சுங்கச்சாவடி கட்டண உ��ர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜாபாத், சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணமும், மாதாந்திர சுங்கக் கட்டணமும் ரூ.5 முதல் ரூ.735 வரை உயர��த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் லாரி மற்றும் பேருந்துகளுக்கும் ரூ.15 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை, வாகனங்களின் உதிரிபாகங்கள், பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் லாரி, பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துத் துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணத்தை மீண்டும் உயர்த்துவது சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துச் செலவை மேலும் அதிகரிக்கும். இதன் நேரடி தாக்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் ஏற்பட்டு, இறுதியில் சுமையைச் சுமக்க வேண்டியது சாதாரண மக்களாகவே இருப்பார்கள்.
தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளையும், 60 கிலோமீட்டர் தூரத்திற்குக் குறைவான இடைவெளியில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளையும், நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஏற்கனவே பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டிய நியாயமான கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை அகற்றுவதற்குப் பதிலாக கட்டணத்தை மட்டும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருப்பது ஒன்றிய அரசின் மக்க��் விரோத அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது.
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு அவர்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக விவசாயிகள், சிறு மற்றும் குறு வணிகர்கள், லாரி மற்றும் பேருந்து உரிமையாளர்கள், தினசரி வாகனப் பயணத்தைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், காலாவதியான சுங்கச்சாவடிகள், 60 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகள் மற்றும் நகர்ப்புற சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
02.09.2026
#சுங்கச்சாவடி #TollTax #TollFeeHike #சுங்கக்கட்டணஉயர்வு #விலைவாசிஉயர்வு #மக்கள்நலன் #மனிதநேயம���்கள்கட்சி #TamilNadu #NHAI
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
விடுதலை திருநாள் உரையில் பிரதமர் மோடியின் பொறுப்பற்ற பேச்சு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
“நக்சல் மனநிலை கொண்டவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது விடுதலை திருநாள் உரையில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியல் கருத்து வேறுபாடு கொண்டவர்கள், அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள், சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவரையும் “நக்சல் மனநிலை” கொண்டவர்கள் என முத்திரை குத்துவது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரத்தையும், அமைதியாகப் போராடும் உரிமையையும் வழங்கியுள்ளது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது தேச விரோதமோ, நக்சலிசமோ அல்ல. அரசை விமர்சிப்பவர்களை எதிரிகளாக சித்தரிப்பது ஜனநாயக ஆட்சியின் அடையாளம் அல்ல.
பிரதமர் பதவியில் இருப்பவர் தனது அரசியல் எதிரிகளையும், மாணவர்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும், அறிவுஜீவிகளையும் ஒரே வார்த்தையில் சந்தேகத்திற்குரியவர்களாக சித்தரிப்பது மிகவும் ஆபத்தான போக்காகும்.
கடந்த காலங்களில் “தேச விரோதி”, “நகர்ப்புற நக்சல்” போன்ற சொற்���ள் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை மிரட்டவும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சொற்களை பிரதமரே பயன்படுத்துவது, விமர்சனக் குரல்களை ஒடுக்குவதற்கான அரசியல் சூழலை மேலும் வலுப்படுத்தும்.
��க்சலிசத்தை எதிர்ப்பதற்கும், ஜனநாயகக் கருத்து வேறுபாடுகளை எதிர்ப்பதற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்த அடிப்படை வேறுபாட்டை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவின் பல்வகைத் தன்மை, கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, சமூகநீதி மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதுதான் இன்று அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். மாறாக, தன்னை விமர்சிப்பவ���்கள் அனைவரையும் ஒரே குற்றச்சாட்டின் கீழ் கொண்டு வருவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பற்ற கருத்தை திரும்பப் பெறுவதுடன், ஜனநாயக ரீதியாக அரசை விமர்சிக்கும் மக்களின் உரிமையை மதிக்க வேண்டும். கருத்து வேறுபாடு கொண்ட ஒவ்வொருவரையும் எதிரியாகப் பார்க்கும் மனநிலையை மத்திய அரசு கைவிட வேண்டும்.
