அதிகமாக திட்டமிடாதீர்கள்,
நம் வாழ்க்கையின் சில அழகான தருணங்கள் உண்மையில் திட்டமிடப்படாதவை...
மீண்டும் மீண்டும் செய்யப்படும் சிறிய காரியங்கள் தான் பெரிய சாதனைகளுக்கு வழிவகுக்கும்..!
உன்னை ஏமாற்றியவர்களை வெறுத்துக்கொண்டே வாழ்வது உனக்கு நீ கொடுக்கும் தண்டனை,
அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ்வதே உனக்கு நீ கொடுக்கும் விடுதலை...
இந்த Amazon Prime எதுக்கு வச்சிருக்கோம்னே தெரியல. Subscription amount ஏத்திட்டாங்க, Ads கொண்டு வந்துட்டாங்க. இப்போ பல வெளிநாட்டு movies Rent-ல தான் இருக்கு.
Subscription கட்டியும் படம் பார்க்கத் தனியா காசு கொடுக்கணும்னா எதுக்கு இந்த subscription? @PrimeVideoIN
புது படம் என்றால் பரவாயில்லை. 30 வருடங்களுக்கு முன்பு வந்த நல்ல movies கூட இன்று நிறைய Rent-ல் தான் இருக்கிறது.
இப்படியே போனா Prime subscription வச்சிருக்கிறத விட cancel பண்றதே மேல்!
OTT platforms are literally pushing people back towards piracy with their rentals and ads.
கல்வியின் முக்கியத்துவம் புரியாத, எதிர்காலத்தின் மீது சிறு பயமில்லாத, குடும்ப முன்னேற்றதில் பெரிய அக்கறையில்லாத, சேமிப்பின் அருமை தெரியாத, அரசியல் புரிதல் இல்லாத சினிமா வெறி பிடித்தாடும் ஆட்டு மந்தை கூட்டத்தை பார்க்கும் போது, பரிதாபங்கள் மறைந்து பயம் வர ஆரம்பித்து விட்டது..
சிறிய பையன்களைப் பார்த்து பெரியவர்கள் பயந்தால் அது உலகம் முடிவுக்கு வரப்போவதற்கான அறிகுறி என்று அர்த்தம். -
Teach you a lesson - கொரியன் வெப் சீரிஸில் ஒரு வசனம்...
#ParentingTip#FamilyTime
வாழ்வில் தாங்கள் என்னவாக ஆகவேண்டும் என்று குழந்தைங்களையே தேர்ந்தெடுக்க விடுங்கள் என்று சமீப காலமாக அறிவுரைகள் எங்கெங்கும் அள்ளி தெளிக்கப்பட்டு கிடக்கிறது.
இதை பற்றி கொஞ்சம் டீப்பாக ஆராய வேண்டும்.
“ எங்க பையன் கிட்ட இதுதாண்டா படிக்கணும்னு நான் எதுவுமே சொல்லல.. அவனேதான் சூஸ் பண்ண போறான் “
“ அவன் எவ்வளவு மார்க் எடுக்கறான்னு கூட நான் கேக்க மாட்டேன். எவ்வளவு முடியுமோ படி. என்ன புடிக்குதோ அதை பண்ணுன்னு விட்டுடுவேன்”
இது போன்ற கான்வெர்சேஷன்கள் அடிக்கடி கேட்க முடிகிறது.
3 Idiots / நண்பன் படங்களை பார்த்தால் இது போன்ற பெற்றோர்கள் சொல்வது சரிதானே என்று இயல்பாகவே எல்லாருக்கும் தோன்றும்.
அந்த படங்களில் வரும் மூன்று பேருக்கும் தங்களின் நிலை குறித்த விழிப்புணர்வு / ரியலைசேஷன் இருக்கும்.
தனக்கு என்ஜினீயரிங் பிடிக்கும் என்பது மட்டும் அல்ல. ஆசிரியர் சொல்லித்தரும் முன்பே அதை பற்றி படிக்கும் ஆர்வம் மிகுந்த நாயகன்.
இன்னொருவனுக்கு போட்டோகிராஃபியில் நுணுக்கங்கள் அத்துப்படி.
அடுத்தவனுக்கு அவனோட குடும்ப நிலை அறிந்தவன்.
ஆனால், நிகழ்வில் பிள்ளைகள் இந்த அளவுக்கு சூழல் புரிந்தவர்களாக இருப்பதில்லை.
பணம் இருக்கு என்பதற்காக, படிப்பில் கவனம் செலுத்தாமல் உல்லாசமாக திரியும் பல இளைஞர்கள் / இளைஞிகளை நாம் பார்க்கிறோம். அவர்களை எல்லாம் அவர்களின் இஷ்டத்துக்கு படிப்பை / வேலையை தேர்ந்தெடுங்கள் என்று விட்டால் நிலைமை என்னவாகும்?
எனக்கு இன்னது பிடிக்கிறது என்று ஒரு பையனோ / பெண்ணோ சொன்னால், அந்த துறையில் அவனுக்கு உண்மையில் எவ்வளவு ஆர்வம் / நிபுணத்துவம் இருக்கு என்பதை டீப்பாக அனலைஸ் செய்து பார்க்க வேண்டும். தேவை எனில் அந்த துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளை அறிய வேண்டும். அவனுக்கு பிடிச்சி இருக்கு.. அவன் பாத்துக்குவான் என்று விடுவது பல நேரங்களில் சொதப்பி விடும். ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம், அந்த துறைக்குள்ள நுழைந்த பின்னால் தேவைப்படும் கடின உழைப்பால் ஆர்வம் குறைய வாய்ப்பு இருக்கு. இதுபோன்ற சவால்களை குழந்தை தாங்குவானா என்று உறுதி செய்ய வேண்டும். நிச்சயம் இல்லையெனில் புத்திமதி சொல்லி நல்ல படிப்புக்கு அமர்த்த வேண்டும்.
கஷ்டப்படும் ஏழை வீட்டு பையன்கள் குடும்ப சூழ்நிலை புரியாமல் பகட்டான செலவுகள் செய்யும் கதைகள் கண்கூடாக பார்க்கிறோம். அந்த பையன்களை பெற்றோர் கண்காணிப்பில் வைத்து, தகுந்த படிப்பில் சேர்த்து விட்டு போலோ அப் செய்ய வேண்டும்.
உண்மையிலேயே கருத்தோடு இருக்கும் பிள்ளைகளை அவர்களின் போக்கில் விட்டு விடலாம். அப்படியே இருந்தாலும், தான் போலோ செயகிறோம் என்ற நினைப்பை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.
பள்ளிப்படிப்பு முடியும் தறுவாயிலேயே அவர்களை கட்டுப்பாடில்லாமல் விடுவது என்பது ஒழுக்கத்துக்கு, சீரான வளர்ச்சிக்கும் முரணாக அமையலாம்.