இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இந்த இன்னொரு முயற்சி உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
- தவெகவின் செயற்குழுவில் இயற்றப்பட்ட 21வது தீர்மானம் (03.11.24)
அன்றைக்கு தவெகவின் செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக, அத்திட்டத்துக்கென முந்தைய காலத்தில் வாங்கப்பட்ட 5 ஆண்டுகால அனுமதி 10 நாட்களில் காலாவதி ஆக இருந்த நிலையில், ஓராண்டுக்கு அனுமதியை நீட்டித்து இருக்கிறது தவெக அரசின் இயற்கை வளத்துறை.
இதன்மூலம், அத்திட்டம் உயிர்பெற்று, செயலாக்கம் பெறும் அபாயம் இருக்கிறது.
அனுமதி கொடுத்த 'புண்ணியவான்' இயற்கை வளத்துறையின் அமைச்சர் பிரபு.
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளை சுரண்டும் IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணையை புதுப்பித்திருக்கிறது மக்கள் விரோத தவெக அரசு
இந்த விரிவாக்கத்தால் ஏற்படும் சூழலியல் விளைவுகளை தாண்டி நம் மக்கள் சந்திக்கப் போகும் இன்னல்கள் ஏராளம். ஏற்கனவே பாறைகளை கடத்தும் கனரக வாகனங்களால் விபத்துகளும் மரணங்களும் தொடர்கதையான நிலையில் இப்போது மற்றுமொரு பேராபத்து காத்திருக்கிறது.
முழு காணொளி
https://t.co/PhXtnCrTvr
காரைக்குடி தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத் தலைவர் அன்புத் தம்பி சுரேஷ் சத்தியநாதன் அவர்களின் தாயார் ச.சந்தன மேரி அவர்கள் இன்று (21-06-26) மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தாயாரை இழந்து வாடும் தம்பி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ச.சந்தன மேரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
கண்ணீர் வணக்கம்!
அமீரக செந்தமிழர் பாசறையின் துணைத் தலைவர் சகோதரர் திரு. சுரேஷ் சத்தியநாதன் அவர்களின் பாசமிகு தாய்,
தெய்வத்திரு ச. சந்தனமேரி அம்மாள் அவர்கள் இன்று (21.06.2026) ஞாயிற்றுக்கிழமை காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
சகோதரர் மற்றும் குடும்பத்தாருக்கு அமீரக செந்தமிழர் பாசறை துணை நின்று, அம்மாவிற்கு எங்கள் கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறோம்🙏🏼😢.
@sureshsathianathan
@seeman4tn_official
#செந்தமிழர்பாசறைஅமீரகம்
#நாம்தமிழர்கட்சி
#ntkitwing
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று!
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது.
கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட!
தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன்.
தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு!
மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு!
“ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்,
கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்,
உன்னத கொடையாம் குருதிக்கொடை!”
என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldBloodDonorDay
தவெகவின் நிதித்துறை அமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட மரியா வில்சன் அவர்கள் அத்துமீறி வீட்டிற்குள் சென்று தாக்கும் காணொளி வைரலாக பரவுகிறது....
இந்த காணொளியில் உள்ள நபர் வேறு , தவெகவின் நிதி அமைச்சர் வேற நபர் என்று தவெக கட்சியினரால் இணையத்தில் பரப்பப்படுகிறது...
மரியா வில்சன் அவர்கள் தாக்கல் செய்த Affidavit ல் தேடிப்பார்த்தாலே இந்த வழக்கு விபரம் உள்ளது...
இந்திய தண்டனை சட்டம் 448, 427, 324, 294b, 506(i), 34
எதற்காக இந்த சட்டப்பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று பார்த்தல் அந்த காணொளி உண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ள முடியும்...
இந்திய தண்டனைச் சட்டம் (IPC) கீழ் உள்ள இந்த பிரிவுகளின் பொருள்:
IPC 448 – வீட்டில் அத்துமீறி நுழைதல் (House Trespass)
ஒருவரின் அனுமதி இல்லாமல் வீடு அல்லது தனியார் இடத்துக்குள் சட்டவிரோதமாக நுழைவது.
தண்டனை: 1 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
IPC 427 – சொத்து சேதப்படுத்தல் (Mischief causing damage)
₹50-க்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கு சேதம் விளைவிப்பது.
உதாரணம்: வாகனம் உடைத்தல், பொருட்களை சேதப்படுத்துதல்.
தண்டனை: 2 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
IPC 324 – ஆபத்தான ஆயுதத்தால் காயப்படுத்துதல்
கத்தி, கம்பி, கண்ணாடி, தீ போன்ற ஆபத்தான பொருளால் ஒருவருக்கு காயம் ஏற்படுத்துதல்.
