சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவிலிறங்கிப் போராடவிட்டு, இருக்கும் ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு!
"சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்" என்று தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் முழங்கிவிட்டு, நான்கரை ஆண்டுகளாக வழங்காமல் ஏமாற்றி, இடைநிலை ஆசிரியர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளி, குண்டுக்கட்டாகக் கைது செய்வதோடு, தற்போது போராடும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது எனத் திமுக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதி எண் 181-ஐ வீசி எறிந்ததோடு, தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது.
பல கோடி செலவழித்து "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று நாடக விழா நடத்தத் தெரிந்த @arivalayam அரசுக்கு, சம ஊதியம் வழங்கப் பணமில்லையா? பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என்று முழங்கும் முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கு, அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா?
போராடும் ஆசிரியர்களை முடக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, சம ஊதியம் வழங்கி, மாணவர்கள் நலன் காக்க முனைய வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
"சமவேலை -சம ஊதியம்" என்னும் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாகப் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று கைது செய்யப்பட்ட 996 பேர் மீது வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது.
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிவரும்ஆசிரியப் பெருமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டுமென்பதுடன், அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறேன்.
இதறகென நியமிக்கப்பட்ட ஆணையம் வழங்கியுள்ள அறிக்கையின் படி, ஆறாவது ஊதிய குழல் ல் நேர்ந்த ஊதியமுரண்களைக் களைந்து சம ஊதியம் வழங்கிட அரசு ஆவன செய்யவேண்டுகிறேன். சனநாயகப் பூர்வமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். @mkstalin@CMOTamilnadu
நேற்று போராடும் ஆசிரியரின் கையை உடைத்தது இன்று காலை உடைத்திருக்கிறது ஏவல்துறை!
அறவழியில் போராடியவர்களை அடக்குமுறை செய்வது தான் காவல்துறையின் பணியா உள்துறை அமைச்சர் @mkstalin
?
#தீயசக்தி_திமுக
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறி ஆசிரியர்களை ஏமாற்றி கைது.
பெண்கள் ரெஸ்ட் ரூமிற்கு போக விடாமல் கதவை பூட்டுவது. இது எல்லாம் ஒரு கேடு கொட்ட ஆட்சியால் தான் செய்ய முடியும் .
சென்னையில் வேனுக்குள் தள்ளி ஆசிரியர் கையை உடைத்த போலீசார்.. வலியில் துடிக்கும் அதிர்ச்சி வீடியோ
பொய் சொல்லி மக்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல் ஏவல் துறையை வைத்து அவர்களை அடித்து கையை உடைக்கும் ஸ்டாலின் அரசு . இதற்கு எல்லாம் விரைவில் காலம் பதில் சொல்லும்.
ஆசிரியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியரின் குழந்தையான சிறுவனையும் கைது செய்த காவல்துறை!!🤬
மறுபக்கம் தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்த காவல்துறை!!🤬
@mkstalin உங்க ஆட்சிக்கு நீங்களே குழிய தோண்டியாச்சு
#NoVoteForDMK
சென்னையில் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் : அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்!
தமிழ்நாட்டில் கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி அன்று அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்து ஜூன் 1-ஆம் தேதி அன்று பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நாள் வித்தியாசத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இடையே ரூ.3,170 ஊதிய வேறுபாடு உள்ளது.
அதாவது, கடந்த 2009 ஜூன் 1ம்தேதிக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8370 வழங்கப்படுகிறது. அதே சமயம் அந்த தேதிக்கு பிறகு 2009ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5200 வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக, சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாடுகளை களையக் கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்ற ஆசிரியர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை இந்த பிரச்சினைக்கு முடிவு எடப்பட்டவில்லை என்பது, இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
மேலும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இதுதொடர்பாக ஆய்வு செய்ய 2023 ஜனவரி 1 அன்று, மூன்று பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழு இதுவரை மூன்று முறை மட்டுமே கூடி கருத்துகளைக் கேட்டுள்ளது. ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டிய இந்த பிரச்சினையை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பது ஆசிரியர்களின் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆசிரியர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், பணி நிரந்தரம் செய்தல், ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால், தமிழ்நாடு அரசு போராட்டத்தைக் கலைக்க பேச்சுவார்த்தை நடத்துவது, காவல்துறையின் மூலம் போராட்டங்களை ஒடுக்குவது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
எனவே, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு செவி சாய்த்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தேர்தல் நேரத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடும் ஆசிரியர்களின் கைகளை உடைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா?
பொம்மை முதல்வரே!
கல்வி தரும் கைகளை உடைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா?பொம்மை முதல்வரே...
குற்றவாளிகளை தூக்கி எறிவது போல ஆசிரியர்களை குண்டுகட்டாக தூக்கி எறிவது தான் திராவிட மாடல் ஆட்சியா? பொம்மை முதல்வரே...
பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே, போராடும் ஆசிரியர்களின் கண்ணீரும்,கை உடைந்து வலியில் துடிக்கும் இந்த காட்சியும் விடியா ஆட்சியின் வீழ்ச்சிக்கான முடிவுரையை எழுதும்.
இந்த அதிகார திமிருக்கும்,
அராஜக ஆட்சிக்கும் மக்கள் முடிவு கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
#DMKFailsTN
#ByeByeStalin