ஜனநாயகத்தில் ஆட்��ியாளர்களை கேள்வி கேட்பது குற்றமல்ல; கேள்வி கேட்கும் உரிமையைப் பாதுகாப்பதே உண்மையான தேசப்பற்று.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
16/08/2026
#Naxals
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil @dt_next
காவிரி உரிமை பேரம் பேசும் பொருளல்ல; சட்டப்பூர்வ உரிமையைப் பெற்றுத் தர வேண்டியது அரசின் கடமை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
காவிரி நீர் பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தச் செல்லும் மு���ிவு மிகுந்த எச்சரிக்கையுடனும், தெளிவான அரசியல் நிலைப்பாட்டுடனும் அணுகப்பட வேண்டிய ஒன்றாகும்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும், அதனை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்குரிய நீரை வழங்குவது கர்நாடகத்தின் சட்டப்பூர்வக் கடமையாகும். இதனைப் பேச்சுவார்த்தைக்குரிய விஷயமாக மாற்றுவது, தமிழ்நாடு பல பத்தாண்டுகளாக போராடி பெற்றுள்ள சட்ட உரிமையின் வலிமையைத் தளர்த்தக் கூடாது.
இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 23 வரை தமிழ்நாடு சுமார் 32 டி.எம்.சி. நீரைப் பெற்றிருக்க வேண்டிய நிலை��ில், வெறும் 3.5 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. மழைப்பற்றாக்குறையை கணக்கில் எடுத்தாலும் கூட, தமிழ்நாட்டிற்கு இன்னும் கணிசமான அளவு நீர் வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA), காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை முழு வலிமையுடன் பயன்படுத்தி, உரிய நீரைப் பெற்றுத் தருவதில் தீவிரம் காட்ட வேண்டும்.
கடந்த கால வரலாறு ஒ��ு முக்கியமான பாடத்தைச் சொல்லுகிறது. 22 ஆண்டுகளில் நடைபெற்ற 26 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எந்தத் தீர்வையும் அளிக்காததால்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களுக்கு கர்நாடகத் தலைவர்களுடன் நல்ல தனிப்பட்ட உறவு இருந்தபோதிலும், காவிரி உரிமையில் கர்நாடகம் எந்தச் சலுகையையும் வழங்கவில்லை. எனவே, தனிப்பட்ட நட்புறவுகள் அல்லது அரசியல் கூட்டணிகள் காவிரி பிரச்சினைக்கு மாற்றாக அமையாது என்பதையே வரலாறு உணர்த்துகிறது.
அதேபோல், இந்தப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி கர்நாடகம் மேகதாது அணைத் திட்டத்தை முன்னிறுத்த முயற்சிக்க���்கூடும் என்ற அச்சமும் உள்ளது. தமிழ்நாடு இந்த இரண்டு விவகாரங்களையும் ஒன்றாகக் கலக்க அனுமதிக்கக் கூடாது. மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு உறுதியுடன் தொடர வேண்டும்.
காவிரி என்பது தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிராதாரம். இது அரசியல் சமரசத்திற்கோ அல்லது நல்லுறவிற்கோ உட்பட்ட விஷயம் அல்ல; சட்டத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமையாகும். எனவே, எந்தப் பேச்சு���ார்த்தையும் தமிழ்நாட்டின் சட்ட உரிமையைப் பாதிக்காத வகையிலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும்தான் நடைபெற வேண்டும்.
தமிழ்நாடு அரசு, “உரிமையைப் பெறுவதற்காகப் பேசுகிறோம்; உரிமையைப் பேரம் பேசுவதற்காக அல்ல” என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனையும் காவிரி உரிமையையும் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
27/07/2026
#காவிரி
#காவிரிஉரிமை
#டெல்டாவிவசாயிகள் #மேகதாதுஅணை
#தமிழகஉரிமை
#விவசாயிகளுக்குநீதி
#Cauvery
#SaveCauvery
#MMK
@CMOTamilnadu
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @news7tamil @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
@GunasekaranMu @karthickselvaa @Harish_Journo @karthikeyannews @Rama_Krishnan
தமிழ்நாடு முதல்வர் நீட் தேர்வுக்கு எதிரானவர் என்றால் மாணவர்கள் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகவும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாட்டிலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் அமைதியான ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்த முன்வந்துள்ளன. ஆனால், இந்த அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியிரு��்பதும், சில இடங்களில் கல்லூரி வளாகங்களுக்குள்ளேயே நுழைந்து மாணவர் இயக்க நிர்வாகிகளை அழைத்து எச்சரித்திருப்பதும் கவலைக்குரிய செய்தியாகும்.
