பொதுவா Packed Food / FF / Hotel ல நிறைய கெட்டதுனு நம்புறாங்க மக்கள்.. அதிக அளவில் பூச்சி கொல்லி மருந்து போட்டு விவசாயம் செய்யும் போது அந்த மளிகை பொருள வாங்கி வீட்டுல சமைச்சாலும் அதே அளவு விஷம் தான். சக்கரைல சல்பர் இருக்குனு பயப்படுறோம். ஆனா நிறைய பொருள் சல்பர் வச்சி தான் வருது
அரவை முடித்து மொத்தம் 1,27,760 செலவு. இதில் டெஸ்ட் க்கு mattum 9,000.
வைக்கோல் , தவிடு விற்றது 11,000
நிகர செலவு ரூ.1,16,760
கிடைத்த மகசூல்
அரிசி 1,369 கிலோ
நொய் 281 கிலோ
Sortex & Polish இரண்டும் பண்ணல.
மொத்தம் 1650 கிலோ. இப்ப இத என்ன விலைக்கு வித்தா நல்லா இருக்கும்!
முதல் முறை விவசாயம் அதும் பூச்சி கொல்லி பயன்படுத்தாம போன சம்பா 165 சென்ட் நிலத்தில் சிவன் சம்பா நெல் போட்டு 2,610 கிலோ நெல் விளைவிச்சி இருக்கேன். நெல் வீடு வர ரூ.93,260 செலவு ஆச்சு. இத சந்தை படுத்த முடிஞ்சா ஊர்ல நிறைய விவசாயிகளை ரசாயனம் இல்லாமல் பயிர் பண்ண வைக்க முடியும் மக்களே.
80 ரூபாயில் அரிசி வாங்கும் மக்கள் தான் எங்க டார்கெட் கன்சுமர்.. அவங்களால வாங்க முடியும் அளவில் விலை வைக்கணும்.. 80 ரூ க்கு வாங்கும் மக்கள் பூச்சி மருந்து இல்லாத ஆரோக்கியமான அரிசிக்கு எவ்ளோ கூடுதல் விலை கொடுக்க முடியும் சொல்லுங்க..
@mani___dharma அது எவ்வளவு விலைக்கு போகும்.... தரமான அரசின்னு நான் வீட்டுக்கு வாங்குவதே 80 ரூபாய் தான். அதை தாண்டி நீங்க எப்படி இதை விற்க முடியும்? இலாபத்துக்கு வாய்ப்பு இருக்கா?