தண்டனை: 3 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
IPC 294(b) – ஆபாச வார்த்தைகள் / கேவலமாக பேசுதல்
பொதுமக்கள் இருக்கும் இடத்தில் கேவலமான அல்லது ஆபாசமான வார்த்தைகள் பேசுதல்.
தண்டனை: 3 மாதம் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
IPC 506(i) – மிரட்டல் விடுதல் (Criminal Intimidation)
ஒருவரை பயமுறுத்தும் வகையில் மிரட்டுவது.
உதாரணம்: “கொன்று விடுவேன்”, “தாக்கிவிடுவேன்” போன்ற மிரட்டல்கள்.
506(i) என்பது சாதாரண குற்ற மிரட்டலை குறிக்கும்.
தண்டனை: 2 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
IPC 34 – ஒரே நோக்குடன் குழுவாக செய்த குற்றம்
பலர் சேர்ந்து ஒரே திட்டத்துடன் குற்றம் செய்தால், அனைவருக்கும் பொறுப்பு இருக்கும்.
இது தனி குற்றம் அல்ல; மற்ற பிரிவுகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படும்.
இவர் செய்த குற்றத்திற்கான காணொளி ஆதாரம் பொதுவெளியில் உள்ளது... வழக்கு விசாரணை நடந்துகொண்டுள்ளது...
விரைவில் நீதித்துறை முன்பு தக்க தண்டனை கிடைக்குமென்று நம்புவோம்...
தமிழ்நாட்டின் உட்சபட்ச சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் திருமாவளவன்.
ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி சென்னையில் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை 18 ஆம் தேதி முடித்துக் கொண்டார். உண்ணாவிரதப் போராடத்தை முடித்துக் கொண்ட பின்னர் திருமாவளவன் பேசுகையில்,
காங்கிரசுடன் இனி எந்தவிதமான உறவையும், எக்காலத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வைத்துக்கொள்ளாது. காங்கிரஸ் கட்சியை விட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 மடங்கு பலமானது என்றார், காங்கிரசை ஒழிப்பேன் என்றும் ‘வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவேன்’ என்று சபதமிட்டார். ஆனால் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே காங்கிரசோடு கூட்டணி வைத்து மேடையில் மைக் பிடித்து 'அன்னை சோனியா வாழ்க' என காங்கிரஸ் தொண்டரை விட விசுவாசமான அடியாளாய் மாறி கூவினார்.
ஒரு பக்கம் ஈழ ஆதரவு வேஷம் போட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் ஈழ எதிர்ப்பாளர் ஹிந்து ராமுக்கும், கே.எஸ். அழகிரிக்கும் விருது கொடுப்பார். ஒரு பக்கம் அணு உலை எதிர்ப்பு பேசுவார் இன்னொரு பக்கம் அணு உலை திறக்க முழு வேலை செய்த காங்கிரஸ் அமைச்சர் நாராயணசாமியை தன் பிறந்தநாளுக்கு தலைமை தாங்க வைப்பார். பெரியார் திடலுக்கு போய் வீரமணியோடு உறவாடுவார் அப்படியே போய் ஈஷா சத்குருவோடு பேட்டியில் இருப்பார். அந்நிய முதலீட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்ப்பேன் ஆனால் காங்கிரஸ் அரசை ஆதரிப்பேன் என்பார். மூவர் தூக்கு ரத்து செய்ய போராட்டத்தில் ஒரு பக்கம் கலந்துகொண்டு இன்னொரு பக்கம் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு பிரச்சாரம் செய்வார். இல்லாத திராவிடத்திற்கு மாற்று தமிழ்த்தேசியம் என்பார் அப்படியே யூடர்ன் அடித்து தமிழ்தேசியம் என்று ஒன்று இல்லை என்பார். விஜயகாந்திற்கு அம்பேத்கார் பற்றி என்ன தெரியும் என்று பேசியவர் சில வருடம் கழித்து வாழும் அம்பேத்கராக விஜயகாந்த் தெரிகிறார் என்றார். இப்படி இன்னும் ஓராயிரம் இருக்கிறது அவரின் சந்தர்ப்பவாத அரசியல்..
இப்படியான திருமாவிற்கு திகவினரும் திமுகவினருக்கு விட்ட ஃபயரும் சிதறவிட்ட சில்லறைகளும் கொஞ்ச நஞ்சமில்லை. இன்றைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு திருமாவை சந்தர்ப்பவாதி என பதிவிடுகிறார்கள். இதையே நாங்கள் சொல்லும் பொழுது சாதிவெறியன் என்று பட்டம் கட்டிய இந்த வெங்காயங்கள் இன்று அதே பட்டத்தை வாங்க லைனில் நிற்கிறார்கள்.
உபிஸ்... வாழ்க்கை ஒரு வட்டம் டே..
வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
பொருளாதார தேடலுக்காக புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்கள் எல்லா பள்ளிகளிலும் தமிழை கற்க முடியாத சூழலில், அவர்களுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் எனும் உயர்ந்த இலக்கிற்காக பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும், தமிழ் மொழி காக்கும் இவ்வுயரிய பணியைச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், 'புதிய விடியல்' நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் உங்களின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!!!
தமிழர்கள் தங்கள் மொழி, நிலத்திற்காக போராடியவர்கள்; பயங்கரவாதிகள் அல்ல. அவர்களின் தியாகம் நம் ஒற்றுமையின் வித்து. உரிமைக்காக எரிந்த அவர்களின் கனவு நம்மை ஒன்றிணைக்கட்டும். நீதிக்காக குரல் கொடுப்போம்! #தமிழினப்_பேரெழுச்சிநாள்2026#TamilsGenocideDay2026
வெறும் பணத்துக்காக, ஓட்டுக்காக அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில்....
மக்கள் தேர்தல் அரசியலில் புறக்கணித்த போதும்
எம் மக்களின் உரிமைக்காகவும், உணர்வுக்காகவும் களத்திலே நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி...
நாங்கள் ஓட்டுக்கானவர்கள் அல்ல,
இந்த நாட்டுக்கானவர்கள்...
இந்த மக்கள் ஒரு நாள் எங்களை தேடுவார்கள்...
அவர்களுக்காக அப்போதும் நாங்கள் காத்திருப்போம்...
புரட்சி வெல்லட்டும்!
நாம் தமிழர்!
#நாம்தமிழர்கட்சி
#ntkitwing
#செந்தமிழர்பாசறைஅமீரகம்
#செந்தமிழர்பாசறைவளைகுடா
#செந்தமிழன்சீமான்
நாம்தமிழர் கட்சியின்
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மற்றும் சுற்றுசூழல் பாசறைஇணைந்து வருகின்ற பருவ மழை துவக்கத்தில், வன விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 1,00,000 (ஒரு லட்சம்) பலதரபட்ட விதைகளை அடர் காடுகளுக்குள் தூவ இருக்கிறோம்.
உறவுகள் விதைகளை சேமித்து இந்த மாபெரும் வரலாற்று நிகழ்விற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தங்களது வீடுகளில் உள்ள மா விதை,பலா விதை,கொய்யா விதை.போன்ற பலதரபட்ட விதைகளை சேமித்து கீழ்க்காணும் பொறுப்பாளர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்...
கரு செல்வக்குமார்
(கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை) 9585783098
யசோதரன் (சுற்றுசூழல் பாசறை) 6369465714
ஒரு மாத காலமே உள்ள நிலையில் உறவுகள் இந்த முன்னெடிப்பிற்கு உதவுங்கள்
எங்களை அழைத்தால் உங்களிடமே வந்துசேகரித்துகொள்கிறோம்
நன்றி 🙏🏻
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை.
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப் பாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்தியதையடுத்து இன்று 28-04-2026 பிற்பகல் படப்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
மூன்று மாநிலத் தேர்தல்
முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில்
சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில்
கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம்
முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்?
மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா?
யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க,
கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது.
ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஒரு தலைவனின் அயராத பயணம், ஒரு இனத்தின் விழிப்புணர்வு!
தேர்தல் பரப்புரை பயணம்:
தொடங்கிய தேதி: 23/03/26
முடிவடைந்த தேதி: 21/04/26 மாலை 6 மணி வரை
அண்ணன் சீமான் கடந்து வந்த பாதை:
மொத்தமாக பயணித்த தூரம்: 9,676 கிமீ
பங்கேற்ற மொத்த கூட்டங்கள்: 178
மொத்தமாக பேசிய நிமிடங்கள்: 10,680
ஆங்கில ஊடகப் பேட்டிகள்: ✓
பத்திரிக்கையாளர் சந்திப்புகள்: ✓
கட்சி ஆலோசனைகள்:
பரப்புரை காணொளி ஆலோசனைகள்:
பொதுமக்கள் நேரடி சந்திப்புகள்: ✓
ஓய்வில்லாமல் தமிழ் நாட்டை குறுக்கு வெட்டாக பயணித்த ஒரே தலைவர்:
அண்ணன் சீமான்