Banger of a song 🔥🔥
'மனைவி ரெடி' படத்துல வர்ற bit song இது. இந்த பாட்டு படத்தோட ஆல்பத்துல இருக்காது, அதுனால நிறைய பேருக்கு தெரியாம போயிடுச்சு. Beat-லாம் மொரட்டுத்தனமாக இருக்கும். ராஜா சார் செம்ம ஜாலியா பாடிருப்பாரு ❤️
தாய் மாமன் vs தாமரைக்கனி : கவுண்டமணி 1994-ல் சொன்ன காமெடி, 1989-1999 வரை நிஜமான கதை
இன்றைய Gen-Z பசங்களுக்கு தாய் மாமன் படம் ஒரு reels meme template. ஆனால் 1994-ல் அது தமிழ்நாட்டு அரசியலை அப்படியே கிழித்து தொங்கவிட்ட அரசியல் நையாண்டி.
1. அந்த Dialogue என்ன?
படத்தில் சத்யராஜ் வேலையில்லாமல் இருப்பார். கவுண்டமணி ஐடியா கொடுப்பார்:
"பேசாம எம்.எல்.ஏ ஆயிடு. அதுக்கு படிப்பே தேவையில்லை. இப்ப சட்டசபைக்கு ஆள் எடுக்குறது மிலிட்டரி செலக்ஷன் மாதிரி. நீ எத்தனை பேரை அடிப்ப? கோபம் வந்தா 50, வராட்டி 20னு சொன்னா, பாதி அசெம்பிளியை புடிச்ச மாதிரி. முன்னாடி எத்தனை ஆள் ஜெயிக்கிறாங்கன்னு பார்த்தாங்க, இப்ப ஒருத்தன் எத்தனை ஆளை அடிச்சு சமாளிக்கிறான்னு பார்க்கிறாங்க"
2026-ல் கேட்டால் இது டார்க் காமெடி மாதிரி இருக்கும். 1994-ல் இது நிஜம்.
2. அந்த நிஜம் யார்? - ஆர். தாமரைக்கனி
ஸ்ரீவில்லிபுத்தூர்காரர். MGR-ன் தீவிர விசுவாசி. 1977, 80, 84-ல் அதிமுக-வில் ஜெயித்தவர். ஆள் வாட்டசாட்டம், பேச்சு குறைவு, அடி அதிகம்.
அவரோட Resume-வை பாருங்க, கவுண்டமணி dialogue-க்கு அப்படியே பொருந்தும்:
1989 - Goondas Act:* திமுக ஆட்சியில் குண்டர் சட்டத்தில் கைது. காரணம் "ஆபத்தான நபர்". மனைவி சுப்ரீம் கோர்ட் வரை போய் வெளியே கொண்டு வந்தார்.
1991 - சுயேட்சை Formula: கவுண்டமணி சொன்னது போலவே, 1991-ல் ஜானகி அணியில் இருந்து விலகி சுயேட்சையாக நின்று ஜெயித்தார். ஜெயலலிதா உடனே அவரை அதிமுக-வில் சேர்த்து சட்டசபை கட்சி தலைவராக்கினார். "அடையாளம் வச்சுக்கிறாங்க" - அதே தான்.
1991-1993 - சட்டசபைக்குள் அடிதடி ஆரம்பம்: ஆளுநர் உரையின்போது பண்ருட்டி ராமச்சந்திரன் தோளில் ஓங்கி தட்டியதற்கு 3 நாள் சஸ்பெண்ட். 1993-ல் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்லக்குமார் மீது தாக்குதல்.
1999 - Climax: பட்ஜெட் விவாதத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசும்போது, நேராக போய் முகத்தில் குத்து. மோதிரம் கிழித்து மூக்கில் இருந்து ரத்தம். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றிலேயே ஒரு அமைச்சர் சபைக்குள் ரத்தம் சிந்திய கடைசி சம்பவம் இதுதான். திமுக எம்.எல்.ஏக்கள் திருப்பி அடிக்க, வாட்ச் அண்ட் வார்டு வந்து காப்பாற்றியது. 15 நாள் ஜெயில்.
