நம்பகத்தன்மையில் ‘தினத்தந்தி’க்கு முதல் இடமாம் 😂
உதாரணத்துக்கு நேற்று ‘தினத்தந்தி’யில் இடம்பெற்ற ஒரே ஒரு செய்தியை எடுத்துக் கொள்வோம். எச்-1பி விசாவுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை டிரம்ப் அரசு நிர்ணயித்திருக்கிறது. அதனுடைய இந்திய மதிப்பு ரூ.10 லட்சமென நேற்று ‘தினத்தந்தி’ சொல்லியிருக்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு இன்று இந்திய ரூபாயில் மதிப்பு 95.79 ரூபாய். அதாவது ஒரு லட்சத்தை 95.79-ஆல் பெருக்க வேண்டும். ‘தினத்தந்தி’ குமாரசாமி கால்குலேட்டரில் பெருக்கிப் போட்டிருக்கிற தொகை பத்து லட்சம் ரூபாய். நம்பகத்தன்மையில் முதலிடம் என்றால் சும்மாவா?
@thirumaofficial உங்களைத் தலைவர் என்று சொன்னதற்காக இன்று வெட்கித் தலைகுனிகிறேன். உங்கள் மீது வைத்திருந்த மரியாதையும், நம்பிக்கையும் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.
நீங்களும் மற்றவர்களைப் போல, பதவியும் அதிகாரமும் கைக்கு வந்தவுடன், உங்களை நம்பிய சொந்த மக்களுக்கே துரோகம் செய்யும் அரசியலைத்தான் செய்கிறீர்கள்.
அதிகாரத்திற்காக கொள்கையை அடகு வைப்பதும், பதவிக்காக மக்களின் குரலை மௌனமாக்குவதும் தலைமை அல்ல. உங்களை உயர்த்திய மக்களையே அதிகாரத்தின் வாசலில் நிறுத்தி அவமானப்படுத்துவது அரசியல் சாதனை அல்ல.
ஒரு காலத்தில் உங்கள் தலைமைப்பண்பை சிலாகித்திருக்கிறேன். இன்று, உங்கள் மீது வைத்திருந்த குறைந்தபட்ச நம்பிக்கையைக் கூட கேள்விக்குள்ளாக்கும் நிலைக்கு நீங்கள் என்னைத் தள்ளிவிட்டீர்கள்.
இன்று உங்கள் கட்சி எம் எல் ஏவுக்கு மந்திரி பதவி இருக்கலாம். உங்கள் கட்சிக்கு அதிகாரம் இருக்கலாம். நீங்கள் நினைத்தது போலவே ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வாங்கியிருக்கலாம். ஆனால் இப்போது உங்கள் செயல்பாடுகள், மக்களின் நினைவில் துரோக வரலாறகவே பதியும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதாகச் சொல்லிக்கொண்டு, அந்த மக்களுக்கே எதிராக நிற்கும் அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்பதே இன்று சொல்ல வேண்டிய மிகக் கசப்பான உண்மை.
என்னைப் பொறுத்தவரை இன்று நீங்களும் மற்ற பிழைப்புவாத அரசியல்வாதிகளில் ஒருவராக மாறிவிட்டீர்கள் அவ்வளவுதான்.
#You_failed_Us_Thiruma