நீட் தேர்வின் கொடூரமான விளைவாக உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறியவரும், நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தவரும்தான் தற்போதைய தமிழ்நாடு முதல்வர். அந்த நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைத்து மக்களின் ஆதர���ைப் பெற்றவர், இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, அதே நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக வழியில் குரல் கொடுக்கும் மாணவர்கள் காவல்துறை நடவடிக்கைகளுக்கு உள்ளாவது பெரும் முரண்பாடாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் மாணவர் போராட்டங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை; அனுமதியின்றி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களையே காவல்துறை தடுத்துள்ளது என்று அமைச்சர்கள் விளக்கம் அளித்திரு��்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் மறுபுறம், மாணவர்கள் தங்களை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த முரண்பட்ட தகவல்கள் அரசின் உண்மையான நிலைப்பாடு குறித்து சந்த��கத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, மாணவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டவுடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தேவையற்ற நடவடிக்கையாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உண்மையிலேயே உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமெனில், அமைதியான ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி அளித��து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதும், அமைதியான முறையில் போராடுவதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைப் பாதுகாப்பதே ஜனநாயக அரசின் கடமையாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட விரும்பும் மாணவர்களுக்கு உரிய அனுமதியையும் முழுமையான காவல் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
24/07/2026
#BanNEET #RejectNEET #StudentsProtest #StandWithStudents #TamilNadu #NEETExemption #SaveStudents #Democracy #RightToProtest #மாணவர்களோடுநிற்கிறோம் #நீட்ஒழியவேண்டும் #மாணவர்களின்குரல் #ஜனநாயகம் #தமிழ்நாடு #MMK #JawahirullahMLA
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @news7tamil @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil @Minnambalamnews @5GTamilMozhi
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீட்டை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது – தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நீதி வழங்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்.சி. மருத்துவ இயற்பியல் (https://t.co/UedAcpS6uW. Medical Physics) படிப்பில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான (BCM) 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று வரும் தகவல் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைகழக ஆசிரியர் கழகம் (AUT) கடும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சமூகநீதியின் கோட்டையாக விளங்குவதற்குக் காரணம், அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4), 15(5), 16(4), 46 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய சமூகங்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதியாக நடைமுறைப்படுத்தி வருவதால் தான். அந்தக் கொள்கையின் ஒரு பகுதியாகவே பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, நுழைவுத் தேர்வும் நடத்திவிட்��ு, இறுதியில் “பிசிஎம் பிரிவிற்கு இடம் இல்லை” என்று கூறி சேர்க்கையை மறு��்ததாக வெளிவந்துள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால், அது சட்டத்தின் ஆட்சியையும் சமூகநீதியையும் அலட்சியப்படுத்தும் செயலாகும்.
11 இடங்கள் மட்டுமே உள்ள பாடப்பிரிவாக இருந்தாலும், அரசின் 200-புள்ளி இடஒதுக்கீட்டு ரோஸ்டர் முறையின்படி சுழற்சி அடிப்படையில் அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவுகளுக்கும் உரிய ஆண்டுகளில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே நடைமுறையாகும். SC (அருந்ததியர்) உள்ளிட்ட பிற உள் இடஒதுக்கீடுகள் கடைப்பிடிக்கப்படும் நிலையில், பிசிஎம் உள் இடஒதுக்கீடு மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது மிகுந்த கவலைக்குரியது.
இந்த விவகாரம் ஒரு மாணவரின் சேர்க்கைப் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாடு பல தசாப்தங்களாகப் பாதுகாத்து வரும் சமூகநீதிக் கொள்கை முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உயர்கல���வித்துறை அமைச்சரும் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் 200-புள்ளி ரோஸ்டர் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பதை உயர்மட்ட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாணவருக்கு உடனடியாக உரிய சேர்க்கை வழங்கப்ப�� வேண்டும்.
மாநில���்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள், குறிப்பாக உள் இடஒதுக்கீட்டு நடைமுறைகள், தவறாமல் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.
சமூகநீதிக் கொள்கையை மீறும் எந்த அதிகாரி அல்லது நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகநீதி என்பது தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டின் உயிர்நாடி. அந்த அடிப்படை விழுமியத்தை எந்த நிர்வாகக் காரணத்தாலும், அலட்சியத்தாலும், தவறான விளக்கத்தாலும் பாதிக்க அனுமதிக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளையும் பாதுகாக்க மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.
இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
22/07/2026
#சமூகநீதி
#BCMReservation #பிசிஎம்_உள்இடஒதுக்கீடு #ReservationRights
#JusticeForBCM #பாரதிதாசன்பல்கலைக்கழகம் #EducationalEquity #ConstitutionalRights
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @news7tamil @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil @Minnambalamnews
@5GTamilMozhi
சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
லடாக் மக்களின் அரசியல் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்ட உத்��ரவாதங்களை வலியுறுத்தி 21 நாட்களாக அறவழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் அவர்களை, அவருடைய விருப்பத்திற்கு மாறாக காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். மனிதநேய மக்கள் கட்சி இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க இயலாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, கருத்து வேறுபாடுகளைக் கலந்துரையாடலால் எதிர்கொள்வதற்குப் பதிலாக காவல்துறையின் பலத்தாலும் அதிகாரத்தின் ஆணவத்தாலும் ஒடுக்க முயல்வது மிகவும் ஆபத்தான அரசியல் போக்காகும். இது ஒரு தனிநபருக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல; அறவழிப் போராட்டம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் மீதான தாக்குதலாகும்.
சோனம் வாங்சுக் தமது சொந்த நலனுக்காகப் போராடவில்லை. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் இமயமலைப் பகுதியின் எதிர்காலம், லடாக் மக்களின் வாழ்வுரிமை, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் நீட் என்ற பெயரில் வட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளை தகர்க்கும் மோசடி உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்புகள் ஆகியவற்றிற்காகவே அவர் தன்னையே அர்ப்பணித்துள்ளார். அத்தகைய உயரிய நோக்கத்திற்காக உயிரைப் பணயம��� வைத்து போராடும் ஒருவரிடம் அரசு காட்ட வேண்டியது மனிதநேயமும் உரையாடலும்தான்; காவல்துறை பல��ல்ல.
மகாத்மா காந்தியின் சத்தியாகிரகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டாகப் பேசும் நமது நாட்டில், இன்று அதே அறவழிப் போராட்டத்தை காவல்துறையால் நசுக்க முயல்கின்றனர். இது வரலாற்றின் மிகப்பெரிய முரண்பாடாகும். சுதந்திரப் போராட்டத்தின் ஆன்மாவையே அவமதிக்கும் இந்த அணுகுமுறை, இந்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை உலக அரங்கில் கேள்விக்குறியாக்குகிறது.
நாட்டில் விவசாயிகள், மாணவர்கள், தொ��ிலாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என யார் குரல் கொடுத்தாலும் அவர்களை அடக்குவதையே ஆட்சியின் இயல்பாக மாற்றிவிட்டது பா.ஜ.க. அரசு. ஜனநாயகத்தில் எதிர்ப்புக் குரலை எதிரியாகக் கருதும் மனநிலை, சர்வாதிகார ஆட்சிகளின் அடையாளமே தவிர மக்களாட்சியின் அடையாளமல்ல.
அதிகாரத்தின் பலத்தால் மக்களின் மனச்சாட்சியை ஒருபோதும் அடக்க முடியாது. சோனம் வாங்சுக்கை காவலில் வைக்கலாம்; ஆனால் அவர் எழுப்பியுள்ள நியாயமான கேள்விகளையும், லடாக் மக்களின் உரிமைக் குரலையும் சிறைபிடிக்க முடியாது.
எனவே, சோனம் வாங்சுக் உடனடியாக விடுதலை செய்யப்பட செய்ய வேண்டும். அவருடைய ஜனநாயக உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
மக்களின் குரலைக் கேட்க மறுக்கும் ஆட்சிகள் வரலாற்றில் நிலைத்ததில்லை. அதிகாரத்தின் அகங்காரம் தற்காலிகமானது; ஜனநாயகத்தின் வெற்றியே நிரந்தரமானது.
