கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்!
இணையத்தின் வாயிலாக இணைந்து கழக பணியாற்றிடுவோம்! 🖤❤️
Follow @DMKITWing WA Channel: https://t.co/QI3qjSNhRP…
#Wing2Point0
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் @dpradhanbjp அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் இதனை ஏற்கிறாரா?
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே,
நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!
On Kargil Victory Day, we pay our heartfelt tribute to the Indian soldiers who displayed extraordinary courage and determination in the face of immense adversity.
We honour those who laid down their lives in the service of India and remain forever indebted to their families.
குடும்ப நண்பர் அன்பிற்குரிய திரு. பாஸ்கர்-கீதா அவர்களின் "ஸ்ரீ ஜெயம்-ரங்கா" HP பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்த இனிமையான தருணம். 🙏💐🙏
The minister’s resignation is a vital, but temporary victory. This nationwide protest must sustain until we achieve deep education reforms. We need an inclusive system where every student…immaterial of caste, religion, or financial capacity, gets an equal opportunity to finish school and choose careers of their interest. School must be a joyful experience, free from entrance exam stress. #BanNEET #StudentPower
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா என்பது இளைஞர்களின் போராட்டத்தின் வெற்றி!
மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய நீட் தேர்விற்கு எதிராக குரல் எழுப்பிய ஒவ்வொரு இளைஞருக்கும் என் வாழ்த்துகள். கல்வி உரிமையை மாநிலங்களிடம் ஒப்படைத்து, நீட்டை முழுமையாக ரத்து செய்வதே ஒன்றிய அரசின் அடுத்த நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
டெல்லியில் நடைபெற்றுவரும் நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்றுவரும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது ஆதரவைத் தெரிவித்தேன்.
நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க, அறவழியில் போராடிவரும் மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
#BanNEET #DMKforStudents #AbolishNEET #SaveStudents
Birthday greetings to BRS Working President Thiru.
@KTRBRS garu.
Wishing you good health, a long life, and continued success in all your endeavours. May the years ahead bring you fulfilment, happiness, and many more milestones in public life.
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் @drramadoss ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக்காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன்.
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!
நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!
கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!
பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
தமிழ்நாட்டில் இன்னொரு #CustodialDeath நடந்துள்ளது.
“இனிமேல் பொதுமக்கள் மேல் காவலர்கள் கை வைக்கவே கூடாது - முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு என தகவல்!” எனும் பொய்ச் செய்திதான் பரப்பப்படுமே தவிர, இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை எழவில்லை.
#Thoothukudi
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?