My father who started a business as a first generation in my family with the help of the Honourable Former Prime Minister NarasihmmaRao's Plan #PMRY. He got the loan from the Tirunelveli Canara Bank and started his new venture and paid the due within the period and got subsidy.
நாளை @TVKVijayHQ அவர்களின் ஜனநாயகன் படம் வெளியாகமல் இருந்தால் #neet க்கு எதிரான எல்லா பிரச்சனைகளும் தீரும் என்றால் முறையிடலாம்.... வன்மத்தை மட்டுமே...!?!? போங்கடா போய் உண்மையா #neet க்கு எதிரா போராடுங்கடா....5 வருஷம் கோமவுக்கு போயிட்டு
Genuine question
Ruling TVK made sure that their stand is ‘Ban Neet’
Today TVK leader condemned police brutality against students and extended their support to the protest
Irundhum yen Chennai protest la Vijay Vijay nu kadichitu irukanunga
இதைத்தான் தலைவா நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது . பெரியாரின் பேரன் என்பதை நிரூபித்து விட்டீர்கள். வரவேற்கிறோம் 👏
ஒரு மிகப்பெரிய போராட்டம் நடக்கும்போது நமது குரல் எப்போதுமே ஒலிக்க வேண்டும்
தளபதி விஜய்க்கு என்று ஒரு மிகப்பெரிய கூட்டமே இருக்கிறது. அந்த கூட்டத்திடம் எப்போதுமே நீங்கள் சிங்கம் மாதிரி நிற்க வேண்டும் @TVKVijayHQ 🫡
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஏராளமான இளைஞர்கள் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். வட மாநிலங்களில் கூட இளைஞர்கள் முதலமைச்சர் விஜய் அவர்களை கொண்டாடுகிறார்கள்.
டெல்லியில் நடக்கும் போராட்டம் சம்பந்தமாக முதலமைச்சர் விஜய் தனது கருத்தை அரசின் சார்பாகவோ அல்லது கட்சியின் சார்பாகவோ கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும் . போராடும் மாணவர்களுக்கு அது மிகப்பெரிய உத்வேகம் மற்றும் பாதுகாப்பாக இருக்கும்
ஏனெனில் இளைஞர்கள் தான் வருங்கால இந்தியா. அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் அவர்களுக்கு துணை நிற்பதும் ஒவ்வொருவரின் கடமை
@TVKVijayHQ@CMOTamilnadu
நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.
மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.
நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
மாணவர்கள் தொடர் பாதிப்பிற்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாவதால் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
தங்கள் குடும்ப உறவினர் பத்திரிகையில் எழுதப்பட்டதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார், ஸ்டாலின் சார். அதுவும் அவருக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது என்பதாலோ என்னவோ, இன்புற்றுக் கோடிட்டுக் காட்டுகிறார். குதூகலிக்கிறார். அதற்கு ஆதரவாகக் கொடியும் பிடிக்கிறார்.
வெகுஜன மக்கள் இயல்பாகக் கூடும் இடங்களான டீக்கடைகளிலும் சலூன் கடைகளிலும் சைக்கிள் கடைகளிலும்தான் திமுக வளர்ந்தது என்று பெருமை பேசும் திமுகவிற்கும் ஸ்டாலின் சாருக்கும் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். மேலே குறிப்பிடப்பட்ட அந்தக் கடைகளில் எல்லாம் பொதுமக்கள் வெகுவாகப் படிக்கும் பாரம்பரியப் பத்திரிகை, தினத்தந்தியும்தான். அந்தத் தினத்தந்தியில் எழுதப்பட்ட தலையங்கங்களை எல்லாம் ஸ்டாலின் சார் படித்ததே இல்லையோ? ஒருவேளை, அவை எல்லாம் ஸ்டாலின் சாருக்குப் புரிகிற மொழியில் எழுதப்படவில்லையோ?
இருந்தாலும் ஸ்டாலின் சாருக்கு ஒரு நினைவூட்டல். மனசாட்சி உள்ள மக்களாட்சியான நம் டிவிகே ஆட்சி வந்த பிறகுதான், ‘ஊழலின் ஊற்றுக்கண் அடைக்கப்படுகிறது’ என்று தினத்தந்தி தலையங்கம் எழுதியது. அது மட்டுமா எழுதியது? தவெக ஆட்சி வந்த பிறகு ‘அரசு அலுவலகங்களில் நேர்மை வாசனை வீசத் தொடங்கிவிட்டது’ என்றும் ஒரு தலையங்கத்தில் சொன்னது. ‘லஞ்சம் இல்லாத ஒரு புதிய விடியல் தொடங்கியது’ என்றும் இன்னொரு தலையங்கத்தில் குறிப்பிட்டது.
திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்கு வன்மத்தை ஊட்டி வளர்த்து, ஆபாச அர்ச்சனையைச் செய்ய வைத்துவிட்டு, இப்போது அதற்கு வக்காலத்து வாங்கும் ஸ்டாலின் சாருக்கு, மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நேர்மையான, லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அதனால்தான் திசைதிருப்பும் வேலைகளில் திமுகவை ஈடுபடுத்துகிறார்.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தவெகவின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு. இளைஞர்களால் உருவான அஹிம்சை வழிப் போராட்டத்தை இளைஞர்களின் எஃகுக் கோட்டையான தவெக, 100% ஆதரிக்கத்தானே செய்யும்?
அது நம் மக்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், மாநில அரசுக்கு அதிகாரமே இல்லாதபோதும், ஓட்டு வாங்குவதற்காக நீட்டை நீக்குவோம் என்று பொய் சொல்லி ஏமாற்றியது யார் என்றும் நம் தமிழக மக்களுக்கு இன்னும் நன்றாகவே தெரியும். ஒன்றிய அரசின் மந்திரி பதவிகளுக்காகப் பேரம் பேசுவதில் முனைப்பு காட்டி, இலாகாக்களைப் பெற்று, அதிகார மமதையில் ஆடிய திமுக, நீட் தேர்வே வேண்டாம் என்பதில் ஆரம்பத்திலேயே முனைப்பு காட்டி இருக்கலாமே? ஆனால், அப்படிச் செய்யாமல் இருந்தது ஏன்? தங்களிடம் பதவியும் அதிகாரமும் இல்லாதபோது மட்டும் நீட் போன்ற மக்கள் பிரச்சனைகளில் முனைப்பு காட்டி, திமுக நீலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் அறியாமலா இருக்கின்றனர்?
எல்லாவற்றையும்விடக் கொடுமை என்னவென்றால், டெல்லியில் நடக்கும் இளைஞர் போராட்டத்திற்கு ஏதோ ஒரு வகையில் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ள, திமுக செய்யும் தகிடுதத்த விளம்பர அரசியல், வேடிக்கையிலும் வேடிக்கை. அதைத் திரைப்பட வெளியீட்டோடு எல்லாம் தொடர்புப்படுத்தி, பொறாமையைக் காட்டுவது, திமுகவின் போதாமைக் காலமன்றி வேறென்ன?
சம்பந்தமில்லாத விசயங்களில்கூட மூக்கை நுழைத்து, மூக்கறுபட்டாலும், விளம்பரம் தேடி, விளம்பர மோகத்திலேயே ஊறிக் கிடக்கும் ஸ்டாலின் சாருக்கும் திமுகவுக்கும் இது ஒன்றும் புதிதில்லைதான்.
ஆட்சி, அதிகாரம், பதவி, பவிசு எல்லாம் பறிபோன பிறகு புனித வேடம் போடுவதில் திமுகவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பதை அகிலமே அறியும். ஆனால், இதை அறியாமல் திமுக தன் முகமூடியைத் தானே கழற்றிக்கொண்டு அம்பலப்பட்டு நிற்பதும் தொடர்கதைதான். என்ன செய்ய? விதி வலியதன்றோ?
What began as a demand for accountability has become the collective anger and agitation of a generation that refuses to accept a government which continues to gamble with the futures of millions of young people.
From the streets of Delhi to protests across different states, from artists like @Arivubeing raising their voice against NEET leading up to meeting the @CMOTamilnadu, all students, parents, workers and citizens demanding justice across the country, making it a people’s movement. It reflects a shared angst and demand for accountability from Union Education Minister Dharmendra Pradhan and the Union Government for the repeated failures of our public education system.
The brutal use of violence to crackdown on peaceful protesters only exposes the government’s unwillingness to answer legitimate democratic questions. Repression cannot become a substitute for accountability.
It is equally heartening to witness young people across the Indian diaspora standing in solidarity and raising their voices globally. This struggle belongs to every young person whose future is being placed at stake.
My unwavering solidarity with Brother Azad @BhimArmyChief as he continues his dharna in the parliament premises against this police violence and in defence of our constitutional right to dissent.
This is the time for us as artists, activists, students, trade unions, people’s movements and every citizen who believes in democracy to stand in unequivocal solidarity with the protests unfolding across the country. I urge we raise our voices demanding accountability, justice and a public education system that serves its people not one that repeatedly fails them.
After meeting the @CMOTamilnadu , Therukural Arivu left the Secretariat, where Minister Aadhav Arjuna accompanied him to the exit. Earlier, Arivu had protested outside the Secretariat against the NEET examination.
Rap singer Arivarasu Kalainesan also known as Arivu was detained by police when he along three others staged a protest near TN Secretariat demanding to scrap NEET. Later, Minister Aadhav Arjuna called him to his chamber and heard him. @THChennai