இப்படிக��கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
19/07/2026
#சோனம்_வாங்சுக்கை_விடுதலைசெய்
#சோனம்_வாங்சுக்குடன்_நிற்கிறோம்
#அறவழிப்போராட்டம்
#ஜனநாயகத்தை_காப்போம்
#லடாக்கின்_குரல்
#NEETஊழல்
#நீட்_ஊழல்
#கல்விநீதிக்காக
#மாணவர்நீதி
#ReleaseSonamWangchuk
#ISupportSonamWangchuk
#StandWithSonamWangchuk
#SaveDemocracy
#RightToProtest
#JusticeForLadakh
#NEETScam
#EducationJustice
#StudentsDeserveJustice
#DemocracyUnderAttack
@Wangchuk66
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @news7tamil @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil @Minnambalamnews
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின��� கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப ஆவணங்கள், கட்டமைப்பு வரைபடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் இணையத் தரவு கசிவின் மூலம் வெளியானதாக வெளியாகியுள்ள தகவல்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இந்த தரவு கசிவு சம்பவம் ஒரு சாதாரண இணையப் பாதுகாப்பு குறைபாடு அல்ல. அணுசக்தி நிலையம் போன்ற அதி முக்கிய தேசிய உள்கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டிருப்பது, அந்தத் திட்டத்தின் பாதுகாப்பு அமைப்புகள் ஊடுருவலுக்கு உள்ளாகியுள்ளனவா என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. இது தேசிய பாதுகாப்பிற்கும���, தமிழ்நாட்டு மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையக்கூடியது.
குறிப்பாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகள் தற்போது கட்டுமான நிலையில் உள்ள நிலையில், அந்தத் திட்டம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் வெளியேறியிருப்பதாகக் கூறப்படுவது, அந்தத் தளத்தின் பாதுகாப்பு மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரம��ன கவலையை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பு பலவீனமடைந்திருக்கக்கூடிய ஒரு சூழலில் கட்டுமானப் பணிகளை தொடர்வது பொறுப்பற்ற நடவடிக்கையாகும்.
எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இந்தத் தரவு கசிவின் தன்மை, அதன் உண்மை நிலை, பாதுகாப்பு பாதிப்பின் அளவு மற்றும் எதிர்கால அபாயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாட்சியான விசாரணைக் குழுவை அமைத்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், விசாரணை முடிவுகள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யாமல் எந்த அணுசக்தித் திட்ட விரிவாக்கமும் மேற்கொள்ளப்படக் கூடாது.
மக்களின் உயிரையும் எதிர்கால தலைமுறைகளின் பாதுகாப்பையும் விட எந்தத் திட்டமும் பெரிய���ல்ல என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். பாதுகாப்பு மீதான முழுமையான நம்பிக்கை மீண்டும் ஏற்படுத்தப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் நியாயமான மற்றும் ஜனநாயகப்பூர்வமான கோரிக்கையாகும்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
#KudankulamNuclearPlant
#StopKKNPPExpansion
#NuclearSafety
#PublicSafetyFirst
#NuclearSecurity
#SafetyBeforeExpansion
#PeopleOverProfits
#கூடங்குளம்அணுமின்நிலையம்
#அணுபாதுகாப்பு
#மக்கள்பாதுகாப்பு
#தமிழகமக்களின்பாதுகாப்பு
#மக்களின்உயிர்முதன்மை
#கூடங்குளம்_3_4_அலகுகளைகைவிடு
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @news7tamil @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil @Minnambalamnews
@poovulagu @SundarrajanG
VIDEO | Tenkasi, Tamil Nadu: "TVK government must remember how the AIADMK lost power due to a custodial death case (Sathankulam)," says MMK leader MH Jawahirullah.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)
சபரி வர்மன் உயிரிழப்பு: காவல் மற்றும் சிறைக் காவலில் நிகழும் படுகொலைகளை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சபரி வர்மன் சிறையில் உயிரிழந்த ��ம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல் மற்றும் நீதியியல் காவலின் கீழ் இருக்கும் ஒருவரின் உயிர் பறிபோகும் நிலைமை, ஜனநாயகத்தின் மனசாட்சியையே உலுக்கும் ஒரு துயர நிகழ்வாகும்.
தமிழ்நாட்டில் கடந்த கால��்களில் நிகழ்ந்த காவல் மற்றும் நீதியியல் காவல் மரணங்கள் மக்களிடையே கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளன. குறிப்பாக, 2020 கோவிட் காலத்தில் சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த இரட்டைக் கொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம் அன்றைய ஆட்சியின் மீதான மக்��ளின் கோபத்தையும் நம்பிக்கையின்மையையும் அதிகரித்து, அதன் அரசியல் விளைவுகளையும் அன்றைய ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.