3. இன்றைய தலைமுறைக்கு ஏன் இது முக்கியம்?
90-களில் எம்.எல்.ஏ என்பது கவுண்டமணி சொன்னது போல "எத்தனை பேரை அடித்து சமாளிக்கிறான்" என்பதுதான் தகுதி. படிப்பு, கொள்கை எதுவும் இல்லை. தாமரைக்கனி போன்றவர்கள் அதன் உச்சம்.
கவுண்டமணி காமெடி என்பது வெறும் காமெடி அல்ல. அது ஒரு Political Warning. "இப்படிப்பட்ட ஆளுங்களைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்" என்று 1994-லேயே சொன்னார். தாமரைக்கனி அதை 1999- வரை நிரூபித்தார்.
அதனால் தான் இன்றும் அந்த ரீல்ஸ் வைரல் ஆகிறது.
எண்பதுகளின் எளிமையும், கம்பீரமும் என்றுமே போற்றத்தக்கது. இந்த வீடியோ ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. உதிரிப்பூக்களுக்காக மகேந்திரன் விருது வாங்குகிறார் என்பதால், அனேகமாக இது 1980 அல்லது 81ஆம் ஆண்டு நிகழ்ந்த விழாவாக இருக்கலாம். முழுமையாக வீடியோவைப் பார்த்தால் நடிகை ஜெயலலிதாவையும், அன்றைய இளம் நடிகர் கமல்ஹாசனையும் பார்க்கலாம். அன்று பிரபலமாக இருந்த பலரும் இன்று அடையாளம் கூட அறிந்துக் கொள்ள முடியாதவர்களாக ஆகியிருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே என்றும் மின்னும் நட்சத்திரமாக மிளிர்கிறார்கள்.
நல்லவர்களுக்கு நல்ல சாவு என்பதெல்லாம் பொய்.
கர்ணனுக்கு நல்ல சாவு இல்லை.
இயேசுவிற்கும் நல்ல சாவு இல்லை.
காந்திக்கும் நல்ல சாவு இல்லை.
நமக்கு நல்ல சாவு வரும் என்பது முட்டாள்தனமா?
இல்லை கர்ணனும் இயேசுவும் காந்தியும் கூட நல்லவர்கள் இல்லையா என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
உடன் படித்தவர்கள் பணி புரிந்தவர்கள் என்று ஒவ்வொருவராக இறந்து கொண்டு போகிறார்கள் மரணத்தைக் கண்டு அச்சமும் இல்லை பயமும் இல்லை அது வரும் போது நான் இருக்கப் போவதில்லை.
எப்படி நிகழும் எப்போது நிகழும் என்பது தெரியவில்லை என்றாலும் எனக்கும் நிகழும் என்பது தெரியாமல் இல்லை மரணம் என்பது பிறக்கும் போதே இறக்கும் தேதி குறிக்கப்பட்டு பிறந்திருக்கிறோம்.
என்ன ஒன்று?
மிகப்பெரிய மனிதர்கள் இறந்து விட்டாலே ஒரு சில நாட்களில் மறந்து போகும் குடும்பத்தினரும் இவ்வுலகத்தினரும் நம்மை மட்டும் நினைவு வைத்துக் கொள்வார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் இல்லையா.
ஒரு சில மணித்துளிகள் ஆவது நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஓட்டமும் நடையும் மக்களுக்கான பாதையில் வேறு எதுவும் இல்லை என்னிடத்தில் எதிர்பார்ப்புகள்.
உங்களை எதிர்த்து நிற்கும் துரோகிகளை கண்டு நீங்கள் அஞ்சியும் நிற்காதீர்கள் அடிபணிந்தும் நிற்காதீர்கள் உங்களுக்கும் அவர்களுக்கும் உயிர் ஒன்றுதான் என்பது நினைவு இருக்கட்டும் அது இறைவன் நினைத்தால் மட்டுமே உங்களிடத்தில் இருந்து உங்கள் உயிரை எடுக்க முடியும்.
