பல நூறு ஆண்டுகளுக்கு முன்... ஒரு புலவரின் மனைவி இறக்கும் தருவாயில் தன் கணவனை அருகே அழைத்தாளாம்... என்னவென்று கேட்டு , கலங்கிய கண்களோடு கணவன் அவள் பக்கத்தில் வர... மனைவி தயக்கத்துடன் இப்படிக் கேட்டாளாம் ...
“என் உயிர் எப்போதோ என்னை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும். ஆனால்.. ஒரே ஒரு கேள்வி என் நெஞ்சுக் குழியில் நின்று கொண்டு , என் உயிர் இந்த உடலை விட்டுப் பிரியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கேள்வியை இதுவரை உங்களிடம் நான் கேட்டதில்லை... இப்போதாவது கேட்கலாமா..?”
புலவனான அந்தக் கணவன் , புரியாமல் அந்தப் புனிதவதியைப் பார்க்க... அந்த மனைவி கேட்டாளாம் "இதுவரை உங்களிடம் நான் கேட்காத அந்தக் கேள்விக்கு , இப்போதாவது பதில் எனக்குத் தெரிந்து விட்டால்... நிம்மதியாக கண்களை மூடுவேன்.. அந்த நிம்மதியான மரணத்தை எனக்குத் தருவீர்களா.?”
கணவன் மௌனமாக தலையசைத்து சம்மதம் தெரிவிக்க ... மனைவி தன் நெடுநாள் சந்தேகத்தை கேட்டு விட்டாளாம்.. “ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவு அருந்தும்போது ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் கொண்டு வரச் சொல்லி , அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவீர்கள்... அப்படித்தானே..?”
கணவன் இதற்கும் மௌனமாக தலையசைக்க , மனைவி கேட்டாளாம் .. ”இதுவரை அதற்கான காரணத்தை ஒருபோதும் நான் உங்களிடம் கேட்டதில்லை... காரணம் கணவன் சொன்னதற்கு மறுபேச்சு பேசி , நான் அறிந்ததில்லை... இப்போது என் வாழ்வின் இறுதி மூச்சில் இருக்கிறேன்... இப்போதாவது சொல்லுங்கள்.. அந்த கொட்டங்கச்சியும் , தண்ணீரும் எதற்காக..?”
இதைக் கேட்டுவிட்டு , இதற்கான பதிலை எதிர்பார்த்து அந்த மனைவி , புலவனான கணவன் முகத்தைப் புரியாமல் பார்த்திருக்க , அந்தக் கணவன் சொன்னாராம்.. “அது வேறொன்றும் இல்லை... பரிமாறும்போது தவறுதலாக சோற்றுப்பருக்கை கீழே சிந்தி விட்டால் , அதை அந்த ஊசியில் குத்தி , கொட்டாங்குச்சியில் உள்ள தண்ணீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணத்தான் அந்தக் கொட்டங்கச்சி நீரும்.. ஊசியும்..”
கணவன் பதில் சொல்லியும் மனைவியின் குழப்பம் தீரவில்லை... அவள் கேட்டாள் .. “ஆனால் ஒருபோதும் நீங்கள் அந்த ஊசியையும் , கொட்டாங்கச்சியையும் பயன்படுத்தி நான் பார்த்ததே இல்லையே..?”
மனைவி இப்படிக் கேட்டதும்... குரல் உடைந்து போன கணவன்... குமுறும் அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாராம்... “ உண்மைதான்... ஒரு நாளும் நான் அதைப் பயன்படுத்தவில்லை.. ஏனென்றால் ஒரு நாளும் நீ எனக்குப் பரிமாறும்போது , ஒரு சோற்றுப் பருக்கையைக் கூட சிந்தவே இல்லையே....”
கணவன் பதில் அறிந்த மனைவி.. புன்னகை செய்தாளாம்.... அவ்வளவுதான்... கண் மூடி விட்டாளாம்.
நெகிழ்ச்சியோடு நெடு நேரம் நின்ற கணவன்.. அந்தப் புலவன்... கண்ணீரோடு தன் அன்பு மனைவிக்காக உடனே ஒரு கவிதை எழுதினானாம் ...