எனவே, கடந்த காலத்தின் துயரமான பாடங்களிலிருந்து அரசு கற்றுக்கொள்ள வேண்டும். காவல் மற்றும் சிறைக் காவல் மரணங்கள் மீண்டும் மீண்டும் நிகழ அனுமதிக்கப்படக் கூடாது. சபரி வர்மன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையிலான மற்றும் வெளிப்படையான விசாரணை மே���்கொள்ளப்பட்டு, உண்மைகள் முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, சட்ட உதவி மற்றும் பாதுகாப்பை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
அத்துடன், காவல்துறை மற்றும் சிறைத்துறையில் மனித உரிமை பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தி, கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தி, இதுபோன்ற உயிரிழப்புகள் இனி ஒருபோதும் நிகழாத வகையில் விரிவான சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மனித உயிரின் மதிப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவதற்காக சபரி வர்மன் உயிரிழப்பு வழக்கில் விரைவான, பாரபட்சமற்ற மற்றும் நம்பகமான நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
16/07/2026
#JusticeForSabariVarman #EndCustodialDeaths #CustodialViolence #HumanRights #PoliceReforms #PrisonReforms #TamilNadu #JusticeForAll #MMK #SayNoToCustodialTorture
#காவல்படுகொலைகள் #காவல்சித்ரவதை
அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு நியமன உறுப்பினரை நியமிப்பது கவலைக்குரியது
மனிதநேய மக்கள் கட்சி தலைவர��ம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா. வெளியிடும் அறிக்கை
தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு நியமன உறுப்பினரை சேர்க்கும் முடிவு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உயர்கல்வித் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதன் பெயரில் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி மற்றும் மாநிலங்களின் அரசியலமைப்புச் சார்ந்த உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது.
இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் மாநில அரசின் பங்கு குறைக்கப்படும் வகையிலான எந்த நடவடிக்கையும் கூட்டாட்சியின் மாண்புகளுக்கு எதிரானதாகும். உயர்கல்வி நிறுவனங்கள் அரசியல் மற்றும் அதிகார மோதல்களின் களமாக அல்லாமல், அறிவியல் சிந்தனை, ஆராய்ச்சி மற்றும் கல்விச் சிறப்பை வளர்க்கும் சுயாட்சியான கல்வி மையங்களாகத் திகழ வேண்டும்.
துணைவேந்தர் நியமன நடைமுறை முழுமையாக வெளிப்படைத்தன்மை, தகுதி, கல்விசார் அனுபவம் மற்றும் நேர்மையின் அடிப்படையில் அமைய வேண்டும். எந்த ஒரு தரப்பிற்கும் அளவுக்கு மீறிய ஆதிக்கத்தை வழங்கும் நடைமுறைகள் உயர்கல்வியின் தரத்திற்கும், பல்கலைக்கழகங்களின��� சுயாட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, தமிழக அரசு மாநிலங்களின் உரிமைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை உறுதியா��ப் பாதுகாக்கும் வகையில் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும். உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல; கல்விசார் சுதந்திரம், திறமை மற்றும் கூட்டாட்சிக் கொள்கையை மதிக்கும் அணுகுமுறையில்தான் பாதுகாக்கப்படும்.
இப்படிக்கு
எம். எச். ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி,
சென்னை
09/07/2026
#மாநிலஉரிமைகள்
#கூட்டாட்சியைபாதுகாப்போம்
#பல்கலைக��கழகதன்னாட்சி
#உயர்கல்வி
#UGC
#ViceChancellorSelection
#Federalism
#StateAutonomy
#SaveUniversityAutonomy
#ProtectFederalism
#TamilNadu
#HigherEducation
#மனிதநேயமக்கள்கட்சி
#MMK
#Jawahirullah
#EducationPolicy
#AcademicFreedom
#UniversityGovernance
#StopCentralisation
#தமிழகஉரிமைகள்
பரங்கிப்பேட்டையில் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக்கூடாது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
��டலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த கவலை் அளிக்கின்றன.
இதற்காக கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி கோரி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
ஏற்கனவே அந்த பகுதியில் செயல்ப���்டு வரும் எண்ணெய் கிணறுகளில் உற்பத்தி குறைந்து வருவதால் புதிய கிணறுகள் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இத்தகைய திட்டங்கள் கடல்சார் சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக மீன்வள வளங்கள் குறைவதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கடற்பகுதிகள் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். அங்கு மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கடல் நீர் மாசுபாடு, உயிரியல் சமநிலை பாதிப்பு மற்றும் பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கு நீண்டகால ஆபத்தை உருவாக்கும்.