துணிவுடன் செயல்படுவோம் நமக்கான பாதையில் நாம் பயணித்துக் கொண்டே இருப்போம் அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் அறம் சார்ந்த வழியில் சுமுகமான முறையில் நமது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்வோம் வாழ்ந்துதான் பார்க்கலாமே நமக்கான வாழ்க்கையை.
நீங்களும் வாழ வேண்டும் நாங்களும் வாழ வேண்டும் எங்களையும் வாழ விடுங்கள் இறைவன் கொடுத்திருக்கும் இந்த அற்புதமான ஆன்மாவை மனித பிறவியை மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வாழ்ந்து விட்டு செல்லலாமே.
வாழு வாழ விடு.
மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்று பகுத்துப் பாடிய தொல்காப்பியர் கூற்றிற்கேற்ப, தமிழினத்தினுடைய, முல்லை நிலத்தின் இறைவனாகவும், ஆயர் குலத்தின் தலைவனாகவும் இருக்கிற எம்மின இறை மாயோனுடைய பெரும்புகழைப் போற்றுகிற நாள் இன்று.
முதல் திணையான குறிஞ்சி நிலத்திற்கும், மூன்றாம் திணையான மருத நிலத்திற்கும் இடையில் முல்லை நிலத்தில் வாழ்ந்ததால் நாங்கள் ‘இடையர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். அது காரணப்பெயர் தானே தவிர, எங்களின் குடிப்பெயர் ‘கோன்’, ‘ஆயர்’ என்பது தான். முதலில் ‘கோன்’ என்பது முல்லை நிலத்தின் தலைவன் கையில் பெரிய கோலை ஏந்தி நின்றதால் நாங்கள் ‘கோன்’ என்று அழைக்கப்பெற்றோம்.
பிற்காலத்தில் அது அரசன் கையில் செங்கோலாக மாறியது. ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்று பாடலே உள்ளது. ‘கோன்’ என்றால் மன்னன் என்று பொருள். ஆடு, மாடுகளை மேய்க்கும் வேலையை செய்ததால், நாங்கள் ‘மேய்ப்பர்கள்’, ‘ஆயர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். முதன்முதலாக தோன்றியது எழுத்தல்ல, எண் தான். ஆடு, மாடுகளை எண்ணுவதற்காக நாங்கள் எண்களை கண்டுபிடித்தோம். எங்கள் தமிழர் மறை, வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய வாழ்க்கை நன்னெறியில் கூட, ‘எழுத்தென்ப ஏனை எண்ணென்ப’ என்று பாடாமல் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எண்ணை முதலில் வைத்து தான் பாடுகிறது. அப்படி பெருமைப்பட வாழ்ந்த ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.”
“எங்கள் மாயோன் பிற்காலத்தில் ‘கண்ணன்’,’திருமால்’, ‘பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். அதில் ‘மால்’ என்றால் ‘கருப்பு’ என்று பொருள். கருகருவென்று மேகம் கூடி மழையை பொழிந்துவிட்டு மாயமாக மறைந்துவிடுவதனால், மாயவன், மாயோன் என்று அழைத்து நாங்கள் வணங்கத் தொடங்கினோம். எனவே, நாங்கள் வணங்கும் தெய்வத்தை மரியாதையோடு அழைக்க வேண்டும் என்று கருதியதனால் ‘திருமால்’ என்றும், பின்னாட்களில் அதுவே ’பெருமாள்’ என்றெல்லாம் அழைக்க காரணம். ஆரியர்களின் வருகைக்கு பிறகு அதுவே கிருஷ்ணராகி, கிருஷ்ண பரமாத்மாவாக மாறிவிட்டது. ஆனாலும், தமிழ் பிள்ளைகள் நாங்கள் வரலாற்றின் தொன்மத்திலிருந்து தழைக்க விரும்புவதால், ‘மாயோன் பெருவிழா’ என்று கொண்டாடி வருகிறோம்.
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன்.
எங்கள் இறைவன், ஆயர்குல தலைவன், ‘மாயோன்' பெரும்புகழ் போற்றி! போற்றி!’
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி