தனித்தொகுதி என்ற சொல்லை மாற்றி சிறப்பு அல்லது உரிமைத்தொகுதி என அழைக்க வேண்டும் என்கிற குடியாத்தம் சட்டமன்றம் உறுப்பினர் சிந்து அவர்களின் கோரிக்கை மிக முக்கியமானது .
நாம்தமிழர் கட்சியின் அண்ணன் சீமான் அவர்கள் இதை பல முறை முன்மொழிந்துள்ளார் .
இன்று சட்டசபையில் அதே கருத்து ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரால பேசப்படுவது மகிழ்ச்சி.
நாம் தமிழர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நண்பர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் @_ITWingNTK ஒரு சிறிய வேண்டுகோள்!
அண்ணனின் @Seeman4TN பதிவுகள் பெரும்பாலும் ஆக்கப்பூர்வமானவை; மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சமூகப் பிரச்சினைகளைப் பேசுபவை. ஆனால் நான் கவனித்தவரை, இதுபோன்ற நீண்ட பதிவுகளை அனைவரும் முழுமையாகப் படிப்பதில்லை. கட்சி சார்ந்த பிள்ளைகள்கூட அவற்றைப் பெருமளவில் பகிர்வதில்லை.
நமது கருத்துகள் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டுமென்றால், நமது சமூக வலைதள வியூகத்தைச் சற்று மாற்ற வேண்டிய நேரம் இது.
அண்ணன் பேசும் சமூகப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல், மக்கள் உரிமைகள், மொழி, விவசாயம் போன்ற ஒவ்வொரு முக்கியமான விஷயத்தையும் சிறிய காணொளிகளாக (Reels & Shorts) பிரித்து வெளியிட வேண்டும். நீண்ட உரையிலிருந்து 30–60 விநாடிகளில் ஒரு கருத்தை மட்டும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லும் காணொளிகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும்.
இன்றைய சமூக வலைதளச் சூழலில் இதுபோன்ற குறுங்காணொளிகள்தான் மக்களிடம் மிக வேகமாகச் சென்றடைகின்றன. திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிடும் குறுங்காணொளிகளின் வடிவத்தைக்கூட ஒரு நல்ல முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.
கட்சி தற்போது பத்திரிகையாளர் சந்திப்புகளைக் குறைத்திருப்பது ஒரு வகையில் நல்ல முடிவாக இருக்கலாம். நமக்குத் தேவையான நேரத்தில் உரிய ஊடக வெளிச்சத்தைத் தர மறுத்த ஊடகங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அண்ணனின் முகமும் கருத்துகளும் பரிச்சயமாக வேண்டிய மிக முக்கியமான இடம் — மக்களின் மனம்.
அதை இன்று மிக எளிதாகச் சென்றடையும் பாதை Reels & Shorts.
அண்ணன் ஒரு நீண்ட பதிவை வெளியிடும்போதே, அதிலிருந்து முக்கியமான கருத்துகளைத் தேர்ந்தெடுத்து, அவ்வப்போதே அதே இடத்தில் அண்ணனைப் பேச வைத்து பல குறுங்காணொளிகளாக வெளியிடலாம். அவற்றை கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மட்டுமல்லாமல், நாம் தமிழர் பிள்ளைகள் அனைவரும் ஒருங்கிணைந்து பரவலாகப் பகிர வேண்டும்.
ஒரு நீண்ட உரை → பல குறுங்காணொளிகள் → பல்வேறு மக்களிடம் ஒரே கருத்தின் தொடர்ச்சியான சென்றடைவு. இதுதான் பலபேரின் அல்கோரிதத்தை தமிழ் தேசியம் வழியில் வர வைக்கும்.
இது வெறும் சமூக வலைதள விளம்பரம் அல்ல. நாம் நம்பும் அரசியலையும், அண்ணன் முன்வைக்கும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான இன்றைய காலத்தின் முக்கியமான அரசியல் கருவி.
என்னைப் போன்ற ஒவ்வொரு நாம் தமிழர் பிள்ளைக்கும் இந்தக் கடமையும் பொறுப்பும் இருப்பதாகவே கருதுகிறேன்.
தம்பியின் அன்பு வேண்டுகோளைப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#நாம்தமிழர்!
@maaran_pandi@___Arjun___04 காங்கிறஸ் தான் நம்ம முதல் எதிரி.
காங்கிறஸ தூக்கி பிடிச்சிதனால தான் திமுக நமக்கு எதிரி. இப்போ தவெக-காங்கிறஸ் தான் முதல் எதிரி
நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
@CMOTamilnadu@Tnpcbofficial@TPRDtCollector@Chief_Secy_TN@moefcc@byadavbjp@BussyAnand
திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் (Quarry), திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி (Solid Waste Management Rules, 2026) கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல் (Source Segregation), சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் (Micro Composting Centres) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது.
"குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம்" என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள், மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விளையாடும் ஆபத்தான போக்காகும்.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன. சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம், 'பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு' என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் (Leachate) மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்வது ‘ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை’ என்பதையே காட்டுகிறது.
எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு, இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
//கறி கஞ்சி//
நல்ல முன்னேற்றம் 👌
உங்களை எல்லாம் தலைவர் நாட்டுல சுதந்திரமாக வாழவைக்கணும்'னு ஆசைப்பட்டார் பாருங்க... இப்போ தலைவர் உயிரோடு இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்...
நாம் தமிழர் கட்சி பேச்சாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!மக்கள் மன்றம் போன்ற மேடைகளில் கூடுமானவரை ஒருமையில் பேசுவது போன்ற provoke செய்யும் விதமான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்!விஜய் கட்சி ஆதரவாளர்களுக்கு பக்குவமோ, பண்போ கிடையாது! நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்!