2025ஆம் ஆண்டு இதே போன்ற முயற்சிகளுக்கு எதிராக திமுக அரசு எடுத்த நிலைப்பாடு மக்களால் வரவேற்கப்பட்டது. தற்போதைய அரசும் அதே உறுதியான நிலைப்பாட்டை தொடர வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும், மீனவர்களின் வாழ்வாதார உரிமையும் எந்த நிறுவன நலனுக்கும் பலியாக்கப்படக் கூடாது.
எனவே, பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
இப்படிக்கு,
எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
12/06/2026
#SaveParangipettai
#StopHydrocarbonProject
#ProtectFishermen
#SaveTamilNaduCoast
#NoHydrocarbon
#ProtectMarineLife
#CRZProtection
#StandWithFisherfolk
#EnvironmentFirst
#Parangipettai
#Cuddalore
#தமிழக_கடற்கரை_பாதுகாப்போம்
#மீனவர்_வாழ்வாதாரம்_காப்போம்
#ஹைட்ரோகார்பன்_வேண்டாம்
#சுற���றுச்சூழல்_பாதுகாப்போம்
#பரங்கிப்பேட்டை
#கடல்வளம்_காப்போம்
பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தியாகத் திருநாள் வழிபாட்டில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வின் முறைகேடான தலையீடு வருத்தமளிக்கிறது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா
ச ம உ வெளியிடும் அறிக்கை
தியாகத் திருதாள் (பக்ரீத்) பெருநாளை முன்னிட்டு மாடுகள் மற்றும் கன்றுகளை அறுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவின் விழுமியங்களுக்கு எதிராக அமைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் தமது மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கவும், பரப்புரை செய்யவும், பின்பற்றவும் உரிமை வழங்குகிறது. இத்தகைய அடிப்படை உரிம��கள் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில், பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தியாகத் திருநாள் நடைமுறைகளில் நீதித்துறை தலையீடு செய்வது வருத்தமளிக்கிறது.
தியாகத் திருநாள் எனும் ஈதுல் அழுஹா (பக்ரீத்) என்பது இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) மற்றும் அவரது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தியாக வரலாற்றை நினைவுகூரும் புனித நாளாகும். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் குர்பானி வழிபாடு, திறந்த பொது இடங்களில் அல்லாது, வீடுகள் அல்லது பள்ளிவாசல் வளாகங்கள் போன்ற தனியிடங்களில் மரியாதையுடனும் கட்டுப்பாடுகளுடனும் நடைபெற்று வருகிறது.
மேலும், குர்பானிக்காக பசுக்கள் பயன்படுத்தப்படுவதில்லை; காளைகள் அல்லது ஆடுகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த K. சூர்யா @ சூரிய பிரசாந்த் என்பவர் பசு மாடுகள் மற்றும் பசு கன்றுகளை பொதுவெளியில் பலியிடக் கூடாது என்று தான் மனு செய்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் யாரும் பசு மாடுகளையோ அல்லது பசு கன்றுகளையோ இறைவனுக்கு பலியிடுவது கிடையாது மாறாக பெரும்பாலும் ஆடுகளை அல்லது காளை மாடுகளை மட்டுமே இறைவனுக்��ு பலியிடுகிறார்கள்.
இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள சூரிய பிரசாந்துக்கு உண்மையில் விலங்குகள் மீது அக்கறை இருந்திருந்தால் மே 18 அன்று கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளருக்கு கொடுத்த மனுவில் இந்து கோவில்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஆடு பலியிடக் கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருப்பார். ஒரு மாச்சரிய உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்��� இந்த மனுவை தியாகத் திருநாளுக்கு முந்தைய தினம் நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வு விசாரித்திருக்க தேவையில்லை.
மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில், மக்களின் மத உணர்வுகளையும், பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் மதிப்பதே அ��சியலமைப்பின் அடிப்படை நோக்கமாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிரான இந்த உத்தரவு மேல்முறையீட்டின் மூலம் சீராய்வு செய்யப்பட்டு உரிய திருத்தம் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
மு.ஹி.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
29/05/2026
@CMOTamilnadu
#Cow
#MadrasHighCourt
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil