பார்த்து கொண்டே இருந்தேன்
பாய் எடுப்பதை மறந்தேன்
பார்த்து கொண்டே இருந்தேன்
பல் தேய்ப்பதை மறந்தேன்
பார்த்து கொண்டே இருந்தேன்
பால் பொங்குவது மறந்தேன்
பார்த்து கொண்டே இருந்ததால்
பாதி வேலை நின்று போனது
நீ சாய்ந்து நின்ற அழகில்
பொன் அழகு பூ அழகு பெண்ணும் அழகு அவள் சிந்தும் சிாிப்பும் அழகு கண்ணழகு காா்கூந்தல் அழகு நடை அழகு இடை அழகு அவள் நாணமும் அழகு பூ பெய்தல் அழகு அவள் மணவிழா அழகு அவள் தாய்மை அடைதலும் அழகு அவள் மழழை பெற்று எடுத்தலும் அழகு மொத்தத்தில் பெண்மையே பேரழகு
சித்திரை செவ்வானம்...
என் நித்திரையின்
பூ வனம்..
காதல்..
மொழியில்
கலங்கி போய் உள்ளதடி
என்
மனம்..
கடல் தாண்டி
வந்து என்னை..
உன் கவிதை மூலம்
கரைத்து விட்டு
சென்று விட்டாய்..!
காவியம் படைக்க
காத்து இருக்கிறேன்..
உன் அழைப்பு வரும் என..
என் அழகிய
சுருள்முடிகாரியே..
Good night
வலிகள்
எல்லோருக்குமே
ஆசைதான்
பட்ட காயங்களை
மறந்து போக
மனதிலுள்ள வலிகள்
ஏங்கேனும் தொலைந்து போக
ஆறுதலோடு நம் பிடித்தவர்
விரல் பிடித்து நடந்து போக.. பிடிக்காதவர் எதிரில்
அவர் கண்ணில் படாமல் பறந்துபோக
பல நேரங்களில்
பல கேள்விகளுக்கு
மவுனத்தால் பதில் சொல்லி
புன்னகையோடு கடந்து போக..
நொடி முற்களும்..
தினசரி
நாள்காட்டியும்,
என் பகையாகி போனது..!!
உன்னுடன் வாழும்..
சில அந்த
சில விடுமுறை தினங்களில் ..!!
வருத்தத்துடன்
எழுதி உள்ளான்..
ஆண்டுக்கு ஒரு முறை வந்து
செல்லும்
வெளிநாட்டு வேலைக்காரன்..!!
என்னவளே..
என்னை தவிக்க விட்டவளே..
உன் அன்பான குரலாலே
என்னை நேசிக்க வைத்தவளே..
உனக்கு ஒரு காயம் என்று..
நான் அறிந்த போது..
நான் கவிதை மட்டுமே..
எழுதி உனக்கு ஆறுதல் சொல்கிறேன்..
வாய்ப்பில்லா வழிப்போக்கனாக ..
நான்
அருகில் இல்லை என்றாலும்..
உன் நிழலாக..
நீயும் என்னை
வெறுக்கவில்லை
நானும் உன்னை
வெறுக்கவில்லை
இருந்தும் அவரவர்
சூழ்நிலைகளின் மீது
மாறி மாறி காரணம்
சொல்லிக் கொண்டு
நம்மை நாமே வெறுத்து
விட்டோம் ...
கெஞ்சிடும் இமைகளை விட கொஞ்சிடும் இதழ்கள் சுகமா
சொல்ல வரும் வரிகளை விட சொல்லாம் தொட்டுச்செல்லும் மௌனங்கள் சுகமா
தூது வரும் தென்றலை விட அதற்கு துணையாக வரும் உன் நினைவுகள் சுகமா
தொடர்பில்லாத தொடர் கவிதை தொடந்திட துடிக்கும் என் இதயம் சுகமா 💓💓💓💕💕💕💕💕💕💕💕
எனக்கும் நன்கு நடிக்க தெரியும் என்பதை உணர்ந்தேன்...
வெளி உலகில் அவளை வெறுப்பதும் உள்ளுக்குள் அவளை நினைத்து உருகுவதையும் பார்க்கும் போது எனக்கும் நன்கு நடிக்க தெரியும் என்பதை உணர்ந்தேன்...!✍️
வரமாய் வந்து
வாழ்க்கை முழுதும்
நின்றவள் நீ
தோழி என்று ஆயிரம் பேர்
இருந்தாலும் நினைவுக்கு வருவது
உன் முகம் தான்
என்னை எனக்கு
அறிமுகம் செய்தவள் நீ
ஆழமான அன்பின்
சுகமும்
அது இல்லையேல்
சோகமும்
உணர்த்தியவள் நீ
பொய்க்கோபம்
கொள்வதில் உனக்கு நிகர் யாருமில்லை
#தோழி#அன்பு_தமிழா