மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி சமூகநீதி பேச வேண்டும்; குடிநீதி பேசக் கூடாது !
காலையில் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு செல்பவர்கள் நாற்றத்தை சகித்துக் கொள்ள தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது; அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். இதையெல்லாம் எந்த வகை தத்துவத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பது உண்மை தான். அதற்கான தீர்வு சாக்கடைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை எந்திரமயமாக்கி, அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அடுத்தடுத்த நிலையில் உள்ள பணிகளுக்கு உயர்த்துவது தான் சமூக நீதி!
மாறாக, சாக்கடை தூய்மை செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது மது நீதி. அது மிகவும் ஆபத்தானது.
நாற்றத்தை மறக்க மது தான் தீர்வு என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்?
ஆன்லைன் சூதாட்ட இழப்பு தற்கொலைகள் கூடாது; மன உறுதியுடன் மீண்டு வர போராட வேண்டும்!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிசெல்வம் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மாரிச்செல்வம் அதில் பணத்தை இழந்ததால் ரூ.25 லட்சம் கடனாளி ஆனதாகவும், அதில் ரூ.10 லட்சத்தை அடைத்த அவர், மீதமுள்ள கடனை அடைக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது மன உளைச்சலுக்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதற்கான தீர்வு தற்கொலை அல்ல. மாரிச்செல்வத்தின் தற்கொலையால் அவரது குடும்பம் ஆதரவற்று போயிருகிறது. தற்கொலை செய்வதற்கு மாறாக கடனில் இருந்து மீண்டு வர போராடியிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை கடனாளி ஆக்கியிருக்கிறது. 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டம் கடந்த ஏப்ரல் மாதத்தில் தடை செய்யப்படும் வரை 49 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் பயனாக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இனி எவரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவதோ, பணத்தை இழப்பதோ, தற்கொலை செய்து கொள்வதோ நிகழாது. அதே நேரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்கனவே பணத்தை இழந்தவர்கள் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்தும், தற்கொலை எண்ணத்திலிருந்தும் மீண்டு வர வேண்டும். அதற்காக அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.
@CMOTamilnadu
#OnlineGamblingKills
திமுகவின் #சாராயமாடல் வளர்ச்சி!
மேலை நாடுகளில் தானியங்கி மதுபானம் தடை செய்யப்படுகிறது! தமிழ்நாட்டில் புதிதாக திணிக்கப்படுகிறது!
இதுதான் தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லும் லட்சணமா?
செய்தி: பெல்ஜியம் நாட்டில் இயங்கிவந்த தானியங்கி மதுபான இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால், அத்தகைய இயந்திரங்களே இல்லாத தமிழ்நாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது!
#Alcohol #VendingMachine #AlcoholVendingMachine
தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை; ஆலயங்களில் தமிழ் இல்லை; உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை; வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை; வீடுகளில் தமிழ் இல்லை; உரையாடல்களில் தமிழ் இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்
- மருத்துவர் அய்யா
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில், அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும்; அதற்காக தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும்.
- மருத்துவர் அய்யா
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி
பள்ளிகளில் தொடங்கி கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 21 உலக தாய்மொழி நாளில் தமிழைத் தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
- மருத்துவர் அய்யா
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி
உலக தாய்மொழி நாளில் சென்னையில் தொடங்கி மதுரை வரை பிப்ரவரி 21 முதல் 28 வரை சென்னையில் தொடங்கி மதுரை வரை ’’தமிழைத் தேடி..” மருத்துவர் அய்யா அவர்கள் பயணம். அன்னை தமிழ் அரியணை ஏறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி
தமிழைத் தேடி பரப்புரை பயணம் சென்னை, மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரையில் பிப்ரவரி 28-ஆம் நாள் நிறைவடையும்
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி
நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய்நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.
மொழி சீர்திருத்தவாதி
தந்தை பெரியார்.
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி
பிப்ரவரி 21-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மருத்துவர் அய்யா அவர்களின் தமிழைத் தேடி... விழிப்புணர்வு பரப்புரை பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 28-ஆம் நாள் மதுரை நகரில் நிறைவு பெறவுள்ளது.
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி
தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைக்கவேண்டும், தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது என மகாத்மா காந்தி வலியுறுத்தினார்.
அன்னை தமிழைக் காக்க...
"தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும்"
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்கள் பயணம்
தாயைக் காப்பது எப்படி தவிர்க்க முடியாத கடமையோ, அதேபோல், தமிழர்களாக பிறந்த அனைவருக்கும் அன்னை மொழியான தமிழ்மொழியை காக்க வேண்டியதும் கடமை ஆகும்.
- மருத்துவர் அய்யா
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி
தமிழர்களாக பிறந்த அனைவருக்கும் அன்னை மொழியான தமிழ்மொழியை காக்க வேண்டியதும் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழைத் தேடி.... விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை உலகத் தாய்மொழி நாளில் தொடங்குகிறேன்.
- மருத்துவர் அய்யா
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி
கல்வி மொழியாக தமிழ் இல்லை
கடவுள் மொழியாக தமிழ் இல்லை
வணிக மொழியாக தமிழ் இல்லை
வழக்கு மொழியாக தமிழ் இல்லை!
எங்கும் இல்லை இல்லை என்பதே
இன்னுயிர்த் தமிழின் இழிந்த நிலை
தாய்மொழித் தமிழை தள்ளி வைத்ததால்
தமிழர்கள் வாழ்வில் தாழ்ந்த நிலை!
#தமிழைத்தேடி#தமிழினப்போராளி