெய்டு மற்றும் அதில் பிடிபட்ட லட்சக்கணக்கான பணம் சொல்லும் செய்தி இது தான்: பல பல வருடங்களாக திமுக அதிமுக என்ற கட்சிகளால் வளர்க்கப்பட்டு இன்று அரசு நிர்வாகம் முழுவதும் புற்றுநோய் போல பரவிக் கிடக்கும் லஞ்சத்தை 2 மாதங்களில் ஒழிக்க முடியாது.
ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சத்தை வளர்க்க உதவிய நிலையில் தற்போது TVK ஆட்சியில் அரசு அலுவலங்களில் லஞ்சத்தை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது. அடுத்த 5 வருடங்களுக்கும் இதே முனைப்பை காட்டினால் லஞ்சத்தை குறைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அரசு அலுவலர்களை சுற்றி இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தான் தற்போது லஞ்ச பணம் கை மாறி வருகிறது. அங்கே உளவுத்துறை ஆட்களை கவனம் செலுத்த சொன்னால் பலர் பிடிபட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பணத்தை பேரம் பேசி வாங்கி மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்க ஒரு சில ஊழியர்கள் இருப்பார்கள். அவர்களை கண்காணித்தால் பல விவகாரங்கள் வெளிப்படும்.
- Sam Ponraj
கொலை பண்ணவனும், கொள்ளையடிச்சவனும், பவுடர் இழுத்தவனும் ஃப்ரீயா இருக்கான்...
Tvk அரச கேள்வி கேட்டவனை மட்டும் அதிகாலை 4 மணிக்கே போயி அரெஸ்ட் பண்றானுங்க.
விளங்கிடும் டா தமிழ்நாடு!"😡
#TVKfails#lgbt#vijay#dmk
பண்றெதெல்லாம் அயோக்கியத்தனம், பரப்புறதெல்லாம் பொய்யி. ஆனா இவர ஒருமைல பேசுனா தூக்கி உள்ள போடுவாராம்! அனிதா ராதாகிருஷ்ணனை சிறைல அடைக்க முடியாதுனு நீதிமன்றம் காறி துப்பி இருக்கு.
ஆனா இது மேட்டர் இல்ல. அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா பண்ணிட்டு தவெகல சேர சொல்லி மிரட்டிருக்காய்ங்க! "ஒருமைல பேசுனா கூட பரவால்ல, ப்ளோல ரெண்டு கெட்ட வார்த்தை வந்தா கூட பரவால்ல ஆனா எங்ககூட சேருங்க"னு கெஞ்சிருப்பாய்ங்க போல.
இதுவும் தவெக உட்கட்சி விவகாரமா என்று திருமாவளவனும், ஆட்சி கவிழ்க்க சதியா என்று விஜய் ரசிகர் மன்றத் தலைவர் சண்முகமும் தெரிவிக்க வேண்டும்.