'திமுக மாடல்'
விளையாட்டு மைதானங்கள், சர்.பி.டி.அரங்கு, அம்மா அரங்குகளை தனியாருக்கு ஒப்படைத்துள்ளது. ரூ93 லட்சம் மட்டும் 'திமுக மாடலுக்கு' செலுத்திவிட்டு ரூ2.3கோடி வருவாய் ஈட்டிக்கொள்ளலாம். வருடாவருடம் 5 சதம் விலை உயர்த்தி வருமானம் ஈட்டித்தரவேண்டும். கால்பந்து மைதானத்தில் விளையாட ஒரு வீரருக்கு, ஒரு மணி நேரத்திற்கு ரூ120 தரவேண்டும். இத்தகைய சிறப்பான தனியார் மயத்தை 'திமுக மாடல்' அரசு உருவாக்கியுள்ளது.
இதே கீழ்ப்பாக்கம் அரசுமனநல மருத்துவமனையை தனியாருக்கு தாரை வார்ப்பதாக அறிவித்திருக்கிறது திமுக அரசு.
தனியார்மயம் என்பதே திராவிடர் இயக்கக் கொள்கைக்கு எதிரானது. பொதுசொத்தை தனியாரின் லாபத்திற்கு தாரைவார்ப்பதை தந்தை பெரியார் ஏற்றதில்லை. திராவிட மாடல் என்பது தனியாரின் வசமிருந்த சேவைகளை மக்கள்வசம் மாற்றிய சாதனைகளை கொண்டது. தனியார் மயம் என்பது பார்ப்பனிய மாடலாக மட்டுமே இருக்க இயலும். இது திராவிட மாடல் அல்ல, மாறாக இது திமுக மாடல். பாஜக-காங்கிரஸின் பார்ப்பன-பனியா தொழில்கொள்கையின் பக்கம் 1990களில் திமுக சரிய ஆரம்பித்து இன்று ஆரியமாடலாக மாறியுள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகளை தண்டம் கட்ட வைத்து சம்பாதிக்கிறது திமுக அரசு. ஏழை வீடுகளை இடித்து சென்னையை அழகுபடுத்துவதாக வெளியேற்றுகிறது. மறுபுறம், தூய்மைப்பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைத்து வதைக்கிறார்கள். செவிலியர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு பேராசிரியர்கள் என பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு தவிக்கவிட்டுள்ளனர். இந்த பட்டியல் நீளமானது.
இப்படியான திராவிட கொள்கைக்கு எதிரான ஆட்சியை செய்வதற்கு எதற்காக திராவிடத்தையும், பெரியாரையும் முன்னுக்கு வைக்கிறது திமுக?
சொத்துக்குவிப்பும், தொழிலாளர் விரோதமும், மாஞ்சோலை முதலாக பெருமுதலாளி ஆதரவும் கொள்கையென கொண்டபின் எதற்காக பெரியாரை தூக்கிக்கொண்டு வருகிறார்கள்?
2014-2019 வரையான மோடி ஆட்சிக்காலத்தில் பெரியாரை இழிவு செய்து சங்கிகள் வெறியாட்டம் ஆடமுயன்றபோதெல்லாம் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட செயலாளர்களும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கொட்டத்தை எதிர்த்து வாய்திறந்ததில்லை, போராட்டத்திற்கு மக்களை திரட்டியதில்லை. அன்றய அதிமுக கூட்டணியில் எம்.எல்.ஏவாக இருந்த தோழர் அன்சாரி அவர்கள் பெரியார் படம் பதித்த டி-ஷர்ட் அணிந்து சட்டமன்றத்தில் தனது கூட்டணி கட்சிக்கு எதிராக முழக்கமிட்ட போதுகூட அமைதிகாத்தது திமுக.
இன்று பாஜகவை எதிர்த்து பேட்டியளிக்கும் திமுகவின் சட்டமன்ற/அமைச்சர்கள் அன்றய காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் அதிமுகவின் திராவிட எதிர்ப்பு-பெரியார் எதிர்ப்பு போக்குகளுக்கு கடுமையாக எதிர்த்து மக்களை திரட்டவுமில்லை. திமுகவின் திடீர் 'திராவிட பாசம்', தமிழகத்தில் எழுந்த பாஜக-ஆரிய எதிர்ப்பு அலையில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக மட்டுமே உருவானது. பழனி முருகன் திருவிழாவில் அர்ஜூன் சம்பத்திற்கு அமைச்சர் வரவேற்றதும், அந்த சமூகவிரோதி மீது கொலைமிரட்டல் விடுத்ததற்காக வழக்கு பதியாததும், மார்வாடி முதலாளிக்காக மாஞ்சோலை தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டதும், சாம்சங் முதலாளிக்காக தொழிலாளர்களை வீடுவீடாக கைது செய்ததும் என 'திராவிட எதிர்ப்பு' அரசியலை மிகச்சிறப்பாக செய்கிறது திமுக அரசு.
தனியார்மய கொள்கையை கைவிடாமல் போகுமெனில் மக்கள் விரோதத்தை திமுக சம்பாதித்துக்கொள்ளும். மக்கள் போராட்டங்கள் எழும். மே17 இயக்கம் மக்களுடன் போராட்ட களத்தில் நிற்கும்.
வள்ளுவர் கோட்டத்தில் எழுச்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுபினர் முனைவர் தோழர்.திருமா அவர்களின் தலைமையிலும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், தோழர் பேரா.ஜவாஹிருல்லா அவர்கள், விசிகவின் சட்டமன்ற உறுப்பினர்களான தோழர் ஆளூர்ஷானவாஸ், தோழர் பாலாஜி, தோழர் பனையூர் பாபு, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர், பொதுச்செயலாளர் தோழர் ரவிக்குமார், தோழர் வன்னி அரசு, தோழர் பாவரசு, தோழர் பாலசிங்கம் ஆகிய விடுதலை சிறுத்தைகளின் மூத்த பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்க இசுரேல் அரசை கண்டித்த ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடந்தது. இதில் மே17 இயக்கத்தின் சார்பாக விரிவான உரையை பதிவுசெய்தேன்.
@thirumaofficial@VanniKural@jawahirullah_MH@aloor_ShaNavas@WriterRavikumar
சங்கிகள் திமுக அரசுக்கு நற்சான்றிதழ் கொடுப்பதிலிருந்து என்ன தெரிகிறது?
*நாம் சாம்சங் தொழிலாளர் பக்கம் நிற்க வேண்டும் என்று.
தொழிலாளர் கோரிக்கை வெல்லட்டும்!