இதுநாள் வரை தன் வாழ்நாளில் அவன் எழுதியதெல்லாம் ... இரண்டு வரிப் பாடல்கள்... அதில் ஏழே ஏழு வார்த்தைகள்.. அவ்வளவுதான்... அதுதான் அந்தப் புலவன் தன் பாட்டுக்கு ஏற்படுத்திக் கொண்ட பார்முலா விதி..
இப்போது.... தனது செய்யுள் விதியை தானே தளர்த்திக் கொண்ட அந்தப் புலவன்... தன் வாழ்வில் முதன் முதலாக , நாலு வரிப் பாட்டு ஒன்றை எழுதினானாம்... அந்த நாலு வரிப் பாடல்:
“அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு”
ஆம்... இந்த நாலு வரிப் பாடலை எழுதிய அந்தப் புலவர் திருவள்ளுவர்... கணவன் சொல் தட்டாத அந்த கள்ளமற்ற அன்பு மனைவி வாசுகி...
அந்தப் பாடலின் பொருள் :
“அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!”
இன்னொரு வள்ளுவன் எதிர்காலத்தில் பிறக்கலாம்... ஆனால்.. இன்னொரு வாசுகியும் எதிர்காலத்தில் பிறக்கலாம் என்ற நம்பிக்கையோடு...
#மரியாதை
ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.
திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.
எங்கும் காரிருள், சற்று தொலைவில் ஒரு சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.
அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
மாறு வேடத்தில் இருந்த போதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது .
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திருக்கியே?" என்றார்.
பதிலுக்கு அவன், "நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?" என்றான்.
ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையை உடன் வைத்திருப்பார்.
அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு "பார்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை? இப்ப எனக்கு வணக்கம் சொல்வாயா ?" என்றார்.
அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்
சொல்வது?" என்றான்.
ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி, "இப்ப வணக்கம் சொல்வாயா?" என்றார்..
காசைத் தொடாமல் அவன் சொன்னான், "ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?"
அரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார், "எங்கிட்ட இருந்ததுல சரி பாதியைக் கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்வியா?"
மெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான், "உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும் இருக்கே! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்? "
ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், "இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்" என்றார்..
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் , "இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு. இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்?" என்றான்.
ராஜா வாயடைத்துப் போனார்..
எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை. உண்மையான அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்...!
~பகிர்வு பதிவு.
ஞானத்தை யாரிடம் கற்பது ?
”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.
காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.
அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.
அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.
இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.
ஆனால்,
மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?
மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?
மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.
இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.
தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.
தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.
அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,
“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,
“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும்,
“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.
மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...
"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.
“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.
"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.
“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..
தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.
நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.
நுகர்வோர் பிரச்சனைகள்..! நுகர்வோர் குறைதீர் ஆணையம் எதற்கு..! எப்படி முறையிடுவது..!
நாம் ஏதாவது ஒரு பொருளை வாங்குவோம் அது கார், பைக், இன்சூரன்ஸ் என எந்த பொருளாக இருந்தாலும் அதில் குறைபாடுகள் இருந்தால் விற்பனை செய்த நிறுவனத்திடம் முறையிடுவோம். சில நேரங்களில் நாம் முறையிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் நம்மை சமாதானப்படுத்துவது என சேவை அல்லது விற்பனை செய்த நிறுவனங்கள் முயற்சிக்கலாம்.
இப்படி முயற்சிக்கும் பொழுது நம்மால் சில சமயங்களில் அவர்களிடம் பிரச்சனைக்கான தீர்வை காண முடியாது. அப்படி இருக்கையில் நமக்கு நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டு நமக்கான உரிமை மற்றும் நீதியை பெறலாம்.
பல செய்திகளை பார்த்திருப்போம் இந்த நிறுவனம் வாடிக்கையாளருக்கு லட்சங்கள் அபராதம், கோடி அபராதம் என நுகர்வோர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பார்த்திருப்போம்.
நுகர்வோர் ஆணையம் என்றால் என்ன..!
எந்தெந்த பிரச்சனைகளுக்கு நாம் நுகர்வோர் ஆணையத்தை அணுகலாம்.. வழக்கு தொடுக்க வழக்கறிஞர் அவசியமா என்பதை பற்றி இன்று பார்ப்போம்.
