இதனால் வரும் விளைவுகளுக்கு மொத்த பொறுப்பும் @TVKVijayHQ மற்றும் தீர்பளித்த நீதிபதிகள். @mkstalin சொன்னபடி ஆளத்தெரிய ஆட்சி உச்சநீதிமன்றத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து மதநல்லிணக்கத்தை குலைத்து விட்டது. #CRPF கன்ரோலில் போய்விட்டபின்பு மாநில அரசிற்கு என்ன அதிகாரம்?
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
தவெக அரசின் தங்க கிரீடத்தில் இரு வைர கற்கள்:
1. திருப்பரங்குன்றம்.
கொள்கை தலைவர்கள் - பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் மகிழ்ச்சி.
2. கள்ளக்குறிச்சி.
அஞ்சலை அம்மாள் மற்றும் வேலுநாச்சியார் மகிழ்ச்சி.
இப்பொற்கால ஆட்சியில் மேலும் பல வைரங்கள் பதிக்கப்படும்.
அருமை ப்ரோ.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.
சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
வளர்ந்து கெட்டவர் ஒருவர். அமைச்சரான இவர் கரூர் சம்பவத்தின் போது டேராடூன்க்கு போனார். இவரது பின்னாடியே சென்ற திமுக அரசின் உளவுத்துறை இவருக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதை கண்டுபிடித்தது. டேராடூனில் இருந்த விளையாட்டுத்துறை பெண்ணுக்கு சமீபத்தில் குவா குவா பிறந்தது. குடும்பத்தில் பூகம்பம் வெடித்ததற்கு இந்த குவா குவா தான் காரணமாம்!
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு.
தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய @TVKVijayHQ அரசு.
You can have flat pitches or small boundaries or average bowling, whatever, but what Priyansh Arya has done today takes him to another level. 181(68)! Wow!
யார் இந்த ப்ளூ சட்டை? தமிழக அரசு அதிகாரியா அல்லது கோவில் உயர் நிர்வாகியா?
திருவண்ணாமலை கோவிலில் சாமான்யர்கள் வழிபட பெரும்பாடு பட வேண்டியுள்ளது.
சினிமா நடிகர் ஸ்ரீமன் எனும் நபர் விஜய்யின் நண்பர் என்பதால் இந்த VIP தரிசனமா?
பதில் இருக்கா ரமேஷ்?