தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் #MekedatuDam விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.
ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.
நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.
@CMOTamilNadu அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?
ஆட்சிக்கு வரும் முன் தமிழகத்தின் கல்வி மற்றும் மருத்துவத்தை குறைசொல்லிவிட்டு இப்போது அவர்களே சிறப்பாக உள்ளது என்கின்றனர்.
பொய் நீண்டநாள் நீடிக்காது 🔥
நீங்கள் சொன்ன மொத்த பொய்யும் ஒருநாள் அம்பலமாகும்.
#TVKVijayFails
Aug 3 ஆடிப்பெருக்கு தமிழ்நாட்டு வரலாற்றில் ஆடிப்பெருக்கன்று காவிரியில் தண்ணீர் இல்லாமல் இருந்ததே கிடையாது
ஆடிப்பெருக்கென்று தண்ணீர் இல்லாத காவிரினு Headline வந்திரக்கூடாதுனு diversion politics பண்ணி மக்கள ஏமாத்ததான்
விஜய் Aug 3 கர்நாடக செல்ல திட்டமிருந்தார்
Worst CM 🤦🤦🤦
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கர்நாடகா அழைக்கவில்லையாம்! பேச்சு வார்த்தைக்கு அழையுங்கள் என்று தமிழ்நாடுதான் தலைமைச் செயலாளர் மூலம் கோரிக்கை வைத்ததாம்!
நீண்ட சட்டப் போராட்டமும், தீர்ப்புகளும் நமக்கு சாதகமாக இருக்கும் தமிழ்நாட்டின் உயிர் பிரச்சனையில் என்ன கேலிக்கூத்து இது?
பல்லடம்: விளை நிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் - இழுத்துச் சென்று கைது செய்த போலீசார்
முன்னெச்சரிக்கையாக பல விவசாய சங்க நிர்வாகிகள் இன்று காலையிலேயே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Palladam | #FarmersProtest
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...
முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.