நுகர்வோர் குறைதீர் ஆணையம் (Consumer Disputes Redressal Commission)
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 (Consumer Protection Act, 2019) அடிப்படையில், நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கவும், விரைவான நீதியை வழங்கவும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் ஆணையத்தில் (Consumer Commission / Consumer Court) முறையிடுவது ஒரு எளிய நடைமுறைதான். இதை சாதாரண நுகர்வோரும், வழக்கறிஞர் உதவியின்றியும் செய்ய முடியும். ஆனால் சில சூழ்நிலைகளில் வழக்கறிஞரின் உதவி தேவைப்படும்.
♦️ நுகர்வோர் ஆணையத்தில் முறையிடும் வழிமுறைகள்
1. முதலில் சேவை/விற்பனை நிறுவனத்திடம் புகார் செய்வது
✔️ உங்களுக்கு பொருள்/சேவையில் குறை இருந்தால், முதலில் அந்த நிறுவனம்/சேவை வழங்குபவரிடம் எழுத்து மூலம் புகார் செய்ய வேண்டும்.
✔️ ரசீது, பில், ஒப்பந்தம், புகார் கடிதம் போன்ற அனைத்து ஆவணங்களையும் சேகரிக்கவும்.
2. முறையீட்டு மனுவை தயாரித்தல்
✔️ நுகர்வோர் ஆணையத்திற்கு (District / State / National Commission – தொகை மதிப்பின் அடிப்படையில்) மனு தயாரிக்க வேண்டும்.
மனுவில்:
- உங்கள் பெயர், முகவரி
- எதிர் தரப்பின் (விற்பனையாளர்/சேவை வழங்குபவர்) பெயர், முகவரி
- குறைபாடு/சேவை பற்றிய விவரம்
- ஆதாரங்கள் (ரசீது, புகைப்படம், மின்னஞ்சல், முதலியவை)
- நீங்கள் கோரும் இழப்பீடு/கொடுக்க வேண்டிய தொகை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
3. மனுவை தாக்கல் செய்வது
✔️ மாவட்ட ஆணையம் (₹50 லட்சம் வரை உள்ள வழக்குகள்)
✔️ மாநில ஆணையம் (₹50 லட்சம் – ₹2 கோடி வரை)
✔️ தேசிய ஆணையம் (₹2 கோடிக்கு மேல்)
✔️ மனுவை நேரடியாக தாக்கல் செய்யலாம் அல்லது ஆன்லைனில் https://t.co/774fG5tUfo வழியாக சமர்ப்பிக்கலாம்.
4. விசாரணை நடைமுறை
✔️ மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், எதிர் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
✔️ இரு தரப்பினரிடமும் விளக்கம் கேட்கப்படும்.
✔️ சான்றுகள் பரிசீலனை செய்யப்பட்ட பின் தீர்ப்பு வழங்கப்படும்.
♦️ வழக்கறிஞர் எப்பொழுது தேவைப்படுவர்?
✅ எளிய வழக்குகள் (குறைவான தொகை, தெளிவான சான்றுகள்) – நுகர்வோர் தானாகவே மனு தாக்கல் செய்யலாம்.
✔️ சிக்கலான வழக்குகள் (பெரிய தொகை, பல சட்டங்கள் சம்பந்தப்பட்டுள்ளவை, நிறுவனங்கள்/கார்ப்பரேட் தரப்புகள் எதிராக உள்ளவை) – வழக்கறிஞரின் உதவி பெறுவது நல்லது.
✅ மேல்முறையீடு (State Commission அல்லது National Commission-ல் மேல்முறையீடு செய்யும்போது) – சட்ட ரீதியாக வலுவான ஆவணங்கள் தேவைப்படுவதால் வழக்கறிஞர் அவசியம்.
#ConsumerRights #KHByte
A Thread for My Top 25 Korean movies.
***🆃🅷🆁🅴🅰🅳*** 👇
1 . The Handmaiden (2016)
Romance, Drama
8.1⭐
பல அதிர்ச்சிகரமான திருப்பங்களை கொண்ட படம், 🔞 அதிகமா இருக்கும்.
சட்டி பெருசா இருந்த பொழுதும் நாம் ஏன் துண்டு போடுகிறோம் என்றால் எல்லோருக்கும் சரி சமமாக பிரித்து கொடுக்க வேண்டும் என்பதால் தான். ஆனால் இந்த வீடியோ செம சூப்பர்.